பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் நடத்திய ”என் ஊரின் கதை” கட்டுரைப்போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட முதல் 10 கதைகளுள் இக்கதையும்  ஒன்று.

போட்டி முடிவுகளை காண கிளிக் செய்க : ”என் ஊரின் கதை” கட்டுரைப்போட்டி முடிவுகள்

எனது  ஊர் அண்மையில் உருவாக்கப்பட்ட செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலையும், பசுமையான இயற்கையுடைய சிற்றூர் “வண்டலூர்” ஆகும். சென்னையின் தெற்கு நுழைவுவாயல் என்ற பெருமை வண்டலூருக்குண்டு.  வண்டலூர் என்றவுடன் நினைவுக்கு வருவது “அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா” தான்.   எங்க ஊருக்கு பெருமைச் சேர்ப்பது இந்த பூங்கா.  எறத்தாழ 6.03கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதும், 171 வகையான மிருக இனங்களையும், 2644 மிருக எண்ணிக்கையும் உள்ளடக்கியது.  இப்  பூங்காவினைக் கண்டுகளிக்க, உலக முழுவதும் ஆண்டுதோரும், 21இலட்சம் மக்கள் வருகின்றனர். மேலும், இது பொழுது போக்கு சுற்றுலாத் தளமாக விளங்குகின்றதது. அண்மையில் ஏற்பட்ட மழை மற்றும் புயல்களின் சீற்றத்தின் விளைவாக, இந்த பூங்கா மற்றும் எங்க ஊரிலிருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடந்த ஆண்டு வண்டலூரிலுள்ள இளைஞர்கள் மற்றும் தன்னார்வார்வ தொண்டர்கள் இணைந்து “வண்டலூர் விதைகள் இயக்கம்” என்று ஒரு இயக்கத்தினை உருவாக்கினர்.

File:Vandalur Hill.JPG - Wikipedia

இதன் மூலமாக ஆயிரக்கணக்கான விதைப்பந்துகளையும், மரக்கன்றுகளையும் வாங்கி கிராமம் முழுவதும் நட்டு வைத்துள்ளனர். இதனால், இழந்த இயற்கைச் செல்வங்களை மீட்டிடப் பணிபுரிந்தனர். வண்டலூரில் இரு ஏரிகள் இருக்கின்றன. இந்த ஏரிகள் மற்றும் வண்டலூர் இரயில் நிலையத்தில் தான் 1960-1980-களில் அதிக திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைப்பெற்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான “பராசக்தி” படத்தின் சில காட்சிகள் வணடலூரில் தான் படமாக்கப்பட்டது. ஆனால், தற்போது எங்க ஊர் ஏரிகளில்,மக்கள் குப்பைகளையும், பாலிதீன் பைக்கழிவுகளையும், இறைச்சிக்கழிவுகளையும் கொட்டி மாசுப்படுத்தப் பட்டிருந்தது. வண்டலூரின் விதைகள் இயக்கத்தினரின் முயற்சியின் விளைவாக, ஏரிகளில் கழிவுகளை அகற்றப்பட்டது. தற்போது, ஏரிகளில் பல வகையான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கும் வேடந்தாங்கல் போன்று விளங்குகின்றது. வருங்காலங்களில் மென்மேலும் எழில் கொஞ்சும் பூமியாக எங்கள் வண்டலூர் விளங்குமென்றால் அது  மிகையாகாது.     

– இரா.பன்னீர்செல்வம்,
.எண்.1/11,வாலாஜாபாத்  ரோடு,
வண்டலூர்,
சென்னை-48.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *