Children Stories by Era Kalaiyarasi. குழந்தை கதைகள் - இரா.கலையரசி




என் உலகம்.

அந்தப் பூங்காவிற்கு இன்ப சுற்றுலா சென்றனர் மாணவர்கள்.

திலீபனும், ஆசையுடன் வண்டியில் ஏறி இருந்தான். ஓஹோ! ஓஹோ! என சத்தம் எதிரொலித்தது.

பஞ்சவர்ணக் கிளிகள், வரவேற்க “கீச் கீச்” சத்தத்துடன் இங்குமங்கும் நகர்கின்றன. மயிலின் வண்ணத் தோகை, பச்சை மரகதமாய் மின்னுகிறது.

மற்றக் குழந்தைகள் எல்லாம், வெறுமனே பார்த்தபடி சென்றனர்.

திலீபன் மட்டும் ஒவ்வொரு பறவையின் வண்ணம், அலகு ஆகியவற்றை மனதில் படம் பிடித்தான்.

துள்ளி குதித்து வந்த மான் ஒன்று திலீபனிடம் ஏதோ பேசி சென்றது.

வரிக்குதிரை வளைந்து பார்க்க, கண்களில் மத்தாப்பு பூத்தது திலீபனுக்கு.

கைகளை தட்டி, உற்சாகத்துடன், ரசித்தான்.

மற்றவர்களுக்கு காட்சி பொருளாக இருந்த விலங்குகள், திலீபன் மனதில் ஒரு வண்ண திரைப்படமாக விரிந்தது.

கற்பனையின் சிறகுகள், விரிந்து பறந்தன. அவனுக்கான உலகில் எத்துனை மகிழ்ச்சியாக இருக்கிறான் திலீபன்?

குறுகுறு ஆர்வத்துடன் இருக்கும் திலீபன் ஒரு “ஆட்டிசக் குழந்தை”.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *