வயசான எல்லாம் மறந்து போவுதுன்னு புலம்புவது சகஜம். ஆனால் தொடர்ந்து வாசிப்பு இருந்தால் மறதி குறைகிறது என்று அறிவியல் ஒரு பக்கம் சொல்கிறது. இன்னொரு பக்கம் இன்றைக்கு ஒரு புதிய ஆய்வினை அறிவியல் வெளியிட்டுள்ளது. 

என்ன தெரியுமா? நமக்கு சில தகவல்களை மறக்காமல் வாழ்நாள் உள்ள அளவும் வைததிருக்க இஷ்டம்தான். ஆனால் நாம் நினைப்பது போலவா நடக்கிறது. அப்படி இல்லை நடக்க வாய்ப்புண்டு என அறிவியல் கூறுகிறது. 

நமது உடல் மற்றும் உணர்வு /மனம் ரீதியான சில எதிர்மறை தாக்கங்கள் அப்படி வாழ்நாள் முழுவதும் நினைவுகளை தக்க வைக்காமல் செய்வதும் உண்டு.

கடந்த 9 ஆண்டுகளாக செய்த மனோதத்துவ ஆய்வில் கிடைத்த விபரங்களை மனோதத்துவ அறிவியல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.அது என்ன தெரியுமா? எந்த மனிதர்கள் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறார்களோ, அவர்களை நேர்மறை பாதிப்பு உள்ளவர்கள் என மனோதத்துவ நிபுணர்கள் கணிக்கிறார்கள். அவர்களுக்கு முதுமையில் ஏற்படும் நினைவுத்திறன் இழப்பு என்ற நிலை மிக குறைவாகவே ஏற்படுகிறதாம்.இந்த ஆய்வின் முடிவுகள்,வயதாவதில்/முதுமை நிலையில்,  நேர்மறை பாதிப்புகளின் ஆளுமை/ செயல்பாட்டில் முக்கிய பங்காற்றுகிறது மேலும் இது  தொடர்பான மேல் ஆய்வுக்கும் வலு சேர்த்து பயன்படுகிறது என தெரியவந்துள்ளது.

மனோவியல் தொடர்பான ஆய்வாளர்கள், அமெரிக்காவில், 991 நடுவயது மற்றும் வயதான் மக்களிடம், 1995&1996, 2004&2006, 2013&2014 என பல காலகட்டங்களில், தொடர்ந்து அவர்களின் பழகக் வழக்கங்களை பின்பற்றி, ஒரு தேசிய ஆய்வு நடந்தினர். இதில் ஒவ்வொரு மதிப்பீட்டிலும், பங்கேற்பாளர்கள் தொடர்ந்த 30 நாட்களில் ஏற்பட்ட உணர்வுகளை பல ரேஞ்சில் பதிவிட்டுள்ளனர். கடைசியாக நடத்திய இரண்டு பதிவேட்டில் பங்கேற்பாளர்களின் நினைவுத்திறன் பல வகைகளில் சோதனை செய்யப்பட்டது.மேலும் அவர்கள் அவர்கள் சொன்ன சொற்களை மீண்டும் 15 நிமிடங்களில் மீள்பதிவு செய்யவேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

  ஆய்ப்வின் மதிப்பீட்டாளர்கள், பங்கேற்பாளர்களின் நேர்மறை பாதிப்புக்கும்,நினைவுத்திறன் இழப்புக்கும் என்ன தொடர்பு உள்ளது என்றும் சோதிக்கப்பட்டது. இதுவும் அவர்களின் பாலினம், கல்வி, மன அழுத்தம், எதிர்மறை மன உணர்வு,மற்றும் அதீத உணர்வுகள் போன்றவற்றிக்கும் உள்ள தொடர்புகளும் செயலபாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன.  



அதில் கிடைத்த முடிவுகளாவன.: வயதாக் வயதாக் நினைவுத்திறன் குறைகிறது..  என வடமேற்கு பலகலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் கிளாடியா ஹெஸ்ஸே (Claudia Haase) தெரிவிக்கிறார். ” “இருப்பினும், எந்த மனிதர்களுக்கு அதிகமான் நேர்மறை எண்ணங்களும் பாதிப்பும் உள்ள்ளனவோ, அவர்களுக்கு நினைவுத்திறன் இழப்பு/சரிவு கடந்த 10 ஆண்டுக்கால ஆய்வில் மிகக் குறைவாகவே உள்ளது / நடந்திருக்கிறது என்று அதே வடமேற்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் படிப்பு ஆய்வாளர் மற்றும் அந்த பத்திரிக்கையின் ஆசிரியரான எமிலி ஹிட்லர் (Emily Hittner) தெரிவிக்கிறார். இந்த ஆய்வு எதிர்காலத்தில் நேர்மறை  எண்ணங்களின் பாதிப்பு தொடர்பாக நினைவுத்திரனுடன், உடல்நலம், மற்றும் சமூக தொடர்புகள் /உறவுகள் தொடர்பாகவும் இன்னும் தேடல்களை அதிகம் செய்ய முடியும் என்று கணிக்கின்றனர். 

இதிலிருந்து நாம் அறியும் பாடம் என்னவெனில், நாம் நேர்மறை எண்ணங்களுடன் மற்றும்  செயல்பாடுகளுடன் இருந்தால், நம் உடல்நலமும் பாதிப்புக்குள்ளாகாது;தற்காப்பு சக்தி அதிகரிக்கும்; நினைவுத்திறன் வீழ்ச்சி என்பதும் நடக்காது.. , இறுதிக்காலம் வரை மகழ்வுடன்,நோயற்று, நினைகள் தாலாட்ட வாழ் முடியும் என்பதே. 



Story Source:

Materials provided by Association for Psychological ScienceNote: Content may be edited for style and length.

“Positive outlook predicts less memory decline.” ScienceDaily. ScienceDaily, 29 October 2020. <www.sciencedaily.com/releases/2020/10/201029135501.htm>.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *