இன்னும் இருக்கிறார் யெச்சூரி
இன்னும்
இருக்கிறார் யெச்சூரி
ஏனெனில்
இன்னும் இருக்கிறதே
இளைத்தவர்துயரம்.
ஏழைகள்
கண்களில் இருந்த நெருப்பு
யெச்சூரி!
ஏமாற்றப்பட்டவர்
கைகளில் இருந்த ஏ.கே 47
யெச்சூரி!
எப்படி
ஓய்வெடுக்கப்போவார்?
துடிப்புகள் பிசகிய
பாராளுமன்ற மக்களாட்சியத்தின்
மகத்தான நம்பிக்கையாக
இருந்தவர்
மரணத்தின் காணிக்கைத்தட்டில்
செல்லாத காசாக
விழுவது எப்படிச் சாத்தியம்?
வயதுகளை
வளர்க்கப் பிறந்தவர்அல்லர் அவர்.
மார்சியத்தை வளர்த்துக்
கண்ணீர்க் குடிசைகளுக்கும்
களத்து மேட்டுக்கும்
கொண்டுசேர்க்கும் தொண்டுக்கு
மகனாகப்பிறந்தவர்.
போராட்டம்
முடியவில்லை
போர்வாள் எப்படி உறைக்குத்திரும்பும்?
முற்போக்கு யெச்சூரி
மூச்சு முடிந்து விழவில்லை
அநீதிகளை எதிர்ப்போர்
மூச்சுப் பைகளில்
புயல்களை உசுப்பிக்கொண்டிருக்கிறது
எழுதியவர் :

-கவிஞர் ஈரோடு தமிழன்பன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மகாகவிக்கு நன்றி. நான் முகநூலில் கேட்டவாறு கவிதை யாத்த மகாகவிக்கு நன்றி. ஆம்; போர்கள் முடியாமல் உறைவாள் ஓய்வெடுக்கப் போதல் சாத்தியம் இல்லைதான்
மகத்தான தலைவர் – துயருரும்
மக்களின் விடிவெள்ளி
மார்க்கியத்தை நம்
மண்ணுக்கேற்றபடி வளர்த்தியவர்…
ஆம்! மகா கவி
ஈரோடு தமிழன்பன்
உரைத்தது போல்
“உசிப்பிக் கொண்டிருக்கிறது”
உங்களின் உணர்வு
என்னுள் … எங்களுள் …
எழிந்திடுவோம் !