கிண்கிணி மணிகளின்
ஒலி சப்தம்
பசு ஒன்று கன்று ஈன…
ஆசையாய் தன்
குழந்தையை நாவால் தடவ…
சில நிமிடங்களில்
தன் தாயுடன் நடக்க …
என் நினைவோ பல
நினைவுகளில்…
நிகழ்விடத்தில் உற்றார் உறவினர் இல்லை !
மகப்பேறு மருத்துவம் இல்லை !
கன்றை சுமந்த வயிற்றில் தையல் இல்லை !
நம் அம்மா பாட்டிக்கும்
இவ்வாறு தானே
பிரசவம் என்னும் அற்புதம் நிகழ்ந்தது !
இப்போது என்னவாயிற்று ?
என்ற கேள்வியில் மூழ்கி
விடை தெரியாமல்
விடை கிடைக்காமல்
விடை தேடும் வினாக்களில்
பல பெண்களில்
ஒருத்தியாய் நானும் …
== செ. ஜீவலதா
இராஜபாளையம்