​​வணக்கம் மக்களே இது ஒரு மருத்துவரின் பின் புலம். அதுவும் பெண் மருத்துவரின் பின்புலம் ரணம் நிறைந்ததாகவே உள்ளது. நாம் எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறோம். இன்றைக்கு ஒரு விஞ்ஞானிக்கு, சமூகப்போராளிக்கு, முதல் பெண் மருத்துவருக்கு வாழ்த்து சொல்வோம். பிறந்தாலும் காரெட் போல பிறக்கவே.. இனிய பிறந்த நாள் Dr எலிசபெத் காரெட் ஆண்டர்சன். ஆமாம் நீங்கத்தானே இங்கிலாந்தின் அங்கீகாரம் பெற்ற முதல் பெண் மருத்துவர். அடிஷனல் வாழ்த்துக்கள் உங்களுக்கு, அதுமட்டுமல்ல , பெண்கள் மருத்துவம் படிக்க ஒரு மருத்துவ பள்ளி துவங்கி,பிரிட்டனில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடம் போட்டுக்கொடுத்தவர். அதுமட்டும் இல்லீங்க . பெண்ணின் வாக்குரிமைக்காகப் போராடிய பெண்மணியும் கூட.. இவரோட பிறந்த நாள் 1836ல். ஜூன் 9. இவர்தான் பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர். பெண்களுக்கான முதல் மருத்துவ மனையின் இணை நிறுவுனர். பிரிட்டிஷ் மருத்துவ பள்ளியின் முதல் டீன்.

Aldeburgh வின் முதல் மேயரும் இவரே. இது போதாது பிரிட்டனின் முதல் பெண் நீதிபதியும் எலிசபெத் ஆண்டர்சன் தான், ஆனால் அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவரான Dr.எலிசபெத் பிளாக்வெல்லை சந்தித்த பின்னரே எலிசபெத் ஆண்டர்சன் தானும் மருத்துவராக வேண்டும் என்ற முடிவை எடுத்தார்.

குடும்ப சூழலின் வரலாறு

அடகுப்பிடிக்கும் குடும்பத்தின் 12 குழந்தைகளில் எலிசபெத் ஆண்டர்சன் 11வது குழந்தை . எலிசபெத் ஆண்டர்சன் குடும்பத்தின் கதையும் கூட சுவாரசியமானதே. , லேச்டோனிலிருந்து பிழைப்பு தேடி லண்டன் வந்த நியூசன் காரெட் (1812–1893) மற்றும் லூயசாவின் (1813–1903)11வது குழந்தையாக லண்டனில் பிறந்தவர் எலிசபெத் காரெட்ஆண்டர்சன் . காரேட்டின் மூதாதையர்கள் கிழக்கு சபூல்க் என்னுமிடத்தில்பரம்பரை பரம்பரையாக குடும்பம் இரும்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தது. , 17ம் நூற்றாண்டில் இருந்தே ஈடுபட்டு வந்தது. நியூசன் அவர் குடும்பத்தில் மூன்றாவது கடைக்குட்டி மகன்.அவ்வளவாகப் படிப்பும் வரவில்லை.எனவே குடும்பத்தினர் பார்த்த அதே தொழில் கை கொடுத்தது.

நியூசன் பள்ளிப்படிப்பை முடித்ததும் அங்கிருந்து லண்டனுக்கு எதிர்காலம் நிர்ணயிக்கப் புறப்பட்டார். அங்கு வந்ததும் அவர் முதலில் சந்தித்தது காதலைத்தான், சத்திரம் கண்காணிப்பவர் மகள் லூயிஸா(Louisa Dunnell) டன்னலை விரும்பினார். லூயிஸாவை கரம் பற்றினார். பின்னர் இருவரும் இணைந்தே ஒயில்சாப்பல் என்ற ஊரில் உள்ள வணிகத்தெருவில், அடகுக்கடை, அதாம்பா வட்டிக்கடை வைத்தார் பிழைப்புக்கு வழி தேடி.கிரேட் தம்பதிக்குப் பணம் கிடைத்ததோ இல்லையோ, உடனடியாக மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன.முதல் குழந்தையின் பெயர் லூயி எலிசபெத், அவரது சகோதரன் நியூசன் 6 மாதத்தில் இறந்துவிட்டது. லூயிசாவுக்கு தனது மூன்றாவது குழந்தையும் இறந்து போனதில் ஏராளமான வருத்தம். மற்ற இரண்டு பெண்குழந்தைகளை லண்டன் சூழலில் அவரால் அவரால் வளர்க்க இயலாத சூழல். காரெட்டுக்கு மூன்று வயதாகும்போது குடும்பம் பொருளாதார சூழலை முன்னிட்டு, லாங் ஏக்கருக்கு நகருகிறது. இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு இன்னொரு குழந்தையும் பிறந்துவிடுகிறது. இதனால் லூயிஸின் அப்பா சம்பாதிப்பதிற்காக வேறு இடத்திற்கு மாறுகிறார். பெரிய அடகுபிடிக்கும் இடத்திற்குச் சென்று மேலாளராகப் பொறுப்பு ஏற்கிறார்.அதே சமயம் வெள்ளி வேலை செய்பவராகவும் உள்ளார்.ரிச்சர்ட் கார்ட் &சன்ஸ் என்ற பெயரில் பொறியியல் பட்டறையை வைத்து தொழில் செய்துகொண்டிருந்த காரெட்டின் தாத்தா, அவருடைய பெரிய மகனிடம்(காரெட்டின் மாமாவிடம்) தொழிலைவிட்டு விட்டு 1837ல் இறந்துவிடுகிறார்.;அவருக்கோ தொழில் செய்ய போதுமான பணம் இல்லை.இந்த சமயத்தில் நியூசன் தொழிலில் வெற்றி பெற எண்ணி அவரது 29வது வயதில் 1841ல், குடும்பத்துடன் சபோல்க் என்ற ஊருக்குப்போகிறார். அங்குப் பார்லியில் தொழில் செய்கிறார். அங்குத் தொழில் விரிவாக்கம் செய்யப்பட்டு குடும்பமும் விரிவடைகிறது. 12 குழந்தைகள். தொழிற்புரட்சியை ஒட்டி நியூசன் பெரிய தொழில் அதிபராகிறார்.
காரெட்டின் இளமைக் கல்வி

குழந்தை கார்ட் படிக்க அந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லை. எனவே மிஸ் எட்ஜஒர்த் என்ற ஏழைப்பெண் ஆசிரியையை அமர்த்தி கேரட்டுக்கும் அவரது தமக்கைக்குக் கல்வி சொல்லிக்கொடுத்தனர். அவரது ஆசிரியர் ஏழை என்பதால் அவர்கள் வீட்டிலேயே காரெட்டின் அறையிலேயே தங்கினார்; அங்கேயே உணவும் கொடுத்தனர். இதெல்லாம் காரெட்டுக்குப் பிடிக்கவில்லை. ஆசிரியரை வெறுத்தார்; அவரை வீட்டிலிருந்து வெளியேற்றச் சதி செய்தார்.. பின்னர் காரெட்டுக்கு 13 வயதும் ,அவரது அக்காவுக்கு 15 வயதும் ஆனபோது, அவர்கள் ஒரு தனியார்ப் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். இந்த பள்ளி ராபர்ட் பிரௌனிங் அத்தையால் நடத்தப்பட்டது. அங்கே ஆங்கில இலக்கியம், பிரெஞசு , இத்தாலி மற்றும் ஜெர்மன் மொழி எல்லாம் சொல்லித்தரப்பட்டது. ஆனாலும் கூட அவர் அவரின் ஆசிரியர்கள் போதுமான அறிவுள்ளவர்களாக அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அவரது பள்ளி வாழ்க்கையால் அவருக்குப் படிப்பதில் ஏராளமான காதல் ஏற்பட்டது. அப்பள்ளியில் அறிவியல் மற்றும் கணிதம் இல்லை என ரொம்பவே வருத்தப்பட்டார். ஆனாலும் கார்ட் டென்னிசன், வேர்ட்ஸஒர்த், மில்டன், கொலெரிட்ஜ், ட்ரோல்பே மற்றும் ஜார்ஜ் எலியட் அனைவரின் காவியங்களையும் கரைத்துக் குடித்தார்.

இளவயதிலேயே அரசியலில் ஆர்வம்

பள்ளிப்படிப்பு முடிந்த பின்னர் 9 ஆண்டுகள் கார்ட் வீட்டு வேலைகளையே பார்த்தார். அப்புறம் லத்தீன் மற்றும் கணிதம் ஆழமாகப் படித்தார். இவரிடமிருந்து இவரது அக்கா மற்றும் தங்கைகளோடு இங்கிலாந்தின் வரலாறு , தற்கால விஷயங்களையும் அரசியலையும் விவாதம் செய்து தெரிந்து கொள்வார்கள். அடிக்கடி அவரின் அக்கா காரெட்டின் வாராந்திர உரைகளை நினைவு கூர்கிறார். 1984ல் கார்ட் தனது அக்காவுடன், பள்ளியின் நண்பர்களைக் காணச் செல்கிறார். அந்த சமயத்தில் கேட்ஷ்ட் என்னுமிடத்தில் எமிலி டேவிஸ் என்ற துவக்கக் கால பெண்ணியவாதியை கேம்பிரிட்ஜில் சந்திக்கிறார். இவர்கள் இருவரும் அவர்களின் வாழ்நாள் உள்ள அளவும் நட்பும் அன்பும் கருத்து பரிமாற்றமும் கொண்டிருந்தனர். டேவிஸ் காரெட்டின் முன்னேற்றத்திற்கும், அவர் சில விஷயங்களில் தீர்க்கமான முடிவெடுக்கவும் அக்கா பெரிதும் உதவிக்கரமாக இருந்துள்ளார்.1849ல், ஆங்கிலேயப் பெண்களுக்கான பத்திரிகையில் கார்ட், அமெரிக்காவின் முதல் பெண் டாகடரான எலிசபெத் பிளாகவெல் (Elizabeth Blackwell) என்ற பெண் பற்றிய என்ற தகவலைப்படிக்கிறார். பின்னர் 1859ல் எலிசபெத் பிளாக்வெல் லண்டன் வரும்போது அவரை சந்திக்கிறார். லண்டனில் அவரது சகோதரி மணமுடித்த பின் வசிக்கிறார். அங்கே பெண்களுக்கு மருத்துவம் படிக்க ஏதுவான வகையில் உரை நிகழ்த்துவார். கார்ட் மற்றும் மருத்துவர்களுக்குள் தனிப்பட்ட கூட்டமும் இருக்கும். அதில் மருத்துவர் 1860களில் ஒருமுறை அவரும் டேவிஸும் பெண்களின் உரிமை பற்றியும் குறிப்பாகப் பெண் மருத்துவம் பெண் கல்வி, போன்றவை பற்றிப் பேசுகின்றனர். இதில் 13 வயது மில்லிசென்ட் அரசியலுக்கும் பெண்களுக்கான வாக்குரிமை பற்றியும் பேச அனுமதிக்கப்படுகிறார். . ஆனாலும் நியூசன் முதலில் தன் அவரது பெண்ணின் முற்போக்கு கருத்துக்களையும், அவர் டாகடர் ஆவதையும் எதிர்க்கிறார். பின்னர் அவரே கார்ட் முன்னேற அனைத்து உதவிகளையும் செய்கிறார்.

Image Source: Pinterest

மருத்துவம் படிக்க ஆர்வமும் போராட்டமும்.

காரெட் ஹார்லி தெருவில் உள்ள மருத்துவர்களைச் சந்தித்த பின்னர் மனம் சோர்வாகவே இருந்தது. ஆனாலும்1850 ல் , அவர் அறுவை சிகிச்சைக்குச் செவிலியாக லண்டனின் மிடில்செக்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்னர் அவரது அனுபவ அறிவை முன்னிட்டு, காரெட் மற்ற வெளி மருத்துவ மனைகளில் ஒரு அறுவை சிகிச்சை செய்யவும் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவரால் முறையாக மருத்துவமனை மருத்துவ கல்வி பயில முடியவில்லை. ஆனால் அவர் செவிலியராகவும் இருந்து கொண்டே, மருந்து தயாரிப்பாளராக இருந்து கொண்டே, தனியாக லத்தீன், மற்றும் கிரேக்கத்தில் மருத்துவம் படித்தார். காரெட் வாரம் மூன்று நாட்கள் எனத் தனியாகவே உடலியல் மற்றும் உடல் இயங்குவியல் ஆகியவற்றைத் தனியார் டியூசன் மூலமே படித்தார்.

சளைக்காமல் மருத்துவ கல்விக்காகப் போராடிய காரெட்

இறுதியாகக் காரெட்டை மருத்துவ மணியில் அறுவை சிகிச்சை அறைக்கும், வேதியியல் உரைகள் கேட்கவும் அனுமதிக்கப்பட்டார். பின்னர் காரெட் ஆண் மாணவர்கள் முன்னிலையை ஒரு வேண்டாத மனுஷியாகவே நடத்தப்பட்டார்.ஆனாலும் 1861ல் அவர் ஒரு நினைவுப் பரிசை பள்ளிக்குத் தந்தார். இது யாருக்கும் பிடிக்கவில்லை ஆனால், நிர்வாகம் அவரை அனுமதித்ததினாலும் காரெட் உற்சாகத்துடன் செயல்பட்டார். அதன்பின்னர் மிடில்செக்ஸ் மருத்துவமனையிலிருந்து காரெட் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். ஆனாலும் காரெட் அங்கேயே வேதியியலில் ஹானர் சான்றிதழ் மற்றும் materia medica பட்டமும் பெற்றார். பின்னர் காரெட் பல மருத்துவ பள்ளிகளுக்கு விண்ணப்பித்தார். ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் கிளாகோவ் எடின்பரோ ஆண்ட்ரீவ்ஸ் மற்றும் ராயல் அறுவை சிகிச்சை கல்லூரிக்கும் என எல்லா மருத்துவ பள்ளிக்கும் கூட விண்ணப்பித்தார். எல்லா மருத்துவ பள்ளிகளும் ஒட்டு மொத்தமாக அனைத்துப் பள்ளிகளும் காரெட்டின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டன. ஆனால் இவரது போராட்டத்தட்டில் இவருடன் உடன் நின்றவர், Dr சோபியா ஜேக்ஸ் ப்ளாக் (Dr Sophia Jex-Blake) . ஆனால் பின்னர் இவர்கள் இருவரும் மருத்துவ உலகில் 19ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆளுமைகளாகப் பேசப்படுகின்றனர்.

திறமையுடன் இணைந்த போராட்டமும் வெற்றியும்

காரெட் மிகப்பெரிய திறமைசாலி, அவர் பின்பக்க வழியாக உள்ள ஒரு சில ஓட்டைகள் மூலமே மருந்து தயாரிக்கும் நிறுவனம் மூலம் உள்ளே நுழைகிறார். அங்கே தனியார் மூலம் உடலியல் மற்றும் உடல் இயங்குவியல் இரண்டிற்குமே சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்கிறார். பின்னர் 1862ல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் அனுமதிக்கப்படுகிறார். ஆனாலும் அவர் பெண் என்பதால் தனியாக எதுவும் சட்டப்படி செய்யமுடியாது. இருப்பினும் தனக்குச் சமத்துவம் கிடைக்காமைக்காகத் தொடர் போராட்டத்தினை நடத்திக்கொண்டு, செயின்ட் ஆன்ட்ரவ்ஸ் பல்கலைக்கழகம்,மற்றும் எடின்பரோ ராய மெட்டர்னிட்டி மற்றும் லண்டன் மருத்துவமனை பள்ளி என்ற அனைத்து கல்வி நிலையங்களிலும் காரெட் பல பேராசிரியர்களுடன் தனியாகவே மருத்துவம் படிக்கிறார். இறுதியாக காரெட் 1865 ல்,மருத்துவ தேர்வு எழுதி மருத்துவம் செய்வதற்கான உரிமம் பெறுகிறார். எலிசபெத் காரெட் ஆண்டர்சன்தான் இங்கிலாந்தின் முதன் பெண் மருத்துவர்.அதன் பின்னர், முறையாக மருத்துவம் செய்கிறார். ஒரு பெண் மருத்துவராக எத்துணை போராட்டங்கள் நடத்தி இருக்கிறார். அதுவம் 150 ஆண்டுகளுக்கு முன்பு என்றால் நம்மால் கற்பனை செய்து கூட பார்க்கமுடிகிறதா?

இங்கிலாந்தின் முதல் பெண் மருத்துவர் காரெட்

இவருக்கு முன்னர் ஒருவர் பெயர் Dr ஜேம்ஸ் பாரி என்பவர் [பெண்ணாகப் பிறந்தது பெண்ணாகவே வளர்க்கப்பட்டவர், மருத்துவ பள்ளிக்குச் செல்ல வேண்டி, அவரது பெயரை ஆணாக மாற்றிக்கொண்டார்.எனவே அவரது வாழ்நாளை ஆணாகவே கழித்தார். இவருடன் 7 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்றாலும் , காரெட்தான் அதிக மதிப்பெண் பெற்றவர். உடனடியாக மருந்தாளுநர் நிறுவனம் என்ன செய்தது தெரியுமா? அனைத்து பெண்களையும் மேலே படிக்கவிடாமல் பின்புற வழியாக உள்ளே நுழைவதை, உரிமம் வாங்குவதை உ உடனடியாக தடுத்து நிறுத்தியது. ஜேக்ஸ் பிளேக் கூட அந்த வழியே நுழைய முடியவில்லை. மேலும் தனியார் மூலம் படித்துவிட்டு வரும் பெண்களுக்கு இனி தேர்வு எழுதவோ /சான்றிதழ் தருவதில்லை என ஒரு புது சட்டமே உருவானது.

  அதன் பின்னர்தான் 1876ல் ஒரு புது ,சட்டம் கொண்டு வந்து ஆண்பெண் யாராக இருந்தாலும் மருத்துவ உரிமம் வழங்குவது என. காரெட்டுக்கு வந்த சோதனையை, பார்த்தல் அதிர்ந்து விடுவீர்கள். அவர் மருத்துவம் செய்ய, அறுவை சிகிச்சை செய்திட உரிமம் ஆகியவை இருப்பினும், காரெட்டுக்கு ஒரு மருத்துவ மணியிலும் வேலை கிடைக்கவில்லை. எனவே அவர் 1865ல் தனியாகவே ஒரு மருத்துவமனை துவங்கி சேவை செய்தார். அப்போதும் மக்கள் வரவே இல்லை. பின்னர் அவரது அனுபவம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. ஏழை மற்றும் வசதியற்ற பெண்களுக்கு மருத்துவம் தர வெளியார் வந்து போகும் ஒரு மருத்துவமனையைத் துவங்கினார். 

Elizabeth Garrett Anderson – Wikipedia

மருத்துவ அங்கீகாரம்.  

பிரிட்டனில் 1965ல் பெரிதும் கொள்ளை நோயான காலரா . பிரிட்டனின் அனைத்து இடங்களையும்,நீக்கமற நிறைத்தது. ஏழை பணக்காரர் பாகுபாடின்றி தாக்கி கோரத்தாண்டவம் ஆடி இருந்தது. அரசும் மக்களும் அரண்டு மிரண்டு உயிர்பயத்தில் இருந்தனர். எனவே மருத்துவம் செய்வது ஆணா பெண்ணா என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லோரிடமும் மருத்துவம் பார்த்தனர். 1856ல் முதல் காலரா சாவு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காரெட் இதற்கு முன்பே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ மனை செயல்படுத்திக்கொண்டு இருந்தார்.இவரின் சேய்மூர் எந்த இடத்தில் உள்ள மருத்துவ மனையில் முதல் ஆண்டு மட்டும் 3000 புதிய நோயாளிகளும், 9,000 நோயாளிகளும் காரெட்டின் மருத்துவமனை வந்து போயினர். இதனைக் கேள்விப்பட்ட சோர்போன் பல்கலைக்கழக டீன் பெண்களை மருத்துவக்கல்லூரியில் பெண்களைச் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. காரெட்டுக்கு பிரெஞ்சு மொழி தெரியும் என்பதால் அவர் பல்கலைக்கழகம் மருத்துவ பட்டம் வழங்கியது. இந்த பட்டத்தை எப்போது பெற்றார் தெரியுமா? 1870 தான் இதற்கே காரெட் பெரும் பெரும் போராட்டங்களை நடத்தி திறமை &அனுபவம் இருந்தும் அவரால் இயல்பாகச் செயல்பட முடியவில்லை.

பெண்ணுரிமைப் போராளி.

  கார்ட் 1870 ம் ஆண்டில், லண்டன் பள்ளி போர்டில் அதிக வாக்குகள் பெற்றவராக அறிவிக்கப்பட்டுச் செயலாற்றினார். அதே வருடத்திலேயே காரெட் ,லண்டனின் குழந்தைகளுக்கான மருத்துவ மனையில் சிறப்பு மருத்துவராக ஆக்கப்பட்டார். இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா, பிரிட்டனின் அரசு நியமனம் செய்த முதல் பெண் மருத்துவர் இவரே. ஒரு அம்மாவாகவும் இருந்து கொண்டு, இரு பணிகளையும் பார்ப்பதில் அவருக்குச் சிரமம் இருந்தது. எனவே அவர் 1873ல், இவைகளிலிருந்து ராஜினாமா செய்தார். 1872ல் பெண்களுக்கான சிறப்பு பிரத்தியேக பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு பெரிய மருத்துவமனையை நிறுவினார். இந்த கால கட்டத்தில், ஹென்றி மௌட்ஸ்லேய் என்பவர், பாலினமும் கல்வியும் என்ற கட்டுரையில் பெண்கள் படிப்பதாலேயே அவர்களின் இனப்பெருக்கத்திறன் குறைகிறது; மன அழுத்தம் மற்றும் மூளைப்பிரச்சினைகள் அதிகரிக்கிறது ஏனென்று எழுதி இருந்தார். இதற்குப் பதிலளித்த காரெட் ,” அதன் உண்மைக்காரணம் பெண் அடுப்பில் எந்நேரமும் அமர்ந்து இருப்பதால் போதுமான காற்று இன்றியே இந்த பிரச்சினைகள் என்கிறார். பின்னர் காரெட் லண்டனில் பெண்கள் படிக்க மருத்துவ பள்ளியை நிறுவினார். அங்கேயே பெண்களுக்கு மருத்துவம் கற்பித்தார்.அங்கேயே காரெட் இறுதிக்காலம் வரை கழித்தார்.

அனுபவம், போராட்டம், வெற்றி, மற்றும் சமூக அங்கீகாரம்.

  காரெட் 1873ல், பிரிட்டிஷ் மருத்துவ கழகத்தின் உறுப்பினர் ஆனார்.. 1879ல், அவர் தேர்தலில் நிற்கக் கூடாது என்றனர். இது Dr நார்மென் கேர் என்பவரால் எதிர்க்கப்பட்டது. இருவரும் சமம் என்று போராடினார் . இவைகளுக்கெல்லாம் மேலாக அனைத்தையும் தூக்கி சாப்பிட்டுவிட்டு, காரெட் எங்கெல்லாம் பெண்களை நுழையக்கூடாதென்கிறார்களோ அங்கெல்லாம் உள்ளே நுழைந்து பெருமை பெற்றுப் பாராட்டும்படி பேணி செய்தார் காரெட் . பின்னர் 1893 லிருந்டனு பெண்களை பிரிட்டிஷ் மருத்துவ கழகம் அனுமதித்தது. 1897ல் காரெட் இங்கே தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட .தலைவர் ஆனார்.

வாழ்ந்து காட்டுவேன்.

எலிசபெத் காரெட் ஆண்டர்சன் பெண்கள் இயக்கத்திலும் முன்னணியிலிருந்து . வாழ்ந்து காட்டினார்.1866ல்வீட்டில் பணிபுரியும் 1500 பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு போராடினார் . ஆனால் அவரது சகோதரி போல அவ்வளவு சிறப்பாக இல்லை.. அவரின் தங்கை மிலிசென்ட் பெண்களுக்கான மத்தியக்குழுவில் 1889 வரை உறுப்பினராக இருந்து செயல்பட்டார். அவரின் கணவர் இறப்புக்குப் பின்னர் அதிகமாக பணியாற்றினார். அவரது மகள் “லூசா” வும் மருத்துவரே. 

இன்னொரு வாய்ப்பு அவரை நோக்கி நகர்ந்தது. அதுதான் 1908 நவம்பர் 9 ல் பிரிட்டிஷ் அரசின் Aldeburgh என்ற ஊரின் மேயராகப் பொறுப்பு ஏற்றுச் செயல்பட்டார். காரெட்தான் முதல் பெண் மேயர். கார்ட் 1917,ல் அவரது இதயம் துடிப்பை நிறுத்திக்கொண்டது பெண்களுக்காகப் போராடுவதையும் நிறுத்திக்கொண்டது. அவரது உடல் செயின்ட் பீட்டர் இடுமனையில் எரிக்கப்பட்டது. இவரது மருத்துவ மனை 1918, ல் புதிய பொலிவுடன்,எலிசபெத் காரெட் ஆண்டர்சன் மருத்துவமனை என்ற பெயருடன் இயங்கி வருகிறது. அனைத்து வசதிகளும் கொண்டது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *