11 நூல்கள் கொண்ட….
1040 பக்கங்கள் கொண்ட…
நேர்த்தியான அட்டைப்பெட்டியுடன் கூடிய
நூலின் பெயர்:
“ஆங்கில ஆசான்”
(**தமிழ்க்கைப்பிடித்து ஓர் ஆங்கில பயணம்!)
ஆசானாக வழிநடத்தும்
தோழர்: நலங்கிள்ளி.
மானிய விலையில் நன்கொடையாளர்கள்
பங்களிப்போடு ஆயிரம் ரூபாய் விலை
மதிப்புள்ள 11 நூல்களை ஓர் அட்டைப்
பெட்டிக்குள் வைத்து ரூ 300/-க்கு வெளியிடுவோர்:
நன்செய் பிரசுரம்..
(கூரியர் மூலம் பெற ஒரு பெட்டிக்கு ரூ120/-
சேர்த்து ரூ.420/- SundarVedha:ற்கு G Payமூலம்
9566331195 அனுப்பி.. உங்கள் முகவரியை
அலைபேசி எண்ணுக்கு..பணம் அனுப்பிய
Screen shotஉடன் அனுப்பி பெறலாம்)
## முதலில் நூல் இருப்பு உள்ளதா என
வாட்சப் எண்ணிற்கு voice message அனுப்பி
Confirm செய்து கொள்ளுங்கள்..பத்து பேருக்கு
பார்சல் முறையில் வாங்கினால் C&F குறையும்..
உங்களுக்கு…பிள்ளைகளுக்கு…பேரக்குழந்தைகள்..
சகோதர உறவுகள்.. நண்பர்கள்..பிறந்தநாள் விழா..
மக்கள் நீராட்டு விழா…etc..etc..க்களில் பயனுள்ள
நினைவுப் பரிசாக வழங்க உங்களுக்கு மட்டுமே
குறைந்தபட்சம் பத்து நூல் தேவைப்படும்.
நன்செய் பிரசுரத்தின் நோக்கம்..Wren &zMartin
நூல் போல எல்லா வீடுகளுக்கும் மலிவுவிலையில்..தரமான தாட்களில்.. நல்ல
லே அவுட்…கட்டமைப்பில் கொண்டு சேர்ப்பதுதான்.
அதனால்தான் கிழக்குப் பதிப்பகம் மூலம்
ஆயிரம் பக்கத்தில் அதிக விலையில் போட்ட
நூலை..போகும் இடமெல்லாம்..சிறு..சிறு..நூலாக
கையில் எடுத்துத்சென்று வாசிக்கும் வண்ணம்
நன்கொடையாளர்களிடம் ஒரு நூலுக்கு எழுநூறு
ரூபாய் அளவிற்கு நன்கொடை பெற்று
நேர்த்தியாக கொண்டு வந்துள்ளார்கள்..
இருதரப்பையும் பாராட்டி..வாழ்த்துவோம்..
அது போதுமா….நோக்கம் நிறைவேற அவர்களுடன்
கரம் கோர்ப்போம்…ஆங்கில மோகமென
ஐயம் வேண்டாம். ஒரே கல்லில் இரு கனிகளாக..
தமிழையும்…ஆங்கிலத்தையும் சக காலத்தில்
புதுப்பித்துக்கொள்வோம்..
தெருவுக்கு தெரு..
தமிழ்-ஆங்கில வாசகர் வட்டம் அமைத்து..
ஆங்கில ஆசான் நூலை அடிப்படையாகக் கொண்டு….இருமொழிகளிலும்
புலமை பெற்ற ஆசிரியர்கள்..அரசு ஊழியர்கள்..
என பல தரப்பினரும் தன்னார்வலர்களாக
களம் காண்போம்..தொடர் உழைப்பு..விடா
முயற்சி..தீவிர ஆர்வம் இருப்பின்…வேறொன்றும்
தேவையில்லை..
சரி…நூலறிமுகத்திற்கு வருவோம்..
நூல் 1..47… பக்கங்களில் Be அறிவோம்..
நூல் 2..59…பக்கங்களில்..Modals அறிவோம்..
நூல் 3..84..பக்கங்களில்.. Active Voice Simple Tense
அறிவோம்..
நூல் 4..82… பக்கங்களில் Active Voice Continuous
Tense அறிவோம்..
நூல் 5..103… பக்கங்களில் Active Voice Perfect
Tense அறிவோம்..
நூல் 6.117 பக்கங்களில் Active Voice Perfect
Continuous tense அறிவோம்.
நூல் 7..101. பக்கங்களில் Passive Voice Simple
Tense அறிவோம்.
நூல்..8..64.. பக்கங்களில் Passive Voice Continuous
Tense அறிவோம்.
நூல்..9..131. பக்கங்களில் Passive voice perfect
Tense அறிவோம்.
நூல்..10..71.. பக்கங்களில் “துணுக்குகள்”என்ற
முறையில் முக்கிய விதிகள் இலகுவாக…
நூல் 11..158.. பக்கங்களில் பயிற்சி வினாக்களும்
ஆங்கில உரையாடலும்…
*அறிவியல் அணுகுமுறையுடன் நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகளுடன் எளிய பயிற்சிகளுடன் ஒவ்வொரு நூலும் ஆசிரியரின் கள அனுபவத்தின் அடிப்படையில் எளிமையாக இடம் பெற்றுள்ளன.
*நீங்கள் நல்ல ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் வேண்டுமானால் நிறைவேற்ற வேண்டிய தேவைகள் மூன்று :ஆங்கிலம் கற்க வேண்டும் என்னும் ஆர்வம் ..அதற்காக உழைக்கும் விருப்பம்..
* நலங்கிள்ளியின் இந்த புத்தகம் “ஆங்கில ஆசான்”
ஏன் மற்ற புத்தகங்கள் அனைத்தையும் விட இந்த நூல் தனித்துவமானது எப்படி? உங்களுக்கு தமிழ் மொழியில் தேர்ச்சி இருந்தால் இந்நூலைக்கொண்டு ஆங்கிலம் கற்பது எளிது. ஆங்கிலம் ஓரளவுக்குக் தெரிந்திருக்க வேண்டும். இலக்கணம் என்னும் பெயரில் பல கடும் விதிகளை சொல்லி அச்சுறுத்தாமல் இயல்பான முறையில் எளிதாக இலக்கணம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
அடிப்படை ஆங்கிலம் தொடங்கி படிப்படியாக உயர்நிலை ஆங்கிலம் வரை எழுதவும் உரையாடவும் கற்றுத் தருகிறது .
எந்த சூழலுக்கும் பொருந்தும் வண்ணம் உரையாடல் வாக்கியங்களை பயன்படுத்தப்படுகிறது .
*ஓர் ஆயிரம் பயிற்சி வினாக்களும் பல மாதிரி உரையாடல்களும் இடம் பெற்றுள்ளன. சுவாரசியமான மொழி நடை கையாளப்படுகிறது. எளிய தமிழில் நல்ல ஆங்கிலத்தை கற்கவும் கற்பிக்கவும் உதவுகிறது .இந்நூலில் இடம்பெற்றுள்ள விரிவான பயிற்சிகளை பயன்படுத்தி உங்கள் ஆங்கிலத் திறனை சோதித்துக் கொள்ளலாம். தவறுகளைத் திரித்துக் கொள்ளலாம். அச்சமின்றி தயக்கமின்றி சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
* 20 ஆண்டுகளாக பல்வேறு பின்னணியை சேர்ந்த மாணவர்களுக்கும்.. அலுவலக பணியாளர்களுக்கும் ஆங்கிலம் கற்றுக் கொடுத்து வருகிறார் நலங்கிள்ளி.. தன்னுடைய விரிவான அனுபவங்களின் அடிப்படையில் நவீன பயிற்சி முறைகளை பயன்படுத்தி இந்த நூலைஉருவாக்கி இருக்கிறார்.
உங்களுக்கும் ஆங்கிலத்துக்குமான இடைவெளியை குறைக்க இந்த ஒரு புத்தகம் போதும் என்று துணிந்து சொல்லலாம்.
*தமிழ் அன்னைக் கைப்பிடித்து.. படிகள் பல ஏறி.. ஆங்கில சிகரம் அடையலாம் என இந்த நூல் பரிந்துரைக்கிறது…உறுதியளிக்கிறது… இடதுசாரி
சிந்தனையாளரும்.. தமிழ்தேசிய உணர்வாளருமான தோழர் நலங்கிள்ளி.. அவர்கள் ஆங்கில அறிவை தமிழ்வழி வழி ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும் என பல சமூகவலைதள உரையாடல்களில் முன்வைப்பது ஏற்புடையதே.. ஒவ்வொருவரும் அவர் அவரது தாய் மொழியை முதலில் பேசவும் அதற்குப் பின் எழுதவும் கற்றுக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் மற்றொரு மொழியை கற்றுக்கொள்ள முதலில் எழுதவும் பின் பேசவும் கற்றுக்கொள்ள முடியும். அந்த வழிமுறையைதான் “ஆங்கில ஆசான் “நூல் பின்பற்றுகிறது.
தோழர் நலங்கிள்ளி அவர்கள் மதுரை செல்லூரில் நெசவாளர்களுக்கு ஆங்கில வகுப்புகள் எடுத்து ஒரு ஆங்கில ஆசிரியராக உருப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .பல அறிவியல் ஆங்கில நூல்களை தமிழில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு தமிழாக்கி தந்துள்ளார் .மொழிபெயர்ப்பு துணையுடன் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளை செம்மையாக எடுத்த அனுபவம் இந்த நூலுக்கான பாடநூல் திட்டத்தை வடிவமைக்க உதவியது. அதனால்தான் தமிழ்க் கைப்பிடித்து ஆங்கிலம் பயில இந்த பெரும் நூல் தொகுப்பை தமிழ் உலகத்திடம்ஒப்படைத்து இருக்கிறார் நலங்கிள்ளி.
நாம் பள்ளி கல்லூரிகளில் படித்த காலத்திலோ அல்லது அலுவலகங்களில் வேலை பார்த்த காலங்களிலோ தவறின்றி ஆங்கிலத்தில் எழுத தடுமாறினோம். மிகவும் அரிதாக கல்லூரிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக உரையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம். நான் திருவாரூர் திரு.வி.க. கல்லூரியில் எம்.ஏ.,வரலாறு முதன்முதலாக ஆங்கில வழியில் படித்த போது (அதற்கு முன்பு வரை தமிழ் மீடியம்தான்)எங்களுக்கு வகுப்பு எடுத்த பேராசிரியர் வெங்கட்ராஜூலுஅவர்கள் ஒவ்வொருவரையும் தினசரி 10 நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேச வைத்ததை நினைத்து பார்க்கிறேன்.ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளில் சேர்வதால் மட்டும் ஆங்கிலம் பேசிவிட முடியாது. எவ்வளவோ பேர் நிறைய புத்தகங்கள் வாங்கி இருப்போம் .ஒரு மாதத்தில் ஆங்கிலம்.. ஒரு வாரத்தில் ஹிந்தி என்றெல்லாம் புத்தகங்கள் நிறைய இருக்கின்றன .மிக எளிய வழி. எந்த மொழியை கற்றுக் கொள்ள விரும்புகிறோமோ அந்த மொழி பேசும் மக்கள் உள்ள பகுதியில் வாழ்ந்தால் ஆறு மாதத்தில் அந்த மொழியை கற்றுக் கொள்ளலாம் .ஆனால் அந்த வாய்ப்பு எல்லோருக்கும் வருவதில்லை. அதற்கான சூழல் ஏற்படும் போது எல்லோருமே மொழி கற்றுக் கொள்கிறார்கள் .ஆங்கில வழியில் படித்து விட்டாலே ஆங்கிலம் தவறு இன்றி எழுதலாம்.. பேசலாம் என்பது ஒரு மாயை என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. நம் தமிழ்நாட்டில் தமிழும் சரியாக வரவில்லை.. ஆங்கிலமும் சரியாக வரவில்லை.. இந்த ஆங்கில ஆசான் நூலை பயன்படுத்தி தன்னார்வ அமைப்புகள் இதைஒரு முக்கியமானகடமையாக கைகொண்டு தமிழையும் ஆங்கிலத்தையும் ஒரே நேரத்தில் வாசகர் வட்ட குழு விவாதம் முறையில் இதற்கு நம்பலாம். இதற்கான தகுதியும்.. திறமையும் கொண்ட தன்னார்வலர்கள் எல்லாத்தெருக்களிலும் கிடைப்பார்கள். முதலில் நூலை வாங்கி விட்டாலே 50%வெற்றி..
ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நிர்வாகத்துடன் ஆங்கிலத்தில் சரளமாக பேச தடுமாறியதுண்டு. அதேபோல சங்க மாநாடுகளில் பிற மொழிகளை புரிந்து கொள்ள பலரும் சிரமப்படுகிறோம். உலக அளவிலான அறிவியல் மொழியாக தொடர்பு மொழியாக இன்றும் ஆங்கிலம் இருக்கிறது. அதேபோல தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது .பல அலுவலகங்களுக்கு இன்றும் ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுத வேண்டி இருக்கிறது . அலைபேசியில் ஆங்கிலத்தில் பேச வேண்டிய கட்டாயமும் பல நேரங்களில் நமக்கு ஏற்படுகிறது.இவை எல்லாவற்றையும் விட தமிழையும், ஆங்கிலத்தையும் ஒரே நேரத்தில் சரளமாக பேச எழுத இந்த நூல் நிச்சயமாக உதவும். அதை முதலாம் நூலில் இருந்து அடுத்தடுத்து நூல்களை வரிசையாக படிக்க வேண்டுமே தவிர இடையில் புகுந்து உடனே தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசரப்படக்கூடாது. முன்னரே குறிப்பிட்டது போல குழு விவாதம் என்பது மிகவும் உதவிகரமானது.. எளிதானது ..நம் மனதில் நிற்கக் கூடியது. கூகுள் செயலி மூலமாக மொழிபெயர்ப்பு என்பது பல நேரங்களில் கண்றாவியாக இருக்கிறது.
நடுநிலைப்பள்ளி ..உயர்நிலைப்பள்ளி.. மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இந்த நூலை வாசித்து தங்கள் வகுப்புகளில் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பயன்படுத்தினால் அது ஆசிரியர்கள் -மாணவர்கள் இருவருக்குமே பயனுள்ளதாக அமையும். எனவே ஆசிரியர்களுக்கு இந்நூலை வாங்கி கொடுப்பதற்கு அரசும் ..தனியார் பள்ளி நிர்வாகங்களும் முன் வந்தால் நன்றாக இருக்கும்.
நான் தமிழ் மீடியத்தில்தானே படித்திருக்கிறேன்.. எனக்கு ஆங்கிலம் வருமா என்று பயப்பட வேண்டாம் ..தமிழ் மீடியத்தில் படித்திருப்பவர்களுக்குத்தான் இந்த நூல் மிகவும் ஈசியாக இருக்கும் என்கிறார் நலங்கிள்ளி அவர்கள்! ஸ்போக்கன் இங்கிலீஷ் என்ற விளம்பரத்தை பார்த்து ..சேர்ந்து.. பேச முடியாமல் ஏமாந்தவர்கள் இந்த நூலும் அப்படித்தான் என்று பயப்பட வேண்டாம் என்று உறுதி அளிக்கிறார் தோழர் நலங்கிள்ளி.. இந்தப் புத்தகத்தில் எங்குமே காம்பவுண்ட் சென்டன்ஸ்.. சபார்டினேட் கிளாஸ் என்று அச்சுறுத்தும் சொற்றொடர்கள் எதுவும் கிடையாது. ஆங்கில இலக்கணப் புத்தகம் என்றாலே வினைச்சொல் பட்டியல்..
ஒருமை -பன்மை பட்டியல் ,ஆண்பால்- பெண்பால் சொற்கள் என்று கவலைப்பட வேண்டாம் .எல்லாமே தற்போது நமக்கு இணையதள பக்கங்களில் கொட்டிக் கிடைக்கின்றன. அவ்வப்போது தேவைக்கேற்ப அதில் சென்று பார்த்துக் கொள்ளலாம். அதையெல்லாம் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மறக்கவே கூடாத ஆங்கில விதிகள் என்று சில மட்டும் நம் மனதில் ஆழப் பதிந்து விட்டால் ஆங்கில ஆசான் நம்மையும் ஆங்கில ஆசனாக மாற்றிவிடும்.
இந்த நூலை சிறுகதை போன்றோ.. நாவல் போன்றோ பிற வகை நூல்கள் போன்றோ அறிமுகம் செய்ய இயலாது .இந்த நூலின் பயன்பாடு ஒவ்வொருவருக்கும் உதவும் என்கின்ற வகையிலேதான் “நூல் அறிமுகம்” என்ற வடிவத்தை கைக்கொண்டு இந்த நூலை ஒவ்வொருவரும் வாங்கி பயனுறபரிந்துரைக்கிறேன்.
நானும் இரு நூல்களை வாசித்து விட்டேன். தொடர்ந்து ஆர்வமுடன் வாசிக்கிறேன்..
அதன்பின் விமர்சனம்…தேவைகள்..பற்றி நூலாசிரியருக்கு தெரிவிப்பேன்.
தமிழ் -ஆங்கில வாசகர் வட்டத்தை உருவாக்க விவாதித்து வருகிறோம்..
நாம் தமிழில் பேச நினைப்பதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு முறையில் பேச இந்த நூல் உதவும்.
நூலின் தகவல்
நூல் : ஆங்கில ஆசான்
ஆசிரியர் : நலங்கிள்ளி
பக்கம் : 1040
விலை : 1000
பதிப்பகம் : நன்செய் பிரசுரம்
எழுதியவர்
இரா.இயேசுதாஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

