*அன்பு* குறுங்கதை – இரா. கலையரசி

Anbu (Love) Short Story By Era. Kalaiarasi. *அன்பு* குறுங்கதை - இரா. கலையரசி. Book Day is Branch of Bharathi Puthakalayam.“சார்! வாங்கிக்கங்க. நல்லா வாசனையா இருக்கும்.”

கார் கதவைத் தட்டியபடியே இருந்தாள் மகிழ்.

“ச்சே! ஒரே நான்சென்ஸா இருக்கு. எப்ப பார்த்தாலும் இதே தொந்தரவு” என சலித்துக் கொண்டாள் சவிதா.

குழந்தை புவி அந்த சிறுமியைப் பார்த்து சிரித்தது.

குட்டி மூக்கும், கோலிகுண்டு கண்களுமாக அழகாக இருந்தாள் புவி.

விடாமல் கைகளை ஆட்டி, மகிழை பார்த்து சிரித்தபடியே இருந்தது.

“ரவி, லெட்ஸ் மூவ்,. எனக்கு அருவருப்பா இருக்கு!” என்று சொல்லியபடியே வண்டியை கிளப்ப சொன்னாள்.

மகிழ் பின்னாடியே ஓடி வருவதை கண்டு ரவி வண்டியை நிறுத்தினான்.

“சுத்த நியூசன்ஸ்” என்று முகத்தை திருப்பினாள் சவிதா.

“சார்! சார்!” என மூச்சிரைத்தவள் “பாப்பா பொம்மை” என கொடுத்தாள்.

இப்போதும் குழந்தை மகிழைப் பார்த்து சிரித்தது.

***********

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.