புத்தக அறிமுகம்: “அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல” – ஆசிரியை.R. சாஹிதா ரஹீம்

நூல் : “அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல”
ஆசிரியர் : ச.மாடசாமி
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ₹65.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/anbenbadhu-oru-thandhiram-alla/
1.தலைப்பை படிக்கும் பொழுதே அன்பென்பது ஒரு தந்திரம் தான் என்று மாற்றியமைக்க தோன்றுகிறது… ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் அன்பை பெறுவதற்கே தந்திரம் தேவைப்படுகிறது…. மேலும் இன்றைய அன்பின் வெளிப்பாடு வெறும் facebook,insta, whatsup னு ஸ்டேட்டஸ் ஆ மட்டுமே பார்க்கமுடிகிறது…
பெரிய பெரிய கடைகளுக்குச் சென்றால் நம்மிடம் அன்பாய் உபசரிப்பார் அது நாம் அவர்களிடம் பொருள் வாங்குவதற்கே…
ஏன் வீட்டிலே எடுத்து கொள்ளுங்கள், கணவன் மனைவியிடம் ஏதாவது வேண்டும் என்றாலும் அப்படியே பாசத்தை பொழிவார். அதே போல் தான் மனைவியும் ,அப்போ இதற்கு பெயரும் அன்பா?
ஆனால் அன்பு நிறைந்த வகுப்பறைகள் இன்றும் காணப்படுகிறது… கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை அரவணைத்து சற்றும் சலிக்காமல் அவர்களுக்கு ஏற்றாற்போல் கற்பிக்க உதவும் ஆசிரியர்கள் உள்ளனர்…  மாணவர்களின் வாழ்வில் நடக்கும் பிரச்சனைகளையும் சரி செய்து,சில நேரங்களில் அவர்களுக்கு உதவியும் புரிகிறார்கள்….
2.அப்பாவியா?முட்டாளா?என்ற தலைப்பில் fool and the donkey, மற்றும் ivan the fool இரு கதைகளை சொல்லி தெளிவாக விவரித்துள்ளார், இதை கேட்ட மாணவர்களின் நிலை ஒரே மாதிரி தோன்றவில்லை, சிலர் வருந்தினார்கள்…
இரக்க குணம் கொண்டால் அப்பாவியா?
விட்டு கொடுத்து வாழ்ந்தால் முட்டாளா?
நம்மையே யோசிக்க வைக்கிறது…
இதே போல் தான் வகுப்பறையில் கூட மாணவனின் நிலை அறியாமல் அவர்களை தவறாக எடைபோடுகிறோம்…
3.இலக்கண கண்கள் காணாத சித்திரங்கள்
இதில் “நக்கீரன் கோபால்”அரசியலில் தனக்கென ஓர் இடைத்தை பிடித்தவர்…ஆனால்,பள்ளி, கல்லூரிகளில் அவரின் தனித்தன்மையை நாம் அடையாளம் காண தவறியது மிகுந்த வருத்தம். …அதே போல் எத்தனையோ கலைஞர்கள் ஒளிந்து இருக்கும் வகுப்பறையை அலசுவோம்… அவர்களுக்குள் இருக்கும் திறமையை ஒளிரவிடுவோம் ….
4.flipped classroom மாணவன் சொல்லிக்கொடுத்து அதை வாசிப்பதை விட,அவனிடம் தலைப்பை கொடுத்து தகவல்களை சேகரித்து விவரிக்க செய்வதே சிறந்தது என்பதே இந்த தலைகீழ் வகுப்பறையின் நோக்கம்…
5.சிவாஜி யார்? சிவாஜியைப் பற்றி முழுமையான தகவலை வெளியிட்டவர் கோவிந்த் பன்சாரே ஆவார்…
மராட்டிய மன்னன்…
இந்து முஸ்லீம் இடையேயான மத சார்பற்ற மனப்பாங்கினை கொண்டவர்…
மேலும் பல ஆச்சரியமூட்டும் விஷயங்களும் உள்ளன… நூலை முழுமையாக வாசிக்கும் பொழுது அறிவீர்கள்….
வளரும் கவிதை: பேராசிரியர் ச.மாடசாமி ...
6.அறிவொளி இறக்கி வைத்த சுமையில் நாம் காண்பது மதிப்பீடு,அளவுகோல் இல்லாத ஒரு தடம்…
பட்டம் படித்தோரை விட, எட்டாம் வகுப்பு போன்ற குறுகிய படிப்பு படித்தோரே இந்த இயக்கத்தின் கதாநாயகர்கள்…எதையும் எதிர்பார்க்காமல் முன் வந்தவர்கள்…
அவர்களே மிக எளிமையான முறையில் பாடங்களை விளக்கி,தடைகளை அகற்றி,நெருக்கத்தை ஏற்படுத்தினார்கள்…
7. புதிய கல்வி கொள்கைகள், 8.freakonomics 9.ஆசிரியருக்கு நேர்ந்த அவலங்கள், போன்ற மேலும் நம்மை சிந்திக்க தூண்டும் பல பதிவுகள் அடங்கி உள்ள நூல்… ,
10.”கடைசி மைல்கல் கடினமானவை ” உண்மை தான் அதிகாரம் இல்லையென்றால் எங்கும் மதிப்பில்லை..
11.நூலிலிருந்து”குழந்தைகளின் உலகங்கள் உயிர்பெற, தொழில்நுட்பம் மட்டும் போதாது,பாடப்புத்தகம் மட்டும் போதாது,உள்ளமும் உணர்வும் கனிந்த ஒரு வகுப்பறை வேண்டும்”….
சில தருணங்களில் அன்பாய் பேசுவதே ஓர் பெரிய மருந்தாய் அமையும்…
மாணவர்களின் எனும் சிறகுகளை பறக்க விடுவோம்… விவாத வகுப்பறையை உருவாக்குவோம்…
12.இறுதியில் அவரின் பயணம்… அறிவொளியில் அவர் கற்று கொண்ட பாடம்….!
எப்பொழுதும் இவரின் படைப்புகள் மாணவன்,வகுப்பறை,ஆசிரியர் இதை சார்ந்தே புலப்படும்….
ஒவ்வொரு முறையும் என்னை புதுப்பிக்க வைக்கிறது உங்களுடைய நூல்கள்..
ஆசிரியை.R. சாஹிதா ரஹீம்
காஞ்சிபுரம்
நூல் : “அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல”
ஆசிரியர் : ச.மாடசாமி
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ₹65.00