சக மனிதனை நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தாத மதம் , கடவுள் இவ்வுலகில் இல்லை.
எல்லா மதமும் வலியுறுத்துவது அன்பு , இரக்கம் , கருணை , சகோதரத்துவம் , அமைதி , மத
நல்லிணக்கம் , சமாதானம்.
இருந்தபோதும் உலகெங்கும் வரலாறு வழிநெடுகிலும் போர்கள் , வன்முறைகள்,
அடக்குமுறைகள் , இன அழிப்புகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன இந்த 21ம்
நூற்றாண்டு வரை.
தற்போது நம் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் மணிப்பூர் கலவரம் , உலகத்தில்
நடந்துகொண்டிருக்கும் உக்ரைன் – ரஷ்ய போர் , இஸ்ரேல் – பாலஸ்தீன போர் ஆகியவற்றில்
எத்தனை எத்தனை அனிதா தங்களுடைய அம்மா , அக்கா . தம்பி , அப்பா , உறவுகளை ,
தாங்கள் வாழ்ந்த வாழ்வாதாரங்களை இழந்து அகதிகளாக , அனாதைகளாக தவித்து
கொண்டிருப்பார்கள் என்று நினைக்கும் போது உடல் நடுங்குகிறது.
மற்ற பகுதியினர் ஒரு சில விவாதம் , செய்தியாக மட்டும் தொடர்புகொண்டு மயான
அமைதியாக அடுத்த விவாதத்திற்குள் கடந்து செல்வது நடைமுறை எதார்த்தமாக உள்ளதை
சகிக்க முடியவில்லை.
அதிகாரம் என்பது நலிந்தவருக்கு உதவ வேண்டுமே தவிர, மேலும் அதிகாரம் செலுத்தி
அடிமை செய்யக்கூடாது.
ஒரு மனிதருக்கு பாதிப்பு என்றால், சக மனிதர் உதவிக்கு , பக்க பலமாக நிற்க வேண்டும்.
வீட்டில் தொடங்கி , தெருவில் , அலுவலகத்தில் , பொது இடத்தில் அநீதியை எதிர்த்து பலமான
குரல் எழுப்ப வேண்டும் .
அந்த குரல் அதிகாரத்தில் உள்ளோரை அதிர வைக்க வேண்டும் .
வெறுமனே விவாதமாக மட்டும் , செய்தியாக மட்டும் வேடிக்கை பார்க்கும் உலகமாக தொடர
கூடாது என்று இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரும் அனிதாவுக்கு பதில் சொல்ல
கடமையாக்கப்பட்டுள்ளார் ஆசிரியர் .
11 வயது ஹ்யானா தனது அப்பாவுடன் ஹிட்லரின் நரக வேட்டையில் இருந்து தப்பித்து
இந்தியா வருகிறாள். தன்னுடைய அம்மா , தம்பி , அக்காவை தப்பித்து வரும் வழியில்
ஹிட்லரின் ஆட்களிடம் சிக்கிக்கொள்ள அவர்களுடைய நினைவுகளுடன் தன்னுடைய 70
வயது வரை வாழ்ந்து வருகிறாள்.
இந்தியா வந்ததும் சிறிது வருடத்தில் அப்பாவையும் இழக்கிறாள். குடும்பத்தில் கடைசி
உறவாக அப்பாவும் இறந்த பிறகு, விவேக் குடும்பதுடன் அனிதாவாக வாழ்க்கையை
தொடர்கிறாள்.
ஹ்யானா, அனிதாவாக வாழ்ந்தாலும் தன்னுடைய உறவுகள் பற்றிய தேடல் இருந்துகொண்டே
இருந்தது..
70 வயதில் தன்னுடைய உறவை தேடி டகாவ்( ஜெர்மனி ), அமெரிக்கா, இறுதியாக இஸ்ரேலில்
தன்னுடைய அம்மா, தம்பி இறந்திருப்பது ' யாத் வஷேம்" எனும் நினைவு இடத்தில்
உறுதியாகிறது.
தொடர்ந்து தன்னுடைய அக்காவையும் சந்திக்கிறாள் அனிதா.
நாஜி படைகள் யூதர்களை வேட்டை யாடிய கோரா முகத்தை ஹ்யானாவின் அக்கா ரெபெக்கா
மூலம் உலகிற்கு விவரிக்கிறார் ஆசிரியர்.
ஆசிரியரின் நோக்கமான அன்பு , அறம் , சமாதானம் , சகோதரத்துவம் தனி மனிதன் முதல்
உலகெங்கும் தழைத்தோங்க வாழ்த்துக்கள்….
தமிழில் கே. நல்லதம்பி உயிரோட்டமாக மொழி பெயர்த்திருக்கிறார் வாழ்த்துக்கள்..
நன்றி
நூலின் தகவல்கள்
நூலின் பெயர்: “யாத் வஷேம் ” (நாவல் )
ஆசிரியர் : நேமி சந்த்ரா
தமிழில் : கே. நல்லதம்பி
பக்கங்கள் : 358
விலை : ரூ. 450/-
வெளியீடு : எதிர் வெளியீடு
நூலைப் பெற : 44 2433 2924
நூலறிமுகம் ஏழுதியவர்
ஞா ஆனந்தன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.