
13.12.2023 – நினைவு நாளிலே சில நினைவுகளின் அசைபோடல்
தமிழ்நாட்டின் முன்னணித் தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையான ஒரு சிலருள் ஒருவர் தீபம் நா பார்த்தசாரதி அவர்கள். நா.பா. என்றதுமே என் தலை முறை வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக் நெஞ்சக்கனல், நினைவின் நிழல்கள், சாயங்கால மேகங்கள், கபாடபுரம், மனக்கண், வஞ்
சிறந்த ஆய்வாளராகவும், கட்டுரையாளராகவு விளங்கிய ஒரு புலமைத்துவ அறிஞர் நா.பா. அவர்கள். தொல்காப்பியத்தை ஆய்வு செய்து மொழியின் வழியே, சொல்லின் செல்வம் போன்ற நூல்களையும், தொன்மை மிகு தமிழர் நம் கட்டிடக்கலை குறித்து ஒரு நூலையும் படைத்தளித்தவர். இவரின் படைப்புகளைக் காட்டிலும், தமிழ் மொழிக்கு இவரின் அருங்கொடை எதுவென்றால், சுமார் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் ‘தீபம்’ என்ற இலக்கிய மாத இதழைத் தொடர்ந்து இடையறாமல் நடத்தி வந்ததுதான். அது ஒரு சிற்றிதழ் தான் எனினும், சில ஆய்வாளர்கள் அதை இடைநிலை இதழ் என்றுதான் மதிப்பி டுகிறார்கள். என்ன பெயர் வைத்தாலும் ரோஜாவுக்கு மனம் இல்லை என்று யாரும் சொல்லி விட முடியாதல்லவா? தீபத்தின் பணியும் அப்படித்தான் இன்றும், என்றும் அணையா நெடுந்தீபமாய் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.
இன்று புகழ் பெற்று விளங்கும் பல படைப்பாளிகள் தீபத்தின் மூலமே பிரபல மாகிப் போற்றப்பட்டார்கள் என்பதை யாரும் மறுக்கவியலாது. நாஞ்சில் நாடன், வண்ணதாசன், வண்ண நிலவன், சுப்ரபாரதி மணியன், தி.சா.ராஜு, சுப்ரமண்ய ராஜு, பாவண்ணன், வே.சபாநாயகம் – என்று ஒரு பெரிய பட்டியல் போடுமளவிற்குப் பலரும் இந்த வகையில் அடங்குவார்கள்.
மறைந்த புகழ் பெற்ற படைப்பாளியான வல்லிக்கண்ணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூலான ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற புத்தகம், தீபத்தில் தொடராக வந்ததுதான்! அவரின் வேறு சில வரலாற்றுக் கட்டுரைகளையும் தீபமே தொடர்களாக வெளியிட்டது. அவை: ’தமிழில் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்,’ ‘சரஸ்வதி காலம்’, ’தமிழில் சிறு பத்திரிகைகள்’- போன்ற பலவற்றைக் கூறலாம். சி.சு.செல்லப்பா, பி.எஸ். ராமையா போன்ற முன்னோடிகளும் தீபத்தில் தொடர்களை எழதியவர்களே. நாஞ்சில் நாடன் அவர்களின் புகழ் பெற்ற நாவலான ‘மாமிசப் படைப்பு’ தீபத்தில் தொடராக வெளியானதுதான்.
இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளில் இருந்து தீபத்தின் மேல் அன்பும், அக்கறையும் உள்ள வாசகர்கள் ஒவ்வொரு மாதமும் அந்தந்த நாடுகளில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளையும், புத்தக வெளியீடுகளையும் பற்றிய செய்திக்கடிதங்களைத் தொடர்ந்து எழுதிவந்தார்கள். ’இலக்கிய மேடை’ என்ற கேள்வி-பதில் பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு நா.பா. அவர்கள் சூடும் சுவையுமிக்க மறுமொழிகளை வழங்கி வந்தார். வாசகர்கள் ஒவ்வொரு இதழ் வெளியானவுடன் படித்து விட்டுத் தங்களின் விமரிசனங்களை, மதிப்பீடுகளை அனுப்பினார்கள். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதப் பகுதிகள் ‘சங்கம்’ என்ற பகுதியில் மாதந்தோறும் வெளியிடப்பட்டன.
‘தீபம் இலக்கியக் குடும்பம்’ என்ற பகுதியில், தீபத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான வகையில் கை கொடுத்து வந்த பல நண்பர்களைப் பற்றி நா.பா.அவர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமாக அறிமுகம் செய்து வந்தார். கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் அண்ணாச்சி அவர்கள், அவிநாசி முருகேசன் என்ற எழத்தாளர், மதுரை டாக்டர் கமலம் சங்கர், கர்ணன், அசோகா பாக்கு நிறுவன உரிமையாளர் போன்ற பலரும் இப்பகுதியில் இடம் பெற்றிருந்தனர்.
தீபம் அட்டைப்படங்களில் இடம் பெற்ற பல ஓவியங்கள் நீண்டகாலம் வரை மரபார்ந்த ஓவியங்களாகவே இருந்தன. அவற்றைத் தொடர்ந்து வரைந்தளித்தவர் அமுதோன் என்ற ஓவியக்கவிஞர் ஆவார். பிற்பாடு கோவி.பரஞ்சோதியின் நவீன ஓவியங்கள் அட்டையை அலங்கரித்தன. மு.மேத்தாவின் புகழ் பெற்ற பல கவிதைகள் தீபத்தில் வெளியானவையே. அஞ்சறைப் பெட்டி, இலக்கியப் படைப்பாளிகள் சந்தித்துத் தமக்குள்ள உரையாடும் ‘இலக்கியச் சந்திப்பு’ பகுதி- போன்றவையும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவை.
நா.பா.வின் பொய்ம்முகங்கள், ஆத்மாவின் ராகங்கள் போன்ற பல நாவல்கள் தொடர்களாகத் தீபத்திலும் வெளியிடப்பட்டிருக்கின்றன. எனது குறிப்பேடு என்ற பகுதியில் ஒவ்வோர் இதழிலும் நா.பா.பல்வேறு இலக்கிய, சமூக, அரசியல் விஷயங்களைப் பற்றிய தன் சிந்தனைகளை எழுதிக்கொண்டிருந்தார்.
அவரது நாவல்களில் நா.பாவின் ஆழ்ந்த தமிழ் மரபிலக்கியப் புலமை வெளிப்படும் வகையில், பல்வேறு இலக்கிய மேற்கோள்களைக் கதைக்குப் பொருத்த மான விதத்தில் கொடுப்பது வழக்கம். சில சமயங்களில் நா.பா.வின் கவிதைகளும், சிந்தனைகளும் இவ்வாறு இடம் பெற்று வாசக மனங்களைக் கவர்ந்து ஈர்த்ததும் உண்டு. மணிவண்ணன் என்ற நா.பா.வின் புனைபெயர், மிகவும் பிரபலமானது. அதைத் தவிர, செங்குளம் வீரசிங்கக் கவிராயர், தீரன், பொன்முடி, வளவன், கூடலழகன், இளம்பூரணன் போன்று வேறு பல புனைபெயர்களிலும் நா.பா.தன் கவிதைகளையும், அரசியல் விமர்சனக் கட்டுரைகளையும் எழுதி வந்திருந்தார். பொன்முடி என்ற புனைபெயரில் அவர் எழதிய ‘ஒரு வழிகாட்டிக்குத் தன் வழி தெரியவில்லை…’ என்ற குறுநாவல் மிகவும் புகழ் பெற்ற படைப்பாகும்.
குடிமக்கள் காப்பியம் என்று நம் சிலப்பதிகாரக் காப்பியம் போற்றப்படுவது அனைவரும் அறிந்ததே. அதே போல, குடிமக்கள் வரலாற்று நாவல் என்று இவரின் மணிபல்லவம் நாவலைக் குறிப்பிடுவதுண்டு. காரணம், அன்றை
“தமிழ்நாட்டில் சரித்திர நாவல்கள் என்றால், அரசர்- அரசி, படைத்தலைவர், அமைச்சர் என்று கதாபாத்திரங்களை வகுத்துக் கொண்டு எழதுவதே இதுவரை வழக்கம். இதனால், ஆண்ட வாழ்வின் ஒரு பகுதி ஒளி நிறுவிக் காட்டப்பட்டதே தவிர, ஆளப்பட்ட வாழ்வு என்ற பெரும் பகுதி விவரிக்கப்பெறவில்லை. பேரரசர்கள் பலர் போர்கள் செய்து வெற்றிவாகை சூடி வீர வாழ்வு வாழ்ந்தும், அரசவையில் அரியணையில் அமர்ந்தும் பீடுறக் காலங்கழித்த நாள்களில், அவர்கள் அங்ஙனம் காலங்கழிக்கக் காரணமான மக்களும் பல்லாயிரவர் வாழ்ந்திருக்கத் தானே வேண்டும்? அந்த மக்களிலும் வீரர்கள் இருந்திருப்பார்கள். பல்வேறு சமயச் சார்புள்ள விதவிதமான மக்கள் விதவிதமாக வாழ்ந்திருப்பார்கள். ஈடு சொல்ல முடியாத அழகர்கள் இருந்திருப்பார்கள். அரசகுலத்து நங்கையரை அழகிற் புறங்காணும் பேரழகிகள் இருந்திருப்பார்கள். அவர்களிடையே நளின மான உறவுகள், காதல், களிப்பு எல்லாம் இருந்திருக்கும். வாழ்க்கைப் போராட்டங்கள் இருந்திருக்கும். ஆனால், பெரும்பா
“பழைய வாழ்வின் இந்த அழகிய பகுதி மறைந்தே இருக்கிறது. மணிபல்லவம் நாவலின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, இந்த அழகிய வாழ்க்கையைப் புனைந்து கூற முயல்வது. இந்தக்கதையில் எழில் நிறைந்த பெண்கள் வருகிறார்கள். ஆனால் அவர்கள் அரசகுல நங்கையரில்லை. காதலும், வீரமும்,
நா.பா.வின் படைப்பாற்றலும், பழந்தமிழ் இலக்கியப் புலமையும், கற்பனை வளமும், காவிய நயங்கள் மிக்க உணர்ச்சி மயமான அழகிய தமிழ் நடையும் பரிபூரணமாகத் துலங்கும் ஒரு நாவல் உண்டென்றால், அது இந்த மணிபல்லவம் தான் என்று அறுதியிட்டுக் கூறி விடலாம். படிப்பவர்களால் இதைப் பளிச்சென்று உணர்ந்து அனுபவிக்க முடியும்!
வரலாற்று நாவல்களில் மட்டுமன்றி, சமூக நாவல்களிலும் இந்த அனைத்துப் பண்புகளையும் நம்மால் குறைவின்றிக் காண முடியும். சமகால வரலாற்று நாவல்களென அவற்றைக் கருதலாம். எடுத்துக்காட்டாக, ஆத்
இப்படியான நெஞ்சைத்தொடும் முன்னுரைகள், நா.பா.நாவல்களின் தனிச் சிறப்பு மிக்க பகுதிகளாக நிரம்பியிருக்கின்றன. ’மலர்களைத் தேடி…’ என்ற ஒரு கவிதையை மணிவண்ணன் என்ற புனைபெயரில் நா.பா.தீபத்தில் எழுதியிருந்தார். ”பூமியில் வல்லவர் நடுவினிலே நான் பொய்யை எதிர்த்துக் கொதிக்கின்றேன், மாமிசம் விற்பவர் நடுவினிலே நான் மலர்களைத் தேடித் தவிக்கின்றேன்.” என்று தொடங்கும் அந்தக்கவிதை, நா.பா.வின் மனவெளியில் அலைக்கழித்துக் கொண்டிருந்த எண்ணங்களின் வெளிப்பாடு என்றே சொல்ல வேண்டும். மலர்களைக் கோத்துக் கோத்து ஓர் அழகிய மலர் மாலையாகத் தொடுப்பதைப்போல, மிக அழகிய எண்ணங்களைத் தொடுத்துக் கருத்தாழம் மிக்க சொல் மாலையாகத் தொடுப்பது நா.பா.வின் சிறப்பு. இதைப்பற்றி ஒரு வாசகர் அவரிடம் கேட்ட போது, ”அழகிய மனத்திலிருந்து பிறக்கும் வாக்கியங்களும் அழகாகத்தான் இருக்கும்! “ என்று தன்னம்பிக்கையுடன் மறுமொழி சொன்னார். பதில் என்று குறிப்பிடாமல், மறுமொழி என்றே குறிப்பிடுவார். அதே போலத் தனது தொடர் நாவல்கள் பத்திரிகைகளில் முடியும் போது ‘முற்றும்’ என்றோ அல்லது ‘முடிந்தது’ என்றோ குறிப்பிடாமல் ‘நிறைந்தது’ என்றே குறிப்பிடுவார்,
புலவர் பட்டமும், பாண்டித்துரைத்தேவர் வழங்கிய தங்கப் பதக்கத்துடன் முதன்மையிடம் பெற்றுப் பண்டிதர் பட்டமும் தமிழ் மொழியில் பெற்றவர் நா.பா. அவர்கள். அந்தப் புலமைத்திறம், நா.பா.வின் வசீகரமான, தனித்தன்மையுடைய உரைநடைக்கு அடித்தளமாக அமைந்திருந்தது. மிகச் சிறப்பான பல தமிழ் இலக்கியப் பாடல்களைத் தன் கதைகளில் மேற்கோள்களாகக் குறிப்பிட்டு அவற்றுக்கு உரிய விளக்கங்களையும் மனங்கவரும் வண்ணம் எழதுவது நா.பா.வின் பழக்கம். பொன்விலங்கு நாவலில், ’எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?’ என்று தொடங்கி, ’செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் நீயும் தாம் கலந்தனவே ’ என முடியும் குறுந்தொகைப் பாடலைத் தந்து அதற்கு நாவலின் கதாநாயகன் சத்தியமூர்த்தி ஆசிரியப் பணிக்கான நேர்முகத் தேர்வின் போது அற்புதமாக விளக்கமளித்ததால் அந்தப் பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்படுவதாகக் கதை செல்லும். குறிஞ்சி மலர் நாவலின் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி ஆகிய இருவரும் அறுபதுகளில் தமிழ்நாட்டு வாசகர்களிடையே மிகவும் புகழ் பெற்ற பாத்திரங்களாக நிலை பெற்றிருந்தனர். அந்த இரண்டு பெயர்களையும் தமிழ் மக்களில் பலரும் தங்களின் ஆண், பெண் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்துள்ளனர். காரணம், இவ்விரு கதை மாந்தரும் அன்றைய தமிழ்ச் சமூகத்தின் இளைஞர்கள், இளம் பெண்கள் நடுவே அவர்களின் இலட்சிய நாயகர்களாக, ரோல் மாடல்களாகத் திகழ்ந்தவர்களாவர். மதுரை நகரின் வீதிகளிலும், திருப்பரங்குன்றம் பகுதியிலும் நிகழ்வதாக நா.பா. படைத்திருந்த அந்த நாவலின் நடை நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் எழிலார்ந்த நடையாயிருந்தது. பூரணியின் எழில் குறித்து அரவிந்தன் புனைவதாக நா.பா. எழுதியுள்ள கவிதை ஒன்று, சந்த அழகும், பொருள் ஆழமும் நிரம்பிய கவிதையாகும். அதைப்படித்தாலே மனம் துள்ளும். நா.பா.வின் படைப் புகளில் குறிஞ்சி மலர் நாவலைத்தான் நான் முதன் முதலில் படித்தேன்.
அப்போது எட்டாம் வகுப்பு மாணவனாயிருந்த நான் நாவலின் மென்மையான நடையிலும்,அது முன் வைத்திருந்த குறிக்கோள்களிலும் மனம் பறிகொடுத்து மெய்ம்மறந்து அவருக்கு ஒரு நீண்ட கடிதத்தை அனுப்பினேன். அதைப்படித்து விட்டு சில தினங்களில் நா.பா.கைப்பட ஒரு மறுமொழியை எழதியிருந்தார். ஓர் எட்டாம் வகுப்பு மாணவனுக்கு, அன்று புகழ் ஏணியின் உச்சியிலிருந்த ஓர் எழுத்தாளரின் கைப்பட ஒரு கடிதம் கிடைத்தால் எப்படிப்பட்ட ஒரு பரவச உணர்வை அது ஏற்படுத்தியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? அதன் பிறகு பல கடிதங்கள் அவரிடமிருந்து எனக்கு வந்திருக்கின்றன. இன்று பார்த்தாலும் மெய் சிலிர்க்க
வைக்கும் மணி மணியான கையெழத்துகள்… அன்பும், அக்கறையு
நேற்று அவரின் நினைவு நாள். அவரின் நினைவுகளை நான் ஒரு போதும் மறந்ததில்லை. என் படைப்புலகப் பயணத்தில் அந்த மாமனிதரின் அறிவுரைகள் தோன்றாத் துணையாக விளங்கும்!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்
அன்பின் வணக்கம்,நா.பார்த்தசாரதி என்ற எழுத்தாழுமையைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.நாஞ்சில் நாடன், பாவண்ணன் இன்னும் பல எழுத்தாளர்களுக்கு தீபம் என்ற மாத இதழே அடித்தளமாக அமைந்தது என்று தகவலும் இதன்மூலம் கிடைத்தது.நா.பார்த்தசாரதி என்றும் அவர் எழுத்துக்களில் வாழ்வார்.நினைவஞ்சலி..
சு.ஹரிஹரன்.