மு. முபாரக் கவிதைகுழந்தையின் அழுகையை
நிறுத்த தாலாட்டு பாடினார்கள்,
தன் தோள் மீது சாய்த்து
ஆறுதல்படுத்தினார்கள்,
நிலவைக் காட்டி சிரிக்க வைக்க
முயற்சித்தார்கள்…
சகக்குழந்தைகளோடு விளையாட வைத்தார்கள்,
கையில் மிட்டாய் கொடுத்தார்கள்,
முத்தம் தந்து கொஞ்சினார்கள்,
வீட்டுக்கும் வாசலுக்கும் நடந்தார்கள்,
உறவுகளைக்காட்டி உற்சாகப்படுத்தினார்கள்,
இன்று எல்லாவற்றையும்
தலைகீழாய் மாற்றி வைத்திருக்கிறார்கள்,
குழந்தைகள் அழத்தொடங்கியவுடன் அலைபேசிகளை கையில்
கொடுத்து ஆறுதல்படுத்துகிறார்கள்,
அழுகின்ற குழந்தைகளுக்கு
மிட்டாய்கள் தந்து ஆறுதல்
தந்தவர்கள்,
எப்போதும் குழந்தைகளின் கரங்களில் அலைபேசிகளைத்
தந்து பிஞ்சுகளின் வாழ்க்கையை நஞ்சாக்கி வாழ்கிறார்கள்…
விஞ்ஞானத்தில் மெய்ஞானத்தை தொலைத்து!

மு. முபாரக்