Palani Laughingthrush Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam. பெயர் சொல்லும் பறவைகள் 14 - பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 14 – பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி



பழனி சிலம்பன்

பழனி என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பழனி முருகன் கோவில் தான். ஆனால் அதையும் தாண்டி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பழனி மலை ஒரு தனித்துவமான பல்லுயிரினச் சூழலை கொண்டது.  அங்கு குறிப்பிட்ட தாவர விலங்கினங்களே வாழ்கின்றன. அதில் ஒன்று தான் பழனி சிலப்பன் (Palani Chilappan). 

Palani Laughingthrush Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam. பெயர் சொல்லும் பறவைகள் 14 - பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி
வரைபடம்

இது பாலக்காட்டுக் கணவாய்க்கு தெற்கே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில்  3,600 அடி  உயரத்தில் காணப்படுகிறது. மேற்கு தமிழகத்தில் உள்ள இரவிக்குளம் தேசிய பூங்கா, பேரிஜம் (கொடைக்கானல்), புல் மலை, இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, பூம்பாறை மற்றும் குக்கல், கொடைக்கானலைச் சுற்றியுள்ள சோலைகள், ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம், முத்துக்குழி ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. வெப்பமண்டல காடுகளில் நிரந்தர ஆறுகள்/நீரோடைகள்/சிற்றோடைகள் (நீர்வீழ்ச்சிகளை உள்ளடக்கியது), செயற்கை/நிலப்பரப்பு-தோட்டங்கள், ஆகியவை இதன் வாழ்விடங்கள் ஆகும்.

லோபிலியா எக்செல்சா (Lobelia excels), ரோடோடென்ட்ரான் (Rhododendron) மற்றும் ஸ்ட்ரோபிலான்டஸ் (Strobilanthes) இனங்களின் பூக்களின் தேனை உண்ணுகின்றன.  ஸ்ட்ரோபிலாண்டஸ் போன்ற சில பூக்களின் இதழ்கள் மற்றும் வைபர்னம் (Viburnum), யூரியா (Eurya), ரூபஸ் (Rubus)  மற்றும் ரோடோமிர்டஸ் டொமெண்டோசா (Rhodomyrtus tomentosa) உள்ளிட்ட பல தாவரங்களின் பழங்களையும் உண்கின்றன. 

 Palani Laughingthrush Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam. பெயர் சொல்லும் பறவைகள் 14 - பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி
Palani Laughingthrush (Montecincla fairbanki) படம்- https://birdsoftheworld.org/bow/species/kerlau2/cur/multimedia?media=illustrations

இனப்பெருக்க காலம் டிசம்பர் முதல் ஜூன் வரை. ஆனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் அதிகமாக இனப்பெருக்கம் செய்கின்றன. குடுவை வடிவத்தில், அடர்த்தியான தாவரங்களில் முட் புதர்களுக்குள் கூடு கட்டும். இது கொடைக்கானலில் சாமுவேல் பேகன் பேர்பேங் என்பவரால் பெறப்பட்ட ஒரு மாதிரியை வைத்து Montecincla என்று  பேரினமாக வகைப்படுத்தப்பட்டு fairbanki என்று சிற்றினமாக அறிவித்தனர் . 

fairbanki என்பது சாமுவேல் பேகன் ஃபேர்பேங்க் (Samuel Bacon Fairbank) என்ற அமெரிக்க எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இயற்கை ஆர்வலரின் பெயர். மேற்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க மராத்தி மிஷனுடன் இந்தியாவில் இவர் பணியாற்றினார். அவரது குழந்தைகள் மற்றும் பல உறவினர்கள் இந்தியாவில் மிஷனரிகளாக தொடர்ந்து பணியாற்றினர்.

Palani Laughingthrush Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam. பெயர் சொல்லும் பறவைகள் 14 - பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி

Samuel Bacon Fairbank (December 14, 1822 – May 31, 1898)

தென்னிந்தியாவில் கொடைக்கானலில் உள்ள ப்ராஸ்பெக்ட் பாயிண்ட்டில் (Prospect Point) 1889 முதல் முகாம் அமைத்து தங்கியிருந்தார். அப்பொழுது,  ஃபேர்பேங்க் உள்ளூர் மக்களுடன் பணியாற்றுவதன் மூலம் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார். அவர் அங்குள்ள மக்களுக்கு விவசாயத்தை கற்றுக்கொடுத்தார். விவசாயத்தை மேம்படுத்த பல முயற்சிகளில் பணியாற்றியுள்ளார். மேலும் திறமையான நடைமுறைகள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்த முயன்றார். அவர் இசையிலும், கீதங்களை மொழிபெயர்த்து, அவற்றை உள்ளூர் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ஆவணமாக பதிவு செய்தார், பாடல்களையும் இயற்றினார். 

அவரது ஓய்வு நேரத்தில், அவர் இயற்கை வரலாற்றில் ஆர்வம் காட்டினார், மெல்லுடலிகள் (Molluscs), பறவைகள் மற்றும் தாவரங்களை சேகரித்தார். அவர் வாழ்க்கையில் சில மெல்லுடலிகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளை செய்துள்ளார்.

அவர் இயற்கை வரலாறு குறித்த குறிப்புகளை எழுதினார் மற்றும் அவரது வெளியீடுகளில் “பம்பாய் பிரசிடென்சியில் தாவரங்களை வகைப்படுத்த சில வழிமுறைகளை பதிவுசெய்துள்ளார். இதே போல் பறவைகள், ஊர்வன மற்றும் மீன்கள் ஆகியனவற்றுக்கும்  குறிப்புகளை நமக்கு தந்துள்ளார். பழனியில் தங்கியிருந்த பொழுது அங்குள்ள பறவைகளை பற்றிய குறிப்புகளையும் பதிவு செய்ததில் சிலம்பன்களும் அடங்கும். 

அவர் வில்லியம் தாமஸ் பிளான்ஃபோர்ட்,  ஆலன் ஆக்டேவியன் போன்ற பிற இயற்கை ஆர்வலர்களுடன் இவருடைய ஆய்வுகளை பகிர்ந்து கொண்டு ஒத்துழைத்தார். மற்றொரு பறவை இனத்திற்கு Trochalopteron fairbanki, மெல்லுடலிகளின் ஒரு வகை Achatina fairbanki, ஃபெர்ன் (Fern) இனமான Lastrea fairbankii ஆகியவற்றிகு இவருடைய பெயர் வைத்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் ஒரு நகரத்திற்கு இவருடைய பெயரான Fairbankia என்றும் பெயரிட்டுள்ளனர். 

மே 31, 1898 அன்று கொடைக்கானல் செல்லும் ரயிலில் சாமுவேல் ஃபேர்பேங்க் இறந்தார். அவர் அகமது நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.

Palani Laughingthrush Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam. பெயர் சொல்லும் பறவைகள் 14 - பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பழனி கொடைக்கானல் பகுதிகளில் இயற்கை பற்றிய ஆய்வுகளும், மக்களின் நலன் சார்ந்து பல்வேறு செயல்களையும் மற்ற நாடுகளிலிருந்து செய்திருக்கின்றனர். ஆனால் நாம் தற்போது இனவெறி போன்ற தேவையற்ற அழுக்குகளை கொண்டு தேவையான இயற்கையை நாசம் செய்கின்றோம். அதுவும் கொரோனா தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது காடுகள் தானென்று சொல்லலாம். அவரவர்களிடம் பொருளாதாரத்திற்கு ஏற்ப இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வனப்பகுதியிலேயே நேரங்களை கழிப்பதுடன், விதவிதமான நெகிழிப்பைகள், மது பாட்டில்கள்,  போன்றவற்றை நமக்கும் காட்டுக்கும் சம்பந்தமே இல்லாதது போன்று எறிந்து விட்டு செல்கின்றனர். மேலும் செல்ஃபீ புகைப்படம் எடுப்பதையும் தற்போது  மாசு பட்டியலில் சேர்க்க வேண்டும்.  செல்ஃபீ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி லைக்ஸ்  வாங்கவே அடர்ந்த காடுகளுக்களாகிய யானைகள், மான்கள், காட்டு மாடுகள் போன்ற பல வன விலங்குகள் வசிக்கும் இடங்களுக்கு செல்லுகின்றனர். நமது மோசமான நடவடிக்கைகளால் அவைகள் பாதிப்படைகின்றன. தேவையற்ற லைக்ஸ்  வாங்குவதில் இருக்கும் மோகம், கொஞ்சமாவது அடுத்த தலைமுறையின் மீதிருந்தால் இயற்கையை காப்பாற்றலாம். 

இன்னும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட தனித்துவமான இடங்களில் வாழும் உயிரனங்கள் (Endemic species) அதிகமாக அழிந்து வருவதாக State of India’s birds என்ற ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளனர். அதில் நாம் இன்றைக்கு வாசித்துக் கொண்டிருக்கும் பழனி சிலப்பன் தேநீர் தோட்டங்கள் மற்றும் சாலைகளின் பிரிந்த காடுகளில் கூட  தகவமைத்துக் கொண்டு வாழ்வதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இதுவே அரிதாகி வரும் பட்டியலில் உள்ளது என்றால் தகவமைத்துக் கொள்ள இயலாத மற்ற பறவைகளின் அல்லது உயிரனங்களின் நிலை கேள்விக்குறி தான் ?

பழனி சிலப்பன் இயற்கை அமைப்பு மாற்றங்களான காலநிலை மாற்றம், கடுமையான வானிலை, நீர் மேலாண்மை/பயன்பாடு, பெரிய அணைகள்,  போக்குவரத்து விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பு  போன்ற செயற்கையான  மாற்றகங்களை எதிர்கொள்ளவோ, அதற்கென தகவமைத்து கொள்ளவோ பல வருடங்களாகும்.

இதற்குள் அது அதன் இனங்களையே இழந்து விடுகின்றன.  

பொதுவாக வன பகுதியில் கோவில் இருப்பதனால் தான் அசுத்தம் செய்வதில்லை, மொத்த வனமே பாதுகாப்படுவது போல சித்தரிக்கிறார்கள். ஆனால் நாம் பாதுகாப்பை விடுத்து அழிவிற்கான அனைத்து செயல்களிலும் ஈடுபடுகின்றோம். அதும் வார இறுதி நாட்களில் கூடுதலாகவே நடக்கின்றன. ஆனைக்கட்டி வனப்பகுதியில் தினமும் நேரில் பார்க்க முடிகிறது.

இதை பார்க்கும் பொழுது கனடாவை சார்ந்த வானியல் இயற்பியலாளர் Hubert Reeves அவர்கள் கூறிய மனிதன் மிகவும் பைத்தியக்கார இனம். கண்ணுக்கு தெரியாத கடவுளை வழிபடுகிறார்கள்  மற்றும் கண்ணுக்கு தெரியும் இயற்கையை அழிக்கிறார்கள். அழிக்கும் இந்த இயற்கை தான் அவர்கள் வழிபட வேண்டியவை என்பதை அறியாமல் வாழ்கிறார்கள் என்று சொன்னது நூறுசதம் உண்மை என்று புரிகிறது.

தரவுகள்

  1. Blanford, W.T. (1869). “Ornithological Notes, chiefly on some bird of Central, Western and Southern India”. J. Asiat. Soc. Bengal. 38: 175.
  2. https://archive.org/details/journalofasiati381869asia/page/175/mode/1up?view=theater 
  3. https://www.stateofindiasbirds.in/wp-content/uploads/2020/02/SOIB_Web-version_Final_.pdf 
  4. http://www.internationalbulletin.org/issues/2005-03/2005-03-144-trafton.pdf 

முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க: 

பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 10 – காட்டுக்கோழி | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 11 – பல்லாஸ் மீன் கழுகு | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 12 – காட்டுப் புள்ளிச் சிறு ஆந்தை (Forest owlet) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 13 – பூனைப் பருந்து (Harrier) | முனைவர். வெ. கிருபாநந்தினி