paachaloor pathigam paadiya varalaaru artical wriiten by prof.a.paavalan கட்டுரை: பாய்ச்சலூர் பதிகம் பாடிய வரலாறு - முனைவர் எ. பாவலன்paachaloor pathigam paadiya varalaaru artical wriiten by prof.a.paavalan கட்டுரை: பாய்ச்சலூர் பதிகம் பாடிய வரலாறு - முனைவர் எ. பாவலன்

பதிகம் என்ற சொல்லுக்கு நூலில் பதிந்துள்ள பொருள்களை கூறுவது என்பது பொருள். பத்துப் பாடல்களைக் கொண்ட அமைப்பு முறைக்கு பதிகம் என்ற பெயருமுண்டு. பொதுவாக பதிகம் பக்தி இலக்கியம் பாடுவதற்கு உகந்தது என்ற கோட்பாட்டைப் பாய்ச்சலூர் பதிகம் தகர்த்துள்ளது என்று கூறவியலும். இப்பதிகத்தை பாடியவர் உத்தர நல்லூர் நங்கை. இவர் ஒரு பெண் கவி. கிபி 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.

பதிகம் பற்றி தொல்காப்பியர் தொடங்கி வைத்துள்ளார். சங்க இலக்கியத்தில் குறிப்பாக ஐங்குறுநூற்றில் இருந்து தோற்றம் பெற்றாலும் அதன் சிறப்பைப் பக்தி இலக்கியமான திருவாசகத்தில் காணமுடியும். தேவாரம் பாடிய மூவரும் அவர்கள் பாடிய பதிகத்தால் போற்றப்பட்டனர். ஆனால் பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்விய பிரபந்தம் உட்பட இவை அனைத்தையும் உருவாக்கியது யார்? அது யாருக்காக உருவாக்கப்பட்டது என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் கடவுள் அனைவருக்கும் பொதுவானதாக இல்லை என்ற கசப்பான உண்மை தொக்கி நிற்பதை அறிய முடியும். இதனடிப்படையில்தான் பாச்சலூர் பதிகம் தோற்றம் கண்டது. இப்பதிகம் உருவான வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்யும் தன்மையில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

பாச்சலூர் பதிகம் உருவாக காரணம்

பாச்சலூர் என்பது திருச்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் உள்ள ஒரு கிராமம். அங்கு உத்தர நல்லூர் நங்கை என்கின்ற ஒரு சிறுமி வாழ்ந்து வந்தாள். அவள் நந்தனார் குலத்தைச் சார்ந்தவள். அவளுடைய பிரதான தொழில் மாடு மேய்ப்பது. அப்படித்தான் அவள் சிறு வயதாக இருந்த போது ஆற்றங்கரை ஓரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது இவள் வயதை ஒத்த சிறுவன் தினமும் அந்த ஆற்றங்கரைக்கு வேதம் ஓதுவதற்காக வருவான். தொடக்கத்தில் அனைவரும் வேடிக்கைப் பார்த்தனர். பின்னர் அந்தப் பார்ப்பன சிறுவனிடம், நங்கை தனக்கும் வேதம் பயிற்றுவிக்க வேண்டினாள். அச்சிறுவன் எந்த வேறுபாடும் கருதாது தான் கற்ற வேதம் எல்லாவற்றையும் நங்கைக்கும் போதித்தான். இது நாளும் கிழமையாக மாறி திங்களாக உருவெடுத்து ஆண்டுகள் பலவாக தொடர்ந்தன. இந்நிகழ்வு ஊராரின் கண்களை உறுத்தியது. இதைக் கண்டிக்க தொடங்கினர். இருவரும் எதைக் குறித்தும் அஞ்சாமல் தொடர்ந்து கல்வி பயின்றனர். இதற்கிடையில் அவள் கல்வியால் ஞானம் அடைந்தாள். அந்த பிராமண இளைஞனை வளைத்துப் போடுகிறாள். ஊராரின் குற்றச்சாட்டு இது. தவறான கண்ணோட்டத்தில் அணுகி பார்த்தவர்களுக்கு பழிவாங்கும் எண்ணமே மேலோங்கியது. அதனால் தீவர்த்தி உடன் சென்று நங்கையை தாக்க நினைத்தனர். அப்பொழுது நங்கை தன்னுடைய அறிவாற்றலால் சாதுரியமாக தன்னை தாக்க வந்தவர்களையும் கிராமத்து மக்களையும் பார்த்து மிக தீர்க்கமாக தன்னுடைய வாதத்தை முன்வைத்தாள். அப்பொழுது அந்த கிராம மக்களுக்கு நல்லறிவு புகட்டும் நோக்கத்தில் பாடிய பதிகம் தான் பாச்சலூர் பதிகம்.

பாச்சலூர் பதிகம் கிபி 15ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. தாழ்ந்த குளமான நந்தனார் குலத்தில் பிறந்த பெண்ணொருத்தி எப்படி கல்வி கற்கலாம் என்ற ஆதிக்க மனப்பான்மையுடன் ஊரே எதிர்த்தபோது கிஞ்சித்த அளவும் அச்சம் கொள்ளாமல் அவர்களை எதிர்த்து களமாடியது என்பது வெறும் செய்தியல்ல. அது ஒரு வரலாறுப்பதிவு. அன்றைய சமூக கட்டமைப்பை பற்றி குறிப்பாக மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது, தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, கல்வி கற்றால் தீட்டு என்று போதிக்கும் வர்ணாசிரம கோட்பாட்டையும், சனாதனத்தையும் தோலுரித்து காட்டி இருக்கிறாள். அதனாலோ என்னவோ தெரியவில்லை பாய்ச்சலூர் பதிகம் பற்றியும், நல்லூர் நங்கையைப் பற்றியும் குறிப்பு திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய ஆசிரியர் பெருமக்கள் மு‌.அருணாசலம் நீங்களாக வேறு யாரும் இதைப் பதிவு செய்யவில்லை என்பது பெரும் குறை.

சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு பாடலைக் கூட பாடிய வரை நினைவில் வைத்துள்ள தமிழ்ச்சமூகம், சாதி மேலாதிக்கத்தை எதிர்த்து ஒரு முழு பதிகத்தைப் பாடிய நல்லூர் நங்கையை எண்ணிப் பார்க்கக்கூட துணியவில்லை. மட்டுமல்ல இலக்கிய வரலாற்றை எழுதியவர்களில் கூட குறைந்தபட்சம் நெஞ்சுரம் கொண்ட நேர்மை இல்லை என்ற கருத்திற்கு வலு சேர்க்கிறது. பொன்முடியார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் உள்ளிட்ட பெண்பாற் புலவர் போலவே நல்லூர் நங்கையை தமிழ்ச் சமூகம் கொண்டாடி இருக்க வேண்டும். ஆதிக்க மனநிலையும், அதிகார வெற்றி பெறும் அனைவரும் சமம் என்று எண்ணம் கொண்டவர்களை அப்புறப்படுத்துகிறது. காலம் தான் சிறந்த தீர்வை சொல்லும். உத்திர நல்லூர் நங்கை குறித்த ஆராய்ச்சியை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அந்த வகையில் நங்கையைக் குறித்த பதிவு கேரள மாநிலத்திலும் இருப்பதாக அறிய முடிகிறது. மேலும் அவருக்கு அங்கு சிலை ஒன்று இருப்பதாகவும் தெரிய வருகிறது. இவை எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து தரவுகளைத் திரட்டி நூல் எழுதும் அளவிற்கு செய்திகள் கிடைத்து வருகின்றன.

தற்பொழுது கிராமத்து மக்களைப் பார்த்து, உத்திர நல்லூர் நங்கை பாடிய பாய்ச்சலூர் பதிகம் பற்றி பின்வருமாறு காணலாம்.

காப்பு.

அறுசீரடி யாசிரியவிருத்தம்.

மூலத்தின்மேலேநின்று மூன்றுமண்டலமூந்தாண்டி
கோலத்தின்மேலேநின்று வாலிபரூபமான
சீலத்தின் வெளியாய்வந்து சிலம்பொலிபரமானந்தக்
குகனறுமுகனைப்பாடவைங்கரன்காப்பதாமே

பாய்ச்சலூர்ப்பதிகம்.

 ஓதிய நூலும்பொய்யே யுடலுயிர்தானும்பொய்யே
சாதியுமொன்றேயாகுஞ் சகலமும்வேறதாமோ
வேதியன்படைத்ததல்லால் விதிதன்னைவெல்லலாமோ
பாதியேபரமேசூழும் பாய்ச்சலூர்க்கிராமத்தாரே      

உறக்கமோவூனமுள்ளம் உள்ளமோபறம்போசிவன்
முன்னோபின்னோ ஈன்றதுபெண்ணோவாணோ
கறப்பதுமுலையோபாலோ காண்பதுமனமோகண்ணோ
பறப்பது இறகோகாலோ பாய்ச்சலூர்க்கிராமத்தாரே                                

வெற்றிலைதாழைவாழை வித்தொன்றுமுளைப்பதொன்றோ
பற்றியயோனிபேதம் பாருளோரருந்திடாமல்
பெற்றவர்தம்மைத்தேடிப் பிரந்தரிந்திறந்துபோனார்
பற்றிகின்றலைவதேனோ பாய்ச்சலூர்க்கிராமத்தாரே.    

தீப்படைக்கடைந்தகோலுஞ் சிவனுஞ்சிவன்வேறோ
வார்ப்படத்தந்தைதாயார் மக்களுஞ்சுற்றத்தாரு மோர்ப்படக்கடைந்தவெண்ணெய் மோருடன்கூ கூடாலண்ணம் பாற்படத்திரளவேண்டும் பாய்ச் சலூர்க்கிராமத்தாரே.

கொக்குமேற்குடுமிகண்டேன் கோழிமேற்சூடுங்கண்டேன் நெக்குறிவாலுங்கண்டேன் நீரின்மேல்னெருப்புங்கண்டேன்
சற்குலமென்றுசொல்லிச் சதுர்மறைபேசவேண்டாம்
பக்குவமறிந்துபாரும் பாய்ச்சலூர்க்கிராமத்தாரே.

வித்தொருமரத்தையீனும் மரமொருவித்தையீனும்
பெற்றதாய்பிள்ளையீனும் பிள்ளையுமதலையீனும்
உற்றபாற்றயிறையீனும் உதிரஞ்சுக்கிலத்தையீனும் பற்றிநின்றலைவதேனோ பாய்ச்சலூர்க்கிராமத்தாரே.

மதங்கொண்டதேகந்தன்னை மற்றொருசுத்தங்காணார் அகங்கண்டுபுறமுங்கண்டு மவனுக்கேதாரமானேன்
சுகங்கண்டு துக்கங்கண்டு சுக்கிலவழியேசென்று
யகங்கொண்டதேனோவென்னிஞ் பாய்ச்சலூர்க்கிராமத்தார

வருடன்பார்ப்பார்கூடி யுயர்ந்ததோர்சாலை கட்டி
நீரிலேமூழ்கிவந்துநெருப்பிலேநெய்யைத்தூவிக்
காற்வயற்றவளைபோலக் கலங்கியவுங்கள்வேதம்
பாரைவிட்டகன்றதனா பாய்ச்சலூர்க்கிராமத்தாரே.

சந்தனமகிலுவேம்புந் தனித்தனிவாசம்வீசும்
அந்தனர்றீயில் வீழ்ந்தா லதன்மணம்வேறதாமோ
செந்தலைப்புலையன்வீழ்ந்தார் றீமணம்வேறதாமோ
பந்தமுந்தீயும் வேறோபாய்ச்சலூர்க்கிராமத்தாரே.

ஒருபனையிரண்டுபாளை யொன்றுனுங்கொன்றுகள்ளு அறிவினிலறிந்தவர்க்கு அதுவுங்கள்ளி துவுங்கள்ளே ஒருகுலையுயர்ந்ததேனோ ஒருகுலைதாழ்ந்ததேனோ பறையனைப்பழிப்பதனா பாய்ச்சலூர்க்கிராமத்தாரே.

முற்றிற்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *