பொதுவாக சுற்றுச் சூழல், வனம், பருவ நிலை மாற்ற அமைச்சகம் பல அறிவிப்புகள் மூலமும் ஆணைகள் மூலமும் ஏற்கனவே உள்ள சூழல் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளது என்பதை இங்கே  சொல்லியாக வேண்டும். ஏனென்றால் தற்போதைய மத்திய  அரசு உலக அளவில் தனது மதிப்பை உயர்த்துக் கொள்வதற்காக தனது  கொள்கையான எளிதாக வர்த்தகம் செய்யலாம் (“Ease of Doing Business”) என்ற கோட்பாட்டின்படி இது போன்ற நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.   

ஆனால் இந்தக் கொள்கையானது  சுற்றுச் சூழலில் பல பாதிப்புகளையும்  பல கோடி மக்களின் வாழ்வாதாரத்திலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தயுள்ளன என்பது மிகப் பெரிய உண்மை.  உற்பத்தி தொழிற்சாலைகள் மூலமும், கனிம வளச் சுரண்டல்கள், கட்டமைப்பு தொழில்கள் ஆகிய திட்டங்கள் துவங்குவதற்கும் செயல்படுத்தவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டதன் மூலமும் அங்கு வாழுகின்ற மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் சூழலை நாசம் செய்வது நடந்து வருகிறது. 

இச் சூழலில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த  வரைவு அறிக்கையும் ஏற்கனவேயுள்ள சுற்றுச் சூழல் சட்டங்களை பலப்ப்படுத்துவதற்குப் பதிலாக  பலவீனப்படுத்தும் வகையிலேயே வந்துள்ளது. இந்த பாதிப்புகள் அனைத்தும் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீடித்த நிலைத்த வளர்ச்சிக் கோட்பாட்டிற்கு பாதிப்புத் தரும் வகையிலும் இருக்கிறது. 

E.I.A ACT 2020 IN INDIA || Dream360 tamil - YouTube

இந்தப் பின்னணியில் நாம் இந்த வரைவு அறிக்கையை அணுகுவோம் : 

1) இதன் நோக்கமாக கூறப்படுவது என்னவென்றால்…2006 க்குப்பின்னர் ஒரு புதிய சுற்றுச் சூழல் தாக்க அறிதல் அறிக்கை தேவையாக இருப்பதாலும் ; பல்வேறு மத்திய மாநில அரசின் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி அவசியம் என்பதாலும்; இதுகாறும் ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் மீறல்களைக் கணக்கில் கொண்டும்;  பல்வேறு நீதிமன்ற  தீர்ப்புகள் குறிப்பாக பசுமை நீதிமன்ற தீர்ப்புகள் சுற்றுச் சூழலை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என கூறியிருப்பதைக் கணக்கில் கொண்டும்; கட்டுமான விதிமீறல்களுக்காக   2017ல் கூற்ப்பட்டதைக் கணக்கில் கொண்டும் இநத வரைவு அறிக்கை முன் வைக்கப்படுவதாகக் குறிப்பிடுகிறது.

ஆனால் உள்ளதும் போச்சு …. என்ற பழமொழி போல் ஏற்கனவே இருந்த, 2006 சட்டத்தை நீர்த்துப் போகச்செய்தும் தற்பொழுதுள்ள  சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டங்களையும் ஒழுங்குபடுத்துதலையும் மீறுவது மட்டுமல்லாமல் இது வரை செய்யப்பட்ட அனைத்து சுற்றுச்சூழல் மீறல்கள் அனைத்தையும் இந்த வரைவு அறிக்கை வரன்முறை செய்யும் வகையில் வாய்ப்பு கொடுத்துள்ளது. 

2) Clause 3: விளக்கக் குறிப்புகளில் உள்ள குளறுபடிகள்.. Clause 2(8) முதன்மைத் துரப்பணம் என்ற விளக்கக் குறிப்பில் கடல் தளத்தில் முதல் துரப்பணம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் 2006 சட்டத்தில் இடம்பெற்ற நதிகள் துரப்பணம் இதில் இடம் பெறவில்லை.  நதிகளின் துரப்பணமும் பிற நீர் நிலைகளின் துரப்பணமும்  சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகளை உருவாக்கும என்பதால் அதையும் இந்த வரைவு அறிக்கையில் இடம் பெற வேண்டும். ii) Clause 2(16)  கார்ப்பரேட் சமூகக் கடப்பாடு என்கிற முக்கியமான பகுதியை சூழல் நிர்வாகத் திட்டத்தின் கீழ் இணைத்திருப்பது ஏற்றுக் கொள்க் கூடியது அல்ல. சூழல் நிர்வாகம் என்பது திட்டப் பகுதியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். கார்ப்பரேட் சமூகக் கடப்பாடு என்பது அக் கம்பெனியின் தனித்த செயல்பாடாக அமுல்படுத்த வேண்டும் எனக்குறிப்பிடுகிறறோம்.

3) Clause 4(3)  கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்னர் செய்யப்படும் வேலிகட்டுதல், மரங்களை வெட்டாமல் நிலச் சீரமைப்பு ஆகியனவற்றை சூழல் அனுமதி பெறுவதற்கு முன்னரே செய்யலாம் என்ற இந்தப் பிரிவு ஏற்கக் கூடியது அல்ல. நீல சீரமைப்பு செய்வதால் நிலப் பயன்பாட்டை முற்றிலும் மாற்றும் அபாயம் உள்ளதால் அதை அனுமதிக்கக் கூடாது. அதே போல் ஆழ்நில சோதனைக் கிணறுகள், தாதுக்கள் கண்டறிதல்  ஆகியனவையும் சுழல் அனுமதி  / சூழல் பாதுகாப்பு இல்லாமல் அமுல்படுத்தக் கூடாது.

4) Clause 5. பி 2 வகை திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளவைகளுக்கு சுற்றுச் சூழல் விளைவு அறிதல் மற்றும்  மக்களிடம் கருத்துக் கேட்பு தேவையில்லையெனவும் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இந்தத் திட்டங்கள் மூலம் சுற்றுச் சூழலும் மக்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கையும் பாதிக்ப்படும் அபாயங்கள் இருப்பதால் இத்திட்டங்களுக்கு சூழல் விளைவு தாக்க அறிக்கையும் பொது மக்கள் கருத்துக் கேட்பும் அவசியம் எனக் கருதுகிறோம் எனவே இத்திட்டங்களில் பலவற்றை பி1 வகைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

Environmental Advocacy In Danger: 3 Websites Fiercely Opposing EIA ...

      முதல் எடுத்துக்காட்டாக எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டறிதல்:  இந்தத் திட்டம் சூழலுக்கும் மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்து  தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மக்கள் போராட்டங்கள் நடந்து வருவது எல்லோரும் அறிந்தததே. சமீபத்தில் அசாம் மாநிலத்தில் பாக்ஜன் எண்ணைய் வயல்களில்  ஆயில் கம்பெனியின் எண்ணெய்க்  கிணறு 5ல் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதால் அருகில் உள்ள எண்ணைய்க் கிணறுகளுக்கான ஆய்வுகளையும் தடை செய்து பின்னர் மாநில அரசின் சுற்றுச்சூழல் மாசு வாரியம் விலக்கிக் கொண்டுள்ளது. எனவே இந்தத் தி்ட்டமானது பி2 நிலையில் இருப்பதை பி1 வகைக்கு மாற்ற வேண்டும் என எடுத்துரைக்கிறோம்.

      இரண்டாவது எடுத்துக்காட்டாக  10fல் குறிப்பிடப்பட்டுள்ள பவுண்ட்ரீஸ்,ரோலிங் மில்ஸ் ஆகியனவும் பிரச்சினை மிக்கதாக இருப்பதால் அதை பி1க்கு மாற்ற வேண்டும்.

       மூன்றாவாக எண் 16ல் குறிப்பிடப்பட்டுள்ள தினசரி 300 டன்னுக்கும் குறைவான உற்பத்தி செய்யும் குளோர் அல்கலி,  ஹேலஜன் கமபெனிகள் பி2 வகையில் இருப்பதாலும் அத் திட்டங்கள் தொழிற் பூங்காகக்களில் இருப்பதால் இப் பூங்காக்கள் மக்கள் வாழும் பகுதியில் இருப்பதால் இத் திட்டங்களை பி1 வகைக்கு மாற்றி சூழல் தாக்கம் அறிதல் செய்ய வேண்டுதல் விடுக்கிறோம்.

       நான்காவதாக 32ல் வர்த்தக நோக்கம் கொண்ட நீர் மீதான  விமானதளங்கள் அமைக்கும் திட்டங்கள் கடல் மற்றும் ஏரி போன்ற நீர் நிலைகளில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் பி2 வகையில் இருந்து பி1க்கு மாற்ற வேண்டும்.

     ஐந்தாவதாக   34ல் கூற்ப்படுள்ள பொருளாதார மண்டலங்கள் தொழிற்சாலை எஸ்டேட்டுகளில் 500 ஹெக்டேருக்குமேல் இருந்து அதில் பி2 திட்டங்கள் இருந்து சூழல் தாக்கம் அறிதல்  தேவையில்லாமல் செய்வதைத் தடுக்கும் வகையில் இருப்பதால்  500ஹெ.குறைவாக உள்ள பொருளாதார மண்டலங்களில்பி2 திட்டங்களை அனுமதிக்க வேண்டும் 

      ஆறாவதாக  37ல்  உள்ளூர் ஆறு உள்ளிட்ட நிர் நிலைகளில் நீர் வழித் திட்டங்களுக்காக துரப்பணம் செய்கின்ற திட்டங்கள்  சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் பி2 வகையாக இருப்பதால் கடல் துரப்பணத் திட்டம் போல்  பி1 திட்டமாக மாற்ற வேண்டும். 

      ஏழாவதாக  42ல்  இது வரை 20000 மதல்15000 ச.மீ அளவுள்ள கட்டிட வகைத் திட்டங்கள் சூழல் அனுமதியை உள்ளூர் நிர்வாகததிடம் பெறவேண்டும் என்ற நிலையில் தற்போதைய வரைவு அறிக்கை 20000 முதல் 50000 வரை கட்டிட வகைத் திட்டங்கள் பி2 வகையில் கொணர்ந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.50000 முதல் 150000 சமீ அளவானவற்றிற்கு பொது மக்கள் கருத்துக் கேட்புத் தேவையில்லை என அறிவிக்கிறது. எனவே 20000 ச.மீ க்கு மேல் கட்டிட வகைத் திட்டங்கள் அனைத்திற்கும் சூழல் தாக்க அறிதல் அறிக்கையும் மக்கள் கருத்துக் கேட்பும் செய்திடல் வேண்டும்    

5) Clause 5(7) பாதுகாப்பு , முக்கியத்துவமிக்க (ஸ்ட்டேட்ரஜிக் ) திட்டங்களில் சூழல் முன் அனுமதியை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகத்திடம் பெற வேண்டும் என்பது சரியானதுதான் என்றாலும் இத் திட்ங்கள் குறித்த தகவல்களை பொது வெளியில் வெளியிட வேண்டியதில்லை என்கிறது. இதில் இரண்டு அம்சங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 

        ஒன்று கப்பல் தளங்கள், சோதனைக் களங்கள்,  கடற்கரை ராணுவத் தளங்கள் ஆகியன சூழல், மற்றும்  சமூக விளைவுகளை உருவாக்கக் கூடியனவாகும். வாழ்வுரிமைகளையும் வாழ்வாதாரங்களயும் இழந்து பாதிக்கப்படும் மக்களுக்கு இத்திட்டங்களினால் ஏற்படும் விளைவுகளை அறிந்து தங்கள் கருத்துக்ககை் கூறவோ எதிர்ப்புத் தெரிவிக்கவோ வேண்டிய சூழலில் வேறெந்த வகையிலும் தகவல்கள் பெற முடியாத சூழலில் இந்த விதிமுறை ஏற்கக் கூடியதல்ல எனத் தெரிவிக்கிறோம். எனவே இதனைப் பொது வெளியில் வெளியிட முடியாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் இதனால் ஏற்படும் சூழல் சமூகப் பாதிப்புகளைத் தெரிவிக்க வேண்டியதை வலியுறுத்துகிறோம்.

         இரண்டாவதாக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களாக அரசாங்கம் தன்னிச்சையாக பல திட்டங்களை,  எடுத்துக் காடடாக அணு சக்தி மையங்கள், எண்ணைய்க் கிணறுகள் ஆகியன, அறிவிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வராமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது.ராணுவம் சாராத அறிவிப்புகள் பொது வெளியில் கொண்டு வரப்படவேண்டும். மேலும் இந்தப் பகுதியின் கீழ் பிற திட்டங்களையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கக் கூடாது. இதன் அடிப்படையில் 14(1)சி ன் கீழ் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஒழுங்குமுறை அமைப்பு பொது மக்கள் கருத்துக் கேட்பு அல்லது ஆலோசனை கேட்பதற்கேற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

6) Clause 7  மாநில யூனியன் பிரதேசங்களின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டங்களுக்கான அனுமதியை வழங்கும் நிலையில் சூழல் முன் அனுமதியோ சூழல் அனுமதி பெறாத போதும் திட்டங்கள் அமுலாகி வருகிறது. இதன் காரணமாக எல் ஜி பாலிமர்ஸ் போன்ற கம்பெனிகள் எந்தவித அனுமதயும் இன்றி செயல்பட்டு மிகப் பெரிய விபத்துக்களை உருவாக்கி உள்ளன. எனவே மாநிலம்/ யூனியன் பிரதேச அரசுகள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இவ் வகையான  அனுமதி கொடுக்கும் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

Fridays For Future India's Campaign Against EIA Draft 2020 Gets ...

7) Clause 14(2) பகுதியில் பொதுமக்கள் ஆலோசனை கேட்பு என்ற அடிப்படையில் எழுத்துப் பூர்வமாகவோ,  கருத்துக் கேட்பு நிகழ்ச்சி மூலமாகவோ நடத்தப்படுவதை பல திட்டங்களுக்கு தேவையற்றதாக அறிவித்து்உள்ளது.இது சூழல் பாதுகாப்புக்கு உரிய வழிமுறைகளான  சுற்றுச் சூழல் சட்டங்கள்,  சுற்றுச் சூழல் தாக்கம் அறிதல் முறைகளுக்கு எதிரானதாகவும் ஜனநாயக முறைகளுக்கு முரணானதாகவும் இருக்கிறது.  மேற்குறிப்பிட்டபடி பி2 வகைத் திட்டங்களில்  பல  சூழல் சமூகப் பாதிப்புகளை உருவாக்கும் வகைகளில் இருப்பதால் இது சம்பந்தப்பட்ட மக்களின் கவலையையும் எதிர்ப்புகளையும் தெரிவிக்கும்  குரல்களைக் கேட்க வேண்டியதிருப்பதால் கீழ்க்கண்ட திட்டங்களை பி1வகையில் சேர்க்க வேண்டுகிறோம் : 

        அ) பி2 வகையில் அறிவிக்கப்பட்ட தொழிற் பூங்காகக்களில் வரும் திட்டங்களான 10(f), 16, 17, 19, 20, 21, 23, 24, 25, 27, 36, 40 மற்றும் 42 and No.43 கீழ் வரும் கட்டுமானத் திட்டங்கள் 31ல் வரும் எண்ணெய்க் கிணறுகள் 38ல் வரும் எல்லையில் வரும் நெடுஞ்சாலைகள். எல்லைப்புறங்களில் வரும் ரோடுகள் நேர்கோட்டுத் திட்டங்கள் அல்லாது சூழல் விளைவுகளை உருவாக்கும் மலைப் பகுதிகள் பனிப்பிரதேசங்களில் செல்லும என்பதும் குறிப்பிடத்தக்கது. 

         மேலும் நேர்கோட்டுத் திட்டங்கள் தேசீயப் பூங்காக்கள், சரணாலயங்கள் , பவளப் பாறைகள் போன்ற சூழல் பாதிப்புப் பகுதிகளில் செல்லும்  போது  பிற மாவட்டங்களிலும் தாக்கம் இருக்கும் என்பதால் அந்தந்தப்பகுதி மாவட்டங்களில் மட்டும் கருத்துக் கேட்பதோடு இருக்கும் முறையைக் கைவிட வேண்டும்.

          இந்த முறையில் சுற்றுச் சூழல் சட்டத்தில் கூறப்பட்ட பொது மக்கள் ஆலோசனையும் கருத்துக் கேட்பபையும்   விலக்கம் அளிப்பதை இந்த 2020 சுற்றுச் சூழல் தாக்க அறிதல் வரைவு கைவிட வேண்டும் 

           இணைப்பு 1ல் Clause 3.1 கீழ் பொதுமக்கள் ஆலோசனைக்கு கடந்த 2006 வரைவில் 30 நாட்கள் காலம் அளிக்கப்பட்டதை தற்போதைய வரைவறிக்கை 20 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பாதிப்புக்குள்ளாகும் மக்களில் மீனவர்கள் கடற்கறை வாழ் மக்கள், வனவாழ்மக்கள் மற்றும்  பழங்குடிகள் ஆகியோரும் இருப்பதால் உரிய தரவுகளை அறிந்து கொள்ள வேண்டியதிருப்பதால் 60 நாட்கள் கால அவகாசம் தரவேண்டும்.

            1996 உள்ளாட்சிச் சட்ட விதிகளின் படி ஷெடியூல் பகுதியில் பொது மக்கள் கருத்துக் கேட்பும்  ஆலோசனையும் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். 

 8) Clause 19 (1) I d யின் கீழ் சூழல் முன் அனுமதி அல்லது சூழல் அனுமதி என்பது 2006 சட்டப்படி 30 வருடத்தில் இருந்து தற்போதைய 2020 வரைவு அறிக்கையில் 50 வருடத்திற்கு அதிகப்படுத்தி சில திட்டங்களின் முடிவு காலம் வரையாக இருக்கிறது. இதைக்  கைவிட வேண்டும். முன் அனுமதி பெறற திட்டங்கள் 30 வருடத்திற்குப் பின்ர் மறுபடியும் மறு அனுமதி பெற வேண்டும். 

9) Clause 22: விதி மீறல்கள் செய்தவர்களை ஒழுங்குபடுத்துவதும் தொடர்ந்து அவர்களை செயல்பட அனுமதிப்பதற்கும் இந்த வரைவு அறிக்கை வழிவகுக்கிறது. முன் சூழல்  அனுமதி மற்றும் முன் உரிமை பெறாமல் கட்டிடம் கட்டுதல் இயந்திரங்ளை நிறுவுதல் செயல்படுதல் ,விரிவாக்குதல் , நவீனமயமாக்குதல் ஆகியவற்றை இந்த வரைவு அறிக்கை முன் வைக்கிறது. (i) Clause 22(1), (ii) Subsequent Paras of Clause 22 ஆகியன இதற்கு வழிவகுக்கிறது. இயல்பாக அனுமதி பெற்றிருக்க முடியாத காரணத்தால்  அனுமதி பெறாமலேயே பல விதிமுறைை மீறல்கள் செய்த திட்டங்கள் அனைத்தும் தண்டத் தொகை போன்ற எளியமுறையிலான வழியில் ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த முன் வரைவு வழி செய்கிறது. சமீபத்தில் விசாகபட்டினத்தில் இயங்கி வந்த எல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட பாலிஸ்டீரீன்ஆவியான விபத்து உடனடியாக பெரும் உயிரிழப்பையும் நீண்ட கால சுகாதாரப் பிரச்சினைகளையும் சூழல் மாசுபாட்டையும் உருவாக்கியது எல்லோரும் அறிந்தததே. இதுபோன்ற அனுமதி பெறாமல்  ஆபத்தான முறையில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் இந்த முன் வரைவு சட்டத்தின் அடிப்படையில் திட்ட செயல்பாட்டுக்குப் பின் ஒப்புதல் பெறும் ஆபத்துக்கள் உள்ளன. எனவே இது போன்ற விதி மீறல் திட்டங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்குள் அனுமதி பெற கடைசி வாய்ப்பு கொடுக்கலாம் 

10) Clause 26: சில திட்டங்களுக்கு குறிப்பாக கைத்தொழில் செயல்பாடுகள் போன்ற பானை செய்வோருக்கான  சூழல் முன் அனுமதி, முழு அனுமதி தேவையில்லை என்ற வகையின் கீழ்  சூழல் மற்றும் சமூகப் பாதிப்புத் திட்டங்கள் பல தற்போது இதில் இணைக்கப்பட்டுள்ளன. இவைகளை நீக்கி பி1 அல்லது பி2 திட்டங்களாக மாற்றி அமைத்து கீழ்க்கண்ட திட்டங்களை உரிய அனுமதி பெறும் வகை செய்ய வேண்டும்: 

  • Clause 26(14):ல் குறிப்பிடப்பட்டுள்ள நிலம் நீர் பாதிப்புகளை உருவாக்கும் சூரிய ஔி மின்சாதனங்கள், சூரிய பூங்காக்கள்
  • Clause 26(15): பாஸ்ட் பிரீடர் ,  டெஸ்ட் போன்றவகைகளை உள்ளடக்கிய  ஆராய்ச்சி & மேம்பாடு திட்டங்கள்
  • Clause 26(19): பின்னர் சுரங்கம் தோண்டி எடுப்பதற்காக  நிலக்கரி, நிலக்கரி அல்லாத தாதுக்கள் முன் கண்டறிதல் திட்டங்கள்
  • Clause 26(21): முன் சூழல் அனுமதி, முழு சூழல் அனுமதி பெறாமலேயே 2000 ஹெக்டேர் அளவுள்ள சிறு நீர்ப்பாசானத் திட்டங்கள் 
  • Clause 26(24)(a, b): கீழ் வரும் காற்று மாசு, நீர் கழிவு மாசுகள், திடக் கழிவு உரலாக மாசுகள் உருவாக்கும் இரண்டாந்தர உலோக உருக்கு ஆலைகள்
  • Clause 26(24)(c): கீழ்வரும் நச்சு மற்றும் பிற மாசுக்களை வெளியிடும் தீங்கு விளைவிக்கும் மறுசுழற்சி  கம்பெனிகள் 
  • Clause 26 (25)(a): கீழ் வரும் தொடர் கழிவுகளை இரண்டாந்தர ரோலிங் மில்ஸ் 
  • Clause 26(36): கீழ் வரும் பாதுகாப்பு சார் உற்பத்திகளில் வெடிமருந்த தயாரிக்கும் கம்பெனிகள்
  • Clause 26(39): கீழ் பொத்தம் பொதுவாகக் கூறப்படும்  மணல் துரப்பணம் குறித்த பகுதி ஆறு ஏரி மற்றும் நன்னீர் நிலைகளில் முதன் முதலாக மண் துரப்பணம் ஆகியவற்றிற்கு வழி வகுக்கவில்லை.

தமிழில்: பொ. இராஜமாணிக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *