டாக்டர் அம்பேத்கர் வாழும்போதும், வாழ்க்கைக்கு பிறகும் அவருடைய கருத்துக்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகிறன. காரணம் அந்த அளவிற்கு எல்லாவற்றிலும் மிக கவனமாகப் பங்காற்றி இருக்கிறார். இந்தியாவின் எல்லை பிரச்சினையாக இருந்தாலும், பொருளாதார சிக்கலாக இருந்தாலும், சாதி விடுதலையாக இருந்தாலும், நதிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதாக இருந்தால் எல்லாவற்றிலும் தன் கருத்தை ஆழமாகப் பதிவிட்டிருக்கிறார். அதனால்தான் இவ்வுலகில் அவர் எங்கெல்லாம் சென்றோ? உரை நிகழ்த்தினாரோ?, அவர் எங்கெல்லாம் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டாரோ, அந்த இடங்கள் எல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பார்க்கப்படுகிறது. அவர் தொடக்க காலத்தில் பள்ளியில் சேர்ந்த நாளை மகாராஷ்டிரா அரசாங்கம் கல்வி தினமாகக் கொண்டாடப்படும் என்று அரசாணையை வெளியிட்டது. அதேபோன்று முதன் முதலில் வெளிநாட்டில் அதிலும் குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார். அந்தப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் வளாகம் என்று பெயர் சூட்டி உள்ளது. அதேபோன்று அவர் எழுதிய WAITING FOR A VISA என்ற நூல் POLITICAL SCIENCE படிக்கும் மாணவர்களுக்குப் பாட திட்டுமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் LONDON SCHOOL OF ECONOMICSல் படிக்க சென்றார். அப்பொழுது அவர் தங்கிப் படித்த வீட்டை இங்கிலாந்து அரசாங்கம் நினைவுச் சின்னமாக அறிவித்திருக்கிறது.

அதேபோன்று. பீம் ஜென்ம பூமி, தீக்சா பூமி, டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவு இல்லம் (ராஜ கிரகம்), டாக்டர் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பெயரை சூட்டி மகிழ்வதைக் காண முடியும். இவை எல்லாவற்றையும் தொகுத்து டாக்டர் அம்பேத்கரின் நினைவுச்சின்னங்கள் எனும் தலைப்பில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

பீம் ஜன்மபூமி

பீம் ஜன்மபூமி (Bhim Janmabhoomi) (அதாவது, “பீமின் பிறப்பிடம்”) என்பது பாபாசாகேப் அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். இது இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் மோவ் (இப்போது டாக்டர். அம்பேத்கர் நகர்) என்ற இடத்தில் அமைந்துள்ளது. மேலும், இது ஏப்ரல் 14, 1891 இல் மோவில் பிறந்த அம்பேத்கரின் பிறப்பிடமுமாகும். மத்தியப் பிரதேச அரசு இந்த பிரமாண்டமான நினைவுச்சின்னத்தை கட்டியது. இந்த நினைவுச்சின்னம் அம்பேத்கரின் 100 வது பிறந்த நாளன்று – ஏப்ரல் 14, 1991 – அப்போதைய மத்தியப் பிரதேச முதல்வர் சுந்தர்லால் பட்வா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நினைவுச் சின்னத்தின் கட்டிடக்கலை கட்டிடக் கலைஞர் இ.டி. நிம்கடே என்பவர் மேற்பார்வையிட்டார். பின்னர், ஏப்ரல் 14, 2008 அன்று, அம்பேத்கரின் 117 வது பிறந்த நாளன்று, நினைவுச்சின்னம் திறந்து வைக்கப்பட்டது. நினைவுச்சின்னத்துடன் கிட்டத்தட்ட 4.52 ஏக்கர் நிலம் இணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், அம்பேத்கரை பின்பற்றும் இலட்சக்கணக்கான பௌத்தர்களும், பிற சுற்றுலாப் பயணிகளும் இந்த இடத்திற்கு வருகை தருகிறார்கள். குறிப்பாக ஏப்ரல் 14 அன்று அம்பேத்கரின் பிறந்த நாளை ஆடம்பரமாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ்வார்கள். மோவ் போபாலிருந்து 216 கி.மீ தொலைவிலும், இந்தூரிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் உள்ளது. இந்த இடத்திற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2016 ஆம் ஆண்டில் 125 வது அம்பேத்கர் பிறந்தநாளில் வருகை புரிந்து பார்வையிட்டு பாபாசாகேப்பிற்கு அஞ்சலி செலுத்தினார். 2018 ஆம் ஆண்டில், 127 வது அம்பேத்கர் பிறந்தநாளில் , இந்தியாவின் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த், இங்கு வருகை தந்து பாபாசாகேபிற்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவுச்சின்னம் அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான ஐந்து புனித தளங்களில் ஒன்றாகும். மத்தியப் பிரதேச அரசு ஒவ்வொரு ஆண்டும் சமாஜிக் சமரஸ்த சம்மேலன் என்ற மாநாட்டை இங்கு ஏற்பாடு செய்கிறது. இது தவிர, பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அம்பேத்கரின் தந்தை இராம்ஜி மலோஜி சக்பால் புனேவில் உள்ள பான்டோஜி பள்ளியில் கல்வியை முடித்து, இந்திய பிரிட்டிசு இராணுவத்தில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பிரதம ஆசிரியராகவும் பின்னர் தலைமை ஆசிரியராகவும் முக்கியத்துவம் பெற்றார். 14 ஆண்டு தலைமை ஆசிரியரின் பணிக்குப் பிறகு, இராணுவத்தில் சுபேதார் பதவி உயர்வு வழங்கப்பட்டு மோவுக்கு அனுப்பப்பட்டார். மோவ் இராணுவ தலைமையகமாக இருந்தது. இங்கு அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, பிறந்தார். அம்பேத்கரின் பிறந்த பெயர் பீம், பிவா மற்றும் பீம்ராவ் என்றும் அழைக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பு, இந்திய அரசியலமைப்பு மற்றும் பௌத்த மறுமலர்ச்சி மற்றும் பிற நடவடிக்கைகள் காரணமாக, பாபாசாகேப் அம்பேத்கர் உலக அரங்கில் குறிப்பிடத்தக்க நபராக கருதப்படுகிறார். பின்னர், தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய பாபாசாகேப் அம்பேத்கரின் பிறப்பிடம் புனித நிலமாகவும் முக்கியமான இடமாகவும் மாறியது.

மார்ச் 27, 1991 அன்று, “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு குழுவின்” நிறுவனர் தலைவர் பௌத்த துறவி சங்சில் இந்தக் குழுவின் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். நினைவுச்சின்னத்தின் அடிக்கல் நாட்டிற்கு மத்திய பிரதேச முதல்வர் சுந்தர் லால் பட்வா அழைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பிறந்த இடத்தில், கட்டிட வடிவமைப்பு கட்டிடக் கலைஞர் இ.டி. நிம்கேட் அவர்களால் உருவாக்கப்பட்டது. பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. அம்பேத்கரின் சாம்பலைக் கொண்டுவருவதற்காக பண்டேஜி (பிக்கு) மும்பைக்குச் சென்றார், அவர் ஏப்ரல் 12, 1991 அன்று சாம்பலுக்கு திரும்பினார். 1991 ஏப்ரல் 14 அன்று அம்பேத்கரின் 100வது பிறந்த நாள் அன்று முதலமைச்சர் சுந்தர் லால் பட்வா அவர்களால் நினைவுச்சின்னத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடல் பிகாரி வாச்பாய் மற்றும் அமைச்சர், பெரூலால் பட்டிதர் மற்றும் பாண்டே தர்மசில் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர், பிரமாண்டமான பீம் ஜன்மபூமியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டது. மேலும் அருங்காட்சியகமும் அம்பேத்கரின் 117வது பிறந்த நாளான 2008 ஏப்ரல் 14 அன்றே திறக்கப்பட்டது.

நினைவுச்சின்னத்தின் அமைப்பு பௌத்த கட்டிடக்கலை தாது கோபுரத்தைப் போன்றது. நினைவுச்சின்ன நுழைவாயிலுக்கு அருகில் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நினைவுச்சின்னத்தில் இந்தியில் “பீம் ஜென்மபூமி” என சிலைக்கு மேலே செதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு பெரிய அசோக சக்கரம் உள்ளன. நினைவுச்சின்னத்தின் முன் மற்றும் நினைவுச்சின்னத்தின் மேற்புறத்தில் இரண்டு புத்த கொடி உள்ளது. நினைவுச்சின்னத்தின் உள்ளே, பாபாசாகேப்பின் வாழ்க்கை முறையின் பல உருவப்படங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கௌதம புத்தர், பாபாசாகேப் அம்பேத்கர், இவரது முதல் மனைவி இரமாபாய் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளும் உள்ளன

தீக்சாபூமி

தீக்சாபூமி அக்டோபர் 14, 1956 அன்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்த சமயத்தைத் தழுவிய இடத்தில் எழுப்பப் பட்டுள்ள ஓர் வழிபாட்டுத்தலமாகும்.. இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அவர் எடுத்த இந்த முடிவு ஒடுக்கப்படும் இந்திய இளைஞர்களுக்கு இன்றும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது..

தீக்சாபூமி மகாராட்டிரம் மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. அசோக விசயதசமி அன்றும் அக்டோபர் 14 அன்றும் பெருந்திரளான வழிபாட்டாளர்கள் இங்கு வருகின்றனர்.

தீக்சா என்ற பௌத்தர்களின் சொல் அவர்களின் சமயத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. பூமி நிலத்தைக் குறிக்கும். எனவே, இதன் பொருள் பௌத்த மதத்தை ஏற்றுக்கொள்ளும் இடமாகும். டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையில் முக்கிய இடங்களாகப் போற்றப்படும் இரு இடங்களில் இது ஒன்று. மற்றொன்று மும்பையிலுள்ள சைதன்யபூமி ஆகும்.

இங்குள்ள பௌத்த விகாரம் அதன் கட்டிட வடிவமைப்பிற்கும் வரலாற்றுப் பின்னணிக்கும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்தியாவின் சுற்றுலா மையங்களில் முதன்மையான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய இரயில்வே நாக்பூரிலிருந்து கயா செல்லும் தொடர்வண்டிக்கு தீக்சாபூமி விரைவுவண்டி எனப்பெயரிட்டுள்ளது.

அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்

நாக்பூரின் தீக்சாபூமியில் அக்டோபர் 14, 1956இல் அம்பேத்கர் புத்த சமயத்திற்கு மாறினார். தான் மதம் மாறிய பின்னர் தனது தொண்டர்களுக்கு அம்பேத்கர் தம்மா தீட்சை வழங்கினார். இந்த சடங்கில் 22 உறுதிமொழிகள் (சபதங்கள்) மேற்கொள்ளப்பட்டன.

அம்பேத்கரின் தேசிய நினைவகம், தில்லி

அம்பேத்கர் தேசிய நினைவகம் (Dr. Ambedkar National Memorial) என்பது இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில், அலிப்பூர் சாலையில் உள்ள ஒரு நினைவகமாகும். இந்த இடத்தில்தான் அம்பேத்கர் தன் வாழ்வின் இறுதிக் காலத்தைக் கழித்தார். இந்த நினைவகமானது அரசியலமைப்புச் சட்டப் புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டு, பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

வரலாறு

1951இல் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைவிட்டு விலகிய பின்னர், சிரோஹி மன்னருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியேறினார். அதன் பின் இறக்கும் வரை தன் மனைவி சவிதாவுடன் 5 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தார். அப்போது அவர் எழுதிய முக்கியமான கடிதங்கள், மனுக்கள், விண்ணப்பங்கள், கட்டுரைகள், உரைகள் எல்லாவற்றிலும் 26, அலிப்பூர் சாலை என்ற இந்த இடத்தின் முகவரி இருக்கிறது. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், இந்து மதத்தின் புதிர்கள், புத்தரும் கார்ல் மார்க்சும், புத்தரும் அவரது தம்மமும் உள்ளிட்ட முக்கியமான நூல்களையும் இங்கிருந்துதான் எழுதியிருக்கிறார். இந்தியக் குடியரசுக் கட்சியைத் தொடங்க முடிவெடுத்து, அதற்கான ஆரம்பகட்டப் பணிகளையும் அம்பேத்கர் முடுக்கிவிட்டது இங்கிருந்துதான். நவீன இந்தியச் சமூக வரலாற்றில் அரங்கேறிய மாபெரும் திருப்புமுனை நிகழ்வான ‘பவுத்தம் திரும்புதலுக்கான’ முடிவுரையையும் இங்குதான் தீர்மானித்தார். இவ்வளவு சிறப்புவாய்ந்த வீட்டை ஜிண்டால் குடும்பத்தினர் வாங்கி இடித்துவிட்டனர். ஆனால் இங்கு பின்னர் புதிய நினைவகம் கட்டப்பட்டது. இந்த நினைவகத்தில் அம்பேத்கரின் அறை மீண்டும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நினைவகத்தில் உள்ளவை

நினைவகத்தின் இரு பக்கமும் அகன்ற எல்இடி திரையில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த செய்திகள், அரிய படங்கள், காணொளி மற்றும் ஒலிப்பதிவுகள், நிகழ்ச்சிகளின் தொகுப்பு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அம்பேத்கரின் வீடு, குடும்பம், வகுப்பறை, நூலகம், பரோடா சமஸ்தானத்தில் பணியாற்றியது, விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது உள்ளிட்டவை நவீனச் சிற்பக் கலையின் வழியாக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் அலுவலகத்தில் அம்பேத்கர் அமர்ந்து எழுதுவது போன்ற சிலையும், அதன் அருகே அவர் பயன்படுத்திய மை பேனா, தேடலுக்கான நூல்கள், பூதக் கண்ணாடி, தொலைபேசி, குடை, கைத்தடி, தொப்பி, தட்டச்சு இயந்திரம், சுற்றிலும் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்கத்து அறையில் அவரது உடைமாற்றும் மேசை, அதன் மேல் அம்பேத்கர் கடைசிக் காலத்தில் கற்றுக்கொண்டு இசைத்த‌ வயலின், சாய்வு நாற்காலி போன்றவை உள்ளன

சைத்திய பூமி

சைத்திய பூமி (Chaitya Bhoomi) (மகாபரிநிர்வான நினைவிடம்) என்பது ஒரு பௌத்த சைத்தியமும், இந்திய அரசியலமைப்பைக் கட்டியெழுப்பியவரான டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் தகன இடமுமாகும். இது மும்பையின் தாதர் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த சைத்திய பூமி என்பது அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களுக்கான புனித யாத்திரைக்கான இடமுமாகும். ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாள் விழாவில் (மகாபரிநிர்வான தினம்) ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் வருகை தருகிறார்.

மகாராஷ்டிரா முதல்வர், ஆளுநர், அமைச்சர் மற்றும் பல அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 6 ஆம் தேதி சைத்திய பூமியில் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இதை பார்வையிட்டுள்ளார். சைத்திய பூமி அம்பேத்கருக்கு ஒரு நினைவுச்சின்னத்தை வழங்குகிறது. மேலும் மகாராஷ்டிரா ரசாங்கத்தால் ஏ-வகுப்பு சுற்றுலா மற்றும் புனித யாத்திரைத் தளமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டமைப்பு விவரங்கள்

இந்த அமைப்பு சதுர வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய குவிமாடம் கொண்டு தரைத் தளங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சதுர வடிவ கட்டமைப்பில் 1.5 மீட்டர் உயரத்தில் ஒரு வட்ட சுவர் உள்ளது. வட்ட பகுதியில் அம்பேத்கரின் மார்பளவு சிலையும், கௌதம புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. வட்ட சுவரில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. அவை பளிங்கு தரையையும் கொண்டுள்ளன. தவிர பிக்குகளுக்கு ஓய்வெடுக்கும் இடமும் உள்ளது. சைத்திய பூமியின் பிரதான நுழைவாயில் சாஞ்சி தாது கோபுர வாயிலின் பிரதி ஆகும். அதே நேரத்தில் அசோகரின் தூணின் பிரதியையும் கொண்டுள்ளது.

சைத்திய பூமியை 1971 திசம்பர் 5 ஆம் தேதி பி.ஆர்.அம்பேத்கரின் மருமகள் மீராபாய் யசுவந்த் அம்பேத்கர் திறந்து வைத்தார். இங்கே, அம்பேத்கரின் நினைவுச்சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு நினைவுச்சின்னம் கட்டுவதற்காக இந்து ஆலைகளின் நிலத்தை மகாராஷ்டிரா அரசுக்கு மாற்ற அனுமதித்தது

மகாபரிநிர்வான தினம்

அம்பேத்கரின் நினைவு ஆண்டுவிழா (திசம்பர் 6) மகாபரிநிர்வான தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இவருக்கு மரியாதை செலுத்துவதற்காக இங்கு வருகிறார்கள்.

அம்பேத்கர் தேசிய நினைவகம் தில்லி

அம்பேத்கர் தேசிய நினைவகம் (Dr. Ambedkar National Memorial) என்பது இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில், அலிப்பூர் சாலையில் உள்ள ஒரு நினைவகமாகும். இந்த இடத்தில்தான் அம்பேத்கர் தன் வாழ்வின் இறுதிக் காலத்தைக் கழித்தார். இந்த நினைவகமானது அரசியலமைப்புச் சட்டப் புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டு, பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

வரலாறு

1951இல் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியைவிட்டு விலகிய பின்னர், சிரோஹி மன்னருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியேறினார். அதன் பின் இறக்கும் வரை தன் மனைவி சவிதாவுடன் 5 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தார். அப்போது அவர் எழுதிய முக்கியமான கடிதங்கள், மனுக்கள், விண்ணப்பங்கள், கட்டுரைகள், உரைகள் எல்லாவற்றிலும் 26, அலிப்பூர் சாலை என்ற இந்த இடத்தின் முகவரி இருக்கிறது. பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், இந்து மதத்தின் புதிர்கள், புத்தரும் கார்ல் மார்க்சும், புத்தரும் அவரது தம்மமும் உள்ளிட்ட முக்கியமான நூல்களையும் இங்கிருந்துதான் எழுதியிருக்கிறார். இந்தியக் குடியரசுக் கட்சியைத் தொடங்க முடிவெடுத்து, அதற்கான ஆரம்பகட்டப் பணிகளையும் அம்பேத்கர் முடுக்கிவிட்டது இங்கிருந்துதான். நவீன இந்தியச் சமூக வரலாற்றில் அரங்கேறிய மாபெரும் திருப்புமுனை நிகழ்வான ‘பவுத்தம் திரும்புதலுக்கான’ முடிவுரையையும் இங்குதான் தீர்மானித்தார். இவ்வளவு சிறப்புவாய்ந்த வீட்டை ஜிண்டால் குடும்பத்தினர் வாங்கி இடித்துவிட்டனர். ஆனால் இங்கு பின்னர் புதிய நினைவகம் கட்டப்பட்டது. இந்த நினைவகத்தில் அம்பேத்கரின் அறை மீண்டும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நினைவகத்தில் உள்ளவை

நினைவகத்தின் இரு பக்கமும் அகன்ற எல்இடி திரையில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த செய்திகள், அரிய படங்கள், காணொளி மற்றும் ஒலிப்பதிவுகள், நிகழ்ச்சிகளின் தொகுப்பு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அம்பேத்கரின் வீடு, குடும்பம், வகுப்பறை, நூலகம், பரோடா சமஸ்தானத்தில் பணியாற்றியது, விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது உள்ளிட்டவை நவீனச் சிற்பக் கலையின் வழியாக தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் அலுவலகத்தில் அம்பேத்கர் அமர்ந்து எழுதுவது போன்ற சிலையும், அதன் அருகே அவர் பயன்படுத்திய மை பேனா, தேடலுக்கான நூல்கள், பூதக் கண்ணாடி, தொலைபேசி, குடை, கைத்தடி, தொப்பி, தட்டச்சு இயந்திரம், சுற்றிலும் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்கத்து அறையில் அவரது உடைமாற்றும் மேசை, அதன் மேல் அம்பேத்கர் கடைசிக் காலத்தில் கற்றுக்கொண்டு இசைத்த‌ வயலின், சாய்வு நாற்காலி போன்றவை உள்ளன

அம்பேத்கர் நினைவில்லம் லண்டன்

இலண்டன் அம்பேத்கர் நினைவில்லம் (Dr. Bhimrao Ramji Ambedkar Memorial) என்பது பெரிய பிரித்தானியா தலைநகரமான இலண்டனில், கிங் ஹென்ரி சாலையில் உள்ள ஒரு நினைவகமாகும். இந்த வீட்டில் அம்பேத்கர் 1921-1922 காலகட்டத்தில் வாழ்ந்தார்.

அம்பேத்கர் பிரிட்டன் தலைநகரான இலண்டனுக்குச் சென்று அங்கு புகழ்வாய்ந்த இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் முதுநிலையும், முனைவர் பட்டமும் படித்து, அதிலும் பிரித்தானியரைக் கடுமையான விமர்சிக்கும் வகையில் எழுதப்பட்ட ‘பிரித்தானிய இந்தியாவில் பேரரசின் நிதியை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளித்தல்’, ‘ரூபாயின் சிக்கல்’ ஆகிய ஆய்வேடுகளை அம்பேத்கர் எழுதியது இந்த வீட்டில் வசித்த 1921-1922 காலத்தில்தான்.

இலண்டனில் கிங் ஹென்ரி சாலையில் உள்ள 2,050 சதுர அடி பரப்பளவில் மூன்றடுக்கு மாடிகள், ஆறு அறைகள் கொண்ட இந்த வீட்டை அதன் உரிமையாளர் 2015 ஆம் ஆண்டு விற்க முடிவு செய்தா. இதை அறிந்த இந்தியாவின் மகாராஷ்டிர அரசு 31 கோடி ரூபாய் கொடுத்து இதை வாங்கியது.பின்னர் இதை நினைவில்லமாக மாற்றியது. மேலும் இது ஒரு அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டது. இதில் அம்பேத்கரின் பொருட்கள், அவர் குறித்த ஒளிப்படங்கள், அவரின் கடிதங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டன.

இந்நிலையில் திட்ட அனுமதி பெறவில்லை என்று என்று கூறி நினைவில்லத்தை மூட இலண்டன் காம்டென் நகராட்சி உத்தரவிட்டது. மேலும் இங்கு உள்ள அம்பேத்கரின் பொருட்களை வேறு இடத்துக்கு அப்புறப்படுத்துமாறும் சொல்லப்பட்டது. அனுமதி கோரி இந்திய தூதரகம் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதன் பிறகு நடத்தப்பட்ட தொடர் முயற்சிகளுக்குப் பிறகு இந்த நினைவகம் செயல்பட இலண்டன் அரசு 2020 மார்ச் மாதத்தில் அனுமதி அளித்தது.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Dr. Babasaheb Ambedkar International Airport, ) மகாராட்டிரத்தின் நாக்பூர் நகருக்கு சேவை வழங்கும் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த நிலையம் நாக்பூரின் தென்மேற்கில் 8 கிமீ (5 மை) தொலைவில் சோனேகாவ்னில் அமைந்துள்ளது. 1355 ஏக்கர்கள் (548 எக்டேர்) பரப்பளவு கொண்ட இந்த வானூர்தி நிலையம் 2005இல் இந்திய அரசியலமைப்பை வடித்தச் சிந்தனையாளர் அம்பேத்கர் நினைவாகப் பெயரிடப்பட்டது. நாளுக்கு 4,000 பயணிகளைக் கையாளும் இந்த நிலையம் ஐந்து உள்நாட்டு வான்சேவை நிறுவனங்களாலும் இரண்டு பன்னாட்டு வான்சேவை நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகின்றது. சார்ஜா, தோகா மற்றும் 12 உள்நாட்டுச் சேரிடங்களுக்கு இவை நாக்பூரை இணைக்கின்றன. இங்கு இந்திய வான்படையின் வான்தளமும் அமைந்துள்ளது. பயணிகள் போக்குவரத்து பெரிதும் 700 கிமீ (378 மை) தொலைவிலுள்ள மாநிலத் தலைநகர் மும்பைக்கே உள்ளது.

இந்த வானூர்தி நிலையம் 1917-18இல் முதல் உலகப் போரின்போது அரச வான்படைக்காகப் பயன்பாட்டிற்காகத் துவங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பிரித்தானியர்கள் இந்தியாவை விட்டு விலகியபோது இது இந்திய அரசிற்கு மாற்றப்பட்டது. 1953இல் உணவகங்கள், ஓய்வறைகள், ஒப்பனையறைகள், நூலங்காடிகள், பார்வையாளர் அரங்கங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

சோனேகான் வானூர்தி நிலையம் அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட தனித்துவமான “இரவு வான்வழி அஞ்சல் சேவையின்” மைய அச்சாக விளங்கியது; இத்திட்டத்தில் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையிலிருந்து நான்கு வானூர்திகள் ஒவ்வொரு இரவும் அஞ்சல்பைகளுடன் இங்கு வந்து சேர்ந்து மற்ற நகரங்களுடன் அஞ்சல்களைப் பிரித்துக் கொண்டு தத்தம் இடம் திரும்பின. இந்த சேவை சனவரி 1949 முதல் அக்டோபர் 1973 வரை இயக்கத்தில் இருந்தது. இங்கு குடிசார் வான் போக்குவரத்தே முதன்மையானதாக இருந்தது; 2003இல் மீண்டும் இந்திய வான்படை இங்கு தனது 44ஆம் அலகை நிறுவி படைத்துறையின் சரக்கு வானூர்தி ஐஎல்-76ஐ இங்கு இருத்தியுள்ளது.

விரிவாக்கம்

இந்தியாவின் நடுமத்தியில் அமைந்துள்ளதால் பன்முகட்டு பன்னாட்டு சரக்கு மைய அச்சு மற்றும் நாக்பூர் வானூர்தி நிலையம் என்ற திட்டம் (ஆங்கிலச் சுருக்கம்:MIHAN) முன்மொழியப்பட்டு இதற்கான மேம்பாட்டுப் பணிகள் 2005ஆம் ஆண்டு துவங்கின. இத்திட்டத்தின் கீழ் இரண்டாம் ஓடுபாதை, புதிய முனையக் கட்டிடம், மற்றும் சரக்கு வளாகத்தை கட்டு-பராமரி-மாற்று அடிப்படையில் கட்டமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக இந்திய வான்படைக்கு மகாராட்டிர அரசு 400 எக்டேர் நிலத்தை மாற்றாக வழங்கியது.

புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் ஏப்ரல் 14, 2008இல் திறக்கப்பட்டது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் பழைய கட்டிடத்தையும் ₹790 மில்லியன் செலவில் மேம்படுத்தியது. இந்த வானூர்தி நிலையம் 17,500 சதுர மீட்டர் பரப்பளவில் மணிக்கு 550 பயணிகளைக் கையாளும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய முனையத்தில் 20 உள்பதிகை முகப்புகளும் 20 குடிபுகல் முகப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த முனையத்தில் கட்புல இணைப்பு வழிகாட்டுதலுடன் கூடிய பயணியர் வானூர்தி பாலங்களும் சரக்குப் பெட்டிகளுக்கான சுமைச்சுழலிகளும் அமைந்துள்ளன. 600 தானுந்துகளை நிறுத்தக்கூடிய தானுந்து நிறுத்தற்பூங்காவும் உள்ளது. இதில் 18 நிறுத்த தடவழிகள் உள்ளன. வானூர்தி நிலையத்தை முதன்மை நெடுஞ்சாலையுடன் இணைக்கும் அணுக்கச்சாலை புதியதாகக் கட்டப்பட்டது. வானூர்தி நிலையத்தின் வான் பயண வழிகாட்டுதலை மேம்படுத்த புதிய கட்டுப்பாட்டு அறையும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில்நுட்பக் கட்டிடமும் திட்டமிடப்பட்டுள்ளன.

ஏர் இந்தியாவின் பராமரிப்பு மையம்

இந்த வானூர்தி நிலையத்தில் 50 ஏக்கர் பரப்பில் அமெரிக்க வானூர்தித் தயாரிப்பு நிறுவனமான போயிங் பராமரிப்பு – செப்பனிடுதல் – பழுதுபார்வை (MRO) வசதியை சனவரி 2011இல் கட்டமைத்துள்ளது. இந்த வசதியை ஏர் இந்தியாவின் பராமரிப்புத் துறை, ஏர் இந்தியா பொறியியல் சேவைகள் பிரிவு, 2013இல் ஏற்றுக்கொண்டது; சூன் 2015 முதல் இயக்கி வருகின்றது. இந்த $100 மில்லியன் பெறுமான திட்டத்தில் இரண்டு 100 x 100 மீட்டர் வானூர்திக் கூடாரங்களை லார்சன் அன்ட் டூப்ரோ கட்டியுள்ளது. இவை போயிங் 777 & 787-8 போன்ற அகல உடல் வானூர்திகளை நிறுத்துமளவிற்கு உள்ளன. மேலும் வேலைசெய்ய ஏதுவாக கூடுதலாக 24,000 ச மீட்டர்கள் பகுதியை வழங்குகின்றன. நாக்பூர் நாட்டின் மையமாக இருப்பதாலும் வெப்பநிலை மிக்கதாகவும் கடல்நீர் தூய்மைக்கேடும் அரித்தலும் இல்லாததாலும் இந்த வானூர்தி நிலையத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. உலகில் இத்தகைய வசதியை போயிங் நிறுவனம் இரண்டாவது முறையாகக் கட்டமைத்துள்ளது; முதலில் சீனாவின் சாங்காயில் நிறுவியுள்ளது.

– பேரா. எ. பாவலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *