நூல் அறிமுகம்: அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்கின் *பேலியோ சிக்கல்கள் ஓர் பார்வை* – கவிதா பிருத்வி

நூல் அறிமுகம்: அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்கின் *பேலியோ சிக்கல்கள் ஓர் பார்வை* – கவிதா பிருத்வி



நூல்: பேலியோ சிக்கல்கள் ஓர் பார்வை.ஆசிரியர்: அக்கு ஹீலர் அ.உமர் பாரூக் 
முதல் பதிப்பு:அக்டோபர் 2020 
எதிர் வெளியீடு 
விலை: 130
ஆசிரியர் உமர் பாரூக் அவர்கள்  இயற்கை வாழ்வியல் முறையை கடைபிடிக்க கூடியவர். உடலின் மொழி, உணவோடு உரையாடு என்று பற்பல புத்தகங்கள் மூலம், நம் உடல் பற்றிய புரிதல்களை தந்தவர்.  இன்று பிரபலமாக இருக்கும் பேலியோ டயட்டில் உள்ள சிக்கல்களை, ஆய்வின் அடிப்படையில், எளிய நடையில் மிக சிறப்பாக விளக்கி இருக்கிறார்.
1980களிலிருந்து கொழுப்பைப் பற்றி பேசாத நபர்களே இல்லை எனலாம். நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்று, நல்ல உணவுகள் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டன.  கொழுப்பு பற்றிய பின்புல ஆராய்ச்சிகளை விளக்கி, உலகம் முழுவதும் நம்பிக்கொண்டிருந்த கொழுப்பு பற்றிய அச்சத்தை “பேலியோ டயட்” நீக்கி இருக்கிறது என்பது, பேலியோவின் நேர்மறையான அம்சம் என்பதோடு, சைவ உணவு அசைவ உணவுகளை உண்பவர்களின் “மனநிலையில் மாற்றம் வருமா” என்பது குறித்து எடுத்துக்காட்டுடன் விளக்கி, பேலியோவின் நேர்மறை புரிதல்களை பட்டியலிட்ட பிறகு,  “பேலியோ டயட்”  ல் இருக்கும் எதிர்மறை மற்றும் உடலியல் உணவியல் உளவியல் சிக்கல்களை நோக்கி நகர்கிறார் ஆசிரியர்.


பேலியோவின் முரண்பாடுகள், பிரபலமடைய என்ன காரணிகள், உலக அளவில் பல வகையான  பேலியோ குழுக்கள் இயங்குகிறது என்பதையும் தாண்டி, தமிழகத்தில் உலாவும் பேலியோ குழுக்கள் கூறும் கருத்து அடிப்படையில்.. ஆதிமனிதனின் உணவு முறை பற்றியும், பேலியோவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழி எப்படி வளர்க்கப்படுகிறது என்பதையும்,  பேலியோவால் வரும் ஆபத்துக்களையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.
“நீ இனிப்பையும் மாவு பொருளையும் அதிகமாக எல்லைமீறி சாப்பிடுகிறாய், இனிமேல் கொழுப்பையும் புரதத்தையும் அதேபோல எல்லைமீறி சாப்பிடு” என்கிறது “பேலியோ டயட்”..  இது சரியா? என்று நம்மை நோக்கி கேள்வியை வைக்கிறார் ஆசிரியர்.
உடலை இளைக்க வைக்க, என்ன வழி என்று தேடும் மக்களுக்கு, விழிப்புணர்வை தரும் புத்தகமாக, “பேலியோ சிக்கல்கள்” இருக்கும் என்பதில் ஐயமில்லை.
கவிதா பிருத்வி
தஞ்சை.



Show 8 Comments

8 Comments

  1. Rathika vijayababu

    அருமையான நூல் விமர்சனம் தோழர்

    • கவிதா பிருத்வி

      நன்றி தோழர்

  2. SubiVijay

    விமர்சனம் அருமை 👌

  3. Manojkumar

    அருமையான பதிவு
    உங்களின் இந்த பதிவு இந்த புத்தகத்தை படிக்க தூண்டுகிறது.
    👌👌

    ஆசிரியர் உமர் பாரூக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  4. ரேணுகா

    தெளிவான விமர்சனம், அருமை.

  5. KALAISELVI

    அழகான, அர்த்தமுள்ள விமர்சனம் 👍

  6. Prithiviraj

    புத்தகம் பற்றிய தங்கள் கருத்துகள் விரைவில் புத்தகத்தை வாசிக்க ஆர்வமளிக்கிறது.
    நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

  7. Durga

    விமர்சனம் அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *