மானுட உன்னதம்
*********************
உடலினுள் மட்டுமே
குருதி பரவட்டும்!
உலகநாடுகளின் திறந்தவெளியில்
மானுடம் தழைக்கட்டும்!
புவியெங்கும்
மனிதம் மட்டுமே மலரட்டும்!

போரற்ற உலகம்
********************
ஹிட்லர் மாண்டான்
ஆனால்
போர் அழியவில்லையே
ஏன்? என்று யோசித்து கொண்டு இருந்த
பிரபஞ்சத்திற்கு
பதில் கிடைத்தது !

தனிமனிதன் ஹிட்லர் தானே மாண்டான்!

தனி மனிதனுள் இருக்கும் ஹிட்லர் இன்றும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறான்!

அந்த ஹிட்லரின் மரணத்தில் தான் ஜனிக்கும்
“போரற்ற உலகம்” என்று!

உலக சமாதானம்
********************
திகைத்து ஸ்தம்பித்து நின்றது
இராணுவம் !
மழலையர் செல்வங்களின்
அணிவகுப்பு!
பிஞ்சு கரங்களில்
புகார் மனு !
அமைதி புறாக்களை
காணவில்லையென!
…..

காலுடைந்து தவிக்கிறது
வெண்புறா!
சிறகடித்து அழைக்கிறது
இளைஞிகளை-
இளைஞர்களை!
சிகிச்சை எடுக்க!
நம்பிக்கையோடு
வானில் மீண்டும் பறக்க!
…….

சிறகடித்து சுதந்திரமாக பறந்த
வெண்புறாவை காணவில்லை!
தொலைத்த வெண்புறாவை
கண்டுபிடிக்க ஆணையிட்டது
நேற்றைய தலைமுறை
இன்றைய தலைமுறைக்கு !
வருங்கால தலைமுறைக்காக!
……..

கால்கள் உடைக்கப்பட்டுள்ளது
சிறகுகள் பிடுங்கப்பட்டுள்ளது
கண்கள் பறிக்கப்பட்டுள்ளது
என் மாய சொற்களின் ஊடே முடமாக முடங்கி கிடக்கிறது
வெண்புறா!

மாற்றம் ஒன்றே மாறாதது!
விடியல் புலரும்
மாய சொற்கள் மறையும்
மீண்டும்
வானில் வெண்புறா
உலகச்
சமாதானத்தின் சின்னமாக
உல்லாசமாக சிறகடித்து பறக்கும் என்ற நம்பிக்கையில்
உலக நாடுகள் !

உலகப் புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ
**************************************************
வீண் முயற்சி எது?
விடா முயற்சி எது?

தயங்குபவர் யார்?
துணிந்தவர் யார்?

தயக்கம் எது?
துணிவு எது?

மனிதன் யார்?
மாமனிதன் யார் ?

விதைத்தவன் உறங்கலாம்
விதைகள் ஒருபொழுதும் உறங்குவதில்லை

என எல்லாம் சொல்லி சென்றாய்?

பொன்மொழிகள் என‌ அன்று சட்டத்தில் எழுதி விட்டத்தில் மாட்டிவிட்டனர்!

இன்றோ வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் ஆகிவிட்டாய்!

என்று எங்கள் குருதியில் கலப்பாய்?

இப்படிக்கு

இளைஞ்சிகள்

திருமதி.சாந்தி சரவணன் 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “சாந்தி சரவணன் கவிதைகள்”
  1. மானுட உன்னதமே போரற்ற உலகத்தின் சமாதானம்.

    வாழ்த்துகள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *