வரிக்குதிரை பாறை (Zebra Schist) - Australia - Kangaroo Island - Australia - Article - ஏற்காடு இளங்கோ - Yercaud Ilango - https://bookday.in/

வரிக்குதிரை பாறை (Zebra Schist)

வரிக்குதிரை பாறை

(Zebra Schist) 

நாம் வரிக்குதிரைகளை உயிரியல் பூங்கா அல்லது தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். அதன் உடல் முழுவதும் கருப்பு மற்றும் வெள்ளை நிற வரிகளைக் கொண்டிருக்கும். வரிக்குதிரையின் மீதுள்ள வரிகளைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுவோம். வரிக்குதிரையின் மீது எப்படி வரிகள் காணப்படுகிறதோ, அது போலவே கருப்பு மற்றும் வெள்ளை வரிகளால் ஆன பாறை ஒன்று இருக்கிறது.

வரிக்குதிரை பாறை (Zebra Schist) - Australia - Kangaroo Island - Australia - Article - ஏற்காடு இளங்கோ - Yercaud Ilango - https://bookday.in/

இது வரிக்குதிரை பாறை (Zebra Schist) என அழைக்கப்படுகிறது. இது தெற்கு ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவில் அமைந்துள்ளது. இது சுமார் 500 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இது உருமாறிய பாறைகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. வண்டல் பாறைகள் மிகவும் இறுக்கமாக மடிக்கப்பட்டு, மெல்லிய படுக்கையாக அமைந்துள்ளது.

இதில் இரண்டாம் நிலையாக கருப்பு அப்ரகம் என்னும் பயோடைட் (Biotite) நிறைந்த அடுக்கு உள்ளது. இந்த கருப்பு அப்ரகம் பல்வேறு வண்டல் கட்டமைப்புகளைப் பாதுகாத்து கோடிட்டுக் காட்டுகிறது. படிகக் கல் (Quartz) நிறைந்த மற்றும் பயோடைட் நிறைந்த அடுக்குகள், உருமாற்ற வேறுபாட்டைக் காட்டிலும் அசல் வண்டல் அடுகளைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பாறையில் படிகக் கல், மைக்கா, குளோரைட், டால்க், ஹார்ன்ப்ளென்ட், கிராஃபைட் மற்றும் பிளாட், பிளானர் ஆகிய தாதுக்களும் இடம் பெற்றுள்ளன.

வரிக்குதிரை பாறை (Zebra Schist) - Australia - Kangaroo Island - Australia - Article - ஏற்காடு இளங்கோ - Yercaud Ilango - https://bookday.in/

இதன் காரணமாக கருப்பு மற்றும் வெள்ளை வரிகள் பாறைகளில் காணப்படுகின்றன. இவை சிறிய குறுக்கு படுக்கைகள் மற்றும் ஏறும் சிற்றலைகள் போல் தெற்கு நோக்கிய வரிசையாக அமைந்துள்ளன. ஆஸ்திரேலியாவின் புவியியல் சங்கம் இந்த பாறை அமைந்துள்ள பகுதியை புவியியல் நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது. இந்த இடம் ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது.

கட்டுரையாளர் : 

வரிக்குதிரை பாறை (Zebra Schist) - Australia - Kangaroo Island - Australia - Article - ஏற்காடு இளங்கோ - Yercaud Ilango - https://bookday.in/

ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *