புத்தக முன்னோட்டம்: கவிதைத் தொகுப்பு – முகமது பாட்சாவின் “சைகைக் கூத்தன்”தமிழ் இலக்கிய உலகில் இதுநாள் வரை திறக்கப்படாத ஒரு புதிய கதவைத் தனது ’சைகைக் கூத்தன்’ மூலம் திறக்க முனைந்திருக்கிறார் முகமது பாட்சா. அவரது அடர்ந்த படிமங்களும் கனத்த கற்பனைகளும் தமிழ்க் கவிதைகளின் முகவரியைச் சற்றே மாற்றியமைக்க முயல்கின்றன. ஞானத்தால் நிரம்பிய இவரது எல்லா எழுத்திலும் இழைகிறது தியானத்தின் நாதம்.

படிம அடுக்குகளில் மிதந்து சென்று விதவிதமாக ஜாலம் காட்டுகிறார். அறிவார்ந்த அறிவியலையும் தூய தொன்மத்தையும் தனது இறக்கைகளாக்கிக் கொள்கிறார். அவரது எல்லாக் கவிதையிலும் ஆழங்களின் தரை தெரிகிறது. சில நூற்றாண்டுகளுக்கு ஒரு முறைதான் பாட்சாக்கள் பிறக்கிறார்கள்.

                               –படைப்புக் குழுமம்

நூல் வெளிவருவதற்காக முழு ஒத்துழைப்புடன் தனது நூல் போல் சிரத்தையுடன் முன்னெடுத்த படைப்பு நிறுவனர் நண்பர் முகமது அலி ஜின்னா அவர்களுக்கும் வடிவமைப்பில் உதவிய நண்பர் ஓவியர் ரவிபேலட் மற்றும் புலவர் மீரான் அவர்களுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகள்!
இந்த நூலுக்காக சிறப்பான அணிந்துரையொன்றை வழங்கியிருக்கும் இனிய உதயம் ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ் நாடன் அய்யா அவர்களுக்கு என் அன்பு நிறைந்த நன்றிகள்!
விரைவில் வெளியாகவிருக்கும் இந்நூல் சென்னையில் உள்ள படைப்பு பதிப்பகம் அலுவலகத்தில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்…

அலைபேசி எண்: 91 97908 21981
நூல் விற்பனை பொறுப்பாளர்கள்: சலீம் கான்(சகா) & இப்ராஹிம்

                      — முகமது பாட்சா