கவிதை: உறவுகள் தொடர்கதை – சக்திபானு ஜெயராஜன்.

கவிதை: உறவுகள் தொடர்கதை – சக்திபானு ஜெயராஜன்.

உறவுகள் தொடர்கதை
********************************** 
என்ன கொண்டு வந்தாய் பூமிக்கு?
இறுதியில்
என்ன கொண்டு செல்வாய்
மண்ணுக்கு?
மாற்றத்தின் சுழற்சியில்
நாம்
இழக்க கூடாததை
இழந்து விட கூடாது.
மானிடமே! மானிடமே!
உடைந்த கல்லில்
குறை காணாதே
செதுக்கிப் பார்
சிற்பம் தெரியும்
மனிதம்,அன்பு,பாசம் எல்லாம்
துய்ப்புக் கலாசாரத்தில்
தொலைந்து போனதேன்?
ஏ! உறவுகளே!
ஊா்வலத்தின் கடைசி வரை
வருவதன் பெயர்தானே
உறவுகள்?
சக்திபானு ஜெயராஜன்.
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *