ஜெயாபுதீன் கவிதைகள்

ஜெயாபுதீன் கவிதைகள்

1. அப்பாவின் பால்யம் மக்காச்சோளம் அவித்த வாசனையுடையது. அப்பாவின் பால்யம் காட்டுக்கீரைக் கடைசலின் பச்சைநிறத்தைப் பசைபோல விழுங்கியிருக்கிறது. அப்பாவின் பால்யம் தாத்தனுக்கு சாராயம் வாங்க செருப்பின்றி நடந்திருக்கிறது. மதியத்தின் ஒரு கரண்டி ரவை உப்புமாவுக்காக குழிந்த வயிற்றுடன் ஆறுமைல் தொலைவிலிருந்த பள்ளிக்கு…