காதல் பித்து கவிதை – சரவிபி ரோசிசந்திரா

காதல் பித்து கவிதை – சரவிபி ரோசிசந்திரா




உன்னிடம் பேசி
பல மாதங்கள் ஆயின
ஆனால்
நான் இன்னும்
பேசிக்கொண்டு தான்
இருக்கிறேன்,
வெட்டவெளியில்….
உன்னைக் காணாமலும்
பார்வையை
இழக்காமல் தான்
இருக்கிறேன்,
புதிய பார்வையில்….
நீ நடந்து வந்த பாதையில்
கடந்தும் கூட
தடு(ட)மாறாமல் தான் நடக்கிறேன்,
கொடுத்த வாக்கால்….
உன் அலைபேசி எண்ணை
நாள்தோறும் சுழற்றும் கைகள்
இன்னும் இழக்காமல் தான் இருக்கிறது,
தன் சுயத்தை….
நீயின்றி நான் இல்லை
என்று நாம் சொன்னது
பொய்யானது எனப் பலர் ஏசுவது
என் காதிலும் விழுகிறது…
கடந்த சில மாதங்களில் அரங்கேறிய பிரிவில்
நீயும் இருக்கிறாய்
நானும் இருக்கிறேன்
ஆனால்,
நமக்குள்
காணாமல் போனது நம் ‌ காதலென
நீயுமா நினைக்கிறாய்?…
காணாமல் தான் போனேன்
உன்னைக் காணாமல்
மனப்பூர்வமாக நான் விலகிச் சென்றது
மற்றவர்களுக்குப் புரியாமல் போகலாம்
உனக்குமா! புரியவில்லை?
மனவறைக்குள் குமுறி அழும் கண்ணீரைத் துடைத்து
என்னை உயிரோடு வாழ வைப்பது
உன் ஆத்மார்த்த நேசமடா!
இதை நீ இன்னுமா? அறியவில்லை…
யார் வேண்டுமானாலும்,
என்னை எப்படி வேண்டுமானாலும் நினைக்கட்டும்,
நீ மட்டும் என்னைப் புரிந்து கொள்வாய் என்று நினைத்தே
காத்திருக்கிறேன் நெடுங்காலம்…
என் காதலை உன் மனம்

புரிந்து கொள்ளுமா?
இல்லை பிரிந்து செல்லுமா!

-சரவிபி ரோசிசந்திரா

Enge Sendrai Kavithai By Saravibi RosiChandra எங்கே சென்றாய் ? கவிதை - சரவிபி ரோசிசந்திரா

எங்கே சென்றாய் ? கவிதை – சரவிபி ரோசிசந்திரா



எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய்
என்னை நீ அழைத்து எங்கே சென்றாய்

தினந்தோறும் பணந்தேடி
எங்கே சென்றாய்
திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய்
உடலுக்குள் உயிர் காணாமல்
எங்கே சென்றாய்
உடலை தினம் பேணாமல்
எங்கே சென்றாய்

எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

எதிலும் நான் தெரிகின்றேன்
எங்கே சென்றாய்
எல்லாம் நான் அறிகின்றேன்
எங்கே சென்றாய்

பேதமின்றி அள்ளித் தந்தேன்
எங்கே சென்றாய்
பேரிடரிலும் துணை வந்தேன்
எங்கே சென்றாய்
மும்மலம் நீ அறியாமல்
எங்கே சென்றாய்
முற்பிறவி நீ தெரியாமல்
எங்கே சென்றாய்

எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

உயிர்தோறும் என்னைக் காணாமல் நீ எங்கே சென்றாய்
உள்ளத்தில் என்னை எண்ணாமல் நீ எங்கே சென்றாய்

சிற்றின்பத்தை ரசித்த நீ
எங்கே சென்றாய்
சிந்தையை வெறுத்த நீ
எங்கே சென்றாய்
நான் அக்கத்தில்
இருக்கின்றேன் நீ
எங்கே சென்றாய்
நான் பக்கத்தில்
பார்க்கின்றேன் நீ
எங்கே சென்றாய்

எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்
எங்கே சென்றாய் நீ
எங்கே சென்றாய்

நிம்மதியாய் தினம் வருகின்றேன்
எங்கே சென்றாய்
நிம்(ம)தியை மறந்து நீ
எங்கே சென்றாய்

Kathalithu Paar Poem By Savibi Rosichandra காதலித்துப் பார் கவிதை - சரவிபி ரோசிசந்திரா

காதலித்துப் பார் கவிதை – சரவிபி ரோசிசந்திரா




பேசாத மௌனமொழிக் கவிப்பாடும்
நினைவுகளில் நெஞ்சம் களிப்பாடும்
தென்னங்கீற்றில் சுவாசம் சூடேறும்
சிந்தும் புன்னகையில் தேனூறும்
வட்டில் உணவின்றி வயிறு நிறையும்
கண்ணீரில் மனக்காயங்கள் குறையும்

தியானம் செய்யாமல் தத்துவம் பிறக்கும்
கிறுக்கல்கள் எல்லாம் கவிதையாய் உருவெடுக்கும்
கடுங்கோடையில் பூ மேனிக் குளிரும்
யாருமின்றி அழகியப் பூவிதழ் உளறும்
கட்டாந்தரையில் இனியக் கனவுகள் மிதக்கும்
பிடிக்காதது எல்லாம் இப்போது பிடிக்கும்

காதலித்துப் பார்
உளியின்றி சீரியச் சிற்பம் வடிப்பாய்
உள்ளம் உருகி மெழுகாய் ஒளிர்வாய்
கடிதத்தை எழுதி கசக்கி எறிவாய்
எறிந்ததை மீண்டும் படித்து ரசிப்பாய்
சிறியமுள் வேகமாய்ச் சுற்றிடுவதாக நினைப்பாய்
பாகற்காயைத் தேனமுதாய்ச் சுவைப்பாய்

விண்ணின்றி முகிலில் வெண்ணிலவு
தெரியும்
இரவில் நட்சத்திரங்கள் சீக்கிரம் மறையும்
கைக்கோர்த்து நடக்கையில் சாலைகள்
விரியும்
விழி அசைவில் வலிகள் புரியும்
காத்திருக்கும் சுகத்தினை இதயம் அறியும்
தொலைதூரம் வந்தாலும் நெருக்கம் இணையும்

காதலித்துப் பார்
அலைபேசி உன் ஆருயிர் அம்மாவாகும்
குறுஞ்செய்தி உற்ற உயிர்த் தோழனாகும்
பகலவன் புலராமல் பொழுது அதிகமாகும்
கழுதையின் குரல் இனிய கானமாகும
உடல் மொழி தெளிவாய்ப் புலனாகும்
உள்ளுணர்வுகள் மனக்கடலில் சங்கமமாகும்

தனிமையின் சுகத்தைச் சிலாய்த்து
வர்ணிப்பாய்
உன்னை நீயே உளமாற
விமர்சிப்பாய்
எறிந்தக் குப்பையைச் சேகரித்து வைப்பாய்
சேகரித்ததை நள்ளிரவில் எழுந்து பார்ப்பாய்
குடையை விரித்து மழையைப் பிடிப்பாய்
ஓவியம் வரைந்து தலையணையில்
மறைப்பாய்
காதலித்துப் பார்

Isaippadal (இசைப் பாடல் - Musical Song) Poetry By Saravibi Rosichandra. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

இசைப் பாடல் – சரவிபி ரோசிசந்திரா



இசைப் பாடல்
***************
என்னை நீ மறந்தாய்
உன்னை நான் மறவேன்
உயிரே நீ பிரிந்தாய்
உணர்வே நான் பிரியேன்

கடந்த நாட்களில் காதல் பேசியதே!
கடக்கும் நாள்களிலோ கண்ணீர் பேசிடுதே!

இந்த வலிகள் இன்னும் நீளுமோ!
இனிய நேசம் எப்போது பேசுமோ!
இனியவனே! எனது பாசம் போதலையா?
இன்னும் உனது கோபம் தீரலையா?

பாலை வனத்தில் சோலையாய்
பாவை மனத்தில் பரிதியாய்
பிடிவாதம் பிழையாய் புகுந்து கொண்டதே!
பிரிவில்லா உறவில் விரிசல் வந்ததே!

எங்கே நான் செல்ல
என்னுயிரே வா சொல்ல
எனக்காக இங்கு யாருமில்ல
என்னவனே பேசு மெல்ல.

– சரவிபி ரோசிசந்திரா