யாழ் ராகவன் கவிதை…மாயவித்தைக்காரன்
வானமாக மாற்றும் முன்னர்
பேசியிருந்திருக்கலாம்
உன்னோடு சில சொற்களை

நாளை பூக்கவிருக்கும் மலர்களை
பதியமிடுவதற்கு
உன்னைப் பறித்துக் கொண்ட
கயவனை என்ன செய்ய

சாலையின் குறுக்காடும் பூனைக்கு
ரொட்டிக்காக
வாலைக் குழைக்கும் நாய்க்கு

யார் சொல்வது
அவற்றின் தாய்களை
அதிரும் வாகனகங்கள் பசியாறிய செய்தியை

சுவர்களில் பட்டு எகிறும்
ஊழியின் சிரிப்பொலி ராட்சதப் பெருவலி

காணாமல் போனவர்களின் பட்டியல்
தொற்றுக்கால வரிசையான ரணத்தில்
வழியும் துயரம் வடிபடும் நாளெது

நம்பமுடியாததெல்லாம்
நடந்தேறும் நாளொன்றில்
நடைபெறக்கூடுமோ

– யாழ் ராகவன்