யெஸ். பாலபாரதியின் "பகடை" சிறார் நாவல் – நூல் அறிமுகம், எழுத்தாளர் உருவப்படம் மற்றும் புத்தக அட்டையுடன் கூடிய சிறப்பு விளக்கப்படம்.

யெஸ்.பாலபாரதி எழுதிய “பகடை” சிறார் நாவல் – நூல் அறிமுகம்

குழந்தைகளுக்கான உலகத்தை வெறும் கற்பனைக் கதைகளால் மட்டுமே நிரப்பாமல், அவர்களைச் சுற்றியுள்ள சமூக எதார்த்தங்களையும் அவர்களுக்குப் புறியும் மொழியில் கடத்த வேண்டும் என்ற உன்தை நோக்கில் வெளிவந்துள்ளது சாகித்திய அகாடமி விருது பெற்ற முன்னணி எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்களின் “பகடை – தொலைத்தவர்களைத் தேடி” என்ற சிறுவர் நாவல். மாயம், மந்திரம் ராஜா-ராணி கதைகள் மற்றும் வெற்று நீதி போதனைகளுக்குள் கருங்கிவிட்டறைய சிறுவர் இலக்கியச் சுழலில் சமகால சிக்கல்களையும் எளிய மனிதர்களின் வாழ்வியலையும் பேசும் முக்கியமானதொரு படைப்பாக இது தனித்து நிற்கிறது.

நம் சமூகக் கட்டமைப்பில் விளிம்புநிலை மனிதர்கள், குறிப்பாக மலைவாழ் சமூகத்தைச் சேற்ந்த சிறுவர்கள் எவ்வாறு அதிகார வர்க்கத்தாலும் கடத்தல்காரர்களாலும் தங்களின் கல்வியையும் கனவுகளையும் இழந்து பகடைக்காய்களாக” மாற்றப்படுகிறார்கள் என்பதை இந்நூல் நெஞ்சைத் தொடும் வகையில் விவரிக்கிறது. கதையில் வரும் சிறுவர் கதாபாத்திரங்கள் வறுமையிலும் தங்களின் சுயமரியாதையையும் அறிவுக் கூர்மையையும் விட்டுக் கொடுக்காதவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பேசும் வட்டார மொழி குறும்புத்தனம் மற்றும் இக்கட்டண குழலில் அவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் வாசகர்களைக் கதையோடு அப்படியே ஒன்றச் செய்கின்றன.

இந்நாவலில் வரும் ஆசிரியர் பாத்திரப் படைப்பு, அடடா இப்படியும் ஓர் ஆசிரியரா என வாசகர்களை வியக்க வைக்கும் அதே வேளையில், நிஜ உலகிலும் வாழும் அரப்பணிப்புரிக் ஆசிரியர்களை நம் கண்முன்னே நிறுத்துகிறது. அதிகார வர்க்கம் எளியவர்களை எப்படித் தன் சுயலாபத்திற்காகப் பயன்படுத்துகிறது என்ற சமூக ஒடுக்குமுறையைக் குழந்தைகளின் மனதில் பதியும் வண்ணம் கதையி கடத்தியிருப்பது எழுத்தாளரின் அரத்திய எழுத்தாளுமையைக் காட்டுகிறது. அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பான திருப்பங்களும் எளிய தமிழ் நடையும் இந்நூலின் மிகப்பெரிய பலமாகும்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் மொத்தக் காட்சிகளையும் அழகிய சித்திரங்களாகத் தீட்டியுள்ள ஓவியரின் பங்களிப்பும் இந்நூலில் பெரிதும் குறிப்பிடத்தக்கது. பகடை”நாவல் சிறுவர்களுக்கானது மட்டுமல் பெரியவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று குழந்தைகளிடம் மனிதாபிபானத்தையும். சக மனிதர்கள் மீதான நேயத்தையும். விழிப்புணர்வையும் வளர்க்க விரும்பும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இறந்த நூலை நிச்சயம் குழந்தைகளுக்குப் புக் ஃபார் சில்ரன் பரிந்துரைக்கலாம். புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் இத்தகைய அரிய சமூக விழிப்புணர்வுப் படைப்பை மிகத் தரமாக கொண்டு சேர்த்துள்ளது பாராட்டுக்குரியது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:பகடை (Pagadai)
ஆசிரியர்: (Yes. Balabharathi)
வெளியீடு:
(பாரதி புத்தகாலயம்) | (Bharathi Puthakalayam)
விலை:₹.110 (10% Discount Price ₹.99.00)
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 எம்.ஜே.பிரபாகர்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *