பள்ளிக்கூடத்தேர்தல்

பேரா. நா.மணி

பதிப்பகம் :  பாரதி புத்தகாலயம்

ஆசிரியர்  ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல்

நூலிலிருந்து

குழந்தைகளை ஏதும் சிந்திக்க இயலாத விட்டு தன்மை கொண்டவர்களாகப் பாவித்து அவர்கள் தலையில் தனக்குத் தெரிந்ததை எல்லாம் ஏற்றிவைக்கும் வேலையே ஆசிரியர்கள் உடையதாக இருக்கிறது

கல்வி சமூகத்தை சமூக மாற்றத்தை மையமாகக் கொண்டு இயங்க வேண்டும் என்று கல்வி சிந்தனையாளர்கள் முன்மொழிந்தார்கள்.

இந்திய மண்ணில் நாம் கல்வியில் என்ன செய்தாலும் அது அதிகார வர்க்கம் எனப்படும் வெள்ளைக்காரர் அதிகாரிகளை மையப்படுத்தியதாகவே மாறி விடுவதை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மாணவர்கள் மீதான வன்முறை பற்றித் திறந்த மனதுடன்  அளித்த இவரது வாக்குமூலம் பெரும்பாலும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பொருந்துகிறது.

தன்னிடம் பயிலும் மாணவர்களிடம் அவர்கள் மனதைக் கவர்ந்த நல்லாசிரியர் யார் என ஓர் ஆசிரியர் தினத்தன்று எழுத்துப்பூர்வமாகக் கேட்க…….

வெளியில் தெரியாமல் பல ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் பதிந்திருப்பதை விவரிக்கிறது .

மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியர்களாக

*அடித்து பாடம் நடத்தும் ஆசிரியர்.
* சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் ஆசிரியர்
* 30 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து பாடம் நடத்திய பார்வையற்ற ஆசிரியர்
* 500 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றிய ஆசிரியர்
* கட்டிப்பிடி வைத்தியம் பார்த்த ஆசிரியர்
* தான் விடுப்பு எடுக்க மாணவர்களிடம் அனுமதி கேட்ட ஆசிரியர்
* மாணவர்களின் வீட்டுப் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உதவி செய்த ஆசிரியர்
* பாடம் மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த தகவல்களையும் கூறிய ஆசிரியர்… என நல்லாசிரியர்களாக மாணவர் மனம் கவர்ந்த  ஆசிரியர்களின் பட்டியல் அதிசயிக்க வைக்கிறது.

ஆசிரியர்களின் சிந்தனைக்கான இடு பொருட்களின் தரம் கூடும் போது அவர்களது கருத்துக்களின் உள்ளடக்கமும் மாறும். அதற்கேற்ப மாணவர்களின் கருத்துகளில், கருத்து தேர்வுகளில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம் .

நூலின் பின்னட்டையில் கூறியுள்ளது போன்று நல்ல ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் தார்மீக உரிமை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

நெகிழ வைக்கும் சம்பவங்களும் ஆக்கப்பூர்வமான கருத்தாடல்கள் இணைந்து தமிழில் முன்மாதிரியாகச் சாத்தியப்படும் இந்நூல் ஆசிரியர்களும் மாணவர்களும் வாசித்தே தீர வேண்டிய பேரனுபவம்.

தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *