2024 தைப்பொங்கலில் தித்திக்கும் பரிசாக என் கை வந்து சேர்ந்தது கலை இலக்கியா கவிதைகள் நூல். கலை இலக்கியா பற்றி, எழுத்தில் உயிர் வாழும் வரம் என்ற தலைப்பில் உமர் தோழர் எழுதிய முன்னுரை, ஆசிரியர் பற்றிய நட்பின் முகவரியை உணர வைத்தது.
வாசிக்க துவங்கிய நிலையிலேயே, கவிதைகளை வரிசையாகப் படிக்கத் தோன்றவில்லை எனக்கு.. மனம் விரும்பும் பக்கத்தை படிக்கிறேன். ஒவ்வொரு வரிகளும், ஏதோ ஒன்றை எனக்கானதாக உணர்த்திச் செல்கிறது.
இறப்பு அறிந்து துடிக்கும் உயிரின் ஓசைகள் கவிதைகளாக உயிர் பெற்று இருக்கிறது.. ஒவ்வொரு கவிதையும் உங்களுக்குள் வேறொரு புரிதலை தரும். நான் இந்த உயிரைப் படித்து முடிக்கப் போவதில்லை. என்னருகில் என்னுடனே இருக்கிறது இந்நூல்.. தினம் தினம் என் வாழ்நாளை நகர்த்த எதோ ஒரு புரிதலை தந்து கொண்டு, கலை இலக்கியா கவிதைகளில் என்னுடன் வாழ்வாள்.
கலை இலக்கியாவின் கனவுக் கவிதைகளுக்கு உயிர் தந்த உமர் தோழர் மற்றும் நம் பதிப்பகம் இவள் பாரதி தோழருக்கும் பேரன்புகள். பரிசளித்த அறம் கிளைக்கு நன்றி. இக்கவிதைகளை வாசிக்கும் உள்ளங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பாள் கலை இலக்கியா.
நூலின் தகவல்கள்
நூல் : “கலை இலக்கியா கவிதைகள்”
ஆசிரியர் : கலை இலக்கியா
பக்கங்கள் : 192
விலை : ரூ.190
வெளியீடு : நம் பதிப்பகம்.
எழுதியவர்
கவிதா பிருத்வி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.