பறக்கலாமா..
>>>>>>>>>>>>>>
நல்லா கேட்டுக்கோ
நான்
அப்பவே சொல்லிபுட்டே
பறக்க ரெக்க மட்டும் போதாது
எண்ணம் வேணும்னு..
பறக்கும் போது வானத்தப்பாரு
குனுஞ்சி பூமிய பாத்தா
மண்ட கணம் வந்துபுடும்..
ரெக்க முளைக்கலனு
கவலபடாத
ஆச முளைச்சிட்டுல
தானா பறப்ப இரு….
கூட பறக்குற பறவையோட
போட்டிப்போடாத
அது வேற
நீ வேற
குணத்துல….
மழை பெய்யும்போது
சிறக விரிச்சிக்கோ
இடி இடிச்சா
கண்ண மூடிக்கோ
இன்னொரு கூட மட்டும்
தேடிப்போகாத
நீ யாருனு
அந்த பறவைக்கு தெரியாது….
ஒரு வழியா பறக்க
கத்துகிட்ட
வந்து போன இடத்த
மறக்கவும் கத்துக்க..