இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் .சி .வி.ராமன் , பரிசிற்கான தனது கண்டுபிடிப்பினை 210, பவ்பஜார் வீதி வீட்டின் பக்கவாட்டு தகர கொட்டகையில் கண்டறிந்தார் என எங்காவது சொல்லி கேட்டிருக்கோமா ? பாடத்திட்டத்தில் தான் படித்திருக்கிறோமா ? என கேள்வி எழுப்பும் போது எடிசன் பற்றி பக்கம் பக்கமாக படித்த நமக்கு இது தெரியவில்லையே என ஆச்சரியத்தோடு வாசிப்பை தொடரவைக்கிறது இந்த புத்தகம் . 2005ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ராய் ஜெகிளாபர் என்பவருக்கு Sudharshan Diagonal Representationஐ கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டது .
சுதர்சன் யார் ?
கேரளத்தில் பிறந்து சென்னை கிருஸ்துவகல்லுாரியில் படித்தவர் . யாராவது இவரைப்பற்றி சொல்லி இருக்கிறார்களா ? இந்த புத்தகம் சொல்கிறது ஜே.சி . போஸ் தாவரங்களுக்கு உயிர் உண்டு என கண்டுபிடித்தார் . தாவரங்களின் வளர்ச்சியை அளக்கும் கருவியை கண்டுபிடித்தார் என ஒருவரியில் சொல்லி நம் பாடத்திட்டங்கள் கடமை முடிக்கின்றன .
ஆனால், 1899ல் பொது அரங்கில் கம்பி இல்லாமல் ஒலியை மின்காந்த அலைகளாக மாற்றி கடத்த முடியும் என நிரூபித்தவர் போஸ். ஆனால் அடுத்த ஆறு மாதத்தில் மார்க்கோணி ரேடியோ என கண்டுபிடித்ததாக அறிவித்து நோபல் பரிசு வரைபெற்றார் . இப்போது மார்க்கோணி கண்டுபிடித்த ரேயோ முறையில் ரேடியோ இயங்குகிறது .
ஆனால் போஸ் கண்டுபிடித்த மின்காந்தஅலை தத்துவத்தில் தான் கைப்பேசி இயங்குகிறது .
யாருடைய தத்துவம் உயர்ந்தது ? நாம் இதைப்பற்றி பேசியிருக்கிறோமா ? நம் பாட அமைப்புகளை குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறார் நுால் ஆசிரியர் ஆயிஷா நடராஜன் .
மெக்சிகோவில் சோள உற்பத்தியில் தனது கண்டுபிடிப்பால் மாற்றத்தை ஏற்படுத்திய சதாசிவகாங்கோஜி நாக்பூரை பின்னாளில் ஆரஞ்சு நகரமாக்கியதும் , லக்னோ பூங்கா புகழ் எஸ்.ஆர்.ஹேஷாப் …
1917ல் அயனியாக்க சமன்பாட்டை கண்டறிந்தமேகநாத் சகா, தனது 20ஆவது வயதில் ஐன்ஸ்டீனின் சார்புதத்துவத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டு ஐன்ஸ்டீனுடன் இணைந்து “ஐன்ஸ்டீன் போஸ்புள்ளியியல் ” என தனி தத்துவத்தை வழங்கிய சத்யேந்திரர் என நுாற்றுக்கும் மேற்பட்ட , நமது பாடப் புத்தகங்களில் வெளிவராத அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளை அறியச் செய்யும் நுால் இது .
அறிவியல் தானே வாசிக்க கடினம் என சொல்லாமல் படிக்க ஆரம்பித்தவுடன் வேகமெடுக்கவைக்கும் நுால்
42 பக்கங்கள்
வெறும் முப்பது ரூபாய் தான்
நுாலாசிரியர் ஆயிஷா நடராஜன்
பாரதி புத்தகாலயம்
அக்வாஃபினா வாட்டர் பாட்டில் விலையில் அறிவியல் அறிவுங்கோ மிஸ் பண்ணிடாதிங்க, அப்புறம் வருத்தப்படுவீங்கோ.
வாங்குங்க…
வாசிங்க …
மறந்துடாதிங்க.
#வாசிப்பதைப் பகிர்வோம்#
#பகிர்வதற்காக வாசிப்போம்#
~
மு. வீரகடம்ப கோபு,
திண்டுக்கல்.