Impress Short Story by Mu Rathika Vijaybabu மு. ராதிகா விஜய்பாபுவின் ஈர்ப்பு குறுங்கதை

ஈர்ப்பு குறுங்கதை – மு. ராதிகா விஜய்பாபு



நம்ம பிரிந்துவிடலாம் சிவா உனக்கு ஒரு அசிங்கமான மனைவி அமையட்டும் வாழ்த்துகள் என்று கண்கலங்கி சீதா விடைபெற்றாள். மன பாரத்துடன், ‘போகாத சீதா’ என்று கைகளைப் பிடித்தான்.
கண்விழித்து பார்த்தால் இரண்டு மணி ஆகியது தூக்கம் வரவில்லை பக்கத்தில் மனைவி தூங்கிக்கொண்டு இருந்தாள். மனம் காதலியை நினைத்து சுழன்றது.

இருவரும் மூன்று ஆண்டுகள் காதலித்தார்கள் சீதாவின் குடும்ப சூழல் உடனே திருமணம் நிச்சயிக்க வேண்டியதாயிற்று குடும்ப பொறுப்பு வேலை இல்லாமல் எப்படி திருமணம் செய்வது என்று இருவரும் பரஸ்பரமாக பிரிந்து விட்டார்கள்.

பின் சீதாவை மறைக்க முடியாமல் சிரமப்பட்டு படிப்பை முடித்து, வேலை தேடி, தங்கைகளை திருமணம் செய்துகொடுத்து, பெற்றோர் பார்த்து நிச்சயித்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை ஓடினாலும் ஒரு மூலையில் கீதாவை மறக்க முடியாமல் அவ்வபோது நினைத்துக் கொள்வான்.

தன் கைப்பேசியை எடுத்து முகநூலில் சீதா பதிவேற்றிய புகைப்படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான். அவள் அருகில் ஐந்து வயது குழந்தை அப்படியே சீதாவை உறிச்சு வெச்சிருக்க , சீதாவிற்கு மிகவும் பிடித்த நல்ல கருநீல புடவை எடுப்பான சிகப்பு நிற ப்ளவுஸ் அணிந்து இருந்தாள். முன்பை விட இப்பொழுது நிதானமும் அமைதியும் முகத்தில் தெரிந்தது தன்னை மறந்து புகைப்படத்தில் முழுகி விட்டான். மனைவி தண்ணீர் குடிக்க எழுந்தவள் பார்த்துவிட்டாள். திட்டுவாளோ என்று மனம் ஒரு நிமிடம் நடுங்கியது.
அவள் தலையில் அடித்துக் கொண்டு சென்றாள். ‘வயது 70 ஆகுது இன்னும் பேத்தியுடன் நிற்கிறவளைப் போய்ப் பார்த்துட்டு இருக்காரு’.