இந்த கதை ஒரு தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்க்கும் தொழிலாளியை பற்றியது. இக்கதையை இயக்குனர் பாலா தனது பரதேசி திரைப்படத்தின் மூலமாக அப்படியே காண்பித்து இருப்பார். இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரிகளிலும் அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளின் அவல நிலையை அதிகமான வலிகளோடு எடுத்துரைக்கிறது…

கதையின் தொடக்கம்…

ஒரு சிறிய கிராமத்தில் வாழும் குடும்பம் அதில் தம்பதியர் கருப்பனும் – வள்ளி யும், இதை விடுத்து கருப்பனின் அம்மா. விவசாயம் இன்றி சோற்றுக்கு வழியில்லாமல் வறுமையில் வாடும் குடும்பம். இன்றைக்காகவது சிறிய நகரத்திற்கு சென்று வேலை ஏதாவது பார்த்து உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி வருகிறேன் என்று கருப்பன் செல்கிறான். அங்கு சென்று எந்த வேலையும் கிடைக்கவில்லை, இறுதியாக ஒரு கடைக்கு சென்று ஏதாவது வேலை இருக்கும்மா னு கேட்கிறான், நாளை வர சொல்கிறார் அந்த கடைக்காரர்.

இன்றைக்கும் உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்க முடியவில்லை என்ற வருத்தம் அவனை பற்றி கொண்டது. இந்த நேரத்தில் அங்கு வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து இருந்த ஒருவன் கருப்பனிடம் என்ன தம்பி வேலை தேடுகிறாயா? என்றான். ஆமா அண்ணே ஒன்னும் கிடைக்கவில்லை என்று கருப்பனின் பதில். என் பெயர் சங்கரபாண்டியன் நான் தேயிலை எஸ்டேட்டில் மேஸ்திரியாக இருக்கிறேன்,அங்கு வேலை செய்தால் நிறைய சம்பாதிக்காலாம், இங்கே இருந்து இந்தவார கடைசில 30 பேர் போறோம் விருப்பம் இருந்தால் நீயும் உன் மனைவியும் வா, நான் பார்த்து கொள்கிறேன் , நீ நாளை வந்து சொல் என்று கூறி இன்றைய சமையலுக்கு தேவையான பணத்தையும் கொடுக்கிறான். கதை இப்படியே நகர்கிறது…

எரியும் பனிக்காடு: 10 ஆண்டுகள்... 10 ...

பசியும் ஆசைவார்த்தையும்

கருப்பனின் வருகைக்காக வள்ளியும், கருப்பனின் அம்மா வும் வாசலில் காத்திருந்தனர். இன்றைக்காகவது உணவு சமைத்து சாப்பிடனும் என்று இருந்தன. கருப்பனின் வருகையை கண்டு மகிழ்ச்சியடைந்தனர், வள்ளி வாங்கி வந்த உணவு பொருட்களை சமைக்க ஆரம்பித்தால், அப்போது எஸ்டேட்டில் வேலைக்கு சேர்வது குறித்து சங்கரபாண்டியன் சொன்னதை கருப்பன் சொன்னான்.சொந்த ஊரை விட்டு செல்வதா என்று இருவரும் மறுத்து விட்டனர். சரி சாப்பிட்டு பிறகு பேசுவோம் என்று கருப்பன் சொன்னான், அவர்களும் முதலில் பசியை போக்கிகொள்ள முடிவு செய்தார்கள். மீண்டும் உண்டதற்கு அப்பறம் தெளிவாக எஸ்டேட்க்கு வேலைக்கு போவது குறித்து சொன்னான். சங்கரபாண்டியன் சொன்ன ஆசை வார்த்தைகளை சொல்லி இன்னும் ஒரு வருடத்தில் திரும்ப வரும்போது பணம் நிறைய கொண்டு வரலாம் என்று கூறி அவன் தாயிடமும், வள்ளியிடமும் சம்மதங்களை பெறுகிறான்.

பயண ஏற்ப்பாடு

மின்னம்பலம்:விளிம்புநிலை ...

மறுநாள் காலையில் அதே இடத்தில் சங்கர பாண்டியனை சந்தித்து நாங்கள் வருகிறோம், என்ற வாக்குறுதியை வழங்கி பயணத்திற்கு தேவையான முன் பணத்தை பெற்றுக் கொண்டு, புத்தாடைகளை சந்தை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தான். நாளை கிளம்புவதற்குகான தயாரிப்புகளை பண்ணி கொண்டு இருந்தன. ஆனாலும் இவருக்கும் போக மனமில்லை, அங்கு போய் காசு, பணம் பார்த்து விட்டு ஒரு வருடத்தில் திரும்ப வந்து விடலாம் என்ற ஆசை மேலோங்கியது. கண்ணீருடன் பயணம் கதையும் நகர்கிறது…

கவலைக்கும், கண்ணீருக்கும் மத்தியில் பயணத்தின் சுகத்தால் சுமைகளை மறக்க துவங்கி இயல்பு நிலைக்கு திரும்புகிறாள் வள்ளி. பல கனவுகளுடன் எஸ்டேட்டில் அடியெடுத்து வைக்கிறான் கருப்பன்.

எஸ்டேட்டில் முதல் வருடம்

எரியும் பனிக்காடு | இது தமிழ்

பல கனவுகளுடன் சென்ற கருப்பனிற்கு பலத்த ஏமாற்றம். சங்கரபாண்டியன் சொன்னதற்கு எல்லாம் தலைகீழாக இருந்தது. இதனால் கோபம் அடைந்த கருப்பன் சங்கர பாண்டியனிடம் இது குறித்து கேட்ட போது இங்கே இப்படி தான் இருக்கும் இஷ்டம் இல்லை என்றால் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டு போ என்று சங்கரபாண்டியன் சொன்ன உடனே, கொடுக்க முடியாமல் அங்கே தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படியே பல கடினமான சூழ்நிலைகளை அந்த தேயிலை எஸ்டேட்டில் கடக்கின்றன. இதற்கு இடையில் பெண்ணின் விருப்படியே தன் உடலே தானே விற்பனை செய்யும் கொடூரங்களும் நடத்து கொண்டு இருந்தன, அப்படி இருந்தால் மட்டுமே அங்கு வாழ முடியும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டு இருந்தது.

ஆனால் வள்ளியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதை அனுமதிக்கவும் இல்லை, இதனால் அவள் இலை பறிக்கும் வேலையின் போது கடுமையாக தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுகிறாள், அவளுக்கான சம்பளமும் முறையாக பதிவு செய்யப்படவில்லை. இவையெல்லாம் அப்படியே கடக்க எஸ்டேட்டில் காய்ச்சல் காலம் ஆரம்பித்து விட்டது, அந்த காய்ச்சல் வள்ளியை யும் – கருப்பனையும் தாக்கியது. ஆனாலும் வேலை செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திற்கு தள்ளப்பட்டன, இந்த காய்ச்சலால் வள்ளிக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது, இதனால் மேலும் கடன் அதிகரிக்கிறது. டிசம்பர் மாதம், கிறிஸ்மஸ் திருவிழாவை ஒட்டி 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அதன் பிறகு அம்மாத இறுதியில் கணக்கு முடிக்கப்படும்.ஆனால் வள்ளி – கருப்பனுக்கு கடன் அதிகமாக இருப்பதால் அடுத்த வருடமும் அங்கே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது..

எஸ்டேட்டில் இரண்டாவது வருடம்.

முதல் வருடத்தை போலவே இந்த வருடமும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நகர்கிறது. ஆனால் இன்னும் புதிய பெண்கள் வரப்பட்டதால் வள்ளி அந்த அடக்குமுறையில் இருந்து விடுதலை அடைந்தால்..முதல் வருடத்தை போல காய்ச்சல் வர தொடங்கியது, அதை விட பாதிப்பு அதிகமாகவே இருந்தது, மீண்டும் வள்ளி கருச்சிதைவு உற்றாள். இந்த வருடம் ஊருக்கு போக வேண்டும் என்ற ஆசை அதிகரித்து கொண்டு இருந்தன. கொண்டாட்டம் முடிந்து கணக்கு முடிக்கப்பட்டது . ஆனால் கடன் போக 5 ரூபாய் மீதமுள்ளதால் இந்த வருடமும் ஊருக்கு போக வழி இல்லாமல் போய் விட்டது…

எஸ்டேட்டில் மூன்றாவது வருடம்

பரதேசி - சிறப்பு விமர்சனம் | Paradesi ...

இரண்டு வருடமும் ஊருக்கு போகாத விரக்தி, வள்ளியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் இந்த வருடம் ஊருக்கு போய்விட வேண்டும் என்று கருப்பன் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலைக்கு சென்றான். வள்ளி மீண்டும் கருவுற்றாள் அவளுக்கு இந்த வருடமும் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க ஒரு தாயத்தை கடன் வாங்கி மந்திரித்து கட்டி விட்டான். வலி வந்தால் மாற்று சேலை வேண்டும் என்பதற்காக சந்தைக்கு போய் சேலை வாங்கி வர சென்றான் கருப்பன். இங்கு கதை சற்று ஒரு திருப்பம் அடைகிறது, சந்தையில் உள்ள ஒருவன் கருப்பனிடம் நாங்கள் புதியதாக ஒரு எஸ்டேட் திறந்து உள்ளோம் அதற்கு நீ உன் ஊர்காரன் 10 பேரை அழைத்து வந்தால் உன்னை மேஸ்திரி ஆக்குவேன். நீ எந்த வேலையும் செய்யாமல் சம்பாதிக்காலாம் என்ற ஆசையை உருவாக்குகிறான். ஊருக்கு போக போற இந்த வருடத்தில இப்படி நடக்குதுன்னு கருப்பனுக்கு ஒரே சந்தேகம் ஆனால் அவனால் அதை மறுத்து விடவும் மனசில்லை, என் மனைவியிடம் கேட்டு சொல்கிறேன் என்கிறான் . அவன் சரின்னு சொல்லி வேற யாரிடமும் சொல்ல வேணாம் ன்னு கிளம்பிட்டான். சந்தையில் நடந்ததை அப்படியே வள்ளி யிடம் சொன்னான்,அவள் கொஞ்சம் யோசிச்சு பண்ணுங்க னு சொல்லிட்டு நாளைக்கு அந்த எஸ்டேட் பத்தி அவனிடம் நல்லா விசாரி ஏற்கனவே நம்ம ஏமாந்து விட்டோம் இனியாவது தெளிவாக இருக்கனும். இவர்கள் நினைத்து போல அவன் பக்கத்து எஸ்டேட்டில் இருந்து ஆட்களை கடத்துபவன், சிந்தித்த படியே வலையில் மாட்டி கொள்கிறான் கருப்பன்… அவ்வளவுதான் எல்லாம் போய்விட்டது ன்னு கருப்பன் நினைக்க அங்க தான், ட்விஸ்ட் வைக்குறாங்க நம்ம கதை ஆசிரியர்… கருப்பன் நடந்ததையெல்லாம் சொல்லி மனைவியிடம் கதறி அழுதான். இனிமேல் அந்த சந்தை பக்கம் போக கூடாதுன்னு முடிவு எடுக்கிறாங்க.. வள்ளிக்கு உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானது, அவள் முழுவதுமாக மருத்துவமனையில் சேர்த்தனர். கருப்பன் ஒரு நாள் தவறாமல் வேலை செய்து வருகிறான்.

மாத இறுதியில் கொண்டாட்ட நாளும் வந்து விட்டது. அன்று வள்ளியும் – கருப்பனும் மட்டும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாமல் மருத்துவமனையில் இருந்தனர். வள்ளிக்கு இறந்து விடுவோம் என்ற எண்ணம் தோன்ற கருப்பனிடம் மாமா உன் கையாள கறிஞ்சோரு சமைச்சு போடு.. கடைசியாக கெஞ்சினாள், அவனும் பல முறை மறுத்து பின்னர் ஒப்புக்கொண்டான். இருவரும் சாப்பிட்டு பின்னர் இந்த முறை நம்ம ஊருக்கு போயிருவோம், இப்போ கடன் லா இல்லை அதனால நம்ம கண்டிப்பாக போயிருவோம் என்று மகிழ்ந்தனர். கொண்டாட்டம் முடிந்து மறுநாள் வேலை தொடங்கியது அப்போது வேலை செய்து கொண்டு இருந்த கருப்பனுக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்று பார்த்த போது குழந்தை இறந்து விட்டது. வள்ளி உயிர் வாழ போராடி கருப்பனின் மடியில் உயிரை விடுகிறாள். அவன் எப்படியெல்லாம் கூப்பிட்டு அவள் செவிகளை அடையவில்லை… இந்த மூன்று வருடம் இல்லாத புது சேலையை உடுத்தி இருக்கிறாள் ஆனால் அதை பார்க்க அவள் இல்லை என்று கதறி அழுகிறான் கருப்பன்….

Dir Bala's Interview about Paradesi (From Kungumam Magazine ...

பத்து நாளுக்கு பிறகு சங்கரபாண்டியன் வந்து நாளையில் இருந்து நீ வேலைக்கு வர வேண்டும்.. உன் மனைவி ஈமச்சடங்கு நிறைய கடனாகி விட்டது என்று கூறி சென்றுவிட்டான். மறுநாள் விடியற்காலையில் எப்படியெல்லாம் ஊறில் போய் இருக்க வேண்டும் என்று நினைந்தானோ அப்படி ஒரு கனவு… சிறிது நேரம் கழித்து தான் எஸ்டேட்டில் இருப்பதை நினைத்து விம்மினான்…

நூல்: எரியும் பனிக்காடு

ஆசிரியர்: பி.எச். டேனியல் தமிழில் முருகவேள்

வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம்

விலை: ரூ.200

One thought on “நூல் அறிமுகம்: எரியும் பனிக்காடு – கா.பிருந்தா (இந்திய மாணவர் சங்கம்)”
  1. அருமையான உட்கிரகிப்பு தோழர்.
    இந்த நாவலின் பொருண்மையை முழுவதும் செறித்துக் கொள்ள நிச்சயம் ஒரு பொதுவுடமை மனநிலை வேண்டும்.
    இயக்குனர் பாலா இந்த நாவலின் ஆன்மாவை அடைய முடியாததால் தான் படமாக்குவதில் சில சறுக்கல்களை அடைந்திருப்பார் எனக் கருதுவதுண்டு.
    எதுவாயினும் எரியும் பனிக்காடு நாவல் ஒரு வர்க்கப் போராட்டத்தின் களப்போராளிக்கு நிச்சயம் தாக்கத்தைத் தரும் .

    நன்றி தங்கள் நினைவூட்டலுக்காக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *