யாழ் ராகவனின் கவிதை

யாழ் ராகவனின் கவிதை




ஏழு அடுக்கு பாதுகாப்பு வளையத்தை தாண்டி
எட்டிப்பார்த்தது ஒரு சிட்டுக்குருவி

அந்நியர்கள் யாரும் உள்ளே நுழையக் கூடாது என
எழுதப்பட்ட பலகை மேல் அமர்ந்த காகம் எச்சம் இட்டது

சாக்கடையில் மிதக்கும் முருங்கக்காய் சக்கையிலும்
மீன் துண்டுகளிலும்
நேற்றைய மிடுக்கு கொஞ்சமும் தெரியப்போவதில்லை

வழிகாட்டி விளக்குகளில் சிவப்பு விளக்கு மட்டும் அணையாமல்
திக்கித்திக்கி தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது

எத்தனை முறைதான் முப்பால் காரனை
மூர்க்கத்தனமாகக் கொல்வார்கள்.

மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல்
வாயில் கரையாத கமர்கட்டு மிட்டாய்
பிரியங்களின் அத்தனை வேர்களையும் பிடுங்கி எறிந்த படி..

– யாழ் எஸ் ராகவன்

Explore the captivating story (அந்நியர்கள் சிறுகதை சுருக்கம்) of R. Sudamani with Anniyargal in this Tamil short story.

தொடர் 42: அந்நியர்கள் சிறுகதை – ஆர். சூடாமணி

தொடர் 42: ஆர் சூடாமணி அந்நியர்கள் சிறுகதை | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத் அழுத்தமான சமுதாய முன்னேற்றக் கருத்துக்களும், கண்ணியமும், பரிவும், பலதரப்பட்ட தேர்ச்சியான பாத்திர வார்ப்பும், இயல்பான மனோதத்துவப் பின்னணியும் சூடாமணியின் தனிச் சிறப்புகள் அந்நியர்கள் ஆர். சூடாமணி தன்னை …