மானுட உன்னதம் கவிதை – கவிஞர் கவியரசன்

மானுட உன்னதம் கவிதை – கவிஞர் கவியரசன்




மானுட உன்னதம்
********************
ஆதி என்ற போது ஆடையின்றி நின்றவன்!
இவன்
பிறப்பை அரிது என்ற அவ்வையின் ஆதரவில்
முடிசூடிக் கொண்டவன்!

ஐந்து திணைகளில் திரிந்து
ஐயம் தெளிந்தவன் !
அண்டம் கடந்தும்
ஆளுமையை விதைக்கத் தெரிந்தவன்!

இவன் சூட்டிய பெயரோடு
திரிகின்றன யாவும் !
இவன் சூட மறுத்தாலோ உதிர்ந்து விழும் பூவும்!

சத்தங்களை எழுத்துக்குள்
அடைத்துக் காட்டியவன்!
எழுத்தோடு எண்ணையும் படைத்து நீட்டியவன்!

காலத்தை நெசவு செய்து
சீலை கொய்தவன்!
ககனமெங்கும் சுற்றி வரும்
லீலை செய்தவன்!

சிரிக்கவும் சிந்திக்கவும்
தெரிந்து இருந்தவன்!
மானுடம் சீர்படும் முறையாவும்
அறிந்திருந்தவன்!

ஓரறிவு ஈரறிவு என்னும்
தொடர்ச்சியின் முடிவு!
ஆறறிவு அடைந்ததே மானுடத்தின் வடிவு !

பேரண்ட பெருந்தவமே மானுடம் !
மானுடம் இல்லையேல் கானகம்!

கவிஞர் கவியரசன்
 கடம்பத்தூர்.
98949 18250

பட்டாம்பூச்சியும் அவளும் கவிதை – அபர்ணாசெங்கு

பட்டாம்பூச்சியும் அவளும் கவிதை – அபர்ணாசெங்கு




பூத்துக் கிடக்கின்றன
பூ வனம் எங்கும்.
காத்துக் கிடக்கின்றன
காதல் விழிகள் எங்கும்.

படபடக்கும் பட்டாம்பூச்சிக்கு,

மது உண்ட களிப்பில்
உண்டான போதையா?
போதையான மனதுள்
மது கண்ட களிப்பா?

ரீங்காரமிடும் மனதுள்
ஊஞ்சலாடும் உல்லாசமா?
ஓங்காரமான மது சுவையில்
ரீங்காரமாய் உல்லாசமா?

வாரி இறைத்த ஜாலப் பூக்களால்

பட்டாம்பூச்சிக்கு ஜொலிப்பா?
அதன் உடல் ஜொலிப்பால்
பூவன மெங்கும் வானவில் பிரதிபலிப்பா?

தென்றல் என்னவளின் வண்ண அசைவில்
பூக் கொய்தும் பூவாவென
பட்டாம்பூச்சிக்குள் பூகம்பமா?
பட்டாம்பூச்சியின் படபடப்பில்
அவள் மன உணர்வுக்குள் பூகம்பமா?

– அபர்ணாசெங்கு

செ.புனிதஜோதியின் கவிதை

செ.புனிதஜோதியின் கவிதை




அருள்
********
துக்கம்
நெஞ்சடைக்கும் வேளையில்
உன்னை வந்துசேர
என்னை வந்து சேர்கிறாயா என்ன?

புரியாத புதிராய்
வலம் வந்துகொண்டிருக்கிறேன்…

உன் அஷ்டோத்திரத்தை
நாதொடுத்து மாலையாக்கி
சமர்பிக்கிறேன்…

பொதியை இறக்கிவிட்ட
கழுதை போல பெருமூச்சுவிட்டுக்கொள்கிறேன்
உன்சன்னதியில்…

உணர்வின் கொதிகலன்
அடிபிரதட்சணையைப் போல்
மெல்ல,மெல்ல முன்நோக்கி நகர்த்துகிறது..

உன் முன்நின்று
தீபாராதனை போல்
என் மனநிலையை ஆரத்தியாக்குகிறேன்..

கண்சிமிட்டி
உன்னிலிருந்து உருண்டுவிழுகிறது
மலர்..

உன் கருணையில்
நனையும்
மரமாய் மெய்மறந்து நிற்கின்றேன்

செ.புனிதஜோதி

“டாக்டர்.ஊசீஸ்வரனும், ஊர்வசியும்” – சிறுகதை மரு உடலியங்கியல் பாலா

“டாக்டர்.ஊசீஸ்வரனும், ஊர்வசியும்” – சிறுகதை மரு உடலியங்கியல் பாலா

நான்தான் டாக்டர்ஊசீஸ்வரன்...! தொட்டதெற்கெல்லம் "ஊசி போடுங்க! ஊசி போடுங்க!"என ஊசிக்காகவே உவகையுறும்... பாமரமக்களின் விருப்பம் நிறைவேற்ற, "எல்லோர்க்கும் ஊசி" என பொதுவுடமை நல்வாழ்வு வைத்தியராக நான் மாறியதன் பலனாய்...  மக்கள் ,எனக்கு அளித்த பட்டம்தான் "ஊசீஸ்வரன்."! ஆனால் என் இயற்பெயரோ... "காசீஸ்வரன்,"..…