நூல் அறிமுகம்: ஏற்காடு. இளங்கோவின் ’ஏழரைச்சனி’ – தி.தாஜ்தீன்

நூல் அறிமுகம்: ஏற்காடு. இளங்கோவின் ’ஏழரைச்சனி’ – தி.தாஜ்தீன்




நமது முன்னோர்கள் பண்டை காலத்திலேயே சனி கிரகத்தை பார்த்து அதற்கு பெயரும் வைத்துள்ளனர். சனியை பற்றி பல நாடுகளில் பலவிதமான கருத்துக்கள் இருந்துள்ளன. நம்மைப் பொறுத்தவரை சனி கிரகம் ஒரு வெறுக்கப்பட்ட கிரகம், மற்ற கிரகங்களை விட சனிக்கிரகம் கெடுதல் செய்யும் கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரை திட்டும் போது கூட ஏண்டா உனக்கு சனியன் பிடிச்சிருக்கா?, சனியனே என்று திட்டுபவர்களும் உண்டு.

ரோமானிய நாட்டில் மத சம்பந்தமாக பல புனைக் கதைகள் உள்ளன. சாட்டர்ன் என்பது ஒரு அறுவடை கடவுள். விவசாயத்திற்கு உரிய கடவுளாகும். ரோமானிய மக்கள் இதனை வழிபட்டன, விதை விதைப்பதில் சாட்டர்ன் முக்கிய பங்கு வைக்கிறது. சாட்டர்ன்யா என்கிற திருவிழாவினை (சனியை) மரியாதை செய்வதற்காகவே கொண்டாடப்படுகிறது. நமது பார்வையில் மோசமான கிரகம் என வர்ணிக்கப்பட்ட சனி உண்மையில் வானவெளியில் வலம் வரும் அற்புத கிரகம் என ஆசிரியர் கூறுகிறார். சனியின் அழகும்,பிரகாசமும் தொலைநோக்கியில் பார்ப்போரின் உள்ளத்தில் கொள்ளை கொள்ளும்.

சனி கிரகத்தைப் பற்றி ஆசிரியர் இளங்கோ மேலும் மிக அழகாக இப்புத்தகத்தில் கூறியுள்ளார். சனி கிரகமானது சூரியனிலிருந்து ஆறாவது கிரகமாகவும், பூமியிலிருந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கிரகம் சனி ஆகும். இது வாயுக்களால் ஆன பெரிய கிரகம். நமது பூமியை போல ஆயிரம் மடங்கு பெரியது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களுக்கு ரோமானியர்கள் பெயர் வைத்தனர். ரோமானிய நாட்டுப் புராண கதைகளில் வரும் கடவுள்களின் பெயர்களையே கிரகங்களுக்கு வைத்தனர். அதேபோல விவசாய கடவுளான “சாட்டர்ன்”பெயரை சனி கிரகத்திற்கு வைத்தனர். சனி என்பது சனிஸ்வரா என்பதிலிருந்து வந்தது ஆகும். “சனீஸ்வரா” சன் என்பதிலிருந்து மருவி, சன் என்பதற்கு மந்தன் என்பதும், சனி என்றால் மெதுவாக சுற்றி வருபவன் என்றும் பொருள்படும்.

நமது புராணக் கதைகளில் வரும் கடவுள்களின் பெயர்களையே கிரகங்களுக்கு வைத்தனர். நிலப்பிரபுகள் காலத்தில் தோன்றிய கடவுள்களின் பெயர்களைத்தான் கிரகங்களுக்கு பெயர் சூட்டினார்.

முதன் முதலில் கலிலியோ தொலைநோக்கி மூலம் சனி கிரகத்தை பார்த்தவர். அந்த தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாக இல்லை. இருப்பினும் கூட அந்த ஆரம்ப கால தொலைநோக்கியில் சனி கிரகத்தை பார்த்ததில் அதன் வடிவத்தில் ஏதோ ஒரு அதிசயம் இருப்பதை கண்டு அதிசயத்தார். பிறகு சனி கிரகத்திற்கு வளையங்கள் உள்ளதை உறுதி செய்தார்.

சனி கிரகம் சூரியனிடமிருந்து 1,429,400,000 km தூரத்தில் உள்ளது. பூமிக்கு அருகில் இருக்கும் போது 1,200,000,000 km தூரத்தில் இருக்கிறது. இருந்தாலும் சனி கிரகத்தின் அடர்த்தி மிக மிக குறைவு தான். இதன் அடர்த்தி 0.69 ஆகும். நீரின் அடர்த்தி 1.0 ஆகும். சனி கிரகம் நீரின் அடர்த்தியை விட 30 சதம் குறைவு தண்ணீரில் தூக்கி போட்டால் இது மிதக்கும் என்பது ஆச்சரியம். சனி கிரகத்தில் உள்ள மேகங்கள் 3 அடுக்குகளை கொண்டுள்ளது. மேலடுக்கு வெளியே மஞ்சள் நிறத்தில் இருக்கும் இது அம்மோனியா பனிக்கட்டியால் ஆனது. அடுத்த அடுக்கு சிவப்பு மற்றும் பழுப்பு நிறம் கொண்டது. இது அமோனியம் ஹைட்ரோ சல்பைட்டால் ஆனது. கடைசி அடுக்கு அடர்ந்த அடுக்காக பனிக்கட்டியால் ஆன தண்ணீர் உள்ளது.

மேலும் சனிக்கிரகம் வாயு கிரகம் என்பதால் இதன் மேற்பரப்பு திடமானது அல்ல இக்கிரகத்தில் விண்கலத்தை ஏற்க முடியாது. சனிக்கிரகம் 75% ஹைட்ரஜன் 25 சதவீதம் ஹீலியாத்தால் ஆனது. இதுடன் நீர், மீத்தேன், அம்மோனியா மற்றும் பாறை ஆகியவைகள் உள்ளன. இக்கிரகம் பூமிக்கு அருகில் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து செல்கிறது. கடைசியாக ஜனவரி 1 2005 அன்று அதிகாலை 2.28 மணிக்கு பூமிக்கு மிக அருகில் வந்து சென்றுள்ளது. இந்த வாய்ப்பு அடுத்த 30 ஆண்டுகள் கழித்து அதாவது 2034 ஆம் ஆண்டு தான் மீண்டும் வரும் என்பது தெரிகிறது.

மேலும் பல சுவாரசியமான சனி கிரகத்தைப் பற்றி இப்புத்தகத்தில் ஆசிரியர் ஏற்காடு இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.

தி.தாஜ்தீன்
தி கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி
ஆவணியாபுரம்

நூல் : ஏழரைச்சனி
ஆசிரியர் : ஏற்காடு. இளங்கோ
விலை : ரூ.₹35
வெளியீடு : அறிவியல் வெளியீடு,

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com

சிந்தனைத் துளிகள்….!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி

சிந்தனைத் துளிகள்….!!!! கவிதை – கவிஞர் ச.சக்தி




வீட்டிற்கு வெளியே
மழை பொழிகிறதென்று
அம்மழையில் நனையாமலிருக்க
வீட்டிற்குள் நுழைகிறாள் அம்மா
அம்மாவின் பாதங்களையும்
சேர்த்து நனைத்தவாறே
தான் ‌ ‌‌வெளியேறுகிறது
வீட்டையும் அம்மாவையும்
நனைத்த அந்த
அந்தி நேர நீர் மழை ,
*******

நீங்கள்
ஒரு பறவையை
பார்க்கின்ற‌ பொழுதெல்லாம்
உங்கள் மனங்களை
ஒரு மரமாகவே வளர விடுங்களேன்
உங்கள் தேகங்கள் முழுவதும் முளைக்க தொடங்கிவிடுகின்றன
ஒரு கிளையும்
அக்கிளையில் பல இலைகளும்
அந்த இலைகளை
சுற்றிசு சில கூடுகளும் ,
********

எனது தூரத்து
கிளையில்
அமர்ந்துகொண்டு சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது
ஓர் சிட்டுக்குருவி
கையிலிருந்த
செல்போனினால் புகைப்படமொன்றை
எடுக்க முயல
மீண்டும் பறந்து போய்
பக்கத்துக் கிளையில்
அமர்ந்தது அந்த சிட்டுக்குருவி
மீண்டும் ஒரு புகைப்படத்தை
எடுக்க முயலும்
என் பார்வையிலிருந்து
தப்பித்து தூரம் போய்
மீண்டும் திரும்பி பார்க்கிற சிட்டுக்குருவிகளின்
கண்களுக்குள்
வானுயர வளர்ந்திருக்கிறது இலைகளற்ற சில கம்பிகளால்
பின்னிய பல கோபுர மரங்கள் ,
********

பற மோளம்
அடிக்கும் சாவு வீடு
ஆட்டம் பாட்டமென நீளும்
நடு சாம இரவு
ஊது பத்திப் புகையை
உள்ளிழுக்கும் மூக்குத் தூவாரங்கள்
பலரது கண்களிலிருந்து வழியும்
செத்துபோனவரின்
தண்ணீரான நினைவு வழித்தடங்கள்
கீழிருந்து வானம் ‌போய்
மேகம் ‌மீது மோதி வெடிக்கும்
வானவெடிப் பட்டாசுகள் ‌
வெத்தலை பாக்கு துருக்கப்பட்ட
பல பொக்கவாய்ப் பாட்டிகள்‌
யார் செத்ததென்று கேட்க
மாடு அறுக்கும்
தாத்தா செத்து
போயிட்டாரென்று‌
ஊரெல்லாம் ஒரே பேச்சு
விடிந்தால் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை கறிக்கு
நாங்க எங்கே
போவதென்றே கேள்வியை
அப்பிணத்தைக் கடந்து போகிற

ஒவ்வொருவரின்
கடைசி அழுகையும்
சொல்லும் ,

கவிஞர் ; ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

நூல் அறிமுகம்: நேமிசந்த்ராவின் ’யாத்வஷேம்’ தமிழில்: கே. நல்லதம்பி – செ. தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்: நேமிசந்த்ராவின் ’யாத்வஷேம்’ தமிழில்: கே. நல்லதம்பி – செ. தமிழ்ராஜ்




உண்மைக்கு மிக நெருக்கமாக நின்று, நேமிசந்த்ரா அவர்கள் எழுதிய யாத்வஷேம் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகும் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படைக்கு பலியான யூதர்களின் நினைவிடம் இஸ்ரேலில் அமைந்திருக்கின்றது. அந்தக் கொடும் நினைவலைக்கு காலம் சூட்டிய பெயர்தான் யாத்வஷேம். நாவலெனும் பெயரில் மனிதம் தொடர்பான கேள்விகளை, உரையாடல்களை நமக்குள் எழுப்பிச் சென்றிருக்கின்றது. பொதுவாக ஒரு நாவலென்றால் ஏராளமான கதாபாத்திரங்கள் கதையில் உலவும். இங்கே மிகச்சில நபர்களே கதைக்குள் நின்று காத்திரமான உரையாடல்களை நிகழ்த்துகிறார்கள்.

சமீபத்தில் இம்மாதிரியான உணர்வுப்பூர்வமான நாவலை வாசித்ததேயில்லை என்று வாசித்த எவரும் ஒரே குரலில் சொல்வார்கள்.அவ்வளவு செய்திகள் கொட்டிக்கிடக்கின்றது. ஒரு புனைவில் வரலாற்றையும் சேர்த்து பிசைந்து வாசகர்களுக்கு தந்திருக்கின்றார் நாவலாசிரியர்.வாசிக்க வாசிக்க அவர் ஏற்படுத்தும் பிரமிப்பு வியப்பில் ஆழ்த்துகிறது. அவர் முன்வைக்கும் தரவுகளும் அதில் நமக்கிருக்கும் போதாமைகளும் புலனாகின்றன. நாவலெனும் பெயரில் மிகப்பெரிய ஆய்வேட்டையை நடத்தி முடித்திருக்கின்றார்.

எட்டு ஆண்டுகால உழைப்பென்றால் சாதாரணமானதா நிகழ்விடங்களை தேடித்தேடி வரலாற்றுச்சுவடுகளை படியெடுத்திருக்கின்றார். கதைக்கு நெருக்கமான கதைமாந்தர்களை சந்தித்து உரையாடியிருக்கின்றார். ஜெர்மனி அமெரிக்கா இஸ்ரேல் பாலஸ்தீன் என நாடுகள் தோறும் மெனக்கெட்டு பயணித்திருக்கின்றார். சேகரித்த அத்தனையையும் எழுத்தாக்கிவிடாமல் சாறு பிழிந்து சுவாரசியம் குறையாமல் விறுவிறுப்பானதொரு நாவலை கவித்துவமான மொழிநடையில் தந்திருக்கின்றார். இந்த நாவலை வாசிப்பவர்கள் இத்துடன் நின்றுவிட முடியாது யூதர்கள் என்றால் யார் கிறிஸ்தவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பகை இஸ்லாமியர்களின் பாலஸ்தீனம் ஹிட்லர்கள் பாசிச வெளி குறித்தும் தேடி வாசிக்கத் துவங்குவார்கள். இந்த நாவலை முடிக்கும்போது வாசிப்புலகின் அடுத்தகட்டம் நோக்கி தானே நகர்வீர்கள.

33 அத்தியாயங்களில் அப்படி என்ன தான் பேசுகிறது நாவல் வாருங்கள் நாவலிற்குள் நுழைவோம். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நரவேட்டையிலிருந்து தப்பிய யூத குடும்பமொன்று சிதறி தெறித்து ஓடுகின்றது. தகப்பனும் மகளும் இந்தியாவில் தஞ்சமடைய தாய் தம்பி தங்கை அக்கா பற்றிய தகவல்கள் ஏதுமில்லை. பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் பார்வையிலிருந்து கதை விரிகிறது. பறவையின் பார்வையாய் உலகெங்கும் தன் உறவுகளை தேடுகிறது தேடிக் கண்டடைந்த தன் உறவிற்கும் தனக்கும் நிகழும் உரையாடல்கள் யாவும் மனிதகுலம் தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய மானுடகுலத்திற்கான மனிதநேய விசாரணைகள்.

யூதர்கள் மேல் ஒரு தேசமே வெறுப்புற்று கொன்றுகுவிக்க காரணமென்ன எல்லாப் பழிகளையும் ஹிட்லர் ஒருவனே சுமந்தாலும் ஒட்டுமொத்த தேசமும் யூத வெறுப்புணர்வில் ஹிட்லராய் இருந்திருக்கின்றார்கள். வெறுப்பரசியலில் தீப்பற்றி எரிந்த தேசமிது. ஒரு மொழிக்கெதிராகவோ இனத்திற்கெதிராகவோ மதத்திற்கெதிராகவோ மனிதர்கள் அணிதிரள்வதென்பது மானுடத்திற்கு வைக்கப்படும் கொள்ளியாகிவிடும். இந்திய அரசியலிலும் இந்துத்துவ மதவெறியர்கள் சிறுபான்மையினருக்கெதிராக தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகள் கோயபல்ஸ் பிரச்சாரங்களாய் வலுப்பெறும் அபாயமிருக்கின்றன .

ஜெர்மனியின் நாஜிக்களும் இந்திய மதவெறியர்களும் வெறுப்பரசியலின் ஒரே பாதையில் பயணிக்கின்றனர்.
யூதர்களின் பொருளாதார வளர்ச்சி கல்வி கேள்வி என அறிவுலகத்தின் அவர்கள் எடுத்த விஸ்வரூப அவதாரங்கள் இயேசுவை காட்டி கொடுத்து கொன்ற பழி இவையாவும் ஏதோ ஒருவகையில் ஹிட்லரை உளவியலாக சுரண்டியிருக்கின்றது. அதிகாரம் கையில் குவிந்த பின் யூதர்களுக்கெதிரான நரவேட்டையை தேசமெங்கும் விதைத்து யூதர்களின் உயிரை அறுவடை செய்திருக்கின்றான்.

யூதர்கள் எப்போதும் ஒருவகையில் தனித்துவமாகவே இயங்கி வந்திருக்கின்றார்கள். இயேசுநாதர், காரல்மார்க்ஸ், ஐன்ஸ்டீன் என பிரபலமானவர்களை பட்டியலிட்டால் ஏராளமானவர்கள் வருகின்றார்கள் இது ஆய்வுக்குரிய ஒன்றாக இருக்கின்றது அறிவுப்புலத்தில் ஓரினம் மட்டும் எப்படி உயர்நிலையை எய்த முடியும். இதுவொரு விடைதேடும் கேள்வி நாஜிகளின் வதை கூடத்தில் சிக்கி சீரழிந்த நூலிழையில் உயிர் பிழைத்த அனிதாவின் அக்கா ரெபக்காவின் பாலஸ்தீனர்களின் மீதான வெறுப்புணர்வை எவ்விதம் எடுத்துக்கொள்வது, ஒரு பாசிசத்திற்கு பலியானவர் இன்னொரு பாசிசத்தை வழிமொழிவது எப்படி சரியாகும். நாடற்ற நாடோடிகளாய் புலம்பெயர்ந்தவண்ணம் ஒடித்திரிந்த யூதர்கள் பாலஸ்தீனத்தை சூழ்ச்சிகளால் வளைத்து இஸ்ரேல் எனும் நாட்டை கட்டி எழுப்புகிறார்கள். சொந்த நாட்டை இழந்து இன்று தனது தேசத்திற்குள்ளே பாலஸ்தீனர்கள் அகதிகளாய் அலைகின்றனர். கையகல நாட்டை வைத்துக்கொண்டு இஸ்ரேலுக்கு அமெரிக்கா இன்று பின்புலமாய் நிற்பதால் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றாகிப்போனது.

உலகில் முதலில் தோன்றியது யூத மதம் அதை எதிர்த்து கலகக்குரல் எழுப்பி உருவானது கிறிஸ்தவ மதம் இரண்டையும் உள்வாங்கி பிறந்தது இஸ்லாம் இன்று உலகின் மிகப்பெரிய மதங்கள் உருவானது அரேபியா கண்டத்தில் ஒரே நிலப்பரப்புகளில் ஆகவே ஜெருசலேம் இம்மூன்று மதங்களின் புனிதத்தலமும் ஒரே இடத்தில் அமைந்துபோனது, பாசிச சிந்தனை என்பது தனது சுயநலத்திற்காக எதுமாதிரியும் உருமாறும் என்பதற்கு சாட்சி ஜெர்மன் கிறித்தவர்கள் கொன்றொழித்த யூதர்களை இன்று அமெரிக்க கிறித்தவர்கள் பாதுகாக்கின்றனர். நாஜிகளால் கொடும் சித்ரவதைக்குட்படுத்தப்பட்ட யூதர்கள் இன்று பாலஸ்தீனம் என்ற நாட்டையே கபளீகரம் செய்யப் பார்க்கின்றார்கள். இங்கேதான் அனிதாவின் மனசாட்சி கேள்வி எழுப்பத் துவங்குகிறது சக மனிதனை வெறுக்க கற்றுக்கொடுக்கும் எந்த மதத்தையும் நாட்டையும் தத்துவங்களையும் கேள்விக்குட்படுத்துகிறாள்.

மனிதநேயம் ஒன்று தான் மானுடகுலத்திற்கான தீர்வு என்று கண்டுகொண்டு சகிப்புத்தன்மையும் அன்பும் நிரம்பிவழியும் இந்தியா போன்ற நாடுகளில் எதிர்வரும் காலத்தில் இத்தகைய அபாயம் நேர்ந்துவிடக்கூடாதென்று எண்ணி இந்தியா திரும்பி குஜராத் மதக்கலவரத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து களப்போராளியாக பங்குபெறுகிறாள். குஜராத் கலவரத்தில் நிர்க்கதியாக தாய் தகப்பனை இழந்த பெண்ணை தனது மகனுக்கு மணம் முடித்து வைக்கின்றாள். என்று கதை முடிகின்றது.

இந்திய மதங்களும் தத்துவமரபும் அன்புவயப்பட்டது என்பதனை தனது வாழ்வியல் வழியாக உணர்கிறார் அது எக்காரணம் கொண்டும் சிதைந்துவிடக்கூடாது என்பதில் உறுதிகொண்டு போராட்ட களத்திற்கு பங்குகொண்டு வீதிக்கு வருகிறார். ஹிட்லர் பெயரால் நாஜிப்படைகள் நிகழ்த்திய சக மனிதர்களுக்கு எதிரான உலகஞ்சும் படுகொலைகளை இனி பூமிபந்தில் எவரும் இனமொழி மதம் சாதி என்று எதற்கொன்றாகவும் நிகழ்த்திவிடக்கூடாது அன்பொன்று மட்டுமே மனிதகுலம் தழைக்கும் அழகிய விதை என்பதை தனது நாவல் மூலம் எழுதிச் செல்கின்றார் நாவலாசிரியர். கன்னட மொழியில் எழுதப்பட்ட நாவலை மிகச்சிறப்பான கவித்துவம் பொங்கும் அடர்த்தியான மொழியில் மொழியாக்கம் செய்து வாசிப்புச் சுகத்தை நமக்கு தந்திருக்கின்றார் எழுத்தாளர் கே. நல்லதம்பி அவருக்கு பாராட்டுக்கள்.

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை-625020
9965802089

மீள்சரித்திரம்…. கவிதை – து.பா.பரமேஸ்வரி

மீள்சரித்திரம்…. கவிதை – து.பா.பரமேஸ்வரி




கோட்சேவைக் கூட திருத்திட லாம்…

காந்தி மறுமுறை பிறப்பாரா…

சாணிப்பால்  மொத்தை சௌக்கடி  நூறு புசித்திடலாம்..
அம்பேத்கர் இங்கு  உதிப்பாரா…

அடுக்களைக்கு விறகாகி  ஆதிக்க இரையாகலாம்
பாரதி எழுந்து வருவானா..

நூறு ஆண்டு கூடுதலாய்..
பரங்கியர்  பல்லக்குச் சுமக்கலாம்.
நேதாஜி மீண்டும் கிடைப்பாரா..

பட்டினி உண்டு ஆண்டானுக்கு  பழுதாகலாம்
மார்க்ஸ் புரட்சி வெடிக்குமா..

சிறுத்தும் கருத்தும் வாழ்கிறோம்..
புலங்கள் பலதும் பெயர்கிறோம்..
மீண்டும் புலருமா ஆகஸ்டு பதினைந்து …

து.பா.பரமேஸ்வரி
சென்னை

நூல் அறிமுகம்: ச.தமிழ்ச்செல்வனின் ’கேட்டதால் சொல்ல நேர்ந்தது’ – பிரபாகர் பாண்டியன்

நூல் அறிமுகம்: ச.தமிழ்ச்செல்வனின் ’கேட்டதால் சொல்ல நேர்ந்தது’ – பிரபாகர் பாண்டியன்




நூல் : கேட்டதால் சொல்ல நேர்ந்தது
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
விலை : ரூ.₹200/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

கேட்டதால் சொல்ல நேர்ந்தது என்ற நூலில் கேள்விகள் கேட்ட அனைத்து நெறியாளருக்கும் மிகுந்த நன்றியை நான் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் இந்த நேர்காணல் தொகுப்பு என்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு எழுத்து பாரம்பரிய மிக்க குடும்பத்தின் மிக முக்கிய எழுத்தாளராக இருந்துவரும் திரு.தமிழ்ச்செல்வன் அவர்களின் பல்வேறு காலகட்டத்தில் நடத்தப்பட்ட நேர்காணல்களாகும்.

இந்த நேர்காணலில் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்க்கையின் பரிணாமங்கள் குறித்த கேள்விகளுக்கு நேர்மையான முறையில் அவர் பதிலளித்துள்ளார். 13 நேர்காணல்களில் அவரது முழுமையான ஆளுமையைப் புரிந்துகொள்ளும் விதத்தில் பதில்களாகப் பகிர்ந்துள்ளார்.

இந்த நேர்காணல்களில் பெரும்பாலான கேள்விகள் அவரது சிறுகதை குறித்தே இருந்துள்ளன. ஏனெனில் அவரது சிறுகதைகளின் தாக்கம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதுதான் சொல்லாமல் விளங்கும் செய்தி ஆகும். கிட்டத்தட்ட எல்லா நேர்காணல்களிலும் தவறாது ஏன் சிறுகதை எழுதவில்லை என்பதும் அதற்கு அவர் இன்னமும் எழுதாமல் 150,200 கதைகளும் உள்ளன என்றால் அரவது மேதமையை புலமையை வியக்காமல் இருக்க முடியாது.

மேலும் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் பார்வை மற்றும் சிந்தனைக்கு ஒரு சான்றாக பண்பாடு குறித்த கேள்வியில் அவர் சொன்ன பதில் இன்னமும் பண்பாடு என்பது ஒற்றை பொருளில் தான் புரிந்து கொள்ளப்படுகிறது. மனிதன் பரிணாம வளர்ச்சியில் அவன் சமூகமயமாதலின் போது தேவைப்பட்ட பண்பாடு என்பது வேறு. தற்போது முதலாளிகளின் லாப உற்பத்திக்கேற்ற அடிமைகளினை உருவாக்கும் விதிமுறைகளையும் அதனால ஏற்படுத்தப்படும் ஒழுங்குகளையும் தான் பண்பாடு என்றால் அது இப்போது தேவை இல்லை என்பது சமூகம் மற்றும் கலாசாரத்தின் மீது அவர் கொண்டுள்ள மக்கள் நலன் சார்ந்த எழுத்தாளர் என்பதை காட்டுகிறது.

ஒரு பொதுவுடைமை இயக்கத்தின் பிரதிநிதி என்றால் அவர் கடவுள் மறுப்பாளர் என்றும் அதன் மீது தீவிர எதிர்ப்பு வெறுப்பு கொண்டவர் என்கிற கருத்தை அவர் மாற்றி அமைகிறார். எவ்வாறெனில் கடவுள் என்பதில் அவர் மக்களின் கடவுள் நம்பிக்கையை பற்றி பேசுகிறார். “இங்கு கருணை இருந்திருந்தால் மனிதன் புதிதாக ஒரு கருணை வடிவத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை” என மார்க்சின் கருத்தினை எளிமையான முறையில் விளக்கம் கொடுக்கின்றார். கடவுள் நம்பிக்கை மற்றும் மதம் ஆகிய இரண்டின் எல்லைகளையும் இதில் கடவுள் நம்பிக்கை எவ்வாறு அரசியல்படுத்தப்படுகிறது என்பதையும் எளிமையாக சொல்கிறார். இது போன்றே சாதி குறித்தும் அவர் சாதியையும் அரசியல் படுத்தப்படுகிறது என்பதையும் விளக்குகிறார். ஒட்டு அரசியல் இருக்கும் வரை மதம் மற்றும் சாதி என்பது அரசியல் செய்வோரின் பாதுகாப்பு கவசமாகவும், ஒட்டு பெறும் அட்சய பாத்திரமாகவும் உள்ளது என்கிறார்.

கல்வி குறித்த கேள்விகளுக்கு கல்வி எவ்வாறு இன்று மக்களுக்கு புகட்டப்படுகிறது என்பதையும் அது எவ்வாறு மக்களின் சிந்தனையை மழுங்கடித்து கடிவாளம் போட்ட குதிரை போல இளைஞர்களையும் ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கூறியுள்ளார். பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி கற்பிக்கும் முறைகளையும் அவைகளை நமது நாட்டில் நடைமுறைப்படுத்த உள்ள சாத்தியக்கூறுகளையும் விவரிக்கின்றார்.

இளம் படைப்பாளர்களுக்கு தனது வாசிப்பு மற்றும் தனது எழுத்து அனுபவங்கள் தன்னை எழுதத் தூண்டிய அனுபவங்கள். தனது அஞ்சல்துறை அனுபவம் அறிவொளி திட்டப்பணிப் பயணம் குறித்தவை தனது இளமைக்கால அனுபவங்கள் யாவும் பயனுள்ள விதத்தில் பகிர்ந்துள்ளார். தனது அபிமான எழுத்தாளரான கு.அழகிரிசாமி அவர்களின் எழுத்தும் அவரது எழுத்து தன்னைப் பாதித்த அம்சங்கள் குறித்தும் அவரைப் போல வெறும் நாய் மற்றும் அன்பளிப்பு போன்ற ஒரு நூறு கதைகளாவது எழுதிவிடமாட்டமா என்கிற ஏக்கத்தையும் அவர் வெளியிடாமல் இல்லை.

தனது இலக்கிய பயணத்தில் தனது இணையரது பங்கு பற்றி கூறும்போது அவர் தனது இணையர் பொருளாதார தேவைகளையும் குடும்பத்தையும் நன்றாக கவனித்துக் கொண்டதாலேயே தன்னால் இந்த இலக்கிய பணியை சிறப்பாக செய்ய இயலும் என்றவர், தாமும் பெண் விடுதலை குறித்தும் பெண் சுதந்திரம் எவ்வாறு குடும்ப அமைப்பிற்குள்ளிருந்து துவங்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். மேலும் ஆண்கள் தமது ஆண் என்கிற எண்ணத்தை வீட்டின் சமையலறையில் இருந்து பெண்களுக்கு முழு விடுதலை வழங்கவேண்டும் என்பதை சொல்லியதோடு மட்டுமல்லாது தமது வீட்டிலும் செயல்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த நூலை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வானது சிறுவயதில் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு ஏற்பட்டதை போலவே இருந்தது. அவர் தமது அம்மாவின் தந்தை (தாத்தா) வீட்டிற்க்கு சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களை சொல்லும் போது என்னுடைய சிறுவயது நினைவுகள் நிழலாடியது, என்னை அந்த பால்ய வயதிற்கே கூட்டிச்சென்றது இந்த நூலின் மறக்க இயலாத பக்கங்களாகும்.

இலக்கியம் குறித்து சொல்லும் பொது “வாழ்வைப் புரிந்து கொள்வதற்கான, மனித மனங்களைப் புரிந்து கொள்வதற்கான, மனிதன் கண்டுபிடித்த ஒரே சாதனம், இலக்கியம்தான்” என கூறுகிறார் இலக்கியம் குறித்து இதற்கு மேல் எதுவும் கூறிவிட இயலாது என எண்ணுகிறேன்.

எழுத்தாளர்கள் குறித்து: “குழந்தைகளுக்கு தனது துயரம் மற்றவர்களின் துயரம் என்று தெரியாது, அனைவரது துயரத்தையும் தனதாகவே நினைப்பார்கள். அதனால் தான் எழுத்தாளர்களுக்கு குழந்தை மனநிலை வேண்டும் என்று சொல்வார்கள்” என எழுத்தாளர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என தனது மனதினையும் கன்னாடியைப் போல பிரதிபலித்துள்ளார் எனக் கொள்ளலாம்.

மேலும் இந்த நூலில் நமக்கு அரசியல் குறித்த கருத்தாகட்டும், காதல், மதம், கடவுள் நம்பிக்கை, பொதுவுடைமை இயக்கம், சிறுகதை, கட்டுரை தொகுப்பு, போன்ற எது குறித்த கருத்துகளுக்கும் இங்கு நமக்கு பரிந்துரைகளும் புரிதல்களும் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக கூறுவேன்.

நன்றி:
பிரபாகர் பாண்டியன் முகநூல் பதிவிலிருந்து…..

வாத்தி தனுஷூம்… நினைவுகள் அழிவதில்லை நாவலில் வரும் மாஸ்டரும்… – ஹேமாவதி

வாத்தி தனுஷூம்… நினைவுகள் அழிவதில்லை நாவலில் வரும் மாஸ்டரும்… – ஹேமாவதி




பொழுதுபோக்குக்காகப் பார்க்கும் படத்தில் ஒரு நல்ல கருத்தை சொல்வது என்பது அபூர்வம். அப்படி கருத்து மட்டும் சொல்லாமல் நடைமுறையில், ஏற்படும் சிக்கலை எப்படி எதிர்கொண்டு போராடுவது என்பதை சொல்லும் படமாக தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் உள்ளது.

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது!” என்ற காரல் மார்க்சின் வார்த்தையை நினைவுப்படுத்தும் வகையில் வாத்தி படம் இருந்தது.

அனைவருக்கும் சமமான கல்விக்காக போராடுவது, தனியார்மய கொள்ளைக்கு எதிராக களத்தில் நிற்பது, இதனால் வேலை இழந்து பழிவாங்கப்பட்டாலும் தான் கொண்ட லட்சியத்தை நோக்கி பயணித்து வெற்றி பெறுவதுதான் வாத்தி கதை சுருக்கம். சிறந்த திரைப்படத்தை எடுத்த இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகள்…

ஒரு ஆசிரியர் நினைத்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்த்த முடியும் என்பதை பார்க்கும்போது 1940களில் இந்திய விடுதலைக்கு முன் கேரள மாநிலம் கையூரில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதிலும் ஒரு மாஸ்டர் இருப்பார் அவர் ஒரு கம்யூனிஸ்ட். அவரின் செயல்பாட்டால் ஏற்படும் ஒரு தியாக வரலாரே “நினைவுகள் அழிவதில்லை” என்ற நாவல்.

ஆங்கிலேயர்களின் தேவைக்காக இந்திய மக்களுக்கு கல்வியை தர நினைத்தனர். ஆனால் அப்போது இந்திய கிராமங்களை ஆளும் பண்ணையார்களும்,நிலப்பிரபுக்களும் ஏழை எளிய மக்களுக்கு கல்வி சென்றடைவதை விரும்பவில்லை.

ஏழை எளிய மக்களை குடும்பத்தோடு உழைப்பில் ஈடுபடுத்தி அவர்களை முதலாளிகளின் கட்டுப்பாட்டில் அடிமைகளாகவும் விசுவாசிகளாகவும் வைத்திருந்தனர்.

இந்த நிலையில்தான் விவசாய மக்களின் அறியாமையை போக்க அவர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி வழியாக நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்தியம் எப்படி எல்லாம் ஏழை மக்களை சுரண்டுகிறது என்பதை விளக்கும் விதத்தில் கம்யூனிஸ்டுகள் மக்களிடம் போதிப்பதை ஒரு கடமையாகவே செய்து வந்தனர்.

அப்படி கல்வி போதிக்க வந்த மாஸ்டர் சாதாரண விவசாயக் கூலிகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி மக்களின் அறியாமையை போக்கி கையூரை உலக சரித்திரத்தில் இடம் பெற வைத்த ஒரு நீண்ட வரலாறுதான் கையூர் தியாகிகள் வரலாறு.

கல்வி அறிவு மற்றும் அரசியலை கற்று தந்து, ஸ்தாபனமாக்கி தங்களின் உரிமைகளுக்காக ஒற்றுமையாக செயல்பட்டு நிலப்பிரபுத்துவத்தை எதிர்க்க விவசாயிகள் போராடுகின்றனர்.

இதனால், அதிகாரமும் ஏகாத்தியபத்தியமும் நிலப்பிரபுவத்துவமும் ஒன்றிணைகிறது .

மாஸ்டரிடம் கல்வி கற்ற நான்கு இளைஞர்கள் அப்பு, சிருகண்டன், குஞ்ஞம்பு, அபுபக்கர் போன்ற தோழர்கள்

ஏகாதியத்தியத்தை எதிர்த்ததால்

29.03.1943ல் தூக்கிலிட்டனர். திரைப்படத்தில் கிடைக்கும் வெற்றி நிஜ வாழ்க்கையில் கிடைப்பதில்லை. ஆனாலும் அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்கள் தங்களின் உயிரை துச்சமாக நினைத்து போராடிய இவர்கள் புரட்சியாளர்களே…

வாத்தி திரைப்படத்தில் ஆசிரியராக வரும் தனுஷ் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக சீர்திருத்தவாதியாகத்தான் உணர முடிகிறது. இப்படம், களத்தில் வேலை பார்க்கும் செயல்பாட்டாளர்களுக்கு பெறும் உற்சாகத்தையும் நன்னம்பிகையையும் ஏற்படுத்துகிறது. எந்த பிரச்சனை வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க ஊக்கமளிக்கிறது.

அதேபோல நினைவுகள் அழிவதில்லை நாவல் புத்தகத்தில் வரும் மாஸ்டரை பார்க்கும்போது சமூக மாற்றத்தை புரட்டி போடும் புரட்சியாளனாக பயணிப்பது எம் போன்ற தோழர்களுக்கு ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் மனநிறைவு ஏற்படுகிறது.

இந்திய விடுதலை முன் தொடங்கிய இந்த ஏகாதிபத்தியம் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறை இன்று வரை தொடர்கிறது. காலங்கள் மாறினாலும் வடிவங்கள் மாறினாலும் அதன் சுரண்டல் மட்டும் மாறவில்லை என்பதே நிதர்சனம்.

ஹேமாவதி

கானல் நீர் கவிதை – பேரா. எ. பாவலன்

கானல் நீர் கவிதை – பேரா. எ. பாவலன்




அந்த உலகம்
அவ்வளவு அழகாக இருந்தது.
எனக்கானவற்றை நானே
உருவாக்கிக் கொள்கிறேன்.

ஒருநாளும்
அந்த வாழ்க்கையை
நான் வெறுக்கவில்லை.

அச்சம்
பயம்
கிஞ்சித்த
அளவேனும் இல்லை.
எனக்கு வாழ பிடித்திருந்தது

நிறவேற்றுமை
சாதிப் பாகுபாடு
பெண்ணடிமை
வன்புணர்வு
வன்கொடுமை
தீட்டு
குடிநீரில் மலம் கலப்பது
இரட்டைக் குவளை
மலச்சட்டி தூக்கிச் சுமப்பது
சாணிப்பால்
சவுக்கடி
ஊர் சேரி என்று
எந்த கொடுமையும்
நடந்ததாக வரலாறு இல்லை.

கடவுளைப் பற்றிய
தேவை எழவில்லை
அதனால் மதச் சண்டை
அங்கு இல்லை.

குரோதமான
வன்மம் நிறைந்த
மனிதர்களை
அங்கு
நான் கண்டதே இல்லை.

பெண்கள்
அவர்கள் விரும்பியவரை
காதலித்தனர்.
அவர்கள் காதலுக்கு ஒருநாளும்
ஒருவரும் யாரும் தடையாக
இருந்தது இல்லை

குழந்தைகளை
குழந்தைகளாகவே
பார்க்கிறார்கள்.
மறந்தும் ஒரு நாளும்
பாலுணர்வுக்கு
துன்புறுத்தப்படவில்லை.

பாலின வேறுபாடும்
வயது வித்தியாசமின்றி
அனைவரும் அனைவரிடமும்
நட்புக் கொண்டிருந்தனர்.

யாரும்
ஒதுக்கப்பட்டவர்கள்
ஓரம் கட்டப்பட்டவர்கள்
ஒடுக்கப்பட்டவர்கள்
என்ற சொற்களை
அறிந்ததில்லை.

நாங்கள்
நினைத்த இடங்களுக்கு
சுதந்திரமாகச் சென்று வந்தோம்.
ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது
அன்பு பாராட்டி
ஆறத்தழுவிக் கொண்டோம்.

எதிர்காலம் குறித்த
எந்தக் கவலையும் இல்லை.
ஆனால்
எங்களுக்கான கடமை
இருப்பதை உணர்ந்தோம்.

நாங்கள்
ஒவ்வொரு நாளும்
விடியலுக்குப் பிறகு
உயிருடன் தான் இருக்கிறோம்
என்ற எந்த நிர்பந்தத்திற்கும்
ஆளாக்கப்படவில்லை.

நான்கு வர்ணங்களைப் பற்றி
நாங்கள் கேள்விப்பட்டதில்லை.

அதனால்… அதனால்…
பிரம்மா
விஷ்ணு
சிவன்
போன்ற கடவுளர்களும்
புத்தன்
இயேசு
நபி
போன்ற போராளிகளையும்
நாங்கள் அறிந்திருக்கவில்லை
நாங்கள்
விரும்பிய
கல்வியை
கற்றோம்

நாங்கள்
விரும்பிய
உணவை
உட்க்கொண்டோம்.

எங்கள்
கரங்களிலிருந்து
புத்தகங்கள்
களவாடப்படவில்லை.

எழுதுகோல்
சுதந்திரமாக
எங்கள்
கரங்களில்
தவழ்ந்து விளையாடியது.

உழைப்பு மீது
அத்தனை மதிப்பு
மிக்கவர்களாக இருந்தனர்.
உழைப்புக்கேற்ற
ஊதியம் கிடைத்தது.
எந்த சுரண்டலுக்கும்
உள்ளாக்கப்படவில்லை.
எங்களுக்குள்
எந்த வர்க்க பேதமும்
உண்டாகவில்லை.

என்
புல்லாங்குழலிருந்து
வரும் இசையைப் போலவே
எல்லா திசைகளிலும்
நீக்கமர கலந்திருந்தோம்.

மானுட தத்துவத்தின்
அடையாளமாகவே
மட்டும் இருந்தோம்.

சொல்லப்போனால்
போலி தேசபக்தர்களின்
பாரத மாதாவுக்கு ஜே!
என்கின்ற வெற்றுகோசம்
இல்லாமல் இருந்தது.

பேரா. எ. பாவலன்
drpavalan@gmail.com

இசை வாழ்க்கை 85: இசையின் மொழிகள் கேட்கக் கேட்க…. – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 85: இசையின் மொழிகள் கேட்கக் கேட்க…. – எஸ் வி வேணுகோபாலன்




வாணி ஜெயராம் அவர்கள் மறைந்த அன்று ஒரு கூட்டத்திற்குச் சென்று விட்டு இரவு திரும்புகையில், ‘தூரிகை எரிகின்ற போது’ என்ற வரியைக் கண்ணீரோடு பாடத் தொடங்கினேன். ஊபர் இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்த நண்பர், ஓர் இளைஞர். வாணியம்மா பாட்டு தானே சார் அது.. என்று கேட்டார். இரண்டு கிலோ மீட்டருக்குக் குறைந்த அந்தப் பயணத்தில் மேற்கொண்டு பத்துப் பாடல்களிலிருந்து வாணியின் சிறப்பு ஒலிக்குறிப்பை விளக்கும் இடங்கள் பாடிக் கொண்டு வந்தேன். தொடர்ந்த உரையாடலில், தாங்கள் கேட்க முடியாது இழந்த குரல் அது என்ற வருத்தம், சற்று கோபம் மேலோங்க ஒலித்தது அவரிடமிருந்து.

வாணி அவர்களைப் பற்றிய ஒரு தனிக் கட்டுரையை நண்பர் அழகிய சிங்கர், நவீன விருட்சம் மின்னிதழ் பக்கங்களில் உடனே வெளியிட்டிருந்தார், அண்மையில். ‘இன்னும் வாணியம்மா குரலிலிருந்து மீளவே முடியவில்லை, தோழர். அவர் குரலை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று எழுத்தாளர் – மொழி பெயர்ப்பாளர் கே வி ஜெயஸ்ரீ பதில் அஞ்சல் அனுப்பி இருக்கிறார். வாணி ஜெயராம் நினைவில் ஆழ்ந்து இருக்கும் பல அன்பர்கள் வாட்ஸ் அப்பில் பதில் போட்டுள்ளனர்.

வாணி ஜெயராமின் குரல் வளம், அவரது கற்பனைத் திறம், இசை பொழியவென்றே அவருக்கு வாய்த்திருந்த அசாத்திய குரல் நாண்கள் இவற்றை அபாரமாகப் பயன்படுத்திய இசை அமைப்பாளர்கள் என்றென்றும் பேசத்தக்க திரைப்பாடல்களை வழங்கியுள்ளனர்.

https://youtu.be/sVzW9JGEc5s

எம் எஸ் வி இசையில் அந்த 7 நாட்கள் படத்தில் மலேசியா வாசுதேவனோடு இணைந்து வாணி ஜெயராம் இசைத்த, ‘எண்ணி இருந்தது ஈடேற…’ பாடலின் சரணங்கள் காற்றில் மிதக்க வைப்பவை. காதல் ரசம் ததும்பும் ரகசிய பரிபாஷைகள் பரிமாறும் குரலில் வாசுதேவனும், நாயகனை வசீகரிக்கும் துள்ளல் நாயகிக்கான பாவங்களை வெளிப்படுத்தும் குரலில் வாணியும் சேர்ந்து வழங்கிய அந்தப் பாடல் எண்பதுகளில் வானொலியில் ஒலித்தபடி இருக்கும். ‘புதிய ராகம் கண்டு பிடிக்க ரெண்டு வருஷம் நினச்சேன்…உன் குரலைக் கேட்டபிறகு தானே ராகம் கண்டு பிடிச்சேன்’ என்ற வரியில், அந்த கண்டு பிடிக்க ரெண்டு வருஷம் எதுகை நயத்தின் அழுத்தம் பொங்க மலேசியாவும், ‘முந்தா நேத்து சாயங்காலம் முல்லப் பூவத் தொடுத்தேன்’ என்ற சுவாரசியமான வரியைப் பிடிக்கும் வாணி, ‘உன் பாட்ட கேட்டுக் கெறங்கிப் போயி நாரத் தானே முடிஞ்சேன்’ என்னும் வரியில், அவரின் குரலே கிறங்கடிக்கும்.

‘சாரல் மேகம் சரசம் பேசி மனச வந்து நனைக்கும்’ என்று வாணியின் குரலில் தொடங்கும் இரண்டாம் சரணம், மிகுந்த சிருங்காரம். ‘பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்’ என்ற இடத்தில் ஒரு மௌன சிரிப்பை அப்படி கொணர்ந்திருப்பார் வாணி. ‘நேரம் பார்த்து தேதி பார்த்து…’ என்று இணையும் மலேசியா வாசுதேவன், பாடல் முழுக்க காதல் பித்தேறிய மென்குரலில் அசத்தி இருப்பார். பாடல் நெடுக தாளக்கட்டு (தபலா பிரசாத் ஆக இருக்குமோ) அத்தனை சுகமாக ஒலிக்கும். அருமையான பாடல், கவிஞர் வைரமுத்துவின் ஆக்கம்.

தான் பாடிய பாடல்கள் அனைத்தும் அவரது உள்ளத்திற்கு இதமானவை தான். ‘நீராட நேரம் நல்ல நேரம்’ பாடலை அவர் அத்தனை நேசித்திருக்கிறார். நடனக் காட்சிக்காக அவர் பாடிய பாடல் அது. தயங்கித் தயங்கி அதைக் கேட்கிறார் நேர் காணல் செய்பவர். ஆனால், வாணி விகல்பமில்லாமல் பதில் சொல்கிறார். அந்தப் பாடல் பல்லவியை அத்தனை உற்சாகமாக இசைக்கும் அவர், ‘இந்தப் பாட்டில் சரணம் இன்னும் சிறப்பாக இருக்கும்…’ என்று அதையும் அற்புதமாக இசைக்கிறார்.

எம் எஸ் வி அபாரமாக இசையமைத்த அந்தப் பாடலில் வாணியின் இசை ஞானம் அசாத்திய வகையில் வெளிப்படும். அவரது ராக ஆலாபனையும், சங்கதிகளும், சொற்களின் உச்சரிப்பும் அதற்கு முழு இடமளித்து ஒலிக்கும் இசைக்கருவிகளுமாக தமிழ்த் திரையில் வித்தியாசமான பாடல்களில் ஒன்றாக அமைந்தது கவிஞர் கண்ணதாசன் புனைவில் உருவான அந்தப் பாடல்.

தூரிகை எரிகின்ற போது …../எஸ் வி வேணுகோபாலன்

தூரிகை எரிகின்ற போது ….கட்டுரையை வாசித்துவிட்டு, அதில் தங்கள் மனத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று இடம் பெறவில்லையே என்று அஞ்சல் ஊழியர் இயக்கத்தின் தோழர் மோகனும், இந்தியன் வங்கி ஓய்வு பெற்ற உதவி பொது மேலாளர் கிருஷ்ணனும் மிகுந்த ஆதங்கத்தோடு கேட்ட பாடல், மதங்களைக் கடந்து ரசிகர்கள் உள்ளத்தில் இடம் பெற்ற ஒரு பக்திப் பாடல். அதுவும் எம் எஸ் வி இசையமைப்பில் விளைந்தது தான்.

‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்….’ என்ற பாடல் முற்றிலும் வேறு ஒரு தளத்தில் ரசிகரைக் கொண்டு குடியமர்த்தும் தன்மை மிக்கது. ஒட்டு மொத்தப் பாடலிலும் வாணி ஜெயராம் குரல், தேவாலய மணியின் ஓசை இன்பத்தின் இசை வடிவமாகவே ஒலிப்பதை உணர முடியும்.

பொதுவாக கோரஸ் இசைக்கு, தேவாலய இசைக் குழுவின் பாடகர்களை எம் எஸ் வி அழைத்துப் பாட வைப்பார் என்று சொல்வார்கள். இது தேவகுமாரன் பற்றிய பாடல். ஞான ஒளி உள்ளிட்ட படங்களில் செய்த பரிசோதனைகளுக்கும் அப்பாற்பட்டு இந்தப் பாடலை இன்னும் சிறப்பாக சிந்தித்திருக்கிறார் மெல்லிசை மன்னர் என்று தோன்றும்.

தொகையறா அமைக்கும் சமயங்களில் பாடலின் ஒட்டுமொத்த எல்லைகளை அது தொட்டுக் காட்டிவிடும் வண்ணம் தான் அமைப்பார்கள். அதில் எம் எஸ் வி அம்சமாக மெட்டமைத்துவிடுபவர். புனித அந்தோணியார் படத்தின், ‘மண்ணுலகில் இன்று தேவன்’ பாடலுக்கான தொகையறாவிலேயே எந்த உச்ச இடம் தொடப் போகிறோம் சரணங்களில் என்பதை வாணி அப்போதே ராக சித்திரமாகத் தீட்டிவிடுவார்.

வாணி ஜெயராம், பல்லவியை எடுக்கும் இடம், முற்றிலும் பரவசமிக்க ஒரு பயணத்தின் பிறப்பிடமாகத் தொடங்கும். ‘மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்….’ என்ற வரியில் எத்தனை உற்சாகப் பிழிவு…’நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறான்’ என்ற வரியில் எத்தனை கனிவு! ‘எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே…’ என்ற வரியில் அவர் வழங்கும் கருணையின் நீட்சி, ‘ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வன் ஆகிறான்’ என்ற தணிப்பில் அவர் பரிமாறும் காட்சி…கண்ணீர் பெருக்க வல்லது. வரிகளைத் திரும்ப இசைக்கையில் சரளமாகப் பெருகும் சங்கதிகள் உள்ளத்தைக் கரைப்பவை.

‘மழலை மொழிகள் கேட்கக் கேட்க…’ என்ற முதல் சரணத்தை அவர் கொண்டாட்டமாக எடுக்கிறார். ‘மனது கொள்ளாதோ…’ என்ற இரண்டு சொற்களுக்கு எத்தனை மந்திரம் போடுகிறது அவரது குரல்…மனம் கொள்ளாத இன்ப ஊற்று அது. ‘மடியில் வந்து அமரும் போது’ என்பதில் அந்தப் ‘போது’ எத்தனை தீர்மானமான அழுத்தம்! ‘மயக்கம் கொள்ளாதோ…’ என்பது ஒரு குழந்தைமை கொண்டாடும் குதூகலம் அன்றி வேறென்ன… ‘பார்வை பட்டால் போதும்….’ என்ற வரியின் ஆவேசம், ‘நம் பாவம் யாவும் தீரும்’ என்பதில் தானே அதைத் தணிக்கவும் செய்கிறது. ‘கைகள் பட்டால் போதும்…’ என்பதில் உருளும் சொற்கள், ‘கவலை எல்லாம் தீரும்’ என்ற பிடிமானத்தில் நிறைவு தந்து, பல்லவியை நோக்கி நகர்கிறது. தபேலா என்னமாக அங்கே குரலோடு பேசிக் கொண்டே ஜதி போட்டுச் செல்கிறது.

இரண்டாம் சரணம் நோக்கிய திசையில் இசைக்கருவிகள் வாணியின் குரல் பாங்கிற்கான கதியிலேயே துள்ளாட்டம் போட்டுப் போகின்றன. ‘அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை’ என்ற வரியை வாணி இழைக்கிறார். ‘அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை’ என்கிற இடம் நம்பிக்கையாளர்களை இன்னும் பரவசப்படுத்தும் இடம். ‘கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்…’ என்ற நீட்சியில் வாணியின் குரலினிமை முன்னுதாரணங்கள் அற்று ஒலிப்பது. ‘குலம் தழைக்கக் குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்’ என்ற நிறைவு கொண்டாடிக் கேட்க வேண்டியது. அங்கிருந்து பல்லவிக்கு தேவகுமாரனை வரவேற்று அழைத்துச் செல்வதுபோலவே தாளக்கட்டு அத்தனை அமர்க்களமாக வாணியின் குரலை உள்வாங்கிக் கொண்டு போய் நிறைவடைய வைக்கிறது. தஞ்சைவாணன் எழுதிய பாடலிது.

உலக வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கஷ்ட நஷ்டங்களுக்கு விடை தெரியாது தவிக்கும் பாமர மக்கள், இதயமற்ற உலகின் இதயமாக, ஆன்மா அற்ற உலகின் ஆன்மாகவாக, தங்களது ஏக்கப் பெருமூச்சாகப் பற்றிக் கொள்ளும் இடத்தில் மதத்தை அடையாளப்படுத்துகிறார் கார்ல் மார்க்ஸ்.

இலக்கியமும், இசையும், கலையும் உயிர் இன்பத்தை, உயிர்களின் தவிப்பை, உயிர்த் தேடலை, உயிராக மீண்டும் மனிதர்கள் முன் படைக்கின்றன. உயிர்ப்புள்ள கலைகள் மனிதர்களை அவர்தம் நெருக்கடிகளில் இருந்து சற்றே விலகி நின்று விடுவித்துக் கொள்ள ஓர் இளைப்பாறுதல் வழங்குகின்றன. இதில் இசை முக்கிய இடத்தைப் பெறுகிறது.

மறைந்துவிட்ட மனுஷியின் குரலை மறக்கவே முடியாது என்று போட்டி போட்டுக் கொண்டு வாணி ஜெயராம் பாடல்களை நோக்கிய தேடலில் இறங்கிக் களிப்புறுவது, அவரவர் குடும்ப முன்னோடிகளின் மடியில் மானசீகமாகக் கண்ணுறங்கத் துடிப்பது போலவே தோன்றுகிறது. இசையின் மாய மந்திர ஜாலம் அது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

அறிவியல் தின சிறப்புக் கட்டுரை – 2

அறிவியல் தின சிறப்புக் கட்டுரை – 2



அறிவியலை அறிவியலே வெல்லும் என்றார் பிளாட்டோ
 ஆயிஷா. இரா. நடராசன்

அறிவியலின் மகத்தான வெற்றி என்பது அதன் கண்டுபிடிப்புகளில் இல்லை…. அன்றாட வாழ்வின் நம்பிக்கைவாத விவாதங்களை முடிவற்று எடுத்துச் செல்வதில்தான் அதன் வெற்றி இருக்கிறது.
– ஸ்டீபன் ஹாக்கின்ஸ்

அறிவியலை அறிவியலே வெல்லும் என்றார் பிளாட்டோ இது நடந்து பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன. இப்படி யோசித்துப் பாருங்கள். பகலும் இரவுமற்ற இருள் காலைப்பொழுது….. சிந்தனைக்கும் கருத்தாக்கத்திற்கும் இடையே… அறிதலுக்கும் புரிதலுக்கும் நடுவில், மனதிலிருந்து எழுந்து நோக்கி பயணித்த தத்துவார்த்த அணிவகுப்பின் ஊடாக பிளாட்டோ முன்வந்து நின்றார் கடவுள். பாவம்.

‘நான் கடவுள்…. உமது கடவுள். உன் உள்ளே நல்லது அனைத்தையும் சிந்திக்க வைப்பவன்…. அனைத்தையும் ஆராயும் உமது தார்மீக தத்துவம் என்னை புறந்தள்ளியது ஏன்?’

Science day article part 2 for science day Plato said that science conquers science article by Ayesha Natarasan அறிவியல் தின சிறப்புக் கட்டுரை - 2 அறிவியலை அறிவியலே வெல்லும் என்றார் பிளாட்டோ

பேரறிஞன் பிளாட்டோ தனது குறிப்புகளில் இருந்து பார்வையை எடுக்கவே இல்லை. ‘ஓ’ என்றான் முதலில். நீண்ட மவுனத்திற்கு பின் விடைக்காக காத்திருந்த வருகையாளரிடம் ‘உமது கேள்விக்கு நான் பதில் அளிக்கும் முன் இந்தக் கேள்விக்கு உம்மிடம் பதில் இருக்கிறதா?’ என்றான்.

அவன்.. பிளாட்டோ எந்த எதிர்வினைக்கும் காத்திருக்காமல் தனது கேள்வியை முன்வைத்தான். ‘நல்லது என்கிறீரே…. அது நல்லது என்பதால் நீர் முன்மொழிகிறீரா….  அல்லது நீர் முன்மொழிவதால் அது நல்லது ஆகிறதா?’

கடவுள் ஒரு நொடி யோசிக்கிறார்.. ‘நான் முன்மொழிகிறேன்… அதனால் அது நல்லதாகிறது’

பிளாட்டோவின் முக ஜாடையை கடவுளால் கிரகிக்க முடியவில்லை. ‘விடை தவறு’ என்றான். ‘நீர் முன்மொழிவதால் நல்லது என்பது நல்லது ஆகிறது என்றால் குழந்தைகளை சித்திரவதை செய்யலாம் என்று நீர் சொல்லிவிட்டதாக யாராவது புளுகினாலும் நல்லதாகி விடாதா…. முட்டாள்தனம்’ என்றான் பிளாட்டோ.

கடவுள் சமாளித்தார். ‘சும்மா உம்மை பரிசீலித்தேன். அந்த மாற்று.. அது நல்லது என்பதாலே தான் நான் முன்மொழிகிறேன் என்பது தானே உண்மை?.’

‘இது… அதைவிட அபத்தம்… ஏற்கனவே நல்லது என்கிற ஒன்று உள்ளது… அதை முன்மொழிவதுதான் உம் வேலை என்றால்… அதை செய்ய நீர் எங்களுக்கு தேவை இல்லை… நான் நல்லது எது என்பதை ஆய்வுசெய்ய உம்மை பரிசீலிக்கவே தேவையில்லை’

‘ஆனால்…’ கடவுளின் குரல் மங்கியது. ‘இந்தத் துறையில் நான் சில நல்ல பாட புத்தகங்கள் வழங்கி உள்ளது உண்மைதானே…?’ என்றார். ‘உமது தார்மீக தத்துவ விளக்கத்தின் அடிக்குறிப்பிலாவது என்னை சேர்க்கக்கூடாதா…. ’என்றார் இறுதியாக  ‘அறிவு இயல் என்னை அங்கீகரித்தது போலிருக்குமே’

‘அதுவும் நல்லதா… என்று ஆராயவேண்டும் அறிவு என்னும் இயலுக்குள் நீர் பொருந்தி வர வாய்ப்பில்லை’ திட்டவட்டமாக உரையாடலை முடித்து விட்டான் பிளாட்டோ… (பிளாட்டோவின் இயூத்ரைஃபோ Euthyphro என்ற நூலில் இருந்து)

அன்று போனவர் தான் கடவுள். கடவுள் இறந்துவிட்டார் என்று பிறகு ஸ்பினோசா திட்டவட்டமாக அறிவித்தான். இருக்கிறார் அல்லது இல்லை எனும் விவாதமாகவே தங்கிப் போனார் அவர். கடவுளை தேடி அலைந்த ஒரு கூட்டம் அது மனிதனின் உள் இருப்பதாக பிறகு இயற்கையோடு கலந்திருப்பதாக அப்படி இப்படி என்று அறிவிப்புகளை வெளியிட்ட பல நூற்றாண்டுகளை கடந்தும்… எந்தக் கடவுள் நிஜம்… என ஓடிய ரத்த ஆறுகளை கடந்தும் அப்படி ஒருவர் இருக்கிறாரோ…. இல்லையோ இது பற்றி எந்த பரிசீலனையும் தேவையற்றதாக பிளாட்டோவின் அறிவியல் மட்டும் தர்க்கத்தை புறந்தள்ளி பல புரட்சிகளை சாதித்தது. எழுத்தாணியை பேனாவாக்கி பிறகு கணினி மொழியாக்கி அதையும் கடந்து புவியை முற்றிலும் அறிவியல் மயமாக்கி தூணிலும் துரும்பிலும் இருக்கும் அந்த அந்தஸ்தை அறிவியல்தான் எடுத்துக் கொண்டது.

இயற்பியல் முதல் அணுவியல் வரை வேதியியல் முதல் மருந்தியல் வரை வானியல் முதல் விண்வெளி இயல் வரை உயிரியல் முதல் மரபியல் வரை எங்கும் எதிலும் அறிவியல்..அறிவியல்…. சரி நான் விஷயத்திற்கு வருகிறேன்.

Science day article part 2 for science day Plato said that science conquers science article by Ayesha Natarasan அறிவியல் தின சிறப்புக் கட்டுரை - 2 அறிவியலை அறிவியலே வெல்லும் என்றார் பிளாட்டோ

நான் ஏன் அறிவியலை நம்பி ஏற்க வேண்டும்? அறிவியலே வெல்லும் என்று பிளாட்டோ சொன்னது இருக்கட்டும் நான் ஏன் ஏற்கவேண்டும்?. ஏனெனில் அறிவியல் தன்னைத்தானே முதலில் நம்புவது இல்லை. இதை குறிப்பிடுவது உங்களுக்கு சிரிப்பு  வரவழைக்கலாம். நான்தான் எல்லாம் என்னை நம்பு… நம்புகிறவனுக்கு சொர்க்கம் காத்திருக்கிறது என்று அறிவியல் அறிவிப்பதே இல்லை. பிளாட்டோ காலம் தொட்டே அப்படித்தான். தற்போதைக்கு கடவுளை விட்டுவிடுவோம்.

சமீபத்தில் இணையத்தில் வத்ரோபோ பல்கலைக்கழக தர்க்கவியல் பேராசிரியர் ஜான் ரைட் எழுதிய ஒரு கட்டுரை வாசித்தேன். தர்க்க விவாதங்களின் இறுதிப்படி நிலை அறிவியல் சார்ந்தது என்று அவர் எழுதுகிறார் அறிவியல் முழுமை அடைந்து முடிந்து போன வடிவம் அல்ல என்பதை புரிந்து கொள்பவர்கள் மட்டுமே அறிவியலை நம்பலாம் என்று அறிவிக்கிறார். மெய்மைகளை அப்படியே ஏற்காமல் அது மெய்மை தான் என்று ஆய்வு செய்து நிறுவுவதால் அறிவியல் அதிக நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. பிரிட்டானிய அறிஞர் அறிவியல் சித்தாந்தி காரல் பாபர் பற்றி சொல்ல வேண்டும். பல கணித மேதைகள் நோபல் அறிஞர்களை தூண்டிவிட்ட  வித்தகர். நான் விரும்பும் அறிவியல் தத்துவ ஆய்வாளர்.

Science day article part 2 for science day Plato said that science conquers science article by Ayesha Natarasan அறிவியல் தின சிறப்புக் கட்டுரை - 2 அறிவியலை அறிவியலே வெல்லும் என்றார் பிளாட்டோ

அவர் அறிவியல் அணுகுமுறை பற்றி (நமக்கு புரியும் விதமாக) விவாதித்து இருப்பதை அப்படியே தருகிறேன் அறிவியல் தனக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஒரு விஷயத்தை  உண்மைதானா என்று பரிசோதிப்பது இல்லை. மாறாக அது பொய்யா என்று பரிசோதிக்கிறது இதை காரல் பாபர் பொய்யாக்கும் கருத்துரை (Falsification Principle) என்று அழைக்கிறார் ஒரு கோட்பாட்டை விஞ்ஞானிகளால் பல ஆண்டுகளாகியும் அது பொய் என்று நிரூபிக்க முடியவில்லை எனில் அது உறுதிப்படுதல் எனும் தகுதியை அடைவதாக காரல் பாபர் அறிவிக்கிறார் உறுதிப்படுத்தப்பட்ட அந்த விஷயமும் இறுதி படுத்தப்பட்டது அல்ல இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் அறிவியல் திரும்பத் திரும்ப அதை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்துகிறது மேலும் அதை குறித்து அறிவை மேம்படுத்துகிறது எதையும் சந்தேகி என்று அது எப்போதும் உண்மைகளைஅணுகுகிறது.

எனவே வரலாற்றில் ஒரு காலத்தில் அறிவியல் உண்மை என்று நம்பப்பட்ட பலவற்றிற்கு அறிவியலே முற்றுப்புள்ளி வைத்து விட்டது உதாரணமாக பாதரசம் மன நோயை தீர்க்கும் மருந்து என்பது தற்காலத்திற்கு பொருந்தாது அதைப்போல உங்களது மண்டை ஓட்டின் மேடு பள்ளத்தை வைத்து உங்கள் குணாதிசயத்தை சொல்லிவிடலாம் என்பதும் பொய்த்தது அறிவியல் ஒன்றை மிகச் சரி என்று சொல்லுவதற்கு மிக அதிக காலம் எடுத்துக் கொள்கிறது எடிசன் இன்று இருந்திருந்தால் தனது பல கண்டுபிடிப்புகளை பார்த்து அவரே நகைத்திருப்பார் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு ஐன்ஸ்டீன் ஈர்ப்பு அலைகள் என்று ஒன்று உள்ளது என அறிவித்தபோது சிரித்தவர்கள் நூறாண்டுகள் கழித்து 2015இல் ஈர்ப்பலைகள் இருப்பதை விஞ்ஞானிகள் நிரூபித்த போது உயிரோடு கூட இருக்கவில்லை. ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு அலைகள் கோட்பாட்டு பொய்யாக்கும் கருத்துரைகள் உட்பட பல படிநிலைகள் கடந்து இன்று உறுதிப்படுத்துதல் படிநிலையை அடைந்துள்ளது. இனிதான் ஈர்ப்பலைகளின் (Gravitational Waves) பயன்பாடு பற்றிய இறுதிப்படுத்துதல் படிநிலை வரவேண்டும் இதே தான் ‘வானொலி அலைகள்’ விஷயத்திலும் நடந்தது வெறும் அனுமானம்தான். 1867-ல் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் தொடங்கி ஹென்ரிச் ஹெர்ட்ஸ் வரை கணித வரையறைகளாகவும் கோட்பாட்டு அனுமானங்களாகவும் இருந்த ‘ஹெர்ட்ஸ்சியன் அலைகள்’ (அதன் பழைய பெயர்)

Science day article part 2 for science day Plato said that science conquers science article by Ayesha Natarasan அறிவியல் தின சிறப்புக் கட்டுரை - 2 அறிவியலை அறிவியலே வெல்லும் என்றார் பிளாட்டோ

1912 இல் உறுதிப்படுத்தப்பட்ட ‘வானொலி அலைகள்‘( Radio waves ) ஆகின்றன. இன்று நமது வைஃபை (Wi-Fi) என்பது வானொலி அலைகளின் இறுதிபடுத்தப்பட்ட பயன்பாட்டு படிநிலை ஆகும். அறிவியலை அறிவியலே வெல்லும் என்று பிளாட்டோ அறிவித்தது இதைத்தான்.

பிளாட்டோ வாதிகளின் மேலும் ஒரு அடிப்படையை அறிவியல் வரலாற்றாளர் நவோமி ஒரெஸ்கஸ் ( Naomi Oreskes) விவரிக்கிறார். அவர் காரல் பாபரின் பொய்யாக்கும் கருத்துரையை ஏற்கிறார். ஆனால் அறிவியலின் நம்பகத்தன்மைக்கு அது மட்டுமே காரணம் அல்ல என்கிறார். அறிவியலின் செயல்பாடுகளில் இருக்கும் உலகளாவிய தன்மையை அவர் காரணமாக சொல்கிறார் தனி மனிதரோ ஒரு போதகரோ அல்ல அறிவியலின் வெற்றி பெரும்பான்மை விஞ்ஞானிகளின் ஒருமித்த ஏற்பின் அடிப்படைக் கொண்டது அறிவியல் இன்று துறைகளாக பிரிந்து இருக்கிறது.

நவோமி ஒரெஸ்கஸ் காட்டும் கீழ்க்கண்ட எடுத்துக்காட்டு பிளாட்டோவாதிகளின் சிந்தனை உலகை உரித்து வெளியே காட்டும் கொண்டுவரும் முயற்சி. ஒரு விஞ்ஞானி குறிப்பிட்ட ஒரு யோசனையை ஆய்வுக்கும் புள்ளி விவரங்களுக்கும் உட்படுத்தி ஒரு ஆய்வுக் கட்டுரையாக அதை தொகுத்து தனது சக (அதே துறை) சகாக்களுக்கு வாசிக்க.. பரிசீலிக்க தருகிறார். அவர்கள் அந்த ஆய்வு கட்டுரையின் சாரத்தை மறுக்க பல வகையில் சோதித்து அதற்கு விமர்சனப்பூர்வமான ஒரு எதிர்வினை ஆய்வு கட்டுரையை படைக்கிறார்கள் அதற்கு சகாக்களின் எதிர்வினை ஆய்வு அறிக்கை என்று பெயர் அந்த ஆய்வு அறிக்கையின் மூலம் நடந்த விவாதத்தின் அடிப்படையில் தனது இறுதி ஆய்வுக்கட்டுரையை தயாரித்து அந்த விஞ்ஞானி உலகிற்கு வழங்கும் ஒரு நடைமுறை அறிவியலின் நம்பகத்தன்மையை மேலும் கூட்டுகிறது. சமீபத்தில் கோவிட்-19 தடுப்பு மருந்துகளின் கண்டுபிடிப்பை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அனைத்தும் கூட்டுமுயற்சியே.

Science day article part 2 for science day Plato said that science conquers science article by Ayesha Natarasan அறிவியல் தின சிறப்புக் கட்டுரை - 2 அறிவியலை அறிவியலே வெல்லும் என்றார் பிளாட்டோ

ஒரு கோட்பாட்டு இந்த எதிர்வினை ஆய்வறிக்கை படிநிலைகளை கடப்பது உடனே நடப்பதும், அல்லது பல ஆண்டுகள் கடந்து நடப்பதும் இரண்டுமே சாத்தியம்தான். 1896 இல் கரியமில வாயுவின் அதிகரிப்பால் புவி சூடேற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது. அப்போது அந்த ஆய்வு கட்டுரை கிடப்பில் போடப்பட்டது. ஜோசப் ஃபவுரியர் முன்வைத்த பசுமை குடில் விளைவும் 20-ம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை கண்டுகொள்ளப்படவில்லை 1950-களுக்கு பிறகு புவியில் மனித செயல்பாடுகளால் குறிப்பாக புதை படிவ எரிமங்களால் புவி வெப்ப ஏற்றம் நடப்பதாக ஒரு கோட்பாடு முன்மொழியப்பட்டது. ஆனால் அப்போதும் பெரும்பாலான விஞ்ஞானிகள் அதை ஏற்கவில்லை. ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் புவியில் தட்பவெப்பமாறுதல் எனும் பயங்கர பின்விளைவு ஒரு அறிவியல் பூர்வமான தனித்துறையாகவே வளரும் அளவிற்கு பல கண்டுபிடிப்புகளால் நோபல் பரிசு உட்பட பெற்று அங்கீகரிக்கப்பட்டது. இன்று 99% பிளாட்டோ வாதிகளின் கதாநாயகனாக  ஃபவுரியர் ஏற்கப்பட்டிருக்கிறார். இப்படித்தான் அறிவியல் நம்பகத் தன்மையை பெறுகிறது என்கிறார் நவோமி.

காரல்சாகன் குறிப்பிட்டதைப்போல் (காஸ்மாஸ் நூல்) ‘பேரழிவு தினம் என்று ஒன்று இருக்குமேயானால் புவியின் ஏனைய உயிரிகளுக்கும் மனிதனுக்குமான ஒரு வேற்றுமையாக, தான் அழிய போகிறோம் என்பதை மனிதன் மட்டுமே முன் உணரமுடியும். அத்தகைய தனித்தன்மை மனிதனுக்கு ஏற்பட காரணமான ஒன்றிற்கு தான் அறிவியல் என்று பெயர்’. ஆனால் பிளாட்டோவாதிகளின் கதை இத்தோடு முடியவில்லை.

21 ம் நூற்றாண்டில் இந்திரபிரஸ்தத்தில் அறுதி பெரும்பாண்மையுடன்  ஆட்சியை பிடித்த கடவுள் அந்த தேசத்தின் ராக்கெட் ஏவுகணைவாதிகளாக இருக்கும் பிளாட்டோவாதிகள் முன் ஒருநாள் தோன்றுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. கடவுள் அறிவியலுக்கு தேவை இல்லை என்று பிளாட்டோ பிரகடனப்படுத்திய 2000 வருடங்கள் கழித்து வரலாற்றில் அந்த நிகழ்வு மீண்டும் நடந்தது….. (ஆனால் அறிவியல் தனக்கு தேவை இல்லை என்று அந்த கடவுள் எப்போதும் சொன்னதில்லை…)

Science day article part 2 for science day Plato said that science conquers science article by Ayesha Natarasan அறிவியல் தின சிறப்புக் கட்டுரை - 2 அறிவியலை அறிவியலே வெல்லும் என்றார் பிளாட்டோ

‘என் கோவிலில் என் பிறப்பு அனுமானிக்கப்பட்ட  ஒரு நவமி தினத்தில் என் உருவசிலைமீது சூரிய ஒளிபடும் வண்ணம் கருவி ஒன்றை வடிவமைத்து தரும் பிளாட்டோ வாதிக்கு – பரிசு’ என்கிறார் கடவுள்.

இம்முறை தங்களது ஆய்வுக்கான நிதி ஆதாரங்களின் அதிகாரத்தை தன் கையில் வைத்திருக்கும் கடவுளிடம் எதுவும் விவாதிக்காமல் மவுனம் காத்த பிளாட்டோவாதிகளிடம் ‘ போட்டி தொடங்கட்டும்… அறிவியலை அறிவியலே வெல்லும்’ என்று கூறிவிட்டு தற்காலிகமாக விடைபெற்றார் கடவுள்.