இந்த புத்தகத்தின் பெயரை படித்த உடனே நம்மில் பலருக்கும் எழும் கேள்வி? யார் இந்த மெஹருன்னிசா? அவரை  ஏன் ராக்கெட் ஏற்ற வேண்டும் என்பதுதான். இப்புத்தகத்தின் ஆசிரியர் ஆர்.ராமானுஜம்  முற்போக்கு எழுத்தாளரும், கணினி பொறியாளரும், விஞ்ஞானியுமாவார். அவர் ஏன் மெஹருன்னிசாவை ராக்கெட் ஏற்ற நினைக்கிறார்?
நான் ராக்கெட் ஓட்டவேண்டும்.
ஆர்.ராமானுஜம் அவர்கள் மும்பை தாராவியில் முற்போக்கு இயக்கத்தினரால் நடத்தப்பட்டு வரும் கணினி மையத்தில் உரையாற்றச் செல்கிறார். அங்கு, சமகால அறிவியல் வளர்ச்சிகள் குறித்தும் , கணினி அறிவியல் குறித்தும் பேசுகிறார். அவர்தம் உரையை முடித்தபின் கூடியிருந்த மாணவர்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்கின்றனர். அப்பொழுது தான் மெஹருன்னிசா நமக்கு அறிமுகமாகிறாள். நான் ஒரு ராக்கெட் விஞ்ஞானியாக வேண்டும் என்கிறார். சற்று அழுத்தமாக நான் ராக்கெட் ஓட்டி செல்ல வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கிறார் மெஹருன்னிசா.
அதற்கு நம் ஆசிரியர், நீங்கள் கணிதத்தையும், அறிவியலையும் நன்றாக படித்து தேர்ச்சி பெற வேண்டும் என்றார். அதற்கேற்றாற் போல் நம் மெஹருன்னிசாவும் அயராது படித்து கணிதத்திலும், அறிவியலிலும் நல்ல மதிப்பெண்களை பெற்று, அதை ஆசிரியரிடம் தெரிவிப்பதற்காக ஆங்கிலத்தில் கடினப் பட்டு எழுதி இமெயில் மூலம் அனுப்புகிறார்.
அந்த கடிதத்தின் நீட்சியாகவே ஆசிரியர் ஏன் மெஹருன்னிசாவை ராக்கெட் ஏற்ற வேண்டும்? என்ற இந்நூலை எழுதுகிறார். இப்புத்தகத்தில்  நான்கு பக்கங்கள் தான்  மெஹருன்னிசாவை பற்றியது. மீதமுள்ள பக்கங்கள் அனைத்தும் அவரை ராக்கெட் ஏற்ற முடியுமா? என்பதை பற்றி தான்.
புதியக் கல்விக் கொள்கை
புதிய கல்வி கொள்கை:மெஹருன்னிசாவை ...
மத்திய அரசு அறிவித்துள்ள புதியக் கல்வி கொள்கையானது, மெஹருன்னிசாவை போன்ற பல மாணவர்களின் கனவுகளை எட்டாக் கனியாக மாற்றும் அபாய அறிவிப்பாகும். இப்புதிய கல்விக் கொள்கையை பற்றி  ஆசிரியர் மிகவும் ஆழமாகவும், விரிவாகவும் ஆராய்ந்து எழுந்தியுள்ளார்.
இறுதியாக, விளிம்பு நிலை( Marginalised) குடும்பக் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது? அவர்களின் எதிர்காலம் குறித்த நம் அக்கறை எத்தகையதாக உள்ளது? அந்த குழந்தைகளின் பார்வையில் நம் நாடும், சமூகவளர்ச்சியும் எப்படி தெரிகிறது? அதில் நம் பங்கையும், நம் முன்னேற்றத்தையும் அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள்? இச்சமூகமும், நாடும் இதற்கு என்ன வழிகாண்பிக்கிறது? என்பது போன்ற கேள்விகளுடன் புத்தகத்தின் ஆசிரியர் நூலை முடிக்கின்றார்.
ஏழை குழந்தைகளின் கல்வியையும் மெஹருன்னிசாக்களின் ராக்கெட் ஏறும் கனவுகளையும் சிதைக்கும் இந்த கல்விக் கொள்கையை நாம் ஏன் ஏற்க வேண்டும்? என்ற கேள்வியை அழுத்தமாக முன்வைக்கிறார் ஆசிரியர்.
புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/product/pudhiya-kalvi-kolkai-10631/
புத்தகத்தின் பெயர்:
“மெஹருன்னிசாவை  ராக்கெட் ஏற்ற வேண்டுமே”
ஆசிரியர்: ஆர்.இராமானுஜம் 
பதிப்பகம்:பாரதி புத்தகாலயம்
விலை:15
பக்கம்:32
ரா.பாரதி
இந்திய மாணவர் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *