Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC
ஊர் அடங்காது – எஸ் வி வேணுகோபாலன்
ஊரடங்கு
உண்மையும் வாயடங்கு
பொய் பித்தலாட்டத்தை
மெய்ப்பிக்கத் தேவையில்லை
ஊடகமும் போய் முடங்கு
நீதியைக் கைகழுவு
நெறிகளிலிருந்து விலகி இரு
நடப்பு அராஜகங்கள்
சமூகம் அறியாதவாறு
இடைவெளியை வலுப்படுத்து
வன்முறையை மறு வரையறு –
அதிகாரத்தின் நிழலில்
அனைத்து வெறியாட்டமும் தருமம் நியாயம்
முரண்படத் துணிவோர், எதிர்ப்போர்
மென்மையாய் இருப்பினும் வன்முறையாளர்
கடவுளின் பெயரால்
கடவுள்களைத் தகர்ப்போர்
நம்பிக்கையின் பெயரால்
நம்பிக்கைகளை இடிப்போர்
மதத்தின் பெயரால்
மனங்களை உடைப்போர்
அம்பேத்கரை மட்டும்
அப்படியே விடுவார்களா …
டிசம்பர் 6 -ஐ களவாடியவர்கள்
ஏப்ரல் 14 ஐயும் பறிக்கப் பார்க்கின்றனர்
ஊரடங்கி இருந்தாலும்
உணர்வுகளும் உணர்ச்சிகளும்
போய் அடங்க மாட்டாது
கனன்றிருக்கும் உள் கிடந்து –
போகாது இந்த நாள் கடந்து.
To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com
To Get to know more about tamil Books, Visit us Below, https://bookday.in
நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்… பெற 044 2433 2924