கவிதை: *குளிர் நடுங்குகிறது* – ஸ்ரீரசா

கவிதை: *குளிர் நடுங்குகிறது* – ஸ்ரீரசா

குளிர் நடுங்குகிறது -------------------------------- -ஸ்ரீரசா -------------------------------- குளிர் நடுங்குகிறது உழவு செய்பவர்களின் குரல்களிலிருந்து தீப்பொறி கிளம்புகிறது கார்ப்பரேட் நுகத்தடியான சட்டங்களைக் கட்டைகளாக்கி நடுவழியில் போட்டெரித்து வியர்வையின் முத்துக்களாய் விளைந்த கோதுமையின் மாவெடுத்துப் பிசைந்த சப்பாத்திகள் சுட்டுச் சாப்பிட உரமேறிய விவசாயக் கைகள்…