இந்தியா ஒரு வளரும் நாடு. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உணவு பாதுகாப்பிற்கும் மீன்வளம் முக்கிய பங்கு வகிக்கிறது. உள்நாட்டு மீன் வளம் என்பது உள்நாட்டு நீர், ஏரிகள், ஆறுகள், நீர் ஓடைகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் முதலான நீர் நிலைகளில் இருந்து நீர்வாழ் உயிரினங்களை அறுவடை செய்வதாகும். உள்நாட்டு நீர் வளத்தை அனைவராலும் எளிதாக அனுபவிக்க கூடியதாக இருப்பதாலும், குறைந்த தடைகளை கொண்டிருப்பதாலும், உள்நாட்டு நீரில் மீன் பிடிக்க தேவையான உபகரணங்கள் (தூண்டில்கள்) மிகவும் சிக்கலானவை அல்ல, அதனால் அதிக மனித சக்தியும் மற்றும் பெரிய தொழில்நுட்பங்களும் தேவை இல்லை, உற்பத்திச் செலவும் குறைவாக இருக்கிறது. இதனால், ஏழை எளிய மக்களும் இவற்றை எளிதாக அனுபவிக்க முடிகிறது. நன்கு நிர்வகிக்கப்பட்ட உள்நாட்டு மீன் வளம் வறுமை ஒழிப்பிற்கும், வருமானம் பெருக்கத்திற்கும், உணவு பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும்.

இந்தியாவின் மீன்வளம்:

உணவு, மீன்பிடி, படகு போக்குவரத்து, சுற்றுலா, விவசாயம் என மீன்வளம் பல்வேறு வழிகளில் மக்களுக்கு முக்கிய வாழ்வாதரமாக விளங்குகிறது. இந்தியாவில் 1.2 மில்லியன் ஹெக்டேர் வெள்ளப்பெருக்கு ஏரிகள் மற்றும் ஈர நிலங்கள் உள்ளன. இங்கு மீன் மற்றும் மீன் வளம் ஒரு பாரம்பரிய பொருளாதார நடவடிக்கையாக உள்ளது. இவை கிராமப்புறங்களில் மிகப்பெரிய சமூக பொருளாதார முன்னேற்றங்களை ஏற்படுத்துகின்றன. குளிர்ந்த நீர் வளங்கள், ஆறுகள், நீர் ஓடைகள், ஏரிகள், நீர் தேக்கங்கள், 8253 கிலோ மீட்டர் நீளமுள்ள நதிகள், 41,600 ஹெக்டேர் பரப்பளவு உள்ள ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் என பல்வேறு உள்நாட்டு நீர்வள ஆதாரங்கள் உள்ளது. இவற்றைத் தவிர பல்வேறு மாநிலங்களில் முக்கியமாக வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பயன்படுத்தப்படாத உள்நாட்டு உப்பு நீர்நிலைகளும் அதிகமாக காணப்படுகிறது. 2017-18 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி 12.59 மில்லியன் டன் ஆக இருந்தது. இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து 45 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள 1.8 மெட்ரிக் டன் மீன்கள் மற்றும் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்துப்பட்டுள்ளது.

1950-51இல் 29% ஆக இருந்த இந்தியாவின் உள்நாட்டு மீன்வள பங்களிப்பு, 2017-18 இல் 71% ஆக உயர்ந்துள்ளது. 2017-18 ஆண்டில், இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திராவில் உள்நாட்டு மீன் உற்பத்தி 28.45 லட்சம் டன்களாக உள்ளது. வேலைவாய்ப்பு, உணவு வழங்கல், ஊட்டச்சத்து மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் மீன்வளம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகலாவிய நிலப்பரப்பு, தனிநபர்கள், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் உள்நாட்டு மீன்வளம் கணிசமாக பங்களிக்கிறது. உள்நாட்டு மீன்வளம் மூன்று முதன்மை முக்கியத்துவம் பெறுகின்றன.

@ ஒன்று, .உணவு பாதுகாப்பு
@ இரண்டு, தனி மனிதருக்கான அவசியம்
@ மூன்று, பொருளாதார பாதுகாப்பு.

Draft national fisheries policy seeks big growth but ignores fishers
உணவு பாதுகாப்பு:

முதலில் உணவு பாதுகாப்பில் உள்நாட்டு மீன்வளத்தின் முக்கியத்துவம் என்னவென்று காண்போம். தற்போது உலக மக்கள் தொகை 7.8 பில்லியன் ஆக உள்ளது. 2050ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தரமான ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதில் சவால்கள் இருக்கவே செய்கின்றன. வேளாண் உற்பத்தி பாதிப்படைந்தபோதும் உள்நாட்டு மீன்வளம் உணவு பாதுகாப்பில் முக்கிய இடம் பெற்றுள்ளது. வளர்ந்துவரும் நாடுகளில்(90%) உள்நாட்டு மீன்வள உற்பத்தி மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. மனிதனுக்கு தேவையான ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தை மீன்கள் அதிக அளவில் வழங்குகின்றன. கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்- டி, கால்சியம் ,பி-வைட்டமின்கள், வைட்டமின்-ஏ, இரும்பு, துத்தநாகம் மற்றும் லைசின் போன்ற பல நுண்ணூட்டச்சத்துகள் மீன்களில் இருந்து கிடைக்கின்றன. புல்கெண்டை, வெள்ளிக்கெண்டை, திலேபியா, சாதாகெண்டை, கட்லா, ரோகு போன்ற மீன்கள், உள்நாட்டு உணவுத்தேவையை அதிகம் பூர்த்தி செய்கின்றன.
பல நாடுகளில் புரதத்தை விட மிக முக்கியமான நுண்ணூட்டச் சத்துகளை வழங்குவதில் உள்நாட்டு மீன் வளத்தின் பங்கு அதிகம். காரணம் மீன் பண்ணைகள், ஆறு குளங்களில் வளர்க்கப்படும் மீன்கள் அப்பகுதி மக்களுக்கு எளிதில் கிடைப்பதால் அவற்றை எளிதில் வாங்கி நுகர முடிகிறது.

மீன்வளம் ஊட்டச் சத்து நன்மைகளை வழங்குவதோடு நீர்வாழ் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஐ. நா சுற்றுச்சூழல் திட்டம் (யூ.என்.இ.பி) மற்றும் உலக மீன் மையம் ஆகியவற்றால் தொகுக்கப்பட்ட புதிய அறிக்கையில் உள்நாட்டு நீர் வளத்தின் முக்கியத்துவத்தையும், குறிப்பாக குழந்தைகளிடையே புரத விநியோகத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. சிறிய மீன்களை முழுவதுமாக சாப்பிட்டால் கால்சியம் மற்றும் வைட்டமின்-ஏ முதலிய ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். எனவே, உள்நாட்டு மீன்வளம் மனிதர்களுக்கு நேரடியாக உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகுக்கின்றது. மற்ற மாமிச உணவுகளோடு ஒப்பிடுகையில் மீன்கள் மிகக் குறைந்த விலையில் கிடைகிறது. அதாவது, சாமானிய மக்களாலும் வாங்கி உட்கொள்ள முடிகிறது.

தனிப்பட்ட மனிதருக்கான அவசியம்:

இந்தியர்களின் உணவுக் கலாச்சாரம் முக்கியத்துவம் பெருகிறது. அதில், உள்நாட்டு மீனவர்கள் குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள மக்கள், மீன் உணவுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உள்நாட்டு மீன்வளத்துறை பெரும்பங்கு வகிக்கிறது. நாட்டின் பொருளாதார ரீதியாக  பின்தங்கிய மக்களின் பெரும் பகுதியினரின் வாழ்வாதாரத்தில் முக்கிய ஆதாரமாக உள்நாட்டு மீன் வளம் விளங்குகிறது. உள்நாட்டு மீன் பண்ணையாளர்கள் நாட்டின் வளர்சிக்கு முக்கிய பங்களிக்கின்றனர்.
உணவு, பொருளாதார பாதுகாப்பு, விலங்குப் புரதம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வருமானம் ஈட்டுவதில் முக்கிய பங்களிக்கின்றன. உள்நாட்டு மீன் பிடிப்பு மற்றும் மீன்வளர்ப்பு மூலம் நாட்டின் உணவு மற்றும் வருமான நன்மைகள், வேலைவாய்ப்புகள், வர்த்தகம், இதனை சார்ந்த பொருளாதார நன்மைகள் பல இருப்பதால் மனித வளம் மேம்பாடு அடைகிறது. எனவே, தனி மனித வளர்சியிலும் உள்நாட்டு மீன்வளம் முக்கியதுவம் பெருகிறது. பொருளாதார

மீன் பிடித்தல் - Wikiwand

பாதுகாப்பு:

தற்போது உள்நாட்டு மீன் உற்பத்தி நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 79 சதவீதம் உயர்ந்துள்ளது. இவை பெரும்பாலும் கிராமப்புற ஏழை மக்கள் வாழ்வாதாரத்திற்காக மற்றும் சிறிய அளவிலான பொருளாதார பாதுகாப்பிற்கும் பயன்;படுகிறது. இந்தியா உலக அளவில் மீன் உற்பத்தியில் இரண்டாம் இடமும், உள்நாட்டு மீன் உற்பத்தியில் இரண்டாம் இடமும் வகிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்;(புனுP) மீன்வளம் 1.67 விழுக்காடு பங்களிக்கிறது.
தமிழகத்தில் தனிநபர் மீன் உண்ணும் விகிதம் ஆண்டிற்கு 11.60 கிலோகிராம் என்று இருக்க வேண்டிய நிலையில், அது 9.83 கிலோ கிராம் என்ற அளவில் மட்டுமே உள்ளது. காரணம், உற்பத்தி அதிகரித்த அளவு மனதனின் வாங்கும் சக்தியும் , மீன் உண்னும் கலாச்சாரமும் பெரும் அளவில் உயரவில்லை. மீன்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து மீன்வள ஆதாரங்களிலும் மீன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கிராமப்புற பகுதிகளில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு, மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மற்றும் வருவாய் ஈட்டுவதற்குமான முக்கிய துறையாக வளர்ந்துள்ளது. வேளாண்மையுடன் மீன் வளர்ப்பினை ஒருங்கிணைத்து செயல்படும் தொழில்நுட்பமானது மீன் வளர்ப்பில் ஒரு அலகிற்கான உற்பத்தியை அதிகரிப்பதாக நிரூபணமாகியுள்ளது. வருங்காலங்களில் உள்நாட்டு மீன் உற்பத்தியை பெருக்குவதால் உள்ளுர் சந்தை தேவையும் அதிகரிக்கும். மீன் உற்பத்தி, வேலைவாய்ப்பு, நுகர்வு அதிகரிக்கும் போது நாட்டின் பொருளாதார பாதுகாப்பு சூழல் ஏற்படுகிறது.

உலகெங்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்நாட்டு மீன் வளம் முக்கிய பங்கு வகிக்கிறது. நன்னீர் மீன் உற்பத்தி வளரும் நாடுகளில் குறிப்பாக, இந்தியாவில் முக்கியத்துவம் பெறுகிறது. உள்நாட்டு மீன் வளம் விலங்கு புரதம் மற்றும் உள்ளுர் சமூகங்களுக்கு அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்துக்களின் முக்கியமான ஆதாரத்தை வழங்கி, உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும் உள்ளுர் உணவுத்தேவைக்கும், வேலைவாய்ப்புக்கும் மீன்வளம் முக்கியத்துவம் தருவதாக இருப்பதால் தொழில் முனைவோரை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் நாட்டு வருமானம் அதிகரிக்கும். சுய சார்பு நிலை ஏற்படும். நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களாக இருக்கும் நதி மற்றும் ஏரிகளின் நிலைத்தன்மைக்கு ஏற்ப பிளாங்டான், தாவரங்கள், பூச்சிகள் மற்றும் மீன்களின் வாழ்வாதாரங்களை பெருக்க வேண்டும். எனவே, உள்நாட்டு மீன்வளத்தின் அவசியம் கருதி உள்நாட்டு மீன் வளர்த்தினை பாதுகாத்து மீன் உற்பத்தியை பெருக்குவது காலத்தின் கட்டாயம்.

கே. யுவஸ்ரீ,
நான்காம் ஆண்டு இளநிலை மீன்வள அறிவியல் மாணவி,

முனைவர் இல.சுருளிவேல்
உதவிப் பேராசிரியர், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை,
டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி.
மின்னஞ்சல்: [email protected]



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *