நடிகர் விவேக் இரங்கற்பா: நீ நட்டது மரங்களை அல்ல….. மனித நேயத்தை – ஆதித் சக்திவேல்
கறுப்பிலும் வெள்ளையிலும் கோடி கோடியாய் வாங்கும் நடிகருள் கோடி மரம் இம்மண்ணில் நடுவேன் என தேடித் தேடி இடம் பிடித்து ஓடி ஓடி நட்டு நீர் வார்த்தவனே இன்று அழுது கொண்டிருக்கும் அம்மரங்களுக்கு நாங்கள் ஊற்றுவது தண்ணீர் அல்ல எங்கள் கண்ணீர்…