பூங்காவில் தீவிரமான நடைபயிற்சியில் இருந்தார்கள்.பரசுவுக்கு மனதில் ஒரு குறுகுறுப்பு.
எத்தனை நாள் தான் கொடுக்காமல் இருக்கறது? இன்னைக்கு குடுத்திடணும்னு இருந்தார்.
இதோ” தென்றலில் அசைந்து வரும் மலராய்” நடந்து வருகிறார் வசந்தா.
“டீ.சர்ட்” ல் கண்ணைப் பறிக்கிறார். மெதுமெதுவாக நடக்க ஆரம்பிக்கிறார்.பரசுவும் பின் தொடர்கிறார்.
இன்று சொல்லிட வேண்டியது தான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கிட்டே சென்றார்.
இந்தாங்க “நீளமான தலைமுடி”யைத் தந்தார். பார்த்ததும் வாங்கிக் கொண்டார்.
“யெஸ்.யெஸ். அன்னைக்கு மிஸ் பண்ணிட்டேன்”.
“பொக்கை வாய்” தெரிய சிரித்து நன்றி சொன்னார் வசந்தா.
-இரா.கலையரசி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

