The destructive act of destabilizing LIC Article in tamil translated By S Veeramani. எல்ஐசியை சீர்குலைத்திடும் நாசகரமான நடவடிக்கை - தமிழில்: ச.வீரமணி

எல்ஐசியை சீர்குலைத்திடும் நாசகரமான நடவடிக்கை – தமிழில்: ச.வீரமணி




மோடி அரசாங்கத்தின் தனியார்மயக் கொள்கையின் மிகவும் மோசமான அம்சங்கள் முன்னுக்கு வந்திருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் நிதித்துறையில் தங்கக் கிரீடமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் என்னும் எல்ஐசி-யின் பங்குகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான தொடக்கப் பங்கு விற்பனை (IPO-Initial Public Offering) என்னும் நடவடிக்கை வரும் பிப்ரவரி தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் காப்பீட்டுக் கழகம், நாட்டில் ஆயுள் காப்பீட்டுக் கலாச்சாரத்தைப் பரப்பிக்கொண்டிருப்பதில் முன்னோடி நிறுவனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிகரற்ற நிறுவனமாகும். நாட்டின் மக்களுக்கு, குறிப்பாக ஏழை மற்றும் வடுப்படத்தக்க நிலையில் உள்ள மக்களுக்கு, அரசாங்கத்தின் மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எதுவும் வலுவானவிதத்தில் வழங்கப்படாத நிலையில் எல்ஐசி மூலமாக மிகவும் விரிவான அளவில் மக்களுக்குக் காப்பீடு அளிக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

எல்ஐசி தனித்துவமிக்கதோர் அமைப்பாகும். இது, சாமானிய மக்களுக்கு காப்பீடு அளித்திட வகை செய்கிறது. இதன் மூலம் வரும் லாபப் பங்கீடு, இதன் பிரதான முதலீட்டாளராக விளங்கும் அரசாங்கத்திற்கு, வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே அளிக்கப்பட்டு, மீதம் உள்ள 95 சதவீதமும் பாலிசிதாரர்களுக்கே அளிக்கப்படும் விதத்தில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது. (இப்போது எல்ஐசியின் பங்குகளைத் தனியார்மயத்திற்குத் தள்ளிவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன், பாலிசிதாரர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த அளவு 90ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.) இவ்வாறு, இதர காப்பீட்டு நிறுவனங்களைப் போல் அல்லாமல், எல்ஐசி-யின் லாபங்கள் பங்குதாரர்களுக்கு (shareholders) வழங்கப்படாமல், பாலிசிதாரர் களுக்கே (policyholders) ஒதுக்கப்பட்டிருக்கிறது.

எல்ஐசி, 1956இல் அமைக்கப்பட்டதிலிருந்து, ஆயுள் காப்பீடு முழுமையாக வழங்கப்படுவதற்காக அதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்களை முழுமையாக அது நிறைவேற்றியிருக்கிறது. குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளுக்கும், சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு விரிவான அளவில் அது காப்பீடு வழங்கியிருக்கிறது.

இன்சூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்த பின்னரும் கூட, எல்ஐசி நிறுவனம் ஆயுள் இன்சூரன்ஸ் வர்த்தகத்தில் தன் ஆதிக்க நிலையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. 2020-21ஆம் ஆண்டில் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசிகள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக, எல்ஐசியின் சந்தைப் பங்கு என்பது அனைத்து நிறுவனங்களும் பெற்றுள்ள ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசிகளில், எல்ஐசி மட்டும் அநேகமாக நான்கில் மூன்று பங்கு பாலிசிகளைப் பெற்றிருக்கிறது. எல்ஐசி 40 கோடி பாலிசிதாரர்களைப் பெற்று, 3.03 லட்சம் கோடி ரூபாய் பிரிமியம் வருமானத்தை ஈட்டியிருக்கிறது. அது துவக்கப்பட்டதிலிருந்து, அரசாங்கத்திற்கு டிவிடிண்ட் தொகையாக 28,695 கோடி ரூபாய் அளித்திருக்கிறது. மேலும் அது வங்கிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு முதலீடுகளைச் செய்திருக்கிறது. மாநிலங்களில் அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், சமூக நலத்திட்டங்களுக்காகவும் மிகப்பெரிய அளவில் பங்களிப்புகளைச் செய்திருக்கிறது. இவ்வாறு அது அளித்துள்ள பங்களிப்புகள், 2020-21ஆம் ஆண்டில் சுமார் 26,322 கோடி ரூபாய்களாகும்.

இவ்வாறு அனைத்து விதங்களிலும் நிகரற்று விளங்கும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தை இந்திய மற்றும் அந்நிய தனியார் முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிட ஒன்றிய அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இவ்வாறு எல்ஐசியைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக 2021-22ஆம் ஆண்டு நிதிச் சட்டமுன்வடிவின் மூலமாக எல்ஐசி சட்டத்திற்குத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரசாங்கம், எல்ஐசியில் உள்ள தன் பங்குகளை அடுத்த பத்தாண்டுகளில் தனியாருக்குத் தாரை வார்த்திடும் விதத்தில் நீர்த்துப்போகச் செய்வதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறது. இப்போது முதல்கட்டமாக அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அரசாங்கத்தின் பங்குகள் 75 சதவீதத்திற்குக் குறைக்கப்படும் என்றும், அதன்பின்னர் அரசாங்கம் எல்ஐசியில் தன் பங்ககுகள் 51 சதவீதமாக இருந்திடும் என்றும் அறிவித்திருக்கிறது. இது எல்ஐசியின் முகத்தோற்றத்தையே கடுமையாக மாற்றியமைத்திடும். இதில் முதலீடு செய்திடும் இந்திய மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் எல்ஐசி தற்போது அரசமைப்புச்சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு (directive principles of the Constitution) உட்பட்டு மேற்கொண்டுவரும் சமூக நலத் திட்டங்களை ஓரங்கட்டச் செய்வதற்கு நிர்ப்பந்தங்களை அளித்திடுவார்கள்.

பொதுத்துறை மற்றும் பொதுச் சேவைகள் மீதான மக்கள் ஆணையம் (The People’s Commission on Public Sector and Public Services), எல்ஐசி பங்கு விற்பனை குறித்து தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எல்ஐசி பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவு, சமூகத்தில் அனுகூலமற்ற பிரிவினருக்கு எல்ஐசி அளித்துவரும் பங்களிப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பல லட்சக்கணக்கான அதன் சிறிய பாலிசிதாரர்கள் ஆற்றி வரும் முக்கிய பங்கினை நீர்த்துப்போகச் செய்திடும், லாபம் ஈட்டும் பணக்கார முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக மாறிடும். இம்முடிவானது மறைமுகமாக, இது மிகப்பெரிய அளவிலான குடும்ப சேமிப்புகளை அந்நிய மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு, முட்டாள்தனமாக முறைமாற்றிவிடுவதையே காட்டுகிறது.”

எல்ஐசி பங்கு விற்பனை தொடர்பாக மதிப்பீட்டுமுறை (valuation procedure), எவரும் புரிந்துகொள்ளமுடியாத விதத்தில் தெளிவின்றி இருக்கிறது. எல்ஐசியின் மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாய் என்றும் அதன் உட்பொதிக்கப்பட்ட மதிப்பு (embedded value) நான்கு லட்சம் கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டிருப்பது, முற்றிலும் குறைந்த மதிப்பீடாகும். இவ்வாறுதான் இந்த அரசாங்கத்தால் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் குறைத்து மதிப்பிடப்பட்டு, தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு எல்ஐசி பங்கு விற்பனை என்பது தனியார் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு எல்ஐசி பணத்தை அப்படியே முழுமையாக அள்ளிவழங்கிடும் ஒரு நடவடிக்கை என்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் உள்ள ஊழல், சமீபத்தில் ஒன்றிய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையின் (Department of Scientific and industrial Research) கீழ் இயங்கிவந்த பொதுத்துறை நிறுவனமான சிஇஎல் எனப்படும் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL-Central Electronics Limited) நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதில் அப்பட்டமாகத் தெரிந்தது. சிஇஎல் நிறுவனம், நந்த்லால் ஃபைனான்ஸ் அண்ட் லீசிங் பிரைவேட் லிமிடெட் (Messrs.Nandlal Finance and Leasing Private Limited) என்னும் தனியார் நிறுவனத்திற்கு வெறும் 210 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. சிஇஎல் நிறுவனமானது, சோலார் செல்கள் (solar cells), சோலார் இயந்திரங்கள் (solar plants), ரயில்வே சமிக்ஞை அமைப்புமுறைகள் (railway signaling systems) மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு பொருள்கள் போன்று மின்னணுத்துறையில் மிகவும் முக்கியமான பொருள்களை உற்பத்தி செய்துவந்த முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்த நிறுவனம் இந்தத்துறையில் எவ்விதமான அனுபவமுமில்லாத, இரண்டகமான கடந்தகால வரலாற்றைக்கொண்டுள்ள ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு விற்கப்பட்டிருக்கிறது. சிஇஎல் நிறுவனத்திற்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பே தற்போது 440 கோடி ரூபாய்களாகும். இந்நிறுவனம் 2021 நிதியாண்டில் 124 கோடி ரூபாய்கள் மொத்த லாபம் ஈட்டியிருந்தது. இவ்வாறு அரசாங்கத்திற்கு லாபத்தை அள்ளித்தந்த நிறுவனத்தை அரசாங்கம் அடிமாட்ட விலைக்கு விற்க முன்வந்திருப்பது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பலமாகக் கூக்குரல் எழுந்ததை அடுத்து அரசாங்கம் இப்போது விற்பனையைச் சற்றே ஒத்திவைத்திட நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

மோடி அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களையும், நாட்டின் சொத்துக்களையும் இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க முன்வந்திருக்கும் திட்டமானது நாட்டின் பொருளாதார இறையாண்மையை அரிக்கச் செய்திடும் நாசகரமான நடவடிக்கையாகும், சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் தொடர்பாக அரசமைப்புச்சட்டத்தில் உள்ள வழிகாட்டும் நெறிமுறைகளை (Directive Principles of the Constitution) சீர்குலைத்திடும் நடவடிக்கையாகும், கடந்த பல ஆண்டுகளாக மக்களால் கட்டி எழுப்பப்பட்ட நாட்டின் வளங்களை இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு வழியேற்படுத்தித்தரும் நடவடிக்கையாகும்.

எல்ஐசி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீர்குலைத்திடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு நாடு சூறையாடப்படுவதைத் தடுத்திட நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக மற்றும் நாட்டுப்பற்றுகொண்ட சக்திகளும் விரிவான அளவில் அணிதிரளவேண்டியது அவசியத் தேவையாகும். எல்ஐசி, பொது இன்சூரன்ஸ் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் அரசின் இத்தகைய தனியார்மயத்திற்கு பொதுத்துறை நிறுவனங்களைத் தாரைவார்த்திடும் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டப்பாதையில் இறங்கி இருக்கிறார்கள். இவர்களின் போராட்டம் மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்கள்-ஊழியர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தின் ஓர் அங்கமாக மாறிட வேண்டும்.

மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் கூட்டுமேடை வரும் பிப்ரவரி 23-24 தேதிகளில் நடத்திடவிருக்கும் இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் இந்தப் போராட்டத்தில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்திடும்.

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Attempt to rewrite the history of the liberation struggle in Tamil Translated By Sa Veeramani. விடுதலைப் போராட்டத்தின் வரலாறு திரித்து எழுத முயற்சி - தமிழில்: ச.வீரமணி

விடுதலைப் போராட்டத்தின் வரலாறு திரித்து எழுத முயற்சி – தமிழில்: ச.வீரமணி




ஜனவரி 11 அன்று, பி.ஐ.பி. என்னும் பத்திரிகைத் தகவல் மையம் (PIB-Press Information Bureau), ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது இந்திய சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை அனுசரிப்பது சம்பந்தமானதாகும். ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் (Azadi ka Amrit Mahotsav) என அதற்குப் பெயரும் இட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளரிடமிருந்து சுதந்திரத்திற்காகப் போராடி வீர காவியம் படைத்திட்ட இந்திய மக்களின் வரலாற்றைத் திரித்து எழுதுவதற்காகவே மோடி அரசாங்கம் இவ்வாறு அறிவித்திருக்கிறது என்பது தெளிவாகும்.

இந்த அறிவிப்பில், “இந்திய விடுதலை இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்துடன் மட்டும் வரையறுக்கப்பட்டுவிடவில்லை, மாறாக அது அதற்கும் முன்பாகவே நாட்டின் அடிமைத்தனத்தின் காலகட்டத்தையும் கடந்திருக்கிறது,” (“the freedom movement is not limited only to British rule, even before that India has gone through a period of servitude”) என்று கூறுகிறது. இன்றைய தினம் நிறுவப்பட்டுள்ள இந்தியத் துணைக் கண்டத்தின் பூகோள வரைபடம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர்கள் அழைத்ததுபோன்று பல்வேறு “மன்னர் சமஸ்தானங்களாக” (“princely states”) இருந்தது.

பிரிட்டிஷாரை விரட்டியடிப்பதில் வெற்றிபெற்ற விடுதலை இயக்கம், பின்னர், இந்தியாவில் இருந்துவந்த 650க்கும் மேற்பட்ட மன்னர் சமஸ்தானங்களை இந்திய ஒன்றியம் என்னும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்தது. அந்த அடிப்படையில்தான் அரசியல் நிர்ணயசபையால் இந்திய அரசமைப்புச்சட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த அரசமைப்புச்சட்டம் 1950இல் நிறைவேற்றப்பட்டதன் மூலமாக, இந்தியா என்னும் ஒரு மதச்சார்பற்ற-ஜனநாயகக் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது. அதாவது, சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15க்குப்பின் ஒன்றரை ஆண்டுகள் கழித்து, இவ்வாறு பிரகடனம் செய்யப்பட்டது. இந்தியா, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை வெற்றிகரமாகத் தோற்கடித்தபின்னர் ஒரு சுதந்திரமான நாடாக மாறியது.

இத்தகைய வீரகாவியம் படைத்திட்ட சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கோ மற்றும் அதன் இந்துத்துவா சித்தாந்தத்தின் முன்னோடிகளுக்கோ எவ்விதப் பங்கும் கிடையாது. இப்போராட்டத்தில் அளப்பரிய தியாகங்கள் புரிந்த இந்திய மக்கள் தங்கள் மத பேதங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு, சுதந்திரம் பெற்றிடவும், ஒரு மதச்சார்பற்ற-ஜனநாயகக் குடியரசை நிறுவியிருப்பது குறித்தும் அவர்களுக்கும் எவ்விதச்சம்பந்தமும் கிடையாது.

இப்போது ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் முதல் யுத்தம், 1857 எழுச்சிக்கு, ஸ்வாமி விவேகானந்தரும், ரமண மகரிஷியும் உத்வேகம் ஊட்டினார்கள் என்று கூறுகிறது. ஸ்வாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டிலும், ரமண மகிரிஷி 1879ஆம் ஆண்டிலும் பிறந்தவர்களாவார்கள். இவர்கள் எப்படி இவர்கள் பிறப்பதற்கு முன்பே நடைபெற்ற 1857 கலகத்திற்கு உத்வேகம் ஊட்டினார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

1857 கலகம், இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் நடைபெற்றது. இதில் இந்துக்களும் முஸ்லீம்களும் பிரதானமான பங்களிப்பினைச் செய்தார்கள். ஜான்சி ராணி, லட்சுமிபாய் அவர்கள், தாண்டியா டோப் (Tantia Tope) மற்றும் இதர தலைவர்களுடன் இணைந்து, 1857இல் தில்லி செங்கோட்டையில் நின்றுகொண்டு, பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது என்றும், இனி சுதந்திரமான இறையாண்மையுடன் கூடிய இந்தியாவை மொகலாய அரசர், பகதூர் ஷா ஜஃபார் (Bahadur Shah Zafar) ஆட்சி புரிவார் என்றும் பிரகடனம் செய்தார்கள். பகதூர் ஷா ஜஃபார் அவர்களை ஆர்எஸ்எஸ் அகராதியானது, “பாபரின் சந்ததியைச் சேர்ந்தவர்” (“Babur ki Aulad”) எனக் கேலி செய்துள்ளது.

ஹரித்வாரில் நடைபெற்ற சாமியார்கள் நாடாளுமன்றத்தில் முஸ்லீம்களைத் தீயிட்டுக் கூண்டோடு கொலை செய்திட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது, சமூக ஊடகங்களில் முஸ்லீம் பெண்களைக் குறிவைத்து எண்ணற்ற அசிங்கமான ஆப்புகள் (nasty and obscene apps) வலம் வந்துகொண்டிருப்பது, உத்தரப்பிரதேச முதலமைச்சர் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் 80 சதவீதத்தினரான இந்துக்களுக்கும், 20 சதவீதத்தினரான முஸ்லீம்களுக்கும் இடையேயான போராட்டம் என்று பிரகடனம் செய்திருப்பது (உத்தரப்பிரதேசத்தில் முஸ்லீம்களின் மக்கள்தொகை சுமார் 19 சதவீதமாகும்) ஆகியவற்றை இந்தப் பின்னணியில் பார்த்திட வேண்டும்.

ஒன்றிய மோடி அரசாங்கம் மேலே கண்டவாறு ஆபத்தான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி அரசாங்கம் இப்போதுள்ள இந்தியக்குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தை மாற்றியமைத்திட விரும்புகிறார்கள் என்னும் நோக்கத்தைத் தெளிவாகவே வெளிப்படுத்துகிறது.

இவர்களின் சூழ்ச்சித்திட்டம் மிகவும் தெளிவானவையே. இவர்கள் இந்திய அரசமைப்புச்சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள இப்போதைய மதச்சார்பற்ற-ஜனநாயக இந்தியக் குடியரசை, தாங்கள் விரும்பும் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் “இந்துத்துவா ராஷ்ட்ரமாக” மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் சூழ்ச்சித்திட்டமாகும். இது, சுதந்திரத்திற்காகப் போராடிய இந்திய மக்களின் போராட்டத்திற்கு நேரெதிரான ஒன்றாகும்.

பிஐபி பத்திரிகைச் செய்தி மேலும், “இந்த அநாமதேய சுதந்திரப் போராளிகள் மீதான கவனத்தை மாற்றும் நோக்கத்துடன், அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்கள் தொடங்கி இருக்கின்றன” (“With the purpose to shift the spotlight on these anonymous freedom fighters, Amrit Mahotsav celebrations have been started”) என்று கூறுகிறது. இதற்குப்பின் ஒளிந்துள்ள நிகழ்ச்சிநிரல் என்னவெனில், விடுதலைப் போராட்டக் காலத்தில் உண்மையில் பிரிட்டிஷாருடன் கூடிக்குலாவிய ஆர்எஸ்எஸ்/இந்துத்துவா பேர்வழிகளை, “வீராதிவீரர்கள்” எனக் காட்டுவதற்கான முயற்சிகளேயாகும். ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு மிகவும் அனுதாபம் காட்டக்கூடிய விதத்தில் புத்தகங்கள் எழுதியுள்ள வால்டர் கே.ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் டி. டாம்லே போன்றவர்கள்கூட (The Brotherhood in Saffron by Walter K Andersen and Shridhar D Damle, 1987, amongst others) விடுதலை இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் முற்றிலுமாக இல்லாமலிருந்த விவரங்களையும், அதன்காரணமாக பிரிட்டிஷாரிடமிருந்து பல்வேறு ஆதாயங்களைப் பெற்ற விவரங்களையும் அளித்திருக்கின்றனர்.

அவர்கள் தங்கள் புத்தகத்தில் மேலும் கூறியிருப்பதாவது: “உண்மையில், பம்பாய் உள்துறை, 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, சங் பரிவாரங்கள் சட்டத்திற்கு உட்பட்டு எவ்விதமான போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தன்னைப் பார்த்துக்கொண்டது. குறிப்பாக, 1942 ஆகஸ்ட்டில் நடைபெற்ற கலவரங்களின்போது எவ்விதப் பங்கும் மேற்கொள்ளாது தன்னைத் தவிர்த்துக்கொண்டது….” (ஆண்டர்சன் – டாம்லே எழுதிய புத்தகம், 1987, ப.44). “இந்துத்துவா ராஷ்ட்ரத்தை” நிறுவ வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு இருந்துவந்த அரிப்புதான், அதனை பிரிட்டிஷாருக்கு வெண்சாமரம் வீச இட்டுச்சென்றது.

இவ்வாறாக ஆர்எஸ்எஸ் இயக்கமானது பிரிட்டிஷாருடன் கூடிக்குலாவியது நன்கு நிறுவப்பட்டுள்ளபோதிலும், அது விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்புகளுக்கு எதிராக அவதூறுச் சேற்றை வாரி இறைத்திட எப்போதும் தயங்கியது இல்லை.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக 1992 ஆகஸ்ட் 9 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் சமயத்தில், அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, இந்திய நாடாளுமன்றத்தின் நள்ளிரவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டினாலே போதுமானதாகும். அப்போது அவர், “கான்பூர், ஜாம்ஷெட்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களிலிருந்த ஆலைகளில் பெரிய அளவில் வேலை நிறுத்தங்கள் நடந்தபின்னர், 1942 செப்டம்பர் 5 அன்று தில்லியிலிருந்து லண்டன் அரசு செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றிக் குறிப்பிட்டு, அதில் உள்ளவர்களில் பலர் பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சியாளர்கள் என்று நிரூபணமாகியிருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகப்,” பேசினார்.

இதைவிட வேறெதுவும் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறதா, என்ன? சுதந்திர இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஒருவரே, இந்திய நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாகப் பேசும்போது, கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் “பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சியாளர்களாகவே” இருந்தார்கள் என்று நேரடியாகவேப் பதிவு செய்திருக்கிறார்.

இந்திய அரசமைப்புச்சட்டத்தால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் ஆகியவற்றை நோக்கிய நம் பயணத்திற்குத் தடையாக இருந்திடும், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் இத்தகைய ஆபத்தான நிகழ்ச்சிநிரல் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

“இந்தியா, அதாவது பாரதத்திற்காக”, சுதந்திர இந்தியாவின் குணாம்சத்தை மாற்ற முயலும் இந்த மதவெறி சக்திகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

The fascists have called for violence Article in tamil translated by Sa Veeramani பாசிஸ்ட்டுகள் வன்முறைக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்கள் தமிழில்: ச.வீரமணி

பாசிஸ்ட்டுகள் வன்முறைக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்கள் – தமிழில்: ச.வீரமணி




பாசிஸ்ட்டுகள் வன்முறைக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்கள் – தமிழில்: ச.வீரமணிஹரித்வாரில் டிசம்பர் 17-19 தேதிகளில் நடைபெற்ற சாமியார்களின் நாடாளுமன்றத்தில் முஸ்லீம்களைத் தாக்கி, அவர்களை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்து அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சாமியார்கள் வெறுப்பை உமிழ்ந்து இரு வாரங்களுக்கும் மேலாகியும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. முதலாவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ஒருவரின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அவரும் யார் என்றால், முஸ்லீம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவராவார். பின்னர், மற்றொரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த யதி நரசிங்கானந்த் உட்பட நால்வரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஜனவரி 1 அன்று உத்தர்காண்ட் காவல்துறை இது தொடர்பாகப் புலன் விசாரணை மேற்கொள்வதற்காக ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தது. இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கிய நபர்கள் கைது செய்யப்படுவார்களா எனக் கேட்டபோது, அவர் புலன்விசாரணையின்போது உருப்படியான சாட்சியம் எதுவும் காணப்பட்டால் பின் கைதுகள் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

சாமியார்கள் முஸ்லீம்களைக் ஒட்டுமொத்தமாகக் கொலை செய்திட வேண்டும் என்று பேசியது தொடர்பாக ஏராளமான சாட்சியங்கள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்துகொண்டிருக்கின்றன. அந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, அந்த சமயத்தில் சாமியார்கள் கக்கிய வெறுப்பு உரைகள் விரிவான அளவில் சுற்றுக்கு விடப்பட்டிருக்கின்றன. அங்கே பேசிய சாமியார்கள் அனைவருமே ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்றும், முஸ்லீம்களைக் கூண்டோடு கொலை செய்திட வேண்டும் என்றும், அவர்கள் குடியிருக்கும் கிராமங்களை பூண்டோடு அழித்திட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்கள். ஒரு சாமியார், தனக்கு வாய்ப்பு கிடைத்தால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைக்கூட துப்பாக்கியால் சுட்டுக் கொல்வேன் என்று கொக்கரித்தார்.

இவர்களின் பேச்சுக்கள் “வெறுப்பு உரைகள்” என்று மட்டும் அமைந்திடவில்லை. மாறாக, அவை முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்திட வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று வெளிப்படையாகவே தூண்டும் விதத்தில் அமைந்துள்ளவைகளுமாகும். ஆனாலும், உத்தர்காண்ட் காவல்துறை இன்னமும் இந்த சாமியார்களின் பேச்சுகளுக்கு எதிராக வலுவான சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருக்கிறதாம். இவர்கள் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 153-ஏ பிரிவு மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் மதத்தின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே வெறுப்பு உணர்வை அல்லது குரோதத்தை அல்லது ஒற்றுமையின்மையைத் தூண்டும் விதத்தில் நடந்துகொண்ட குற்றத்தை மட்டும் குறிக்கிறது. ஆனால், இவர்கள் புரிந்துள்ள குற்றம் மிகவும் அதிகமானவைகளாகும்.

சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்தியவர்களோ, அதில் பங்கேற்றவர்களோ இவ்வாறாக தங்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதுபற்றி, கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிகழ்வு நடைபெற்றதற்கு ஒருவாரம் கழித்து, டிசம்பர் 28 அன்று, பல மடாலயங்களைச் சேர்ந்த சாமியார்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் 21 சாமியார்களைக் கொண்ட கேந்திரமான குழு (core committee) ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்திய நரசிங்கானந்த் மற்றும் ஐந்து பேர் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமுக்கு எதிரான தங்கள் போராட்டத்தைத் தொடர்வது எனத் தீர்மானித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் குரானுக்கு எதிராகவும், நகரில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் முஸ்லீம் மௌலானாக்கள் மற்றும் இமாம்களில் பலருக்கு எதிராகவும் ஹரித்வார் கோட்வாலி காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யும் அளவுக்கும் சென்றிருக்கிறார்கள்.

சாமியார்கள் நாடாளுமன்றம் என்பது இந்தியாவை “இந்து ராஷ்ட்ரமாக” மாற்றுவதற்கான திசைவழியில் ஓர் அடி எடுத்து வைத்திருப்பதாகவே அவர்கள் கூறுகிறார்கள். மேலும் அவர்கள், இஸ்லாமுக்கு எதிராகப் போராட அறைகூவல் விடுத்திருப்பதுடன் மடாலயங்கள் இந்து தர்மத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதந்தாங்கிய குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதற்கான மையங்களாகவும் இருந்திடும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி, இவ்வாறு அழைப்பு விடுப்பதும், வன்முறையைத் தூண்டுதல் என்பதும் தேசத்துரோகக் குற்றம் என்பது உச்சநீதிமன்றத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவு குறித்து அளித்துள்ள தீர்வறிக்கைமூலம் தெளிவான ஒன்றாகும்.

ஹரித்வார் சம்பவம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. முஸ்லீம்களுக்கு எதிராகப் பேசியதுடன், அவர்களை அழித்து ஒழித்திட வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த, காவி உடை தரித்த ஆண்களும், பெண்களும் ஏனோதானோ பேர்வழிகள் அல்ல. அவர்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ்/பாஜக உட்பட இந்துத்துவா சக்திகளின் மிக முக்கியமான நபர்களாவார்கள். அவர்களுக்கு அரசின் ஆதரவும் அரவணைப்பும் இருந்து வருவது தெளிவாகவே தெரிகிறது. இதனை, உத்தர்காண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்திய ஸ்வாமி பிரபோதானந்த் என்பவர் கால்களில் விழுந்து வணங்கியதிலிருந்து நன்கு அறிந்துகொள்ள முடியும்.

ஹரித்வார் நிகழ்வு, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களைச் சேர்ந்த தலைவர்களின் மதவெறிப் பேச்சுக்களின் ஒரு பகுதியேயாகும். இப்போது இது அதிகமாகி இருக்கிறது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முஸ்லீம்களுக்கு எதிராகக் குரைத்துக்கொண்டிருக்கும் பேச்சுக்கள் அதிகரித்திருப்பதும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா சமீபத்தில் மடாலயங்களையும், கோவில்களையும் இஸ்லாமுக்கும், கிறித்தவத்திற்கும் மதம் மாறியவர்களை மீளவும் இந்துயிசத்திற்குக் கொண்டுவருவதற்கான இடங்களாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசியிருப்பதும் இவற்றின் தொடர்ச்சியேயாகும். இவை, முஸ்லீம்களுக்கு எதிரான “வெறுப்புப் பேச்சுக்கள்” மட்டுமல்ல.

இவற்றின் அடிப்படையில் நாள்தோறும் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கு எதிராகவும், கிறித்தவர்களுக்கு எதிராகவும் நேரடியாகவே வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தெருக்களில் கூவி விற்பனை செய்யும் முஸ்லீம்கள், ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்யும் முஸ்லீம்கள், ஆட்டோ-ரிக்சா ஓட்டும் முஸ்லீம்கள் வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாவதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் கிறித்தவர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் தேவாலயங்கள் தாக்கப்படுவதும் நாளும் நடைபெறும் நிகழ்வுகளாக மாறிக்கொண்டிருக்கிறது.

பஜ்ரங் தளம், விசுவ இந்து பரிசத் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் இயங்கும் இதர பிரிவுகள் பல, சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்திய சாதுக்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பாஜக-வின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் – இவர்கள் அனைவருமே இந்துத்துவா சேனையின் பல அங்கங்களாவார்கள். இவர்கள் அனைவருமே அரசமைப்புச்சட்டத்தை சீர்குலைத்திடும் நடவடிக்கைகளிலும், தாங்கள் ஆளும் மாநிலங்களில் இந்து ராஷ்ட்ரத்தை அமல்படுத்துவதற்கான வேலைகளில் வெறித்தனமாக ஈடுபட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.

இந்துத்துவா பாசிஸ்ட்டுகள் நாட்டிற்கு ஆபத்தாக இராட்சதத்தன்மையுடன் வளர்ந்து கொண்டிருப்பதை, நாட்டிலுள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளில் சில இன்னமும் சரியானமுறையில் புரிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும். பாசிஸ்ட்டுகளின் வெறித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக சிலர் அறிக்கை விடுவதுடன் தங்கள் வேலையை முடித்துக்கொள்கிறார்கள். உத்தரப்பிரதேசத்திலும் உத்தர்காண்டிலும் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெறுவதையொட்டி இதை ஒரு பிரச்சனையாக பார்க்காமல் தவிர்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.

இன்றைய நிலையில் பாசிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக வெறுமனே கண்டனத் தீர்மானங்கள் மட்டும் போதுமானதல்ல. இவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைவரின் ஒன்றுபட்ட நடவடிக்கையும் அவசியத் தேவையாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் பாசிஸ்ட் இந்துத்துவா அமைப்புகள் வெறித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, இவர்களின் வெறித்தனமான நடவடிக்கைகளை, ஒன்றுபட்டு எதிர்த்து முறியடித்திட வேண்டியது, அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

(ஜனவரி 05, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Repeal the terrible law of the Armed Forces (Special Powers) Act Article in tamil translated by Sa Veeramani. ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் என்கிறகொடூரமான சட்டத்தை ரத்து செய்திடுக தமிழில்: ச.வீரமணி

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் என்கிற கொடூரமான சட்டத்தை ரத்து செய்திடுக – தமிழில்: ச.வீரமணி




அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் என்னும் சிறப்புப்படையினரால் நாகாலாந்து, மோன் என்னும் மாவட்டத் தலைநகரில் 14 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பது ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் என்கிற (AFSPA- Armed Forces (Special Powers) Act) மிகவும் கொடூமான சட்டம் குறித்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அக்கிரமமான இந்தச்சட்டத்தின்கீழ் பாதுகாப்புப் படையினர் வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சாமானிய மக்கள் மீது தொடர்ந்து அட்டூழியங்களைப் புரிந்து வருகின்றனர். ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியாளர்களைப் பிடிப்பதற்காக வந்திருந்த பாதுகாப்புப் படையினர் பதுங்கியிருந்த சமயத்தில், நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்துவிட்டுத் திரும்பிய எட்டு இளைஞர்கள் ஒரு வேனில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இவர்களில் ஆறு பேரைப் பாதுகாப்புப் படையினர் கொன்றதற்கு எதிராக உள்ளூர் மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட சமயத்தில் ஆயுதப்படையினரால் மேலும் எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுபோன்று மோன் நகரத்தில் நடைபெற்ற அட்டூழியம் தனித்த ஒன்று அல்ல. ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின்கீழ் சாமானிய மக்கள் தொடர்ந்து பல முறை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு படுகொலைகள் நடக்கும் போதெல்லாம், ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகச் சுட்டோம் என்று கூறித் தப்பித்துக்கொள்கின்றனர்.

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் வட கிழக்கு மாநிலங்களில் 1958இலிருந்து அமலில் இருந்து வருகிறது. 1984இல் மணிப்பூரில் ஹெய்ரான்காய்தாங் என்னுமிடத்தில் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் போது 14 பேர் கொல்லப்பட்டனர். 1995இல் ரிம்ஸ் (RIMS) நிகழ்வின்போது 9 பேர் இறந்துவிட்டார்கள். 2000இல் மணிப்பூர் மாநிலத்தில் மாலோம் என்னுமிடத்தில் நடைபெற்ற படுகொலைச் சம்பவத்தில் 10 பேர் கொல்லப் பட்டார்கள்.

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் மூன்றாவது பிரிவின்கீழ் ஒன்றிய அரசு, ஒரு மாநிலத்தை, அல்லது, ஒரு மாநிலத்தின் ஒரு பகுதியை, ஆயுதங்தாங்கிய கிளர்ச்சியாளர்கள் நிறைந்த பகுதி (disturbed area) என அறிவித்திட முடியும். பின்னர் மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இந்தச் சட்டத்தை அங்கே பிரயோகிக்க முடியும். இந்தச் சட்டத்தின் கீழ், ஆயுதப் படையினருக்கு வகைதொகையற்ற அளவில் அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. எவரொருவரையும் அவர் சட்டத்தை மீறினார் என்றும், ஆயுதங்கள், வெடிமருந்துகள் எடுத்துச் சென்றார் என்றும் கூறி அவரைக் கொல்ல முடியும். எவரொருவரையும் கைது செய்யலாம். எந்தக் கட்டிடத்திற்குள்ளும் எவ்விதமான பிடியாணையும் (warrant) இல்லாமல் உள்ளே நுழைந்து ஆய்வு செய்யலாம்.

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1990இல் ஜம்மு-காஷ்மீருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இப்போதும் அது அங்கே அமலில் இருந்து வருகிறது. இந்தச்சட்டத்துடன் பொதுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர அரக்கத்தனமான நடவடிக்கைகளும் சேர்ந்து அங்கே ஒரு கொடுங்கோன்மையான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மக்கள்மீது கடந்த முப்பதாண்டுகளாக மிகவும் கொடூரமான அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின்கீழ் குற்றமிழைத்த பாதுகாப்புப் படையினர் எவர்மீதாவது வழக்குத்தொடர வேண்டுமெனில் அதற்கு ஒன்றிய அரசின் அனுமதி தேவை. இது, நடைமுறையில் சாத்தியமில்லை என்பதையே ஜம்மு-காஷ்மீர் அனுபவங்கள் காட்டுகின்றன. 2018 ஜூலை வரையில், அங்கே மாநிலத்தில் ஆட்சியிலிருந்த மாநில அரசாங்கங்கள் இவ்வாறு ஒன்றிய அரசின் அனுமதி கோரி 50 வழக்குகளை அனுப்பியிருந்தன. எனினும், இந்த வழக்குகள் அனைத்திலுமே ஒன்றிய அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. பத்ரிபால் என்னுமிடத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் அந்நிய நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் இவ்வழக்கை விசாரித்த போதிலும், இக்குற்றத்தைப் புரிந்தமைக்காக பாதுகாப்புப்படையினர் சிலர் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்திருந்தபோதிலும், இவ்வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் (court-martial) விசாரிக்கப்படும்போது, அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது முதல் நோக்கிலேயே (prima facie case) ஆதாரம் இல்லை எனக்கூறி, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஐரோம் சர்மிளா இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். இது கிட்டத்தட்ட பதினாறு ஆண்டு காலம் நீடித்தது. 2004இல் ஐமுகூ அரசாங்கம் இச்சட்டம் செயல்படும் விதம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கோரி நீதியரசர் ஜீவன் ரெட்டி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக்குழு இந்தச் சட்டம் ரத்துசெய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்து 2005ஆம் ஆண்டிலேயே அறிக்கையை அளித்தது. எனினும், ராணுவமும், பாதுகாப்பு அமைச்சகமும் எதிர்த்ததன் காரணமாக இது நடைபெறவில்லை.

2004இல் மணிப்பூரில், தீவிரவாதி எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தங்ஜம் மனோரமா என்பவர் பாதுகாப்புப் படையினரால் மிருகத்தனமானமுறையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மிகப்பெரிய இயக்கம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இம்பால் நகராட்சிப் பகுதி மட்டும், இந்தச் சட்டத்தின் அதிகார வரம்பெல்லையிலிருந்து நீக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில், ஐமுகூ அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த சமயத்தில், உமர் அப்துல்லா அரசாங்கம், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இதர ஜனநாயக அமைப்புகள் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை, எல்லைப் பகுதி தவிர ஏனைய அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீரின் இதர பகுதிகளிலும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தின. ஏனெனில் அந்த சமயத்தில் அங்கே தீவிரவாத நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்திருந்தன. அப்போதைய உள்துறை அமைச்சர் இதற்கு செவிமடுத்தபோதிலும், ராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அரசாங்கம் இதனை நிறைவேற்றிட வில்லை.

ஆயுதப் படையினரை அப்பாவி மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகும். அரசமைப்புச்சட்டத்திற்கு முற்றிலும் புறம்பான இந்தச் சட்டத்தை இத்தனை ஆண்டு காலமாக உச்சநீதிமன்றம் அடித்து வீழ்த்தாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

மோடி அரசாங்கம், மக்களின் அடிப்படை உரிமைகளை மிகவும் கொடூரமான முறையில் மிதித்துத் துவைத்து, நாட்டில் ஒரு ராணுவ அரசை நிறுவுவதற்காக, இத்தகைய ஜனநாயக விரோத, அரக்கத்தனமான சட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள தேசத் துரோகக் குற்றப்பிரிவு ஆகியவற்றுடன் இந்த ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தையும் தங்களுடைய எதேச்சாதிகார ராணுவக் கட்டமைப்பு ஆட்சியின் ஓர் அங்கமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அதிகார வரம்பெல்லையை, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சர்வதேச எல்லையிலிருந்து, 15 கிலோ மீட்டரிலிருந்து 50 கிலோ மீட்டர் வரைக்கும் நீட்டித்திருப்பதை, இந்தப் பின்னணியில் பார்த்திட வேண்டும்.

நாகாலாந்து மாநில முதலமைச்சர் நெய்பியூ ரியோ அவர்களும், மேகாலயா முதலமைச்சர் கன்ராட் சங்மா அவர்களும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை தங்கள் மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் ரத்து செய்திட வேண்டும் என்று கோரியிருப்பது நல்லது. 2015இல் திரிபுராவில் இடது முன்னணி அரசாங்கம் இந்தச் சட்டத்தை ரத்து செய்தது.

எனினும், சில மாநிலங்களில் மட்டும் இந்தச் சட்டத்தை ரத்து செய்வது போதுமானதல்ல. நாகரிகமுள்ள ஒரு ஜனநாயக சமூகத்தில் இத்தகையதொரு சட்டத்திற்கு இடம் இருக்கக் கூடாது. இந்தச் சட்டம் முழுமையாக ரத்துசெய்யப்படுவதற்கு இதுவே தருணமாகும்.

(டிசம்பர் 8, 2021)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

BJP insulting parliament Article in tamil translated by S. Veeramani. நாடாளுமன்றத்தை அவமதித்திடும் பாஜக - தமிழில்: ச. வீரமணி

நாடாளுமன்றத்தை அவமதித்திடும் பாஜக – தமிழில்: ச. வீரமணி




நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளன்றே, ஆளும் பாஜக அரசாங்கம் எந்த அளவிற்கு, நாடாளுமன்றத்தையும் அதன் ஜனநாயகபூர்வமான செயல்பாட்டையும் அவமதித்திடும் என்பதைக் காட்டிவிட்டது.

அரசாங்கம் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதனை விவாதிக்கத் தயார் என்றும், எதிர்க்கட்சியினரால் எழுப்பப்படும் எந்தக் கேள்விக்கும் பதில் கூறத் தயார் என்றும் பிரதமர் மோடி அறிவித்ததற்கு முற்றிலும் முரணாக, மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக்கொள்வது தொடர்பாக எவ்விதமான விவாதத்தையும் நடத்த ஆளும் கட்சி மறுத்துவிட்டது.

எப்படி 2020 செப்டம்பரில் நாடாளுமன்றக் குழுக்களில் முறையான விவாதம் மற்றும் ஆய்வு எதுவுமின்றி மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்து நிறைவேற்றியதோ, அதேபோன்றே இப்போதும் அவற்றின்மீது எவ்விதமான விவாதத்தையும் நடத்த அனுமதிக்காது, ஒருசில நிமிடங்களிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைத் தலைவர்களுமே நாடாளுமன்றத்தின் உரிமைகளுக்கு உரிய மதிப்பளித்திடவில்லை என்பதைக் காட்டின.

மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடைப்பதில் தங்களுக்கு நிச்சயமற்ற தன்மை இருப்பதால், அங்கே ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரத் திமிர் மிகவும் மோசமானமுறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், அங்கே அது, முக்கியமான சட்டமுன்வடிவுகள் எதையும் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப மறுப்பதையும், சட்டமுன்வடிவுகளின் மீது ஒருங்கிணைந்த விவாதம் எதையும் நடத்த மறுப்பதையும், எல்லாவற்றையும்விட மிக மோசமான முறையிலும் ஆட்சேபகரமான முறையிலும் உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமையையே (division and voting) அனுமதிக்க மறுப்பதும் போன்று எதிர்க்கட்சிகளைப் பேசவிடாது செய்திடும் அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளது.

மாநிலங்களவை, முதல் நாளன்றே ஒட்டுமொத்த கூட்டத்தொடர் காலத்திற்கும் 12 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதைப் பார்த்தோம். அவர்கள் அனைவரும் சென்ற கூட்டத்தொடரின்போது ஆகஸ்ட் 12 அன்று கட்டுப்பாடில்லாமல், வன்முறை பாணியில் நடந்துகொண்டார்கள் என்று குற்றஞ்சாட்டி இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு செய்தால் எதிர்க்கட்சியினர் ஆவேசம் கொண்டு எதிர்வினையாற்றுவார்கள், அதனைப் பயன்படுத்திக்கொண்டு சட்டமுன்வடிவுகள் அனைத்தையும் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பின்றி எளிதாக நிறைவேற்றிக்கொண்டு விடலாம் என்கிற சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.

இந்த சமயத்தில் சென்ற கூட்டத்தொடரின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் “கட்டுப்பாடின்றி நடந்துகொண்டதாகக்” கூறப்பட்ட நிகழ்வின்போதுதான், பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்திடும் சட்டமுன்வடிவானது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு அனுப்பப்படாமலேயே நிறைவேற்றப்பட்டது என்பதையும், இதன்மீது வாக்கெடுப்பிற்கு விடக்கூட மறுக்கப்பட்டதையும் நாம் நினைவுகூர்ந்திட வேண்டும்.

சென்ற கூட்டத்தொடரின்போது நடைபெற்ற சில நிகழ்வுகளுக்காக “ஒழுங்குபடுத்தப்படுவதற்காக” (“disciplining”) மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்பது செல்லத்தக்கதல்ல என்பதுடன், அந்த சமயத்தில் கட்டுப்பாடின்றி நடந்துகொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள 33 உறுப்பினர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இளமாரம் கரீம் பெயரையும் இணைத்து இப்போது நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம், மாநிலங்களவையில் வலுவாக இருக்கக்கூடிய எதிர்க்கட்சிகளின் குரலை எப்படியாவது நசுக்கிட வேண்டும் என்கிற ஆளும் கட்சியினரின் நோக்கம் தெளிவாகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் உரிமைகள் மீதான தாக்குதல்களை, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவரப்படும் பிரச்சனைகள் மீது எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஒன்றுபட்டு செயல்படுவது, எப்படி ஒன்றுபட்ட எதிர்ப்பினை, நாடாளுமன்றத்திற்குள்ளே, கட்டி எழுப்ப முடியும் என்பதைக் காட்டுகிறது.

ஆனால், நாடாளுமன்றத்திற்கு வெளியே, எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்குத் தலைமையேற்பதற்காக, மமதா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ளும் முயற்சிகள், பலனளிக்கப்போவதில்லை. எப்படி காங்கிரஸ் கட்சி முன்னணிப் பாத்திரம் வகிப்பதற்கான விருப்பம் ஒன்றுமில்லாது ஆயிற்றோ அதேபோன்றே இவர்களின் முயற்சிகளும் பலனளிக்கப் போவதில்லை.

உறுதியான ஒன்றுபட்ட போராட்டத்தால் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்பதை விவசாயிகள் போராட்டம் காட்டியிருக்கிறது. இதிலிருந்து எதிர்க்கட்சிகள் உரிய படிப்பினையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அகில இந்திய அளவில் அனைவருக்குமான “தலைவர்” ஒருவருடன் ஒற்றுமை என்பது காரியசாத்தியமில்லை. உழைக்கும் மக்களின் பல்வேறு தரப்பினரின் ஒன்றுபட்ட நடவடிக்கைகள் மூலமாகவே விரிவான ஒற்றுமையை உருவாக்கிட முடியும். இதற்கு, இந்துத்துவா எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக, மாற்றுக் கொள்கைகள் மற்றும் அரசியலை முன்னிறுத்துவதன்மூலமும், அதனைச் சுற்றி அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்டுவதன் மூலமும் மட்டுமே சாத்தியம்.

(டிசம்பர் 1,2021)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்.

The success of the peasant struggle will have great consequences Article in tamil translated by Sa Veeramani விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி விரிவான அளவில் விளைவுகளை ஏற்படுத்திடும் - தமிழில்: ச.வீரமணி

விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி விரிவான அளவில் விளைவுகளை ஏற்படுத்திடும் – தமிழில்: ச.வீரமணி




பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்து சரணாகதி அடைந்திருப்பதன்மூலம், சம்யுக்த கிசான் மோர்ச்சா என்னும் பதாகையின்கீழ் ஒன்றுபட்ட விவசாயிகளின் போராட்டம் வரலாறு படைத்திடும் வெற்றியை ஈட்டியிருக்கிறது. இந்த வெற்றியானது, விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், மேலும் விரிவான அளவில் பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய வெற்றியாகும்.

இதில் முதலாவதும், முதன்மையானதும் என்பது, விவசாயிகளின் அடிப்படையிலான விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதரங்களுக்கான உரிமையையும் வெற்றிகரமாகப் பாதுகாத்திருப்பதன் மூலம், மோடி அரசாங்கத்தால் பிடிவாதமானமுறையில் பின்பற்றிவரப்பட்ட கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலுக்குப் பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகும்.

இரண்டாவதாக, விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி, ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதித்து எதேச்சாதிகாரமான முறையில் ஆட்சி செய்தவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள பலத்த அடியாகும். தொழிலாளர் வர்க்கத்தால் ஆதரவு அளிக்கப்பட்டு, பெரும் திரளான விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட இயக்கம் நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற நடவடிக்கைகளையும்கூட ஓரங்கட்டிவிட்டு, தானடித்த மூப்பாக நடந்துகொண்ட எதேச்சாதிகார நடவடிக்கைகள் மீது வீசப்பட்டுள்ள அடியுமாகும்.

மூன்று வேளாண் சட்டங்களும் முதலில் 2020 ஜூனில் அவசரச்சட்டங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டன. இவ்வாறு அவசரச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது எவரிடமும் கலந்தாலோசனைகள் செய்திடவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குக்கூட அனுப்பிடாமல், மாநிலங்களவையில் உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்குக்கூட விடாமல், இவற்றின்மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்புவதற்கும் அனுமதிக்காமல், மிகவும் அடாவடித்தனமான முறையில் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய எதேச்சாதிகார நடைமுறைக்குத்தான் மாபெரும் விவசாயிகளின் இயக்கம் மரணி அடி கொடுத்துள்ளது.

இதற்கு முன்பும் கூட, இந்த அரசாங்கம் 2015இல் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திருத்துவதற்காக ஓர் அவசரச்சட்டத்தைப் பிரகடனம் செய்தது. பின்னர் மக்களவையிலும் அது நிறைவேற்றப்பட்டிருந்தது. இருப்பினும், பூமி அதிகார் அந்தோலன் என்னும் ஒன்றுபட்ட விவசாயிகளின் மேடை இதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்திய பின்னர், அரசாங்கம் இதனைக் கைவிட்டுவிட்டது. ஆனாலும், இவர்கள், 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றபின்னர், அதனை மறந்துவிட்டு, அவசர கதியில் எண்ணற்ற அவசரச்சட்டங்களையும், நாடாளுமன்றத்தின்மூலம் அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவந்தது உட்பட பல ஜனநாயக விரோதச் சட்டங்களையும் நிறைவேற்றினார்கள். இனிமேலாவது மோடி அரசாங்கம், எதிர்காலத்தில் இதுபோன்று நடவடிக்கைகளை அவசரகதியில் எடுக்காது, ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்திட வேண்டும்.

மூன்றாவதாக, ஓராண்டு காலமாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், ஆட்சியாளர்களின் இந்துத்துவா-நவீன தாராளமயத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதற்கான வழியையும் காட்டி இருக்கிறது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலவீனமாகவும், சக்தியற்றும் இருக்கக்கூடிய நிலையில், ஒன்றுபட்ட மேடைகளின் மூலமாக வெகுஜனப் போராட்டப் பாதையில், மக்களை அணிதிரட்டி, எதிர்ப்பினைக் கட்டி எழுப்புவதே வழியாகும் என்பதைக் காட்டி இருக்கிறது.

இந்தக் கட்டத்தில் மோடி அரசாங்கம் பின்வாங்கியது ஏன்? போராட்டத்தின் குவிமையமாக இருந்தது பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசமாகும். போராடிய சீக்கிய விவசாயிகளை, மோடி அரசாங்கமும், ஆளும் கட்சியும் காலிஸ்தானிகள் என்றும், தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தி அவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, போராட்டத்தை நசுக்க முயன்றது. இவ்வாறான ஆட்சியாளர்களின் அடக்குமுறை-ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பாஜகவிற்கு எதிராகவும், மோடி அரசாங்கத்திற்கு எதிராகவும் பஞ்சாப்பில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்தியுள்ளது. பஞ்சாப்பில் உள்ள எந்தக் கிராமத்திற்குள்ளும் எந்தவொரு பாஜக தலைவரும் நுழைய முடியாத அளவிற்கு நிலைமை உருவாகி இருக்கிறது. பஞ்சாப்பில் இன்னும் சில வாரங்களில் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஆடிப்போயுள்ள பாஜக எப்படியாவது இவ்வாறு தனிமைப்பட்டிருக்கும் நிலையை மாற்ற நடவடிக்கைகள் பலவற்றைப் பின்பற்றியபோதிலும் அவை எதுவும் அதற்கு உதவிடவில்லை. பஞ்சாப்பில் தேர்தலில் வெற்றிபெற முடியாது போனாலும் பரவாயில்லை என்று பாஜக நினைத்தாலும் அதேபோன்று உத்தரப்பிரதேசத்தையும் கைவிட அது விரும்பவில்லை. விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தால் பஞ்சாப் மட்டுமல்ல, உத்தரப்பிரதேசமும் தங்கள் கைகளிலிருந்து பறிபோய்விடும் என்று அது கருதியதாலும், அவ்வாறு பறிபோவதை எக்காரணம் கொண்டும் இடம்கொடுத்திடக்கூடாது என்றும் அது நினைத்தது.

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் சென்ற ஆண்டில் இருந்த நிலைமையை ஆராய்ந்தோமானால், அங்கே ஒட்டுமொத்த விவசாயிகளும் போராடிய விவசாயிகளுக்கு ஆதாரவாக ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. இங்கேயிருந்த விவசாயிகளில் கணிசமானவர்கள் 2014 மக்களவைத் தேர்தலிலும், 2019 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக-விற்கு வாக்களித்தவர்கள்.

முசாபர் நகரில் 2013இல் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்றக் கலவரங்கள் ஜாட் இனத்தவருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பகைமை உணர்வை அதிகப்படுத்தி இருந்தன. இத்தகைய பகைமை உணர்வு பாஜக-விற்கு உதவியது. ஆனால், இப்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் இத்தகைய பகைமை உணர்வைச் ஒழித்துக்கட்டி, அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி இருக்கிறது. “சாதியைச் சொல்லி, மதத்தைச் சொல்லி, நம்மைப்பிரிக்கும் சூழ்ச்சிகளை இனியும் நாங்கள் அனுமதியோம்” என்றும், “ஒன்றுபட்டுப் போராடுவோம்,” என்றும் “சாதி வெறியர்களையும், மத வெறியர்களையும் தனிமைப்படுத்திடுவோம்” என்றும் முழக்கமிட்டு அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

லக்கிம்பூர் கேரியில், ஒன்றிய இணை அமைச்சர் ஒருவரின் மகன் காரை ஓட்டிவந்து நான்கு விவசாயிகளைக் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் நடைபெற்றுவந்த விவசாயிகள் போராட்டத்திற்கு அனுதாபத்தையும், ஆதரவையும் ஏற்படுத்தியது. பாஜக-விற்கு உத்தரப்பிரதேசம் என்பது கிரீடத்தில் உள்ள ஆபரணம் போன்று பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அமித் ஷா, 2022 சட்டமன்றத் தேர்தல் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்திடும் என்று திரும்பத் திரும்பத் தன் அபிலாசையைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

மக்கள் மத்தியில் அபரிமிதமாக ஆதரவை சம்பாதித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள் இயக்கம் ஏற்படுத்தியிருக்கும் அச்சுறுத்தலும், ஆதித்யநாத்தின் அரக்கத்தனமான ஆட்சி காரணமாக மக்கள் ஆதரவு சரிந்துகொண்டிருப்பதும் இவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. எனவே உத்தரப்பிரதேசத்தில் இழப்பைச் சரிக்கட்டுவதற்காகத்தான் மோடி இவ்வாறு பின்வாங்குவது அவசியம் என முடிவெடுத்திருக்கிறார்.

இந்த நடவடிக்கைக்குப்பின்னே மற்றுமொரு காரணியும் இருக்கிறது. அதாவது, விவசாய இயக்கமும், அதனால் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனைகளும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சூழ்நிலையில், மக்களைப் பிளவுபடுத்திடும் தங்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலின்மீது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாஜகவிற்கு சிரமமாக இருக்கிறது. விவசாயிகள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால், மக்கள் மத்தியில் தங்களுடைய ஆத்திரமூட்டும் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைக் கொண்டுசெல்வதற்கு உகந்த சூழல் ஏற்படும் என பாஜக நம்புகிறது. ஆனால், விவசாயிகள் பிரச்சனைகள் மறையப்போவதில்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்திருப்பதுடன், அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக உத்தரவாதப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும், விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்திடும் மின்விநியோகத்தைத் தனியாரிடம் தாரை வார்க்க வகை செய்யும் மின்சாரத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் நிறைவேற்றப்பட என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா மிகவும் தெளிவாகத் தெரிவித்திருக்கிறது. இக்கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தீர்மானித்து, செயலில் இறங்க இருக்கிறது.

எனினும், ஒரு விஷயம் மிகவும் தெளிவாகியிருக்கிறது. இந்துத்துவா-நவீன தாராளமய எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கிறது. விவசாய இயக்கத்தின் மூலமாக தொழிலாளர் வர்க்கமும், விவசாயிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒன்றுபட்டிருக்கிறது.

2020 நவம்பர் 26 அன்று நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தின் அறைகூவலுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் ‘தில்லி செல்வோம்’ என்கிற அறைகூவலும் இணைந்து இந்த வெகுஜனப் போராட்டம் தொடங்கியது என்பதை நினைவுகூர்ந்திட வேண்டும். அதிலிருந்தே, தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்து கூட்டு இயக்கங்கள் பலவற்றிற்கு அழைப்பு விடுத்தார்கள். இடதுசாரிகள் தலைமையிலான விவசாய சங்கங்களும், தொழிற்சங்கங்களும் தொழிலாளர்கள்-விவசாயிகள் இடையே விரிவான அளவில் ஒற்றுமையைக் கட்டி எழுப்பிட கேந்திரமான பங்களிப்பினைச் செலுத்தின. நடவடிக்கைகளில் இவ்வாறான ஒத்துழைப்புதான் வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மத்தியத் தொழிற்சங்கங்களினால் விடுக்கப்பட்டுள்ள இரண்டு நாள் வேலைநிறுத்தம் உட்பட பல போராட்டங்களுக்கு உதவிட இருக்கின்றன.

இந்துத்துவா எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக ஒரு வலுவான மாற்றைக் கட்டி எழுப்புவதற்கு, இத்தகைய வளர்ச்சிப் போக்குகள் இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் திசைவழியில் ஒரு முக்கிய அடி எடுத்து வைத்திருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி இயக்கமும் கருதுகின்றன.

(நவம்பர் 24, 2021)
நன்றி:பீப்பிள்ஸ் டெமாக்ரசி

BJP National Executive Committee: Nothing but flattery to Modi Article in tamil translated by Sa. Veeramani. பாஜக தேசிய செயற்குழு: மோடியை முகத்துதி செய்ததைத் தவிர வேறெதுவும் இல்லை தமிழில் ச. வீரமணி

பாஜக தேசிய செயற்குழு: மோடியை முகத்துதி செய்ததைத் தவிர வேறெதுவும் இல்லை – தமிழில்: ச. வீரமணி




பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு நவம்பர் 7 அன்று நடைபெற்றது. இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் இக்கூட்டம் நடைபெற்றுள்ளதால், ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள கட்சி தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை எப்படி மதிப்பீடு செய்திருக்கிறது என்றும் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் அதன் வேலைகள் எப்படி இருந்தன என்பது குறித்தும் தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தது.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் அரசின் வேலைகள் குறித்தும் அதன் கொள்கைகள் எப்படி பின்பற்றப்பட்டன என்பது குறித்தும் அறிந்துகொள்ள ஒருவர் எதிர்பார்த்திருந்தார் என்றால் நிச்சயமாக அவர் மிகவும் பரிதாபகரமான முறையில் ஏமாற்றம் அடைந்திருப்பார். செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் உரை, அரசியல் தீர்மானம் மற்றும் மோடியின் நிறைவுரை ஆகிய அனைத்துமே ஒரு சிறிதளவுகூட சுய விமர்சன மதிப்பீட்டைக் காட்டவில்லை.

The what, the how and the why of the pandemic | Royal Society
image credit: Royal Society

அரசியல் தீர்மானத்தை ஆராய்வோமானால், அது அனைத்துத் துறைகளிலும், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தியது, சுகாதாரப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, இலவச உணவு தான்யங்கள் முதலானவற்றை மக்களுக்கு அளித்தது என அனைத்து குறித்தும், பிரதமர் மோடியின் கொள்கைகளையும் சாதனைகளையும் முகத்துதி செய்யும் விதத்தில் அமைந்திருந்தது. தீர்மானத்தின் ஒவ்வொரு பத்தியுமே மோடியின் திட்டங்களைப் போற்றிப் பாராட்டிப் புகழ்பாடும் விதத்திலேயே அமைந்திருந்தன. ஒட்டுமொத்தத்தில் மோடியை முகத்துதி செய்ததைத் தவிர வேறெதுவும் இல்லை.

இவை எதைக்காட்டுகின்றன? கட்சியானது முழுமையாக மோடியின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதை நன்கு காட்டுகிறது. தடுப்பூசிகளுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் அளித்ததன் மூலமாகவும், எட்டு மாதங்களுக்கு எண்பது கோடி ஏழைகளுக்கு உணவு தான்யங்களை இலவசமாக விநியோகித்ததன் மூலமாகவும், சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலமாகவும் மோடி அரசாங்கம் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை மிகவும் சிறப்பாகக் கையாண்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாட்டிலுள்ள வயதுவந்த மக்கள்தொகையில் வெறும் 30 சதவீதத்தினருக்கு மட்டும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் அதனைக் குறிப்பிடாமல், நூறு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதாக வெகுவிமரிசையாகக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இப்போது அரசின் தரப்பில் தடுப்பூசிகள் போடப்படும் விகிதத்தின்படி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால் 2021க்குள் வயதுவந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்கிற அரசின் இலக்கை எட்டுவதற்கு இன்னும் போகவேண்டிய தூரம் மிகவும் அதிகமாகும்.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். இவர்களுக்கு இரக்கம் தெரிவித்து ஒரு வார்த்தைகூட இத்தீர்மானத்தில் இல்லை. தடுப்பூசி இருப்பு குறித்து பெரிய அளவில் குளறுபடிகள் இருந்ததுபற்றியும் ஒருவார்த்தைகூட இதில் இல்லை. அதேபோன்று நாட்டின் பல பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும், பலருக்கு ஆக்சிஜன் கிடைக்காமலும் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது குறித்தும் எதுவும் இதில் கூறப்படவில்லை.



சமாளிக்கப்படவேண்டிய பொருளாதாரப் பிரச்சனைகள் எதுவும் உருப்படியான முறையில் சமாளிக்கப்பட்டதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. சுமார் ஓராண்டு காலமாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் குறித்தும் இதில் எதுவும் கூறப்படவில்லை. அதற்குப் பதிலாக, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விவசாய ஆதரவு நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் ‘டிஜிடல்’மயம் மற்றும் சுயவேலைவாய்ப்புகளைப் பெருக்குதல் என்ற கொள்கையின்படி, “இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் கோருபவர்களாக இருப்பதற்குப் பதிலாக, கொடுப்பவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாஜக-வின் அரசியல் தீர்மானத்தின்படி, ஜம்மு-காஷ்மீரில் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தபின்னர், பாதுகாப்பு, அமைதி மற்றும் வளர்ச்சியில் அங்கே புதியதொரு அத்தியாயம் தொடங்கியிருக்கிறதாம். அங்கே ஆயிரக்கணக்கானவர்களைச் சிறையில் அடைத்துள்ளதன் மூலமும், இணைய சேவையை ‘சஸ்பெண்ட்’ செய்திருப்பதன் மூலமும், மக்களின் இயல்பு வாழ்க்கையையே முற்றிலுமாக தடை செய்திருப்பதன் மூலமும் அங்கே ஒரு மயான அமைதி நிலவிக்கொண்டிருக்கிறது என்பதை அத்தீர்மானத்தில் குறிப்பிடவில்லை.

Climate Change and Global Warming Introduction — Global Issues

மோடி தன்னைத்தானே பீற்றிக்கொள்ளும் தொனி மிகவும் அபத்தமான எல்லைக்கே சென்றிருக்கிறது. மோடி, புவி வெப்பமயமாதலை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதற்கும், தன்னுடைய ஆட்சியின் கீழ் அயல்துறைக் கொள்கையை எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதற்கும், இந்தியாவை இதர நாடுகளுடன் சமமான அளவிற்கு அல்ல, மாறாக அதற்கும் மேலாக உலகத்தில் ஒரு வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை எப்படி மேற்கொள்வது என்பதற்கும் உலகத்திற்கே வழிகாட்டி இருக்கிறாராம்.

மக்களின் துன்ப துயரங்கள் குறித்து கவலைப்படாத இத்தகைய இரக்கமற்ற அரக்கத்தனமான அணுகுமுறையும், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்தின் அனைத்துத் தோல்விகளைப் பற்றியும் கவலைப்படாத போக்கும் ஒரு விஷயத்தையே சுட்டிக்காட்டுகிறது. அதாவது, பாஜக-வானது வேலையில்லா இளைஞர்களின் பிரச்சனைகள் பற்றியோ, விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றியோ, நாளும் உயரும் விலைவாசிகளைப் பற்றியோ, மக்கள் அனுபவித்து வரும் பொருளாதார சிரமங்கள் குறித்தோ கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பதாகும். இவை அனைத்தும் உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் இவை தங்களைப் பாதிக்கும் என்பது குறித்தும் அது கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கு மாறாக பாஜக-வானது மக்கள் மத்தியில் மதவெறித் தீயை விசிறிவிட்டும், “இந்து” தேசியவாதத்தைத் தூண்டியும் வாக்குகளைக் கவர்ந்துவிடலாம் என்று நினைப்பதாகவே கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அதன் அரசியல் தீர்மானத்தின் நிலைப்பாடு காட்டுகிறது.

இவற்றுடன் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சாதிய ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு இடங்களில் சாதி-சமூக ரீதியாகப் பதற்றத்தை உருவாக்குவதற்காக மிகப்பெரிய அளவில் பண பலத்தைப் பிரயோகிக்கவும் திட்டமிட்டிருக்கின்றனர். இதனை யோகி ஆதித்யநாத் இந்த அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசும்போது ஆற்றிய உரையே நன்கு வெளிப்படுத்துகிறது. ஆதித்யநாத் ‘அப்பா ஜான்’ (‘Abba Jaan’) என்று கூறுபவர்களுக்குத்தான் முந்தைய ஆட்சியில் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டன என்று கூறியும், 2017இல் எழுப்பப்பட்ட பிரச்சனையான கைரானா என்னுமிடத்திலிருந்து இந்து குடும்பங்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கூறியும் ஏற்கனவே முஸ்லீம்களுக்கு எதிரான மதவெறி நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார். (‘அப்பா ஜான்’ என்பது முஸ்லீம்கள் தொழுகையின்போது பயன்படுத்தும் உருது வார்த்தைகள் ஆகும். மேலும் இது தந்தை வழி மகன் என்ற முறையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் கிண்டல் செய்யும் வார்த்தைகளுமாகும்.)

எனினும், சமீபத்தில் மக்களவைக்கும், 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக பலத்த அடி வாங்கியபோதும் அதனைப்பற்றி அது எவ்விதமான பரிசீலனையும் மேற்கொள்ளாது, இடைத்தேர்தல்களில் “ஒரு பெரிய வெற்றி” கிடைத்திருப்பதுபோல் கூறியிருக்கிறது. இவற்றிலிருந்து பாஜக தலைமை தங்களுடைய மதவெறி-சாதிவெறி சூழ்ச்சித் திட்டங்களையே முழுமையாகத் தங்கள் வெற்றிக்கு அடிப்படையாக நம்பியிருப்பது நன்கு தெரிகிறது. அஸ்ஸாம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஒருசில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அதாவது இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதற்கு ஏற்பட்டுள்ள படுதோல்வி குறித்து அது கவலைப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவற்றைப் பரிசீலனை செய்வதற்குப் பதிலாக, மிகவும் அற்பத்தனமான முறையில் தன்னைப்பற்றித் தானே திருப்திகொள்கிற மனப்பான்மையை, பாஜக தன்னுடைய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறது.

(நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி)

Afghanistan: Unwanted India Peoples Democracy Editorial Article in Tamil By Sa. Veeramani. Book Day is Branch of Bharathi Puthakalayam.

ஆப்கானிஸ்தான்: விரும்பப்படாத நிலையில் இந்தியா

ஆப்கானிஸ்தானத்தில் ஸ்தல நிலைமைகள் மிகவும் வேகமாக மாறிவருகின்றன. அமெரிக்கத் துருப்புக்கள் கிட்டத்தட்ட விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக நாடு முழுதும் தலிபான் இயக்கத்தினர் முன்னேறிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. நாட்டின் நிலப்பகுதியில் 85 சதவீதம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக…