ஏன் என்ற கேள்வி – நூல் அறிமுகம்
ஏன் என்ற கேள்வியை கேட்கத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் சுலபமாக வெற்றி அடைவார்கள்…. ஏன் கேள்வி கேட்க வேண்டும் எனும் மகத்துவத்தை மிக அருமையாக உணர்த்தும் நூல் இது.
1. என்ன செய்கிறோம் என்று தெரியும் அவ்வளவுதான் அதற்கு மேல் எதுவும் தெரியாது தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இருக்காது.
2. என்ன செய்கிறோம் என்று தெரியும் அது எப்படி செய்ய வேண்டும் என்பதும் தெரியும் ஆனால் அதை சிறப்பாக செய்து வாழ்வில் வெற்றி பெற முயற்சிப்பதில்லை.
3. என்ன செய்கிறோம் என்பது தெரியும் எப்படி செய்ய வேண்டும் என்பதும் தெரியும் அதையெல்லாம் தாண்டி ஏன் அதைச் செய்ய வேண்டும் என்பதும் தெரிந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும்.
ஒருவர் ஒவ்வொரு நாளும் எழும்போது அவரது கடமை என்ன? அது அவரது வாழ்க்கைக்கான அர்த்தத்தை நினைவு படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தக் கடமையை உற்சாகமாக முழு மனதோடு செய்ய முடியும்.
இதுதான் ஏன் என்று தெரிந்து செய்வதற்கும் ஏனென்று தெரியாமல் செய்வதற்கும் உள்ள வேறுபாடு. ஏன் இதை செய்கிறோம் என்ற தெளிவு வந்து விட்டால் நாம் அதனை மிகச் சிறப்பாக கற்றுக்கொள்வோம். பின்வாங்க மாட்டோம் தோற்றுப் போவது போன்ற சந்தர்ப்பங்களில் கூட கடமையை விட்டு விலக அவரது மனம் இடம் கொடுக்காது.
யார் எதைச் சொன்னாலும் அதைப்பற்றி உங்களுக்கு இந்த உலகம் சொல்லிக் கொடுத்த எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, ஒரு குழந்தையை போல் கேள்வி கேட்டு பழகுங்கள். தொடர்ந்து அதற்கான பதிலையும் தேடுங்கள். அதே நேரம் உங்கள் கேள்விகள் உங்களது அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமே. யாரையும் நோகடிக்கப்பட கூடாது. அது போன்று மற்றவர்களை திருத்துவதும் நம் நோக்கமில்லை. நம் அறிவை வளர்த்துக் கொள்வது தான் நம் நோக்கம்.
தெரியாததை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வதும், தெரிந்ததை ஏன் செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்வதுமே நம் அறிவை விரிவாக்கும்.
தெரியாது என்று சொல்ல எந்த தயக்கமும் தேவையில்லை. ஒரு விஷயம் நமக்குத் தெரியாமலேயே இருந்து விடுவதை விட நாம் அதை கற்றுக்கொள்ள முயல்வது தான் நமது வெற்றியின் முதல் படி.
பெண் குழந்தைகள் என்றால் பிங்க் நிறம் தான் பிடிக்கும் அது போன்ற ஆண் குழந்தைகள் என்றால் நீலம், சிவப்பு என்ற நிறம் தான் பிடிக்கும்
என்ற நடைமுறை இங்கு உள்ளது.
ஏன் பெண் குழந்தைகளுக்கு பிங்க் நிறம் பிடிக்கிறது?
ஏன் ஆண் குழந்தைகள் பிங்கை விரும்புவதில்லை?
வளர்ந்த பெண்கள் ஒன்றும் அப்படி பிங்கை மட்டுமே எடுப்பதில்லையே?
ஏன் பெண் குழந்தைகளுக்கு தனியாக, ஆண் குழந்தைகள் தனியாக பரிசு பொருட்கள் இருக்க வேண்டும்?
ஏன் பெண் குழந்தைக்கு டாக்டர் செட், பார்பி டால், சமையல் செட் என குறிப்பிட்ட பரிசு பொருட்கள் உள்ளது?
ஏன் எல்லா பார்பி பொம்மைகளும் ஒன்று போல கச்சிதமான உடலுடன் உள்ளன?
பெண் குழந்தைகளுக்கான உடைகள் விளையாட வசதியாக இல்லை ஏன் ?
பெண் குழந்தைகள் ஒரு வயசுக்கு மேல் ஏன் விளையாட கூடாது?
இது போன்ற கேள்விகள் நமக்கு இயற்கையாக எழ வேண்டும்.
ஏன் பெண்கள் வீட்டுப் பொறுப்பையும் தன்னுடைய வேலையையும் சேர்ந்தே பார்க்க வேண்டும்!
குழந்தைப் பேரு காலத்தில் தான் பார்த்துக் கொண்டிருக்கும் ஏன் வேலையை விட வேண்டும்?
பெண்கள் மட்டுமே குடும்பத்துக்காக எப்போதும் விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கிறது ஏன்?
ஆண்கள் ஏன் வேலையை விட்டுவிட்டு தன்னுடைய வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் கவனிக்க கூடாதா!
என்னதான் படித்திருந்தாலும் பெண்கள் குடும்பத்துக்கு மட்டுமே கடமைப்பட்டவர்களா?
இதுதான் அழகு என்று யார் முடிவு செய்வது ? அழகா ?ஆரோக்கியமா? என்ற கேள்விக்கு நிறைய பெண்கள் அழகை மட்டும் தேர்ந்தெடுப்பது ஏன்?
ஆரோக்கியம் இல்லாத அழகு ஆபத்தைத் தானே அளிக்கும் என்று புரிவதில்லை? சரியான உடல் அமைப்பு வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதோடு உடல் எடையை குறைக்கும் முயற்சி எடுப்பது ஏன்?
இப்படி கேள்வி கேட்கும் குழந்தைகளை நம் பண்பாடு கல்வி முறையும் எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள பழக்கப்படுத்தி விட்டதுதான் இன்றைய சூழல். குழந்தைகளை கேள்வி கேட்க ஊக்குவிப்பதும் ஏன் இந்த கேள்வி கேட்க வேண்டும் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பது தான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
மிக அற்புதமான நூல் இது.
நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இந்த நூலை வாசிக்க கொடுப்பதோடு, நம் அருகில் இருப்பவர்களுக்கும் இந்நூலை பரிந்துரை செய்வது அவசியம். நமது ஆசிரியர்கள் குழந்தைகள் கேள்வி கேட்க வைப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
குறிப்பாக தமிழ்நாடு அரசு தமது பாடத்திட்டத்தில் இந்நூலை கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியமானதாகும்.
வாழ்க்கைக் கல்வி பயிற்சியாளர், பெண்ணிய எழுத்தாளர் பெண்கள் சந்திக்கும் சவால்களை வாழ்த்துக் கல்வி மூலம் தீர்வு காண முயற்சி செய்து வருபவர் தான் இந்த நூலை எழுதியுள்ள தோழர் யாமினி.
எழுத்தாளர் யாமினிக்கும் இந்நூலை பதிப்பித்த ஹேர் ஸ்டோரிஸ் நிறுவனத்தாருக்கும் பேரன்பு நன்றிகள்.
நூலின் தகவல்கள் :
நூல் : “ஏன் என்ற கேள்வி”
நூலாசிரியர்: யாமினி
விலை : ரூபாய் 80/-
வெளியீடு : ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம்
தொடர்பு எண் : 9600398660
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/yen-endra-kelvi/
நூல் அறிமுகம் எழுதியவர் :
MJ. பிரபாகர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

