"யூதர்கள் [ வரலாறும் வாழ்க்கையும்] " - பவன்குமார்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “யூதர்கள் [ வரலாறும் வாழ்க்கையும்] ” – பவன்குமார்

 

 

 

ஒரு இனம் வரலாறு முழுவது விரட்டப்பட்டு கொண்டே இருந்தது என்றால் அது யூத இனம் தான். இவர்கள் தான் இன்று உலகில் மிகப் பெரிய மதங்களாக இருக்கும் கிருஸ்துவத்துக்கும், இஸ்லாத்துக்கும் முன்னோடிகள். அதனால் இந்த இரண்டு மதங்களுக்கும், யூதர்களுக்கும் சடங்குகள் அளவில் ஒற்றுமைகள் இருக்கின்றன. சரி, ஏன் யூதர்கள் இவ்வளவு வெறுக்கப்பட்டார்கள்? அதற்கு மேலோட்டமான காரணம் “யூதர்கள் தான் இயேசு நாதரை கொன்றார்கள்” என்பது. ஆனால் உண்மையான காரணம், தங்கள் இனம், தங்கள் மதம், தங்கள் வாழ்க்கை என்ற சுயநலம் ஒவ்வொரு யூதருக்குள்ளும் ஊறிப் போயிருந்தது. இதுதான் அடிப்படைக் காரணம். ஏற்கெனவே பல்வேறு இன மக்களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகம், மேன்மேலும் போர்களால் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நியாயமான சுயபயமும் யூதர்களுக்கு இருந்தது. அவர்கள் தங்களை தான் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக நம்பினார்கள். உலகிலேயே உயர்ந்த இனம் யூத இனம் தான் என்று ஒவ்வொரு யூதனும் நம்பினான். அதுவே அவர்களை மற்றவர்களிடம் சேராமல், அவர்களை கீழ்மையாக பார்க்கும் குணத்தை கொடுத்தது.

அதனால் அவர்கள் வரலாறு முழுவதுமே ரத்தத்தின் வாடை கலந்து இருக்கிறது.
பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் கொலைகள் அனைத்தும் மதங்களின் பெயராலே தான் நடந்து வருகிறது. இன்றைக்கும் ஒரு மதத்திற்கு எதிராக மாற்று மதத்தவரை தூண்டும் அரசியல் நடந்து வருகிறது.

இந்த அரசியல் தான் யூதர்களுக்கு எதிராகவும் நடந்தது. அதன் உச்சத்தை தோட்டவர் நம் சீமானின் சித்தப்பா இட்ளர். அவர் யூதர்களுக்கு எதிராக எடுத்த வெறுப்பு அரசியல் தான் வெறும் ஆறு ஆண்டுகளில் பத்துலட்சம் யூதர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது. ஒவ்வொரு ஜெர்மனிய வீரனும் ஒரு நாளில் ஒரு யூதனையாவது கொல்ல வேண்டும் என்ற வெறியோட இருந்திருக்கிறான். இனத் தூய்மைவாதமும் மத தூய்மைவாதம் எவ்வளவுகொடூராமானது என்பதை யூதர்களின் இந்த வரலாறைப் படிப்பதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். மதங்களின் வளர்ச்சி மனித உயிர்பலிகளில் தான் ஒழிந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. உலகில் யூத இனத்தை போல வேறு எந்த இனமும் இவ்வளவு வெறுக்கப்படவில்லை என்பதே இன்றைய நாள் வரையில் வரலாற்று உண்மையாக இருக்கிறது.

கிட்டத்தட்ட 3000 ஆண்டு கால வரலாற்றில் யூதர்கள் கொடுமைகளை அனுபவிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம். அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

யூதர்களை ஜெர்மனியர்களை காட்டிலும் அதிகமாக வெறுத்தவர்கள் கிருஸ்துவர்கள் தான். யூதாஸ் என்ற ஒரு தனி மனிதன் யேசுநாதரை காட்டிக்கொடுத்ததால் யூத இனமே கிறிஸ்துவர்களால் வெறுக்கப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்த வெறுப்பு பல்வேறு கொலைகளை நிகழ்த்தியுள்ளது. என்றோ ஒருவன் இயேசுவை காட்டிக்கொடுத்தற்காக நாம் இவர்களை வெறுக்க வேண்டுமா என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவே இல்லை.

ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், சிரியா, துருக்கி, எகிப்து, ஜோர்டான் என எல்லா நாடுகளிலும் யூதர்கள் விரட்டியடிக்கப்பட்டே இருக்கிறார்கள். அரபு நாடுகளில் கூட அவர்களின் நிலை இதுவாக தான் இருந்து இருக்கிறது.

இத்தனை வலிகளை அனுபவித்த அவர்களே தான் இஸ்ரேல் என்னும் தேசத்துக்காக பாலஸ்தீன அரேபியர்களை கொன்று குவித்து கொண்டு இருக்கிறார்கள். இஸ்ரேல் தேசம் அமைவதே தங்கள் வாழ்நாள் கனவாக எண்ணி வாழ்ந்த ஒவ்வொரு யூதனுக்கும், அது நிறைவேறிய பிறகும் அந்த மண்ணில் போரின் சத்தமும், ரத்தத்தின் ஈரமும் மாறவில்லை.

இஸ்ரேல் தேசம் உருவாக்கப்படுவதற்கு முன்பாக இருந்த தர்களின் நிலைமை அதன்பின் அப்படியே தலைகீழாக மாறிப்போனது. இஸ்ரேல் உருவான நாளில் இருந்தே அந்த தேசம் ஒரு யுத்த பூமியாக தான் இருந்து கொண்டு இருக்கிறது.

நூலின் இறுதி பாகம் மிக முக்கியமானது. இதுவரை நாம் அதிகம் கேள்விப்படாத யூத இன மக்களின் பண்டிகைகள், அவர்களின் நம்பிக்கைகள், கலாச்சாரம், திருமணம், இறுதி சடங்கு, புனித நூல்கள், கலை, பண்பாடு, மத கோட்பாடுகள் போன்ற தகவல்களை கொண்டதாக இருக்கிறது.

யூத இனத்தின் வரலாற்றை தொடக்கத்தில் இருந்து தெரிந்து கொள்ள இந்த நூல் நிச்சயம் உதவும். நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு இனத்தின் வரலாறு இது

பவன்குமார்.

 

நூல்: யூதர்கள் – வரலாறும் வாழ்க்கையும்
ஆசிரியர்: முகில்
பக்கங்கள்: 260
பதிப்பு: கிழக்கு பதிப்பகம்

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,  கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 2 Comments

2 Comments

  1. யூதர்கள்–வரலாறும் வாழ்க்கையும் நூல் அறிமுகம் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் தொடர்ந்து விரட்டப்பட்ட , நாடும் நதியும் காடும் மலையும் தங்களுக்கென்று இல்லாத யூத இனம் இன்று தங்களுக்கென்று ஒர் நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான் உச்சகட்ட இனவெறியை கடைபிடிக்கிறது என்பது அவர்களின் காட்டுமிராண்டி குணத்தை காட்டுகிறது. அவசியம் இனத்தின் வரலாறு ஒவ்வொரு இந்தியனும் இப்போது படிக்க வேண்டும். அதற்கு இப்புத்தகம் உதவும்.

  2. யூதர்கள்–வரலாறும் வாழ்க்கையும் நூல் அறிமுகம் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் தொடர்ந்து விரட்டப்பட்ட , நாடும் நதியும் காடும் மலையும் தங்களுக்கென்று இல்லாத யூத இனம் இன்று தங்களுக்கென்று ஒர் நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான் உச்சகட்ட இனவெறியை கடைபிடிக்கிறது என்பது அவர்களின் காட்டுமிராண்டி குணத்தை காட்டுகிறது. அவசியம் இனத்தின் வரலாறு ஒவ்வொரு இந்தியனும் இப்போது படிக்க வேண்டும். அதற்கு இப்புத்தகம் உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *