கருணைப்பார்வையில் கொஞ்சம் காமம் கலந்து பேசுகிறேன்…
தங்கைபோல பொய்கூறி மனதால் தழுவ விரும்புகிறேன் …
தோழிதான் நீ தோள்தருவேன் அப்படியே உரசி இன்பமும் பெறுவேன்…
..
சிறிதே குறுகுறுப்பு பார்வையில் சிக்கிவிடுகிறது ஆடை அணியாத துணிக்கடையின் பெண் பொம்மை….
பொம்மையாக இருந்தால் கூட தொட்டுப் பார்க்கத் துடிக்கும் கூறுகெட்ட மூளை……
நான் என்செய்வேன்…..
வெட்டிவீசி விடத்தான் நினைக்கிறேன்….
என்தான் செய்வேன்…..
பெண்ணாய்ப் பிறந்தால்…
எத்தனை கண்கள் பதியுமோ….
நினைக்கும் போதே நெஞ்சம் பதறும்.
யுவாதாஸ்.

