கடந்த பத்துப்பதினைந்து ஆண்டுகளாக வேதகாலத்துடன் வேறு சில பண்புகள் இணைக்க முயற்சி பெருமளவில் நடந்துகொண்டுள்ளது. ஊடகங்கள் தங்களுக்கேற்ற அறிவைக்கொண்டு வேதகால மக்கள்தாம் ஹரப்பா நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்று கூறத்  தள்ளப்பட்டிருக்கின்றன அல்லது நிர்பந்திக்கப்படுகின்றன. வேதங்களில் குறிப்பிடப்படும் சரஸ்வதி ஆறும் ஹரப்பா அருகில் ஓடும் ஆறும் ஒன்றுதான் என்ற கருத்தில் எழுந்த கூற்று. சுருக்கமாகக்கூறுவதென்றால் ஹரப்பா நாகரிகம் வேதகால மக்களின் நாகரிகம் என்பதை நிரூபிக்க முயலுகின்றனர்.
இது சாமானியனைக் குழப்பத்தில் ஆழ்த்தும். இப்படிப்பட்ட கருத்து வரலாற்றுப்புரட்டு என்று அறிந்து ஒதுக்கித் தள்ளவேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்.
வேதங்களில் சிலமட்டுமே வைதீகமானவை. காலம்காலமாக அதர்வண வேதம் மற்ற மூன்று வேதங்களைப்போல் அந்தஸ்து அளிக்கப்படவில்லை. முதல் மூன்று நூல்களையே திரிவித்யா என்று அழைக்கின்றனர். இது வேதகாலத்திற்குப்பின் எழுந்த நூலாக இருக்கலாம். பிந்தைய காலத்தில் எழுந்த மகாபாரதத்தை ஐந்தாம் வேதம் என்று அழைத்தனர்.
வேதத்தில் உள்ள துதிப்பாடல்கள், எப்படிச் சிறந்த தச்சரால் தேர் உருவாக்கப்படுகிறதோ அதுமாதிரி உருவாக்கப்பட்டன என்கிறார்கள். இதைத்தெய்வீகமானது என்று அவர்கள் கூறவில்லை.
பிராமணங்கள் என்பது பிராமணர்களால் பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்டவை.
இராமாயணத்தில் வீரர்களின் பிறப்பிற்காக அஸ்வமேத யாகம் செய்யப்படுகின்றது. ராமர் இந்த யாகத்தினால்தான் பிறந்ததாகக் கூறப்படுகிறது.
பிராமணர்களில் பலி குறிப்பிடப்படுகிறது
ஆரண்யங்கள் காட்டில் தனித்திருந்து வாசிக்கப்படவேண்டிய நூல்கள் ஆகும்
உபநிடதம் குருவின் காலடியில் அமர்ந்து கற்றுக்கொள்ளவேண்டியது.
சுமார் 3000ஆண்டுகளிலிருந்து 2500ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு ஐந்நூறு ஆண்டுகள் காலத்தில்தான் வேதங்கள் உருவாயின.
வேதாங்கங்கள் காலத்தில் பிந்தியவை.
பூகோள சம்பந்தமான குறிப்புகளை வைத்துப்பார்த்தால் ரிக் வேதகாலத்தில் வேதபாடல்களை இயற்றிய ஆசிரியருக்கு சப்த சிந்துப்பகுதி தெரிந்துள்ளது. கங்கையும் யமுனையும் தெரிந்திருக்கவில்லை.
பிந்திய வேதகால இலக்கியங்களில் மட்டுமே கங்கை குறிப்பிடப்படுகிறது
பிராமணங்கள் சடங்குகளுக்காகச் சடங்கு நிபுணர்களால் இயற்றப்பட்டவையாகும்.
வேதங்களில் குறிப்பிடப்படும் பெண்களில் முக்கியமானவர்கள் மைத்திரேயியும், கார்க்கியும் ஆவார்கள். இவர்கள் விதிவிலக்கானவர்கள்.
பெண்களுக்கு மந்திர உச்சாடனங்கள் செய்யும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
பிராமணங்கள் குருமார்களுக்கு மட்டுமே உரியது. எனவே, மற்றவர்கள் அதைக் கற்பதற்குத் தடைசெய்தார்கள்.
Harappan civilization and major centers - Notebook
தற்போதுள்ள சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது வேதகால சமஸ்கிருதம்.
உபநிடதங்களில் பயன்படுத்திய சமஸ்கிருதம் வேதகாலத்தைக்காட்டிலும் கொஞ்சம் எளிமையானது.
ஒரு சில அரசர்கள் மற்றும் புரோகிதர்கள் பெயர்களே வேதங்களில் காணப்படுகின்றன.
ஹரப்பா நாகரிகத்தைக் கண்டுபிடித்தவர்கள் அதை வேதகால நாகரிகத்திற்கு முந்தியது என்றுநிரூபித்துள்ளனர்.ஆனால் இந்தப்பதாண்டுகாலத்தில் ஹரப்பா நாகரிகமும் ஆரம்பக்கால வேதநாகரீகமும் ஒரே இடத்தில்தான் வளர்ந்தன என்று கூறத்தலைப்பட்டுள்ளனர்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களில் இன்றளவும் வாசிக்க முடியாமல் இருப்பது ஹரப்பா நாகரிக எழுத்துக்கள் ஆகும். அப்படியிருக்க அது சமஸ்கிருதத்தின் ஒரு வகையான எழுத்துவடிவம் என்று கூறத்தலைப்பட்டுள்ளனர்.
ஹரப்பா நாகரிகத்தின் பெயரே மாற்றி சரஸ்வதி நாகரிகம் என்று கூற ஆரம்பித்துள்ளனர்.
ஹரப்பா நாகரிகத்தின் தொட்டில் என்று காக்கர் -ஹக்ராப் பள்ளத்தாக்கு என்று கூறத்தலைப்பட்டுள்ளனர்.
முதிர்ந்த ஹரப்பா நாகரிகம் kimu2700 ல் ஆரம்பிக்கிறது. அப்படியென்றால் அதற்கு முன்னரே அந்த நாகரிகம் தொடங்கிவிட்டதாகத்தானேப் பொருள். அதை மறுத்து வரலாற்றை மாற்றி எழுத நினைக்கிறார்கள்.
இன்று புவியில் இல்லாத ஒரு ஆறு சரசுவதி. அதை இருந்ததாகக் காட்டப் பெருமுயற்சி எடுக்கப்படுகிறது.
அவர்கள் குறிப்பிடும் சரசுவதி ஆப்கானிஸ்தானில் பாயும் ஒரு  ஆறு.
வேதகால மக்கள் குதிரையைப் பயன்படுத்தியுள்ளனர், அதனால், தொல்லியல் இடங்களில் கிடைக்கும் எலும்புகளில் குதிரையின் எலும்பு கிடைத்துவிடாதா என்று தேடுகின்றனர்.
சர்வதேச அளவில் ஒரு பெரிய மோசடி, என்னவென்றால் ஒரு அறிஞர் !குதிரையுடன் கூடிய ஹரப்பா முத்திரையைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார். அதுவொரு போலி என்று நிரூபிக்கப்பட்டது.
ஹரப்பா மக்கள் பல்வேறுவிதமான தொழில்கள் செய்திருக்க ஆரியர்களோ ஆடுமாடு மேய்த்தல் தவிர வேறு எதையும் அறியாதவராகவே இருந்துள்ளனர்.
வணிகம் செய்துள்ளனர் ஹரப்பா மக்கள். ஆனால் ஆரியர்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாமலேயே இருந்துள்ளனர்.
விவசாயம் செய்யத்தெரியாத ஆரியர்களை விவசாயம் நன்கு தெரிந்த ஹரப்பா மக்களுடன் ஒப்பிடுவது வரலாற்றுப் புரட்டல்லவா.
வேதகால மக்கள் அக்னி, இந்திரன், சோமன் ஆகியோரை வழிபட்டுள்ளனர். உருவ வழிபாடு இல்லை. ஆனால் ஹரப்பாவில் கடவுளருக்கு மனித உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹரப்பா நகரங்களுடன் இருந்துள்ளது ஆனால் வேதகாலம் கிராமங்களை மட்டுமே அறிந்திருந்தது.
Karma-Dharma-Bhutadaya: Pasupati and Cernunos, And the Truth of ...
முத்திரையில் பயன்படுத்தப்பட்ட மொழி சமஸ்கிருதமா, ஹரப்பா மக்கள் குதிரையைப்பற்றித் தெரிந்திருந்தனரா, ஹரப்பா நாகரிகத்தின் அடிப்படை சரஸ்வதி நதியா என்ற கேள்விகளுக்கு இல்லை என்பது மட்டுமே பதிலாக இருக்கமுடியும்.
வேதகாலத்தில் பல்வேறு வகையான சமூக அடுக்குகள் இருந்தன, சமூக மோதல்களும், பதட்டங்களும் இருந்தன.
ஆண்களுக்கு இடையே இருந்த உறவை வலுப்படுத்தப் பரிசாகக்கொடுப்பதற்குரிய விலைமதிப்புடைய பொருளாகத்தான் பெண்கள் மதிக்கப்பட்டனர்.
பதினெண் புராணங்களை வைத்துக் காணும்போது இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன, ஒன்று அவன் தவம் செய்ப்பவர்களைக்கண்டு அஞ்சுகிறான், இரண்டு வேதகாலத்தைச் சாராத கிருஷ்ணன், வாசுதேவன் போன்ற பெரு வீரர்களிடம் போரில் தோற்கிறான். வேதகால இந்திரன் பெரு வீரனாகக் கடவுளாக மதிக்கப்பட்டான்.
முக்கியமான கடவுளான அக்னி திருமணம் மற்றும் ஈமக்கிரியையில் மட்டும் வணங்கப்பட்டது.
வேதகாலத்தில் கோயில்கள் இல்லை. பின்னர் கோயில்கள் உருவாயின.
பிரபலமாக வணங்கப்பட்ட சோமன் மறக்கப்பட்டான்.
வேதகால மதம் எப்போது மாறியது. சடங்குகள் எப்போது மாறியது, என்பது வியப்பிற்குரியதே.
ஒன்று மட்டும் நன்கு புரிகிறது, அதாவது, வேதங்களிலிருந்து புராணங்கள் வரை வளர்ச்சி ஒரு படித்தானதாக இல்லை என்பதே உண்மை.
இந்தியா துணைக்கண்டத்தின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் வேதம் சாராத மரபினையே பின்பற்றுகின்றனர் என்பது தெளிவு.
இந்தியா துணைக்கண்டத்தின் ஒரு பகுதியையே வேதங்கள் பிரதிபலிக்கின்றன.
What are the similarities between the Harappan and Egyptian ...
சிலவிஷயங்கள் வேதம் சார்ந்தவை என்று கூறும்போது, அவற்றை ஒதுக்கித் தள்ளுவதற்கு முன்பு பரிசீலிக்கவேண்டும். இந்தக் கோரிக்கைகள் யாரால் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நாம் கவனிக்கவேண்டும். இதைப் பரிசீலிப்பதில் அலுப்பு ஏற்படத்தான் செய்யும், ஆனால் அந்தக்கடினமான செயல்களைக் கட்டாயம் நாம் மேற்கொள்ளவேண்டும். ஏனென்றால் நமது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்கும் பிரிவினரின் அரசியல் சவாலைச் சந்திப்பதற்கான வழிமுறைகளில் இது ஒன்றாகும்.
வரலாறு என்பது ஆதாரங்களின் மீது கட்டமைக்கப்படுவது. கற்பனைகள் நல்ல கதைகளாக இருக்கலாம் ஆனால் ஒருபோதும் வரலாறு ஆகிவிடாது, ஆகிவிடவும் கூடாது.
ஒரு பொய் ஆண்டுகள் கணக்கில் தொடர்ந்து சொல்லப்படும்போது பிறிதொரு காலத்தில் அது உண்மையாக மாறிவிடும் ஆபத்துள்ளது, எனவே அந்தப்பொய் இருக்கும்வரை தொடர்ந்து அதை மறுக்கும் சக்திகளும் இயங்கியே ஆகவேண்டும்.
நூல் =வேதகாலம் 
ஆசிரியர் =கும்கும் ராய் 
தமிழில் =தோத்தாரி 
பதிப்பு =NCBH
விலை =ரூ 30/
அன்புடன் =பெ. அந்தோணிராஜ் 
தேனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *