அடுப்பங்கரையில்
பகலைக் கழித்து
தனியறையில்
இரவைக் கழித்து
உயிர் நீத்த
பெண்ணுக்கு
உறவுகளுக்கு முன்
கண்ணீர் அஞ்சலி
செலுத்தினர் குடும்ப உறவுகள்!
மரித்துப் போன பெண்ணின் சடலத்தின் கண்களில்
கண்ணுக்குத் தெரியாத கண்ணீர் துளிகள்!
யாருக்காக இந்தச் சடங்கு?
உதடுகள் உச்சரித்தவை
ஒருத்தருக்கும் கேட்கவில்லை!
இது அவளுக்கு ஒன்றும் புதிதல்ல!
பதிலில்லாக் கேள்விகள்
பலப்பலப் பார்த்தாச்சு
சடங்குக்காக வாழ்ந்தவள்
சடங்குகளை ஏற்று
சற்று நேரத்தில்
நெருப்பை தழுவிக் கொள்ள தயாரானாள்!
***
ஆனாலும்
நெஞ்சாங்குழி வேகுமோ?

திருமதி சாந்தி சரவணன்
9884467730

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on ““சடங்கு” கவிதை – சாந்தி சரவணன்”
  1. நெஞ்சாங்குழி வேகுமோ வேகாதோ? ஆனால் கண்ணீர் துளிகளுக்கு காரணமானவர்களின் நெஞ்சுக்கழியில் சூடு ஏறிக்கொண்டே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *