Posted inPoetry
கவிஞர் சிற்பியின் கவிதை
அவதூறுகள் அவதூறுகளின் குப்பைக் கூடை என் மேல் கவிழ்க்கப்படுவது இது முதன்முறை அல்ல எனக்கு அது புனித நீராட்டுப் போல் பழகிப்போய்விட்டது முதலில் மூச்சுத் திணறலாக இருந்தது இப்போது சுவாச மதுரமாகிவிட்டது அட, இன்றைக்கு வரவேண்டிய வசை அஞ்சல் இன்னும் வரவில்லையே…