தமிழில் படைக்கப்படும் முதல் CONCEPTUAL ART BOOK
“ உலகிலேயே சிறந்த புத்தகம் “ – இந்திரன்
கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் செய்யும் ஒரு இலக்கியப் பரிசோதனை முயற்சி – “ உலகிலேயே சிறந்த புத்தகம் “ –
CONCEPTUAL ART – கருத்துரு கலை – என்றால் என்ன?
• கருத்துரு கலை — CONCEPTUAL ART– என்பதில் ஒரு சிந்தனை அல்லது கருத்தே ஒரு கலைப் படைப்பாகி விடுகிறது.
• கருத்துக்கு முதல்தர முக்கியத்துவம் கொடுத்து கலைப் படைப்பாகச் செய்யும் ஒரு தற்கால நவீன கலை வடிவம்.
• வியாபார ரீதியாக விற்கப்படுவதற்கு உகந்ததாக அது இல்லாவிட்டாலும் வலிமையான ஒரு சமூக, தத்துவார்த்த சிந்தனையை முன்வைத்து படைக்கப்படுகிறது.
• கருத்துரு கலை இதுவரையிலும் எது கலை என்று வரையறுக்கப்பட்டதோ அதனைக் கட்டுடைத்து புதிய புரிதலை நிறுவுகிறது.
• ஒரு கலைப்படைப்பு என்பது ஒரு கலைஞனால் மட்டுமின்றி அதன் பார்வையாளனாலும் படைக்கப்படுகிறது என்று கருத்துரு கலை வாதிடுகிறது.
• கோடு, வண்ணம் , வடிவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வடிவவியல் (Formalism ) சமூக, அரசியல் கருத்துகள் முக்கியமில்லை எனக்கருதியது. இதற்கு எதிர்ப்பியக்கமாக முன் வைக்கப்பட்டதுதான் கருத்துரு கலை.
• மார்சல் டுஷாம்ப் (Marcel Duchamp 1887-1968) முன் வைத்து வெற்றி கண்ட கருத்துரு கலை டாடாயிசத்தின் ஒரு நீட்சிதான். ஜான் கேஜ் John Cage (1912–1992) இசையில் இதைச் செய்து பார்த்தார். புத்தம் புதிய மூத்திரக் கோப்பை ஒன்றைத் தனது கையெழுத்திட்டு Fountain எனும் தலைப்பிட்டு அதனைத் தனது கலைப் படைப்பென்று கண்காட்சியில் வைத்தார் மார்சல் டுஷாம்ப்.
• ஒரு புத்தகம் வெறும் வாசிப்புடம் நின்று விடாமல் அதன் அடுத்த கட்டமாக இன்னொரு இலக்கியச் செயல்பாட்டில் வாச்கனைத் தூண்டுவது இதன் சிறப்பம்சம்.
விலை ரூ.100./-
யாளி வெளியீடு
தொடர்புக்கு 9840738224



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *