Realistic colored pencil illustration depicting the themes of Verutha's Tamil poem "Yaasagam," featuring an elderly couple, a street artist, a wandering child, a monk, transgender people, and a disabled roadside shopkeeper sharing kindness, symbolizing humanity and dignity.

வெறுத்தாவின் “யாசகம்” கவிதை

“யாசகம்” கவிதை
__________

மதுரம் பிழிந்து வீசப்பட்ட
கரும்பென
முதுமை தின்று செரித்துக் கொண்டிருக்கும்
தம்பதிகள்

அரங்கம் அமைத்து
ஆதாயம் தேடத் தெரியாமல்
மகுடி ஊதியாடும்
தெருவோரத்துக் கலைஞன்

ஆசைகளைத் துறந்ததாகச் சொல்லி
சிவ பானத்திற்குச் சில்லறை தேடும்
காவி போர்த்திய துறவி

திருவிழாவில் கைவிடப்பட்ட
வேண்டாத குழந்தையின் சாயலில்
அபலையாய் அலையும்
திருநர்களென

யாசித்த யாவருக்கும்
தானம் செய்து
நெடுஞ்சாலையோரத்துப்
பெட்டிக் கடையில்
கம்பீரமாக உழைத்துக் கொண்டிருந்தார்

நான்கு கை ஆறு தலையென
வரைந்து பழக்கப்பட்டச் சமூகத்தில்
யாரோ ஒரு சிற்பியால்
இரண்டு கால்களுமில்லாமல் செதுக்கப்பட்ட
அந்தக் கடவுள்.

📚 எழுதியவர்:
– வெறுத்தா

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *