Posted inPoetry
கவிதைப் பெண் – ச.லிங்கராசு
கவிதைப் பெண்
கொள்ளை எழிலவள்
குணத்திலே கோபுரமாய்
வெள்ளையுளம் தாங்கி
வேதனைகள் தீர்த்திடுவாள்
கிள்ளை குரல் சேர்த்து
கீதம் ஈந்திடுவாள்
தொல்லை தனை அறிவாள்
தொடர்ந்திடுவாள் இன்பக்கதை
மங்கையரில் மணிமகுடம்
மாறாத துன்பமெல்லாம்
கங்கையிலே கரைக்கின்ற
கலங்கரைத் தீபமவள்
தங்கமோ அவள் இல்லை இல்லை
தரணியில் அவளோ ஒரு
மங்காத ஒளிச் சிதறல்
மலர்கவிதைப் பெண்ணவளே!
— ச.லிங்கராசு